பொன்மொழிகள்
401. பிறருடைய பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால்
மகத்தான காரியம் எதையும் செய்யமுடியாது.
402. வலக்கை ஊக்கமாக உழைக்க வேண்டும்; இடக்கை
சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும். இதுவே
ஒருவனின் உண்மையான அதிர்ஷ்டம்.
--- இங்கிலாந்து
403. உயர்நீதி மன்றங்களைவிட உயர்வான மன்றம் ஒன்று
உண்டு. அதுதான் மனச்சாட்சி மன்றம்.
--- மகாத்மா காந்தி
404. காலத்தை வீணாக்குவதே செலவுகள் அனைத்திலும்
அதிகச் செலவும் ஊதாரித்தனமுமாகும்.
--- பிரேஸ்டஸ்
405. வெற்றிக்குப் பத்துப் படிகள்:
1. திட்டமிட்டுச் செயல்படு.
2. அதிகமாகக் கவனி.
3. குறைவாகப் பேசு.
4. நேர்மையாக நட.
5. விமர்சனம் வேண்டாம்.
6. எளிமையைப் பின்பற்று.
7. தர்மம் செய்.
8. கடனைத் தவிர்.
9. கோபம் கொள்ளாதே.
10. தியானம் மேற்கொள்.
406. கவலையுடன் தூங்கச் செல்வது முதுகில் சுமைகளைக்
கட்டிக் கொள்வதற்குச் சமம்.
--- கூப்பர்
407. முன்னும் பின்னும் யோசிக்காமல் வார்த்தைகளை
விடுகிறோம். ஆனால் அதற்குரிய பலனை வட்டியும்
முதலுமாக அனுபவிக்கிறோம். இதுதான் வாழ்க்கை.
408. தூசிகளைக் கண்டதும் இமைகள் மூடிக்கொள்வதைப்
போல் தீமையைக் கண்டதும் விலகுகின்ற மனச்சான்றே
இணையற்றதாகும்.
--- ஆதம்ஸ்
409. உலகில் வெற்றிகரமாக வாழ, நான்கு குணங்கள் மட்டுமே
தேவை. நிறைய பொறுமை, வாய்ப்புக்களை சரியாகப்
பயன்படுத்தும் திறமை, தவறைக் கண்டிக்கும் அச்சமின்மை,
தவறு செய்பவர்களையும் அணைத்துச் செல்லும் கனிவுடைமை.
--- மாத்யூ ஆர்னால்ட்
410. கடவுள் நமக்கு நாக்கைக் கொடுத்திருப்பது இனிமையான
சொற்களைக்கூறுவதற்கே.
---ஹீன்
411. அன்பினால் ஊக்கப்பட்டு அறிவினால் நடத்தப்படுவது வாழ்க்கை.
--- ரஸ்ஸல்
412. நான் விழுந்தால் விழுகிற ஒவ்வொருமுறையும் எழுவேன்
என்கிற மன உறுதி படைத்தவர்கள் சாதிக்கிறார்கள்.
அவர்கள் தோற்கத் தயங்குவதில்லை.
--- ஷேக்ஸ்பியர்
413. ஒருவர் கையை எதிர்பார்த்திராதே; உன் கொள்கைகளை
நீயே சாதித்துக் கொள்ள முயற்சி செய்.
--- மில்டன்
414. செயல்படாத மனிதனுக்கு யாரும் ஒருபோதும்
உதவி செய்வதில்லை.
--- ஸோஃபாக்ஸில்
415. இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொண்டால் இந்தப்
பிரபஞ்சமே இறைவனின் குரலைக் கேட்கச் சொல்லும்.
பிரபஞ்சமே இறைவனின் சிந்தனைகள் என்ற ஞானமும்
பிறக்கும்.
--- வால்டேர்
416. எந்தத் தொழிலும் இழிவில்லை. தொழில் எதுவும்
செய்யாமல் இருப்பதுதான் இழிவு.
