Translate

Thursday, March 14, 2013

திருக்குறள்




திருக்குறள் 
 (see below in English)
 1.அறத்துப்பால்
13. அடக்கமுடைமை

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும்.                         121

அடக்கத்தோடு வாழ்வது ஒருவரைத் தேவருள்
ஒருவராக்கும். அடக்கமின்றி நடந்து கொண்டால்
பொல்லாத தீயவாழ்க்கையில் தள்ளிவிடும்.


kural-121
Control of self does man conduct to bliss th' immortalsshare;
Indulgence leads to deepest night, and leaves him there.

Self-control will place (a man) among the Gods;
the want of it will drive (him) into the thickest
darkness (of hell).



காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.                122

உயிர் வாழ அடக்கத்தை விட சிறந்த பொக்கிஷம்
கிடையாது. ஆகையால் அடக்கத்தை தவற விடாமல்
காக்கவேண்டும்.

kural-122

Guard thou as wealth the power of self -control;
Than this no greater gain to living soul!

Let self-control be guarded as a treasure; there is no
greater source of good for man than that.

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.                       123

அறிய வேண்டியதை அறிந்து நல்ல வழியில்
அடக்கத்தோடு வாழ்ந்தால் ; அந்த அடக்கம் நல்லவர்களால்
மதிக்கப்பட்டுச்  சிறப்பைத்தரும்.

kural-123

If versed in wisdom's lore by virtue's law you self restrain.
Your self-repression known will yield you glory's gain.

knowing that  self-control is knowledge, if a man should
control himself, inthe prescribed course,such self-control
will bring him distinction among the wise.
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப்பெரிது.                           124

ஒழுக்கம் தவறாது அடக்கத்தை கடைப்பிடிப்பவரின்
பெருமை மலையைவிடப் பெரியதாகும்.

kural-124

In his station, all unswerving, if man self subdue,
Greater he than mountain proudly rising to the view.

More lofty than a mountain will be the greatness of
that man without swerving from his domestic state,
controls himself.


எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து.                            125

பணிவுடன் நடந்து கொள்வது எல்லோருக்கும்
நன்மை தரும். அதிலும் செல்வந்தர்களுக்கு
அது இன்னொரு செல்வமாய் பெருமை தரும்.

kural-125
To all humility is goodly grace; but chief to them
with fortune blessed,-'tis fortunes diadem.

Humility is good in all; but especially in the rich
it is (the excellence of) higher riches.
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.                               126

ஒரு பிறப்பில் ஆமைபோல் ஐம்புலங்களையும்
அடக்க வல்லவனாயின் அது அவனை ஏழுபிறப்பிலும்
காப்பாற்றும்.

kural-126

Like tortoise, who the five restrains
In  one, through  seven  world bliss obtains.

Should one throughout a single birth, like a
Tortoise keepin his five senses, the fruit of it
will prove a safe-guard to him throughout the
seven-fold births.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.                     127

எந்த உறுப்பை காக்க முடியாது போனாலும் நாவை
காக்கவேண்டும்.நாவை கட்டுப்படுத்த முடியாவிட்டால்
வார்த்தையில் குற்றம் ஏற்பட்டு துன்பத்திற்குள்ளாக நேரிடும்.

kural-127

Whate'er they fail to guard , o'er lips men guard should keep;
If not, through faultof tongue,they bitter tears shall weep.

Whatever  besides you leave unguarded, guard your ;  otherwise
Errors of speech and the consequent misery will ensue.





ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.                                  128

தீய சொற்களால் உண்டாகும் தீங்கு ஒன்றுதான்
என்றாலும், அதைச் சொன்னவர் செய்த தருமங்களின்
பலன் அழிந்து விடும்.

kural-128

Though some small gain of  good it seem to  bring,
The evil word is parent still of evil thing.

If a man's speech be productive of a single evil,
all the good by him will be turned into evil.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.                             129

நெருப்பினால் ஏற்பட்ட காயம் ஆறிவிடும். நாவினால்
சுடுசொல் கூறினால் அந்தக் காயம் தழும்பாகி
நெஞ்சில் மறையாதிருக்கும்.

kural-129

In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore;
In soul by tongue inflamed,the ulcer healeth never more.

The wound which has been burnt in by fire may heal, but a wound
 burnt in by the tongue will never heal.


கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.                   130

நெஞ்சில் கோபம் ஏற்படாமல் காத்து, படித்து,
அடக்கமாயிருப்பவன் வாழ்க்கையில் தரும தேவதை
அவனை அடைய நல்ல நேரத்தை எதிர்நோக்கிக்
காத்திருக்கும்.

kural-130

Who learns restraint, and guards his soul from wrath,
Virtue, a timely aid, attends his path.

