பொன்மொழிகள்
301. உங்களின் துணிவு, கடின உழைப்பு இந்த இரண்டையும்
பொருத்துத்தான் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பிறக்கும்;
நீடிக்கும்.
--- பால்ஜாக்
302. வெற்றியை விட முக்கியமானது நல்ல பண்பு.
வெற்றிமீது உள்ள தாகத்தால் அதை இழந்துவிட
அனுமதிக்கக்கூடாது.
--- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
303. காலத்தின் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா? அப்படியானால்
உங்கள் வாழ்வின் மதிப்பு உங்களுக்குத் தெரியும்.
--- நெல்சன்
304. உழைப்பு மூன்று பெருந்தீமைகளை நம்மிடமிருந்து
நீக்குகிறது.
1. தொந்தரவு 2. தீயொழுக்கம் 3. தரித்திரம்.
--- வால்டேர்
305. செல்வமும் சிபாரிசும் வளர்ச்சிக்கு உதவா.
--- மாத்யூஸ்
306. பார்க்காமல் எதையும் பருகாதீர்கள்;
படிக்காமல் எதிலும் கையெழுத்துப்
போடாதீர்கள்.
--- ஸ்பானிஷ்
307. வெற்றி என்பது இலட்சியத்தைப் படிப்படியாகப்
புரிந்து கொள்வதேயாகும்.
308. மனோசக்தியுள்ள மனிதனுக்கு நன்மையான இடம்
கிடைத்தே தீரும்.
--- எமர்சன்
309. பழக்கம் முதலில் சிலந்திவலையைப் போல்தான்
இருக்கும். அதைத் தொடர்ந்து செய்தால் இரும்பு
சங்கிலியைப் போன்று மாறி விடும்.
--- எட்வர்ட்ஸ்
310. ஒருவன் எப்போதும் வீரனாகவே வாழமுடியாது;
ஆனால் என்றென்றைக்கும் மனிதனாக வாழமுடியும்.
--- கதே
311. செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான்;
செய்யத்தெரியாதவன் போதிக்கிறான்.
--- சாக்ரடீஸ்
312. வளமான காலத்தில் நண்பர்கள் நம்மைத் தெரிந்து கொள்கிறார்கள்.
வறுமைக் காலத்தில் நண்பர்களை நாம் தெரிந்துகொள்கிறோம்.
--- இங்கர்சால்
313. இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொண்டால் இந்த பிரபஞ்சமே
இறைவனின் குரலைக் கேட்கச் சொல்லும். பிரபஞ்சமே
இறைவனின் சிந்தனைகள் என்ற ஞானமும் பிறக்கும்.
--- வால்டேர்
314. மன அமைதி பெற நீ விரும்பினால் ஒன்று நான் கூறுவேன்.
பிறர் குறைகளைக் காணாதே; அதற்குப் பதிலாக உன்
குறைகளைக் காண்.
--- அன்னை சாரதாமணி
315. நீங்கள் முதலில் நல்லவனாய் வாழுங்கள்;
கெடுதல்கள் எல்லாம் பறந்துபோய்விடும்.
உலகம் முழுவதும் மாறிவிடும்.
---விவேகானந்தர்
316. பேசும் முன் கேளுங்கள்,
எழுதும் முன் யோசியுங்கள்,
செலவு செய்யுமுன் சம்பாதியுங்கள்,
முதலீடு செய்யுமுன் விசாரியுங்கள்,
குற்றம் செய்யும் முன் நிதானியுங்கள்:,
ஓய்வு பெறும் முன் சேமியுங்கள்,
இறப்பதற்கு முன் தர்மம் செய்யுங்கள்.
--- வில்லியம் ஆர்தர்
317. செயலே புகழ்பரப்பும்;வாய் அல்ல.
--- ஆவ்பரி
318. திட்டங்கள் தீட்டிக்கொண்டிருப்பதை விட்டு ஒழியுங்கள்;
முதலில் செயலில் இறங்குங்கள்.
--- பிளாரன்ஸ்
319. சின்னஞ்சிறு செலவுகளைப் பற்றிக் கவனமாக இருங்கள்.
கப்பலையே கவிழ்ப்பது சிறிய ஓட்டைதான்.
--- பெஞ்சமின் பிராங்கிளின்
320. எதற்கும் அஞ்சாதே; எதையும் வெறுக்காதே; யாரையும்
ஒதுக்காதே; உன் பணியை ஊக்கத்துடன் செய்.
---அரவிந்தர்.
321. ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும்.
--- குய்நாட்
322. வாழ்க்கை என்பது எண்ணங்களால் ஆனது.
---மார்க்ஸ் அரேலியஸ்
323. எவன் தவிர்க்க முடியாததைத் துணிச்சலுடன்
ஏற்றுக்கொள்வதோடு அதை விருப்பத்துடன்
பொறுத்துக்கொள்கிறானோ அவன்தான் மாமனிதன்.
--- நீட்ஸே
324. நாம் அனைவருமே நமக்குள்ளே ஒரு தெய்வீக
அக்கினியுடன் பிறந்திருக்கிறோம். இந்த அக்னியைக்
கொழுந்துவிடவைத்து அதன் பொன்னொளியை
இந்த உலகத்தில் பரப்புவதற்காக முனைவது
நமது கடமை.
--- ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
325. வாழ்க்கைத் தேர்வில் காப்பி அடிக்க முடியாது;
ஏனெனில் அதை நீயே எழுதி நீயே திருத்துகிறாய்.
--- இங்கர்சால்
326. பிறரைச் சீர்திருத்தும் கடமையைவிடத் தன்னை
சீர் திருத்துவதே முதற்கடமை.
--- பெர்னாட்ஷா
327. தன்னைத்தானே வெற்றிக்கொண்டவன் ஆயிரம்
வீரர்களை வெற்றிக் கொண்டவனைவிட மேலானவன்.
--- புத்தர்
328. என்னுடைய தவறுகளை எனக்குச் சொல்பவர்
என்னுடைய ஆசிரியராக இருக்கிறார். என்னுடைய
புண்ணியங்களை எனக்குச் சொல்பவர் எனக்குத்
தீங்கு செய்கிறார்.
--- கன்பூஷியஸ்
329. சிக்கனம்தான் பெரிய வருமானம்.
---செனீகா
330. ஆணவம் கொண்டவருக்கு ஆபத்து எப்பொழுது
வருமோ அது ஆண்டவனுக்கே தெரியாது.
---வால்டேர்
331.வாழ்க்கையில் மட்டும் போராட்டங்கள் இல்லையென்றால்
இது ஒரு மேடை நாடகமாகவே இருந்திருக்கும்.
--- வில்லியம் ஜேம்ஸ்
332. படித்தல் ஒரு மனிதனை முழு மனிதனாய் ஆக்குகிறது.
எழுதுதல் ஒரு மனிதனை சரியான மனிதனாகச் செய்கிறது.
வரலாறு ஒருவனை அறிவாளியாக ஆக்குகிறது.
நீதி நூல்கள் ஒருவனைக் கண்டிப்பானவனாக்குகிறது.
--- பேகன்
333. நடந்ததை அமைதியுடன் ஏற்றுக்கொண்டு
நடக்க வேண்டியதைக் கவனி.
--- கார்லைல்
334. மனம் சாந்தமாகவும் சமாதானமாகவும்
இருக்கவேண்டுமென்றால் அதை அறிவுள்ள
உயர்ந்த எண்ணங்களைக் கொண்டு நிரப்பவேண்டும்.
--- ஆவ்பரி
335. நாம் கோபத்தை வென்றுவிட்டால் அடக்கம்
தானாக வரும்.
--- மகாவீர்
336. ஒருவர் நன்கு வாழ்கிறார் என்றால் அவர் இடைவிடாது
முயற்சி செய்கிறவர் என்பதே உண்மையான பொருள்.
---- ஜெர்மனி
337. தன்னைப் பற்றியே சிந்திப்பவன் பிறரைக் கவரமுடியாது.
--கதே
338. உழைத்து உண்பது நமது கடமை. உழைக்காமல் இருப்பது
நமது மடமை.
--- வால்டேர்
339. பேசப்படும் முன் நன்றாக யோசி.
--- ஷேக்ஸ்பியர்
340. உன்னைப் பிறர் விரும்பி நட்பு கொள்ள வேண்டுமென்று
ஆசைப்பட்டால் மக்களால் பாராட்டத் தக்க நற்பண்புகளை
நீ பெற்றிருக்க வேண்டும்.
--- ஜார்ஜ்எலியட்
341. வாழ முடிவுசெய்யுங்கள். முடியும் என்று ஆக்கப்பூர்வமாக
சிந்தித்தால் துன்பங்களைத் துன்பப்பட வைத்துத் தொடர்ந்து
செயலாற்றல் கொண்டவர்களாக வாழலாம்.
--- இங்கர்சால்
342. மனம் தளர்வதனால் எதையும் சாதிக்க முடியாது.
343. ஒவ்வொருவரும் தன்நெற்றி வியர்வை சிந்தி
உழைத்துப் பிழைத்தால் மண்ணுலகம்
விண்ணுலகமாகிவிடும்.
--- மகாத்மா காந்தி
344. எப்பொழுதும் உழைத்துக்கொண்டே இரு. உழைப்பு
வீண் போகாது.உழைப்பிலே சுகமிருக்கிறது. வறுமை,
நோய் போன்ற குட்டிப் பேய்களெல்லாம் உழைப்பைக்
கண்டவுடன் ஓடிப்போய்விடும்.
உழைப்பே இன்பம் தரும்.
--- பஸ்கால்
345. இன்பத்தில் உண்டாகும் மறதி. துன்பத்தில் உண்டாகும் உறுதி.
346. வானத்து நட்சத்திரங்கள் பாடல்களாக விளங்குதல் போல
பெண்கள் உலகின் பாடல்களாக விளங்குகின்றனர்.
--- ஹார்கி ரோவ்
347. பிறரை நம்பி வாழ்பவனிடம் வறுமை இருந்து
கொண்டே இருக்கும்.
--- வில்லியம் டெம்பிள்
348. உள்ளதைச் சொன்னால் நான் பொல்லாதவன்.
சொல்லாமல் இருந்தால் நான் அறிவில்லாதவன்.
349. எந்த அளவுக்கு ஒருவர் தம் அறிவைத் தொழிற் கல்வியோடு
சேர்த்துப் பயன்படுத்துகிறாரோ, அந்த அளவிற்கு முன்னேறுவார்.
--- இங்கர்சால்
350. தன்னம்பிக்கை முன் எந்த ஆயுதமும் நிற்காது.