--- டால்ஸ்டாய்
417. இனிமைக்கு இலக்கணம்
இரண்டொரு சொற்கள்
காலம் கருதுக
அளவோடு பேசுக.
--- ரகு நாதன்
418. நன்மைகள் விளைய,
நன்மைகள் செய்வோம்.
நமக்கென உள்ளதைப்
பிறர்க்கும் கொடுப்போம்.
--- நல்வாக்கு
419. எந்தப் பொருளின் மீது ஆசை இல்லையோ
அதனால் துன்பம் இல்லை.
--- மில்டன்
420. 'இல்லை' என்று ஒருபோதும் சொல்லாதே.'என்னால்
இயலாது' என்று ஒருநாளும் சொல்லாதே. ஏனெனில்
நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய
உண்மை இயல்போடு ஒப்பிடும்போது காலமும்
இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும்
எல்லாவற்றையும் சாதிக்கக் கூடியவன்; சர்வ வல்லமை
படைத்தவன் நீ.
--- விவேகானந்தர்
421. செயலில் கவனக்குறைவுதான் தோல்விகளைச் சந்திக்க
காரணமாக இருக்கிறது.
--- பெஞ்சமின் பிராங்க்ளின்
422. வறுமை உன்னை வாட்டும்போது பொறுப்புக்கள்
உன்னைத் துரத்தும்.
பொறுப்புக்கள் உன்னைத் துரத்தும் போது போராடி
வெற்றிகொள்.
---- வாஜ்பாய்
423. நான்கு விஷயங்களைத் திரும்பப் பெற முடியாது.
சொல்லிய வார்த்தை, விட்ட அம்பு, கடந்தகால
வாழ்க்கை, நழுவவிட்ட வாய்ப்பு.
--- அரபுப் பழமொழி
424. கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு
வேறுவழி இல்லை.
வெற்றி என்பது பெற்றுக் கொள்வது.
தோல்வி என்பது கற்றுக் கொள்வது.
425. தோல்வி பற்றிய பயம்தான் மகிழ்ச்சி, செல்வம்,
செல்வாக்கு, புகழ் என அனைத்தையும் நம்மிடமிருந்து
பிடுங்கிக் கொண்டுவிடுகிறது.
--- பிராங்க்ளின்
426. உங்களுடைய இலக்கு எப்போதும் உயர்வானதாக
இருக்க வேண்டும்.
--- சாக்ரடீஸ்
427. குழந்தையிடமிருந்து வளர்ந்த மனிதர்கள் கற்றுக்கொள்ள
வேண்டியவை நிறைய. அவற்றில் சில.
1. கள்ளமில்லாச் சிரிப்பு.
2. உண்மையான பேச்சு
3. எல்லோரிடமும் காட்டும் ஒரேவித மரியாதை.
4. பிறர் நகைக்கும்படி பேசும் பேச்சுக்கள்
5. முகத்தில் சாந்தம்.
--- டாக்டர் பாரீசன்
428. ஆடை ஆபரணம் அணிந்து கொண்டாலும் ஆணவம்
இருந்தால் பார்க்க அழகாக இருக்காது.
429. அதிகப் பேச்சு,பொய் இவை இரண்டும் நெருங்கிய நண்பர்கள்.
--- கதே
430. தன் கால்களால் பறவைகள் சிக்கிக்கொள்ளும்.
தன் நாவினால் மனிதன் சிக்கிக்கொள்வான்.
--- தாமஸ்புல்லர்
431. வாழ்க்கை முறையை சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து
அமைத்துக் கொள்வதுதான் ஒருவனின் வெற்றிகரமான
வாழ்க்கைக்கான அரிய ரகசியமாகும்.
--- விவேகானந்தர்
432. குறைவான நம்பிக்கையும் மிதமிஞ்சிய நம்பிக்கையும்
பலன் அளிக்கா.
--- நேருஜி
433. துக்கத்தை தூர எறிவதைத் தவிர அதற்கு வேறுமருந்து
இல்லை என்பதை அறிந்தவன் புத்திசாலி.
