Translate

Tuesday, August 12, 2014

திருக்குறள்

திருக்குறள் 
 (see below in English)
 2. பொருட்பால்
58. கண்ணோட்டம்

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.                       571

கண்ணோட்டம் என்று சொல்லப்படும் மிகச்
சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான்
இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.

Kural-571

Since true benignity, that grace exceeding great, resides
In Kingly souls, world in happy state abides.

The world exists through the greatest ornament(of princes),
a gracious demeanour.



கண்னோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலைக்குப் பொறை.                        572

கண்ணோட்டத்தினால்தான் உலக வாழ்க்கை
நடைபெறுகின்றது. கண்களால் எதையும்
தெரிந்து கொள்ள முடியாதவர் உயிருடன் இருப்பது
நிலத்துக்கு சுமை.

Kural-572

The world goes on its wonted way, since grace  benign is there;
All other men are burthen for the earth to bear.

The prosperity of the world springs from the kindliness,
The existence of those who have no (kindliness) is a
Burden to the earth.

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.                           573

பாடலோடு பொருந்தாவிட்டால் இசையால் என்ன பயன்?
அதுபோல, கண்ணோட்டமில்லாவிடில் கண்களால்
என்ன பயன்?

Kural-573

where not accordant with the song, what use of sounding chords?
What gain of eye that no benignant light affords?

Of what avail is a song if it be inconsistent with harmony?
What is the use of eyes which possess no kindliness.


உளபோல் முகத்தவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.                       574

அளவுப்படிக் கண்ணோட்டம் இல்லாத கண்கள்
முகத்தில் இருப்பன போல் தோன்றுமே தவிர
அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

Kural-574

The seeming eye of face gives no expressive light,
when not with duly meted kindness  bright.

Beyond appearing to be in the face, what good
do they do, those eyes in which is no well-regulated
kindness?



கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.                                 575

கண்களுக்கு அழகு கண்ணொட்டம். அது இல்லாத
கண்கள் புண் என்றே சொல்லப்படும்.


Kural-575

Benignity is eyes'  adorning grace;
without it eyes are wounds disfiguring  face.

Kind looks are the ornaments of the eyes;
Without these they  will be  considered
(By the wise) to be merely two sores.


திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
58. கண்ணோட்டம்

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.                  576

கண்களால் தீர்மானிக்க வல்ல கண்னோட்டமுடையவர்,
அதைப் பயன்படுத்தாதிருந்தால் மரத்துக்கு
சமமானவராவார்.

Kural-576

Whose eyes 'neath brow infixed diffuse no  ray
Of grace; like tree in earth infixed are they.

They resemble the  trees of the earth, who although
they have eyes, never look kindly (on others).


கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.                            577

கண்ணோட்டம் இல்லாதவர் குருடர்களுக்கு ஒப்பானவரே.
ஆனால் கண் பார்வை பெற்ற எல்லோரும் கண்களால்
எடைபோட்டு விடுவார்கள்.

Kural-577

Eyeless are they whose eyes with no benignant lusre shine;
Who've eyes can never lack the light of  grace benign.

Men without kind looks are men without eyes; those
Who (really) have eyes are also not devoid of kind looks.




கருமஞ் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.                    578

தன் தொழிலுக்குப் பங்கம் வராமல் கண்ணோட்டம்
உடையவராக இருந்தால் இந்த உலகம் அவருக்கு
உரிமை உடையதாகும்.

Kural-578

Who can benignant smile, yet  leave no work undone;
By them as very own may all  the earth be won.

The world is  theirs (kings) who are able to show
Kindness, without injury to their affairs (administration
of  justice).


ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.                              579

தண்டித்து அடக்க வேண்டியவரிடத்தும் கண்ணோட்டம்
செய்து அவர் செய்த குற்றத்தைப் பொறுத்துக் காக்கும்
தன்மையே சிறந்தது.  


Kural-579

To smile on those that vex, with kindly face,
Enduring long, is most excelling grace.

Patiently to bear with,and show kindness to
Those who grieve us, is the most excellent of
all dispositions.


பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர்.                         580

யாவரும் போற்றுகின்ற நாகரிகமான கண்ணோட்டத்தை
விரும்புகின்றவர் பழகியவர் தனக்கு நஞ்சிடக் கண்டும்
அதை மௌனமாக உண்டுவிடுவர்.

Kural-580

They drink with smiling grace, though poison interfused they see,
Who seek the praise of all-esteemed  courtesy.

Those who desire ( to cultivate that degree of ) urbanity
which all shall love, even after swallowing the poison
served to them by their  friends, will  be friendly with them.


திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
59. ஒற்றாடல்

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.                     581

ஒற்றறிதலும், புகழ் படைத்த நீதி நூலும் ஆகிய இரண்டையும்
அரசன் தன் கண்களெனத் தெரிந்து கொள்ள வேண்டும்.

Kural-581

These two: the code renowned and spies,
In these let king confide as eyes.

Let a king consider as his eyes these two
things, a spy and a book  (  of laws) universally
Esteemed.


எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.                   582

எல்லோரிடத்தும் நடக்கின்றவை எல்லாவற்றையும்
எப்பொழுதும் ஒற்றர்களைக் கொண்டு சீக்கிரமாகத்
தெரிந்து கொள்வது அரசன் தொழில்.  

Kural-582

Each day , of every subject every deed,
'Tis duty of the king to learn with speed.

It is the duty of the  king to know quickly (by a spy)
What all happens, daily, amongst all men.




ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்து இல்.                     583

நாட்டு நிகழ்ச்சிகளை ஒற்றரால் அறிந்து அவற்றின்
நன்மை தீமைகளை ஆராய்ந்துணராத அரசனுக்கு
வெற்றிபெற வேறு வழி இல்லை.

Kural-583

By spies who spies, not weighing things they bring,
Nothing can victory give to  that unwary king.

There is  no way  for a king to obtain conquests,
who knows not the advantage of discoveries
made by a spy.
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.                          584

தன் காரியத்தைச் செய்பவர், உறவினர், பகைவர் என
அனைவரையும் ஆராய்பவனே ஒற்றன்.

Kural-584

His officers, his friends,his enemies,
All these who watch are trusty spies.

He is a  spy who watches all men, to wit,
those who are in the king's employment,
his relatives, and his enemies.


கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.                 585

மற்றவர் சந்தேகப்படாதபடி ஒப்பனை செய்து கொண்டு,
மற்றவரின் கண்பார்வையை நேருக்கு நேர் உற்று
நோக்கினாலும் எந்த இடத்திலும் தன் அந்தரங்கத்தைச்
சொல்லாமல் இருக்க வல்லவனே சிறந்த ஒற்றன்.

Kural-585

Of unsuspected mien and all-unfearing eyes,
who let no secret out, are trusty spies.

A spy is one who is able to assume an appearance
which may create no suspicion( in the minds of others),
who fears no man's face, and who never reveals (his purpose).

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.            586

தவக்கோலம் பூண்டு அரிய இடங்களுக்குச் சென்று
ஆராய்ந்து, சந்தேகம் கொண்டவர் என்ன துன்பம்
விளைவித்தாலும் சோர்ந்து விடாமாலிருப்பவரே
சிறந்த வேவுகாரர்.

Kural-586

As monk or devotee, through every hindrance making way,
A spy, whate'er men do, must watchful mind display.

He is spy who, assuming the appearance of an  ascetic,
goes into (whatever place he wishes),examines into
(all that is needful), and never discovers himself,
whatever may be done to him.



மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.                     587

ரகசியமான செய்திகளைக் கேட்டறிய வல்லவனாகவும்,
அப்படித் தெரிந்து கொண்ட சமாசாரங்களை சந்தேகமின்றி
தைரியமாக சொல்லக்கூடியவனாகவும் இருப்பவனே ஒற்றன்.

Kural-587

A spy must search each hidden matter out,
And full report must render, free from  doubt.

A spy is one who is able to discover  what is hidden
and who retains no doubt concerning what he has
known.


ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.                           588

ஓர் ஒற்றர் அறிந்துவந்து சொன்ன செய்தியை மற்றோர்
ஒற்றரால் கேட்டுவரச் செய்து இரண்டையும் ஒப்பிட்டுப்
பார்த்து உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

Kural-588

Spying by spies, the things they tell
To test by other spies is well.

Let not a king receive the information which a
Spy has discovered and made known to him,
until he has examined it by another spy.


ஒற்றொற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொல்தொக்க தேறப் படும்.                    589

ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள
வேண்டும். அப்படி ஏவப்பட்ட மூன்று ஒற்றர்களின்
விஷயங்களும் ஒத்திருந்தால் உண்மை என்று ஏற்றுக்
கொள்ளலாம்.

Kural-589

One spy must not another see: contrive it so;
And things by three confirmed as truth you know.

Let  a king employ spies so that one may have no
knowledge of the other; and when the information
of three agrees together, let him receive it.

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தா னாகும் மறை.                         590

அரசன் ஒற்றர்களுக்குச் செய்யும் சிறப்பை பிறர்
அறியும்படிச் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால்
தன் இரகசியத்தைத் தானே அம்பலப் படுத்தியதாகும்

Kural-590

Reward not trusty spy in others' sight,
Or all the mystry will come to light.

 Let not a king publicly confer on a spy any marks of
His favour; if he does ,  he will divulge his own secret.



திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
60. ஊக்கம் உடைமை

உடைய ரெனப்படுவது ஊக்கம் அஃதிலார்
உடையது உடையரோ மற்று.                591

ஊக்கம் உடையவரையே உடையவர் என்று சொல்லலாம்.
ஊக்கம் இல்லாதவர் எத்தனை பேறுகளைப் பெற்றிருந்தாலும்
உடையவர் ஆவாரோ?

Kural-591

What is said as possession is the ordour; in its
Absence have they possession, whether having all
others?

What is said as opulance owned by one is the
Fervency only; in its non-entity , the other things
whatever be they possessed, are not considered as
Possession equivalent to it.