Virtue, seeking for an opportunity , will come into the path
of that man who, possessed of learning and self - control,
guards himself against anger.



source book.com link:


Up to 60% off Parenting & Children's Books



77 kids.com link


Primary





My blogs:

http://saivasiddhantam.blogspot.in/

http://sansalternatetherapy.blogspot.in/

http://behaviourtherapy.blogspot.in/



Friday, March 8, 2013

திருக்குறள்


திருக்குறள் 
 (see below in English)
 1.அறத்துப்பால்
12. நடுவு நிலைமை

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.                     111

அந்தந்தப் பகுதியினரிடமும் முறையோடு பொருந்தி
நடந்தால் நடுவு நிலைமை எனப்படும் அறமே
நன்மையாகும்.


kural-111

If Justice, failing not,its quality maintain,
Giving to each his due,-'its man's one highest gain.

That equity which consists in acting with equql regard
to each of ( the three) divisions of men [ enemies, strangers and friends]
is a pre-eminent virtue.

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.                    112

நடுவு நிலைமை உடையவனின் செல்வம்
அழியாமல் அவன் சந்ததியினருக்கு உதவி
நன்மையைத் தரும்.


kural-112

The just man's wealth unwasting shall endure,
And to his race a lasting joy ensure.

The wealth of the man of rectitude will not perish,
But will bring happiness also to his posterity.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழியவிடல்.                              113

நன்மையே தருவதானாலும் நடுவு நிலைமை
நீங்குவதால் கிடைக்கும் செல்வத்தை நிராகரிக்க
வேண்டும்.

kural-113

Though only good it seem to give, yet gain
By wrong acquired, not e'en one day retain!

Forsake in the very moment (of acquisition) that gain which,
though it bring  advantage, is without equity.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தார் காணப் படும்.                         114

நடுவு நிலைமை உடையவர், நடுவு நிலைமை
இல்லாதவர் என்பதை அவரவர்க்கு ஏற்படும்
சந்ததி, புகழ் முதலியவற்றால் தெரிந்து கொள்ளலாம்.

kural-114

Who just or unjust lived shall soon appear:
By each one's  offspring shall the truth be clear.

The   worthy and unworthy may  be known by the
existence or otherwise of good offsprings.


கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.                  115

துன்பமும், முன்னேற்றமும் ஒவ்வொருவர் வாழ்விலும்
உண்டு. ஆனாலும் மனதினில் நடுவு நிலைமை தவறாமல்
இருப்பது சான்றோரின் அணிகலன்.

kural-115
The gain and loss in life are not mere accident;
Just mind inflexible is sages' ornament.

Loss and gain come not without cause; it is the
ornament of the wise to preserve evenness of
mind(under both).

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்.                                116

தன்மனம் நடு நிலைமை நீங்கி, குற்றம் செய்ய
முற்பட்டால் " தனக்குக் கெட்ட காலம் என்பதை
உணர வேண்டும்.

kural-116

If, right deserting, heart to  evil turn,
Let man impending ruin's sign discern!

Let him whose mind departing from equity commits
sin well consider thus within himself, " I shall perish."



கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.                          117

நடு நிலையுடன் நடந்து அறநெறியோடு வாழ்கின்றவர்
அடைந்த வறுமையை உலகம் கேடு என்று சொல்லாது.

kural-117

The man who justly lives, tenacious of the right,
In low estate is never low to wise man's sight.

The great will not regard as poverty the low estate of
that man who dwells in the virtue  of equity.


சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.                          118

பொருளை வைத்ததும் தராசு பொருள் உள்ள பக்கம் சாயும்.
ஆனால் எந்தக் காலத்திலும் , எந்தச் சூழ்நிலையிலும்
எப்பக்கமும் சாயாமல் நடுநிலையில் இருப்பது சான்றோர்க்கு
அழகு.

kural-118

To stand, like balance-rod that level hangs and rightly weighs,
With calm unbiassed equity of  soul, is sages' praise.

To inclain to neither side, but to rest impartial as the even-fixed
Scale is the ornament of the wise.


சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.                        119


உள்ளத்தில் கோணல் இல்லாமல் உறுதியாக இருந்தால்
சொல்லிலும் கோணாமல் நடு நிலையாயிருக்க முடியும்.

kural-119

Inflexibility in word is righteousness,
If men inflexibility of soul posses.

Freedom from obliquity of speech is rectitude,
if there be ( corresponding) freedom from bias of mind.



வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தம்போற் செயின்.                       120

பிறர் பொருளையும் தன் பொருள் போல் கருதி
நடுநிலை தவறாது வியாபாரம் செய்வதே
வாணிகத்துக்குரிய இலக்கணமாகும்.


kural-120

As thriving trader is the trader known,
Who guards another's interests  as his own.

The true merchandize of merchants is to guard and
do by the things of others as they do by their own.


source book.com link:


Up to 60% off Parenting & Children's Books



77 kids.com link


Primary





My blogs:

http://saivasiddhantam.blogspot.in/

http://sansalternatetherapy.blogspot.in/

http://behaviourtherapy.blogspot.in/