---- சாணக்கியன்
434. நல்ல செயல்களை நாமாகத் தேடிச்செல்லவேண்டும்.
அவை நம்மை நாடிவாரா.
--- விவேகானந்தர்
435. தெளிவான குறிக்கோளே வெற்றியின் முதல் ஆரம்பம்.
--- வீபர்
436. தவறுசெய்துவிட்டோம் என்று தெரிந்ததும் அதை
ஒப்புக்கொள்ள வெட்கப்படாதே.
--- ஆவ்பரி
437. எவன் தவிர்க்க முடியாததைத் துணிச்சலுடன் ஏற்றுக்
கொள்வதோடு அதை விருப்பத்துடன் பொறுத்துக்
கொள்கிறானோ அவன்தான் மாமனிதன்.
--- நீட்ஸே
438. ஆணவமும் அழிவும் இரட்டைக் குழந்தைகள்.
இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும்.
அவ்வளவுதான்.
439. நல்லோரிடம் கூடி இருப்பது சொர்க்கத்தில் இருப்பதற்குச் சமம்.
--- சாணக்கியன்
440. மகிழ்ச்சியுடையவன் எந்தப் பணியையும் தன்னுடைய
சுவைக்கேற்ப மாற்றிக்கொள்பவனே.
--- விவேகானந்தர்
441. உங்களை நீங்களே மதித்துக்கொள்வது ஆணவம்;
பிறர் உங்களை மதிப்பது பெருமை.
--- ஸ்டீவன்சன்
442. உள்ளொளி காட்டும் வெளிச்சத்தில் நடப்பவனே
இலக்கை அடைய முடியும்.
443. உயர்ந்த உள்ளங்களுக்கிடையில்தான் தூய்மையான
தோழமை மலரமுடியும்.
--- சார்லஸ் இஸ்தலீஷ்
444. தீயவர் தங்கள் தவறுகளுக்குச் சமாதானம் தேடுவர்;
நல்லவர்கள் தங்கள் தவறுகளைத் தவிர்ப்பது எப்படி
என்று சிந்திப்பார்கள்.
--- பென்ஜான்சன்
445. நேர்மையான மனம் படைத்தவருக்குச் சட்டம்தான் கடவுள்;
முட்டாளுக்குக் கோரிக்கைதான் கடவுள்.
--- மில்டன்
446. சில நூல்களை ருசி பார்க்க வேண்டும்.
சில நூல்களை மென்று தின்னாமல் விழுங்கிவிட வேண்டும்.
சில நூல்களை நன்கு சுவைத்து மென்று விழுங்கி
செரிக்கச் செய்ய வேண்டும்.
--- லெனின்
447. மௌனம் அறிவுக்கு அழகு; பொறுமை திறமைக்கு ஏற்றது.
--- காளிதாசர்
448. மனிதன் தனது அகத்தின் அரசன்; மனத்தின் காவலன்;
வாழ்க்கையாகிய கோட்டையின் தனிக்காப்பாளன்.
--- ஜேம்ஸ்ஆலன்
449. உன் கொடிய பகைவன் உன்னிடம் இருக்கும் அறியாமைதான்.
--- பர்க்
450. அன்பான இதயத்தோடு அணுகி இதமாகப் பேசினால்
யாரையும் உன்னால் திருத்தமுடியும். மனிதர்களில்
யாரும் பிறக்கும் போதே கெட்டவனாகப் பிறப்பதில்லை.
--- அறிஞர் அண்ணா
451. எதையும் செய்யாதிருப்பதைவிட ஏதாவது ஒன்றை
நாள்தோறும் செய்துகொண்டிருப்பது மேல்.
--- வில்லியம் ஜேம்ஸ்
452. கண்களை இழந்தவன் குருடனல்லன்;
எவன் தன்னிடமுள்ள குறைகளை மறைக்கிறானோ
அவனே குருடன்.
