பொன்மொழிகள்
251. புகழை வெறுக்கத் தெரிந்துகொள். காரணம் தீமையை
வளர்ப்பவை புகழ்மொழிதான்.
--- ஹதீஷ்
பொன்மொழிகள்
252. தடைகள் ஏற்படும் போதெல்லாம் துணிவு
இருந்தால்தான் செயல்பட முடியும்.
--- டால்ஸ்டாய்
253. மேலோர்கள் கெட்டாலும் அவர்களுடைய மேன்மையான
பண்புகள் ஒரு போதும் கெடாது.
---- லாங்பெல்லோ
254. பலவீனமானவர்கள் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை
வைக்கிறார்கள்.
பலமுடையவரோ காரணகாரியத்தில் நம்பிக்கை
வைக்கின்றனர்.
--- எமர்சன்
255. தனது நாட்டை நேசிக்காதவன் எதையுமே
நேசிக்கமுடியாது.
--- பைரன்
256. துன்பமும் தோல்வியும் நம் மனத்தைப் பதப்படுத்தும்
சோதனைகள். பதப்படாத மனத்தால் எதையும்
சாதிக்க முடியாது.
---சுவாமி விவேகானந்தர்
257. நீ எண்ணித் துணிந்த பின்பு உலகம் முழுவதும்
வாளெடுத்து வந்து எதிர்த்து நின்ற போதும் உன்னுடைய
இலட்சியத்தைக் கைவிடாதே.
258. நீங்கள் செயல்படுகிறவர்கள் என்றால் அறிவைத்
தேடிப் பெற்றுப் பயன்படுத்திக் கொள்கிறவராக
இருக்க வேண்டும்.
--- எஸ்.ஷர்மா
259. தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதைவிட பெரிய
அவமானம் வேறில்லை.
---காந்திஜி
260. கூடிவாழும் இயல்பு இல்லாதவனுக்கு சமுதாய வாழ்வு
சுகமாக இருக்காது.
--- ஷேக்ஸ்பியர்
261. பிறரைப் பாராட்டவும் அங்கீகரிக்கவும் சிக்கனம் காட்டாதீர்கள்.
---- ஸ்டேபிள்
262. நண்பன் இதயத்தின் ஒளியாக இருக்கிறான்.
--- எமர்சன்
263. இந்த நிமிடத்தை முறையாகப் பயன்படுத்தும் போது
இன்றைய நாளை முறையாகப் பயன்படுத்திக்கொள்கிறோம்.
264. அதிருப்தி என்பது நம்பிக்கையின்மையாகும்.
--- எமர்சன்
265. தொழில் இல்லாத கல்வி நீரின்றி வாடும் தாவரத்தைப் போன்றது.
---போவி
266. செலவுக் கணக்கு எழுதாதவன் சேமிக்கத் தெரியாதவன்.
267. உங்களால் நம்பிக்கையுடன் கனவுகாண முடியும் என்றால்
கனவில் கண்டதை நிஜத்திலும் செயல்வடிவில் செய்து
முடிக்கமுடியும்.
--- பில்கேட்ஸ்
268. நீங்கள் செய்யும் தவறை உடனே திருத்திக் கொள்ளுங்கள்.
இல்லாவிட்டால் இன்னொரு தவறைச் செய்தவராகி
விடுவீர்கள்.
--- கன்பூஷியஸ்
269. காலம் நதியைப் போன்றது; உற்பத்தியாகும் இடத்துக்கு
அது திரும்பவே திரும்பாது.
270. தன்னம்பிக்கை ஓர் உந்து சக்தி. அது உங்களையும்
ஊக்குவிக்கும். அடுத்தவரையும் ஊக்குவிக்கும்.
---வால்டேர்
271. துன்பங்களைப் பலர் பொறுத்துக் கொள்கின்றனர்,
ஆனால் அவமதிப்பைச் சகிப்பவர்கள் வெகுசிலரே.
--- தாமஸ்
272. இனிய சொல்லால் இரும்புக் கதவைக்கூடத் திறக்கலாம்.
--- துருக்கிய பழமொழி
273. நம் கையில் பணமிருந்தால் எல்லா வாசல்
கதவுகளும் திறந்திருக்கும்.
--- இங்கர்சால்
274. நல்லொழுக்கம் பகைவனையும் வென்று விடுகிறது.
--- சாணக்கியன்
275. ஊக்கமுள்ள மனிதன் தன் கடமைகளைத் தொடர்ந்து
செய்து கொண்டே இருப்பான்.
--- எமர்சன்
276. ஏழைகள் உணவைத் தேடுகிறார்கள்;
செல்வர்கள் பசியைத் தேடுகின்றனர்.
--- பெஞ்சமின் பிராங்ளின்
277. வாழ்க்கையில் தைரியமாக எதையும் அணுக
முடியாதவர்களுக்கு அவர்கள் விரும்பிய எதுவுமே
கிடைப்பதில்லை.
