திருக்குறள்
2.பொருட்பால்
77. படைமாட்சி
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையு ளெல்லாம் தலை. 761
யானை, குதிரை, தேர், அஞ்சாத வல்லுனர்கள் போன்ற
அநேக உறுப்புக்களைக் கொண்டதாய், துன்பங்களுக்கு
அஞ்சாததாய், உள்ள வெற்றி தரும் படை, அரசனது
செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.
The best one among all wealth of king is:
Troops, fearless and vanquish.
The military forces of various parts like chariots, Elephants,
Cavalry and infantry who are undaunted to foes but overcome them;
is the chief of all the possessions possessed by monrchs.
திருக்குறள்
2.பொருட்பால்
77. படைமாட்சி
EXCELLENCE OF ARMY
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது. 762
போரில் இழப்பு வந்தபோதும், பலம் குறைந்த சமயத்திலும்
இடையூறுகளுக்கு அஞ்சாத உறுதி பரம்பரைப் பெருமை கொண்ட
படைக்கு மட்டுமே உண்டு.
Bravery, during defeat or even in ruin is rarely found
Except the old army men.
But for the traditional military people; capacity of resisting boldly
the enemies is seen searcely during defeat while they are about to be
defeated as they are a few in number or while they are about to perish
in the war.
திருக்குறள்
2.பொருட்பால்
77. படைமாட்சி
EXCELLENCE OF ARMY
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும். 763
எலிகள் கடல் போல் திரண்டு கத்தினாலும் பாம்பு
அதற்கு அஞ்சுவதில்லை. ஆனால் நாகம் பெருமூச்சு
விட்டால் அதன் விஷக்காற்றால் எலிகள் மயங்கிச்
சாகும்.
The enemity of mice what if, by roar like sea;
if cobra hisses every thing is no more.
What will be the benefit of hostility of mice by roaring like sea;
if the cobra hisses, they will disappear.
திருக்குறள்
2.பொருட்பால்
77. படைமாட்சி
EXCELLENCE OF ARMY
அழிவின்றி அறைபோகா தாகி வ்ழிவந்த
வன்க ணதுவே படை. 764
போர்க்களத்தில் அழியாமல், பகைவரின்
வஞ்சனைகளுக்கு இரையாகாமல் தப்பி, தொன்று
தொட்டுவரும் அஞ்சாமையைக் காப்பாற்றுவதே
சிறந்தபடை.
It's only the force free from destruction,
Unsubdued for illusion and with wonted force.
It is only said to be the troop which is impossible
for the foes to destroy ; not subdued for them even for their
fraudulent and cunning ways and also having their inheritant
strength and experience in military force.
திருக்குறள்
2.பொருட்பால்
77. படைமாட்சி
EXCELLENCE OF ARMY
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை. 765
எமனே சீற்றம் கொண்டு தங்கள் மேல் எதிர்த்து
வந்தாலும் ஒன்றுகூடி எதிர்த்து நிற்கும் ஆற்றல்
கொண்டதே சிறந்தபடை.
It is only the force which resist God of death
Even if he comes and falls out which wrath.
It is only the troop which is cappable of opposing
the Yama who is said as the God of death;
Even if he comes and falls foul of the force as he
became enraged.
திருக்குறள்
2.பொருட்பால்
77. படைமாட்சி
EXCELLENCE OF ARMY
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
என நான்கே ஏமம் படைக்கு. 766
வீரம், மானம், சிறந்த வழியில் நடத்தல்,படைத்தலைவரால்
ஆராயப்பட்டு நம்பிக்கைக்குரியதாக இருத்தல்
ஆகிய நான்கு பண்புகளும் படையின் இலக்கணங்களாகும்.
Valour, honour, excellent manner and clarity by their captain
Are the only four safety of battalion.
Bravery, dignity, good discipline and taking instructions
from their chief are only four safety ways for the troops.
திருக்குறள்
2.பொருட்பால்
77. படைமாட்சி
EXCELLENCE OF ARMY
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை யறிந்து. 767
தன்னை எதிர்த்து வரும் பகைவரின் போரைச்
சமாளித்து, அதை வெல்லும் வகையைக் கணக்கிட்டு
அவர் படையத் தூசியாக நினைத்து பிளந்து செல்ல
வல்லதே சிறந்த படை.
knowing mode of battalia of the foes battalia'
And oppose them away is the troops way.
Discerning how to to keep the array of self battalion
and also knowing the manners of array of the enemies
troops as they stand and ready for battle and resist them
from distance even without fall of their dust on, is the manner of real force.
திருக்குறள்
2.பொருட்பால்
77. படைமாட்சி
EXCELLENCE OF ARMY
அடற்றகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும். 768
அஞ்சாமல் போர் புரியும் வீரமும், எதிர்ப்பைத் தாங்கும்
ஆற்றலும் இல்லாவிட்டாலும் கம்பீரமான அணிவகுப்பால்
படைக்குப் பெருமை கிடைக்கும்.
Even though not competent to oppose or withstand
The troop will be degnified if they 're grand to note.
Neverthless, they are not capable of resisting the enemies or
incapable of enduring them while they attack t;he battalion
will be respected if they are large in number.
திருக்குறள்
2.பொருட்பால்
77. படைமாட்சி
EXCELLENCE OF ARMY
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை. 769
சிறிய படையானாலும் தலைவனிடம் வெறுப்பும்,
வறுமையும் இல்லாதிருந்தால் அப்படை வெல்லும்.
If there is no decrement nor prolong disgust against
The captain and no want, the army will surmount.
if there is no decrease nor long hatred towards the chief of army
And also no want in any respect, the troops will have victory
over the enemies.
திருக்குறள்
2.பொருட்பால்
77. படைமாட்சி
EXCELLENCE OF ARMY
நிலைமக்கள் சாலை உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல். 770
பின் வாங்காமல் போர் செய்யும் வீரர்களை
ஏராளமாகக் கொண்டிருந்தாலும் தலைவனை
இழந்த படை நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காது.
Even then armies contain many a soldier, prolong
unless there are captain they are considered nothing.
Even though the troop consist of many bold and experienced
soldiers in it; otherwise they have competent commanders to guide
them, they are considered to be nothing though they are in existence.