--- குருநானக்
453. பருத்தியைப் போல் அன்பைச் செலுத்தினால் அது
ஆடையாக நம்மைக் காப்பாற்றும்.
--- சீனம்
454. தன்னைத் தானே மேதாவியாக நினத்துக் கொண்டு
இருக்கும் இளைஞர்கள் இருந்த இடம் தெரியாமல்
போய் விடுகின்றனர்.
--- மகாவீர்
455. சண்டைக்கு இருவர் தேவை. நீங்கள் அவ்விருவரில்
ஒருவராயிருக்காதீர்கள்.
--- ஆவ்பரி
456. அதிகமான எதிர்பார்ப்பு நிச்சயம் கைகூடப்போவதில்லை.
--- ஷேக்ஸ்பியர்
457. அறிவுள்ள மனிதனிடம் உரையாடு.
அறிவில்லாத மனிதர்களோடு உறவாடு.
ஆனால் பண்பிலாதவனைக் கண்டால் ஒதுங்கிவிடு.
458. வீண்பேச்சு பேசுபவர்களின் பேச்சை நீங்கள் ஆமோதித்தால்
அடுத்த அவதூறு உங்கள் மேல்தான்.
---ஜார்ஜ்சன்ட்டயானா
459. சுறுசுறுப்பாய் உள்ள மனிதன் எப்போதும் மகிழ்ச்சியோடு
இருப்பான்.
---ஹென்றி ஃபோர்டு
460. பிறர் நலத்தின் பொருட்டு உழைப்பது மனத்தின்
கோணல்களைத் திருத்துகிறது.
461. பணக்காரனுடன் பழகினால் பணக்காரன் ஆகமாட்டாய்;
அறிவாளியுடன் பழகினால் நீயும் அறிவாளியாவாய்.
462. ஏழை உறவினரையும்,சிறிய காயத்தையும் அலட்சியப்படுத்தாதே.
--- வாரியார்
463. இவ்வுலக வாழ்வு பற்றிய அச்சம் எனும் இருள்
ஞான ஒளியால் விரட்டப்படுகிறது.
--- சாணக்கியர்
464. உலகின் தேவை உபதேசம் அன்று; உதவிதான்.
--- செனீகா
465.வேண்டுதல், வேண்டாதது இரண்டையும் சகித்துக் கொள்ளவேண்டும்.
--- மகாவீர்
466. ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை; அவன்
வாழும் முறையில் உள்ளது.
--- வாரியார்
467. வாய்ப்புக்காகக் காத்திருப்பவன் கோழை.
அதை உருவாக்கிக் கொள்பவனே புத்திசாலி.
468. நான் தோற்றதே இல்லை என்று ஒருவர் சொன்னால்
வெற்றியை மட்டுமே பெற்றுக் கொண்டிருக்கிறார் என்று
அர்த்தம் இல்லை. அவர் போட்டியில் கலந்துகொள்ளவே
இல்லை என்றுதான் பொருள்.
469. பொறுமையிழந்தவர் வறுமையில் வாடுவார்;
ஒற்றுமை இழந்தவர் சிறுமையில் வாடுவார்.
470. பிறர் மனம் வருந்த செயல் புரியாதீர்கள்.
உங்கள் உரிமையை விட்டுவிடாதீர்கள்.
பிறர் உரிமையில் தலையிடாதீர்கள்.
471. வாழ்க்கை முறையை சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து
அமைத்துக் கொள்வதுதான் ஒருவனின் வெற்றிகரமான
வாழ்க்கைக்கான அரிய ரகசியமாகும்.
--- சுவாமி விவேகானந்தர்
472. மனிதன் பாவம் பண்ணும்போது புரியாது;
பாவத்தை அனுபவிக்கும்போதுதான் புரியும்.
473. மனம் தளர்வதனால் எதையும் சாதிக்க முடியாது.
474. பொய் பேசுவோரிடமும் சுற்றித் திரிவோரிடமும்
தொடர்பு கொள்ளாதே.