--- தாமஸ் ஏ. செப்வில்
278. அன்பினால் ஊக்கப்பட்டு அறிவினால் நடத்தப்படுவது
வாழ்க்கை.
--- ரஸ்ஸல்
279. எது நன்மை என்பது அதை இழந்தபின்தான் தெரியும்.
---- இங்கர்சால்
280. நாளைக்கு நல்ல காரியம் செய்வேன் என்று
சொல்பவன் முட்டாள். அறிவுள்ளவன் நேற்றே
அதை செய்து முடித்திருப்பான்.
--- மார்ஷல்
281. சரியாகத் சிந்திக்கத் தெரிந்துகொண்டால் உலகத்தையே
மாற்றிவிடலாம்.
--- போவீ
282. நீங்கள் உயர்த்திக்கொள்ள விரும்பினால்
வேறொருவரை உயர்த்துங்கள்.
--- டி. வாஷிங்டன்
283. நட்பு கொள்வதில் நிதானமாக செல்லவும். ஆனால்
நட்பு கொண்டபின் உறுதியாகவும் நிலையாகவும்
நிற்கவும்.
--- சாக்ரடீஸ்
284. பிறருடைய பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால்
மகத்தான காரியம் எதையும் செய்யமுடியாது.
285. உன் நோக்கத்தை வாளால் சாதித்துக் கொள்வதைவிட
புன்சிரிப்பால் சாதித்துக்கொள்வதே சிறந்தது.
--- ஷேக்ஸ்பியர்
286. நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்தி முனையில்
நடப்பதைப்போல மிகவும் கடினமானதுதான். எனினும்
எழுந்திரு, விழித்துக்கொள். மனம் தளராதே. நீ அடைய
வேண்டிய உனது லட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.
--- விவேகானந்தர்
287. திடமான மனம் இருந்தால் வெற்றி தானகவே தேடிவரும்.
--- சாணக்கியன்
288. எதையும் நம்பிக்கையுடன் தாங்குபவன் இறுதியில்
வெற்றியடைவான்.
--- பெர்னியஸ்
289.உள்:ளத்தில் மட்டும் அன்பு இருந்தால் போதாது:
அது செயலில் பயன்படவும் வேண்டும்.
--- டால்ரிக்ஸ்
290. உலகிலுள்ள எந்த சக்தியாலும் அளக்க முடியாத சக்தி
ஒன்று உள்ளது. அதுவே மனிதனுடைய மனோசக்தி.
--- ஸ்டாலின்
291. கவலை நமது சவப் பெட்டியில் ஓர் ஆணியை
அறைகிறது.சிரிக்கும் ஒவ்வொரு சிரிப்பும் ஓர்
ஆணியைக் கழற்றுகிறது.
--- வால்காட்
292. நடந்ததை அமைதியுடன் ஏற்றுக்கொண்டு
நடக்க வேண்டியதைக் கவனி.
--- கார்லைல்
293. உழைப்பு கொழுப்பைக் கரைக்கும்; கொழுப்பு கண்ணை
மறைக்கும்.
--- வாரியார்
294. இரண்டு சதவீதம் கற்பனையும் தொண்ணூற்று
எட்டு சதவீதம் கடும் உழைப்பும் உள்ளவனே
மேதையாக இயலும்.
--- மில்டன்
295. உன் மகிழ்ச்சி நிலைத்திருக்க வேண்டுமானால்
எதிலும் மிதமாக இரு.
--- சார்லஸ் அகஸ்டின்
296. இவ்வுலகில் கடமையை விட கவலையே பலரைக்
கொன்று விடுகிறது. ஏனெனில் அநேகர் கடமையைச்
செய்வதைவிட்டுவிட்டுக் கவலைப்பட்டுக்கொண்டேயிருக்கின்றனர்.
--- இராபர்ட்
297. ஆசை பேராசையாகவும்,அன்பு வெறியாகவும் மாறும் போது
அமைதி அவ்விடத்தைவிட்டு நகர்ந்து விடுகிறது.
---மாக்ஸிம் கார்க்கி.
298. மற்றவர்களிடம் வாதமிடாதே. குற்றங்களில் எல்லாம்
பெரிய குற்றம் வாய்ப்பேச்சுதான்.
--- ஆல்பிரட் நோபல்
299. வீண்பேச்சு, வீண்வம்பு, வீராப்பு குடும்பத்தைக் கெடுக்கும்.
விடியும் வரை தூங்குவது கஷ்டத்தைக் கொடுக்கும்.
--- பெர்னாட்ஷா
300. மனத்தை மறைக்க முடியாது. உள்ளதே உள்ளிருந்து
வெளிவரும்.
--- ஸ்ரீ அரவிந்தர்