பொன்மொழிகள்
201. புகழ் என்பது நம் செயல்களின் எதிரொளி.
--- புல்லர்
202. ஒரு மனிதனின் இயல்பை அறியவேண்டுமானால்
அவனிடம் அதிகாரத்தைக் கொடு.
203. எல்லாம் தெரிந்தவனும் உலகில் இல்லை.
எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை.
--- வாரியார்
204. எங்கு அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு இருக்கிறது.
--- காந்திஜி
205. அன்பு அருளைத் தரும்; ஆற்றல் பொருளைத்தரும்.
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறார்.
--- காந்திஜி
206. சிக்கல் எது என்று அறிந்தாலே பாதி சிக்கல் தீர்ந்துவிடும்.
--- கிப்ளிங்
207. மணிக்கணக்கில் பேசுவதைக் காட்டிலும் குறைந்த
அளவு காரியங்களைச் செய்வது மேலானது.
---விவேகானந்தர்
208. பொறுமை உள்ள மனிதன் நிச்சயம் வெற்றி பெறுவான்.
--- எபிடெட்ஸ்
209. வீண் சொற்கள் விஷயங்களைப் பழுதாக்குகின்றன.
--- ஆண்ட்ரூஸ்
210. பாதையைச் சரியாகப் போட்டால் பயணம் சுலபமாக இருக்கும்.
--- இங்கர்சால்
211. வெல்ல முடியும் என்று நினைப்பவரே வெல்லமுடியும்.
--- வேர்ஜில்
212. சிறுகடமைகளில் கூட கருத்தாக இருப்பதுதான்
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மிகச் சிறந்தவழி.
213. முள்ளில்லாத ரோஜா இல்லை: செயல் இல்லாமல்
வாழ்க்கை இல்லை.
---இங்கர்சால்
214. பத்து வெற்றிகளைவிட ஒரு சமாதானம் மேலானது.
--- மாண்டேகு
215. கடமை உணர்வே உன் நேர்மையான வாழ்க்கைக்கு ஆதாரம்.
--- ஹென்றி
216. சிந்தனை செய்வது வளர்ச்சியைத்தரும்; கவலைப்படுவது
அழிவைத்தரும்.
---என்வியெஷல்
217. மனவலிமை மட்டும் இருந்தால் போதாது;
அதை நல்லவிதமாகப் பயன்படுத்தவும் வேண்டும்.
---டெங்கர்டெஸ்
218. கேட்டது கிடைக்கவில்லையே என்று கவலைப்படாதீர்கள்;
கிடைப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
--- டிபோ
219. முறிந்துபோவதைவிட வளைந்துபோவது கெட்டிக்காரத்தனம்.
--- சாணக்கியன்
220. உழைத்து உண்பது நமது கடமை;
உழைக்காமல் இருப்பது நமது மடமை.
--- வால்டேர்
221. பிறரை மாற்ற வேண்டும் என்று புத்திசொல்கின்றனர்.
ஆனால் தன்னை மாற்றிக்கொள்ள யாருமே நினைப்பதில்லை.
--- டால்ஸ்டாய்
222. மனத்திருப்தி நமக்கு இயற்கையாகக் கிடைத்த செல்வம்;
ஆடம்பரம் நாம் செயற்கையாக உருவாக்கிக்கொண்ட பஞ்சம்.
--- சாக்ரடீஸ்
223. நல்ல நூல்களைப் படிப்பது தலைசிறந்த மனிதருடன்
உரையாடுவதைப் போன்றது.
--- ரெனதெகார்த்
224. தவறை ஒப்புக்கொள்ளும் தைரியமும், அதைத்
திருத்திக்கொள்வதற்கான பலமும்தான் வெற்றிக்கான
வழிகள்.
--- லெனின்
225. செயல் இல்லாத சிந்தனை அழிவைத் தரும்.
சிந்திக்காது புரிகிற செயல் அர்த்தமற்றதாகப்
போகும்.
226. நம் கருத்து சரி என்று தெரிந்திருந்தும், அது சரியோ, தப்போ
என்று அச்சப்படுவது பெரும் பலவீனம்.
--- ஹால்டேன்
227. பேச இருப்பதை எல்லாம் நன்றாக யோசி.
யோசிப்பதை எல்லாம் பேசிவிடாதே.
--- டெலானி
228. எது நன்மை என்பது அதை இழந்தபிந்தான் தெரியும்.