--- ராமானுஜர்
475. முள்ளிலே பிறந்து முள்ளிலே மலர்ந்த தாழம்பூவுக்கு
மனம் உண்டு. பிறந்த இடம் எத்தகையதாக இருப்பினும்
குணம் உடையவராய் இருத்தல் வேண்டும்.
--- சாணக்கியன்
476. நம்பிக்கை என்பது விழித்திருக்கும் நிலையில்
கனவு காண்பதைப் போன்றது.
--- சிங்சௌ
477. எவர்க்கும் எவராலும் எந்த இன்னலும் ஏற்படக்கூடாது.
--- நபிகள் நாயகம்
478. தீமைகளை விலக்குவது என்பதைக் கடமையாகக்
கொள்ளுதல் நன்மைகளைச் செய்வதற்குச் சமமாகும்.
479. கோபம் என்பது நமது உயிரின் சக்தியையும்,புத்தியையும்
சிதைத்துவிடும். அதனால் மனிதன் கோப உணர்ச்சியை
வென்றே தீர வேண்டும்.
480. பொன்னான நேரத்தைப் பொறுமையுடன் சாதித்தால்
பொன்னுக்கும் மேலானது கிடைக்கும்.
--- சாணக்கியன்
481. உண்மையே நம் பெருமைக்கு ஆதாரம்.
--- மகாவீர்
482. யாருடைய நம்பிக்கையையும் குலைக்காதீர்கள்.
ஏதேனும் ஒன்றில் ஆழ்ந்த நம்பிக்கை அறிவுப் பூர்வமானதாக
இருக்கட்டும்.
--- ராமகிருஷ்ணர்
483. நீங்கள் சிந்திக்கும் ஒவ்வொரு நற்சிந்தனையும்
நீங்களே எதிர்பாராத அளவிற்கு அற்புதமான
முடிவுகளை ஒவ்வொரு முறையும் தரும்.
--- ஜான்ரோஜர்
484. அறிவுத் தெளிவு இருந்தால்தான் கலக்கமின்றி
நிதானமாகச் செயல்படமுடியும்.
--- ஆவ்பரி
485. புதிய சவால்கள்தான் நமது பலவீனங்களை அறிந்து
நாம் நம்மைப் பலப்படுத்திக் கொள்ள உதவுகின்றன.
486. பகட்டுக்காகச் செலவுசெய்வது பெருந்தன்மை அன்று
என்பதை அறியாதவன் முட்டாள்.
487. அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும் வரை உங்களுக்கு
என்றைக்கும் விடிவுகாலம்தான்.
--- பிளாட்டோ
488. மனோசக்தியுள்ள மனிதனுக்கு நன்மையான இடம்
கிடைத்தே தீரும்.
--- எமர்சன்
489. வறுமை உன்னை வாட்டும்போது பொறுப்புக்கள்
உன்னைத் துரத்தும். பொறுப்புக்கள் உன்னைத்
துரத்தும் போது போராடி வெற்றிகொள்.
--- வாஜ்பாய்
490. எல்லோருக்கும் தங்களைப் பற்றிய ஒரு சுயமதிப்பு
இருக்கவேண்டும். அந்த சுயமதிப்பைக் குறையவிடாமல்
பார்த்துக் கொள்கிற தன்னம்பிக்கை வேண்டும்.
அதுதான் எதையும் சாதிக்கும்.
--- நவீன் செய்
491. உன் நண்பனை ரகசியமாகத் திருத்து; வெளிப்படையாகப் புகழ்.
---மில்டன்
பொன்மொழிகள்
492. பிறர் தவறுகளைக் கொண்டு தன் தவறுகளைத்
திருத்திக் கொள்பவனே அறிவாளி.
--- ஹெர்பர்ட்
493. நல்ல யோசனை தோன்றும் போது அதை உடனே
செய்து முடியுங்கள்; வெற்றி உங்கள் பக்கம்.
