சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே! உன் தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே!
வண்திருப் பெருந்துறையாய்! வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே!
கடலமு தே! கரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்! உல குக்குயிரானாய்!
எம்பெரு மான்பள்ளி எழுந்தருளாயே!
புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும் நின்னலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்!
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே!
(முற்றும்)