--- இங்கர்சால்
229. தீமைகள் உங்களை அணுகாதிருக்க உங்களது எண்ணங்களில்
தீமைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
--- சாக்ரடீஸ்
230. தன்னைத்தான் உயர்த்துகின்றவன் எவனும் தாழ்த்தப்படுவான்.
தன்னைத்தான் தாழ்த்துகின்றவன் உயர்த்தப்படுவான்.
லூக்கா 14:7-11
231. சுறுசுறுப்பாய் உள்ள மனிதன் எப்போதும்
மகிழ்ச்சியோடு இருப்பான்.
--- ஹென்றி ஃபோர்டு
232. நெருப்பு தங்கத்தைப் புடமிடுகிறது. துன்பம் மனிதனைப்
புடமிடுகிறது.
--- செனேகா
233. அதிக அவசரம் அதிக அழிவை உண்டாக்கும்.
--- சாணக்கியன்
234. உலகத்தில் சோதனைக்கு உட்படாமலும் அதனிடம்
பாடம் படிக்காமலும் ஒருவன் நிறைவுற்ற மனிதனாக
விளங்கமுடியாது! அனுபவம் ஊக்கமாக உழைப்பதிலிருந்து
கிடைக்கிறது; காலத்தின் வேகம் அதைச் செம்மைப்படுத்துகிறது.
--- ஷேக்ஸ்பியர்
235. நம் எண்ணங்களைப் போல வலிமை மிகுந்தது எதுவுமில்லை.
--- நைட்டிங்கேல்
பொன்மொழிகள்
236. இலட்சியத்தில் கவனம் செலுத்தி அதை அடைவதற்கு
முயல்கிறவன் தன்னை அறியாமலேயே மேதையாக
உருவாகிறான்.
--- நெப்போலியன் ஹில்
237. சதுரங்க விளையாட்டைப்போல வாழ்விலும் முன்யோசனை
வெற்றிபெறுகிறது.
--- பாக்ஸ்டன்
238. பெருமையோ, இகழ்ச்சியோ தானே வருவதில்லை.
உங்கள் கடமையை நன்றாகச் செய்யுங்கள்;
எல்லாமே அதில்தான் அடங்குகின்றன.
--- கீதாஉபதேசம்
239. நமக்கு எதையெல்லாம் பிறர் செய்யக்கூடாது என்று
நினைக்கிறோமோ அதையெல்லாம் நாம் பிறருக்குச்
செய்யக்கூடாது.
--- கன்பூஷியஸ்
240. யாருமே உதவாக்கரை இல்லை- அவர்கள் நேரத்தை
வீணாக்காமல் இருக்கும் வரை.
--- மார்த்தா எச்
241. விழிப்பதற்கே உறக்கம்; வெல்வதற்கே தோல்வி;
எழுவதற்கே வீழ்ச்சி.
242. நமது வாழ்க்கை இன்பமயமாக அமைவதற்கு
இருகாரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று
நம்மை நாம் சரிவரப் புரிந்துகொள்வது.
---ஜி.டி. போவாஸ்
243. இவ்வுலகில் கடமையை விட கவலையே பலரைக்
கொன்று விடுகிறது. ஏனெனில் அநேகர் கடமையைச்
செய்வதை விட்டுவிட்டுக் கவலைப்பட்டுக் கொண்டேயிருக்கின்றனர்.
--- இராபர்ட்
244. பகைவனின் புன்சிரிப்பைவிட நண்பனின் கோபம் மேலானது.
---ஜேம்ஹோபெல்
245. மனம் சாந்தமாகவும் சமாதானமாகவும் இருக்கவேண்டுமென்றால்
அதை அறிவுள்ள உயர்ந்த எண்ணங்களைக் கொண்டு
நிரப்பவேண்டும்.
--- ஆவ்பரி
247. பிறரது அன்புக்குப் பாத்திரமாவதைவிட பிறரது
நம்பிக்கைக்குப் பாத்திரமாவது பன்மடங்கு மேல்.
--- டொனால்டு
248. புகழுக்காக நேர்மையை மறக்காதே.
--- சாணக்கியன்
249. கடமை உணர்வே உன் நேர்மையான வாழ்க்கைக்கு ஆதாரம்.
---ஹென்றி
250. மனவலிமை மட்டும் இருந்தால் போதாது; அதை நல்ல விதமாகப்
பயன்படுத்தவும் வேண்டும்.
--- டெங்கர்டெஸ்