--- ஸ்டோன்
494. நம்மால் நிச்சயமாக ஜெயிக்கமுடியும் " என்னும்
மன உறுதியும், நம்பிக்கையும் எப்போதும் நம்மைக்
கைவிடுவதில்லை.
--- ராபர்ட் ஹெச். ஷூல்லர்
பொன்மொழிகள்
495. ஒவ்வொரு நாள் காலையிலும் அந்தந்த நாள் செய்யவேண்டிய
காரியங்களை திட்டமிட்டு 'நேர ஒழுங்கு' செய்யாதவன்
எதையும் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாத
குழப்பவாதியாகிவிடுகிறான்.
--- பிரெஞ்சு சிந்தனையாளர் ஹியூகோ
496. நீங்கள் அதிக பரபரப்பாக விரையும் போது,உங்களுக்குக்
கிடைக்கும் பொருளைவிட அதிகவிலையைத்
தரவேண்டியவர்களாக இருக்கிறீர்கள். பின் ஏன் பரபரப்பு?
பொறுமையுடன் கூடிய அமைதியே என்றும் வெற்றி தரும்.
--- பெர்ரி ஃபார்பர்
497. உங்களுடைய லட்சியம் டாக்டராகவோ, வக்கீலாகவோ,
எஞ்ஜினியராகவோ,பெரிய வியாபாரியாகவோ ஆவதாக
இருக்கலாம்.ஆனால் நீங்கள் ஒரு மனிதர் என்பதை முதலில்
தெரிந்து கொள்ளவேண்டும். உங்களுக்கு வீட்டில் மனைவி,
மக்கள்,நண்பர்கள் என்று பலபேருடன் தொடர்பு இருக்கும்.
இவர்களுடன் உள்ள தொடர்புக்கான நேரத்தை அவர்களுக்காக
நீங்கள் நிச்சயம் செலவழித்துத்தான் ஆகவேண்டும்.!
'இலட்சியம், இலட்சியம்' என்று இவர்களை கவனிக்காமல்
விட்டால் நீங்கள் வாழ்வில் தோற்றவர் ஆகிவிடுவீர்கள்
ஜாக்கிரதை!
--- பார்பாரா புஷ்
498. மற்றவர்கள் செய்வதைப் பற்றியோ, செய்யாததைப்
பற்றியோ ஆராய்ந்துகொண்டிருக்காமல், உங்களது
கடமையில் கண்ணும் கருத்துமாய் இருங்கள்.
--- சுவாமி தேஜோமயானந்தா
499. இரவு தூங்குவதற்கு முன்பு, ஐந்து நிமிடம் மறுநாள்
சாதிக்கக்கூடிய காரியங்கள் என்னென்ன இருக்கின்றன
என்பதைப் பற்றிக் கற்பனை செய்யுங்கள். கவலைகளையும்
அச்சங்களையும் ஒதுக்கிவிட்டு சாதனைகளைப் பற்றி
மட்டுமே நினைப்பது பலன் கொடுக்கத் தொடங்கும்.
--- பிரடெரிக் பீடர்ஸ்
500. வெற்றிக்கான ரகசியம் மிகவும் எளிமையானவை.
1. தினமும் புது விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்.
2. உங்களுடைய முடிவுகளைச் சீக்கிரமாக உருவாக்கிக்
கொள்ளுங்கள்.
3. அனுசரித்துப் போவதையும், விசுவாசமாக இருப்பதையும்
கொள்கைகளாக்கிக் கொள்ளுங்கள்.
4. சின்ன விஷயங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள்.
5. எல்லாவற்றிற்கும் மேலாக ஒழுக்கம்தான் சிறந்தது என்று
தெளிவாக இருங்கள்.
எந்த மனிதனிடத்தில் தெய்வ நம்பிக்கையும் ஒப்பற்ற தூய்மையும்
இருக்கின்றனவோ அவனிடத்தில் ஆரோக்கியம் இருக்கிறது.
வெற்றி இருக்கிறது. வலிமை இருக்கிறது.
--- ஜேம்ஸ் ஆலன்