உள்ளம் உடைமை உடைமை பொருளுடமை
நில்லாது நீங்கி விடும்.                          592

ஊக்கம் உடைமையே ஒருவருக்கு நிலையான
உடைமையாகும். மற்ற செல்வங்களெல்லாம்
நிலையற்று நீங்கிவிடும்.

Kural-592

Possession of earnestness is the possession only;
possession of opulence unstably slips away.

Having ardour is only the wealth for men which is
Contantly useful; having abundant opulence is
impermanent but will slip away from its owner.
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.                        593

ஊக்கத்தை உறுதியான செல்வமாகக் கொண்டவர்
பொருளை இழந்து விட்டக் காலத்திலும் பறிபோனதே
என்று இடிந்து போகமாட்டார்.

Kural-593

They won't become distressed as they lost opulence;
If they were possessed as handy, the fervence.

Men will not lose heart even if they lost possessions;
If they are ever having ardour to do and win things.



ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.                           594

தளர்விலா ஊக்கம் உடையவனிடத்தில் செல்வமானது
தானே அவன் இருக்கும் இடத்திற்கு வழி கேட்டுக்
கொண்டு செல்லும்.

Kural- 594

The fortune volunteers such one, and reaches,
Who's  firmly zealous enquiring his place.

The Goddess of riches by her self reaches such man
searching for his residence who is fixedly earnest
in performing actions.



வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.                         595

 நீர்ப் பூக்களின் தண்டின் நீளம் அவை நிற்கும்
நீரின் அளவே வளரும்.  அதுபோல மனிதற்கு
ஊக்கத்தின் அளவே முன்னேற்றம் இருக்கும்.

Kural-595

The length of lotus stalk is as deep as water;
The eminence is as walk of their own ardour.

The length of the stalk of lotus is as deep as the
Water in which it grows; so also, the excellence
of man is also as much as his fervency is.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.                  596

எண்ணுவதெல்லாம் உயர்வாகவே எண்ண வேண்டும்.
அது கைகூடும் வரை நினைப்பதை விடக் கூடாது.

Kural-596

What all those thought should be the excellent;
Though were it thrust  shouldn't shun that state.

All the thought whatever be thought by a king
should be good;even then they were not successful,
he should  not give up or slip from that state of
thinking.


சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றும் களிறு.                                597

அம்பு மழையால் தன் உடம்பு புண்பட்ட போதும்
யானை தளராது கம்பீரமாய் நின்று பெருமையை
நிலை நாட்டும். அதுபோல ஊக்கம் உடையவர்
சாகும் வரை தளர மாட்டார்.

Kural-597

Pierced by many dart the tusker remains ardent;
The ardent man won't be feeble but fervent.

The fervent one will not loose his heart during calamities
but will be stubborn;even though many arrows pierced
into the body and injured, the elephant in war, will  not
Afraid of  opponents but firmly stand and oppose them.



உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு.                       598

ஊக்கம் இல்லாதவர் உலகில் நாம் வண்மை
உடையவன் என்று எண்ணி ஆனந்தப்படும்
அருகதை இல்லாதவர்.

Kural-598

Men who aren't ardent can't enjoy by themselves
In world with saying, conceit, I am the man of riches.

The persons who have no fervency cannot be proud
of saying themselves the proud wording; that they
are strengthy ones with riches.


திபரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.                         599

யானை பெரிய உடம்பையும் , கூரிய தந்தங்களையும்
உடையது ஆனாலும் ஊக்கமுள்ள புலி தாக்கினால்
அதற்கு பயப்படும்.

Kural-599

Though elephant is large having pointed tusks
Will afraid of  a tiger to  fight  against when attacks.

Even though the elephant is larger than any wild
Animal and have two strong pointed solid Ivories;
It fears for  a tiger which is smaller than itself, when
it happens to fight against it.



உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃதி லார்
மரம்மக்க ளாதலே வேறு.                            600

ஒருவரின் பலம் மிகுதியான ஊக்கமே. ஊக்கம்
இல்லாதவர் மரங்களே. வடிவத்தால் மனிதரைப்
போலிருக்கிறார்கள்.

Kural-600

Ardour is sharp intellect; Those who lack it.
Are trees while consider, human shape 's dissimilar.

The fervency of a person is the intelligence in him;
Those who have no such ardour seem to be trees
while we examine their shape as a human is different
but the  statue made of wood.



Saturday, August 9, 2014


பொன்மொழிகள்

 
551. அருள் உணர்ச்சி இல்லாதவர்கள் தன்னையும் அறியமாட்டார்கள்;
     பிறரையும் அறிய மாட்டார்கள்.

                                                         ---வாரியார்


552. எதையும் எதிர்பாராதவன் ஞானி; அவனுக்கு ஏமாற்றம் இல்லை.

                                            --- வில்லியம் ஹெப்பர்

 563. மன்னிப்பதால் மனம் தெளிவடைகிறது.


564. ஏழைக்கு சொந்தக்காரன் கூட பகைவனே; பணக்காரனுக்கு
    பகைவன் கூட சொந்தக்காரனே.

                                   --- செர்பியன்


565. வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை.
     அவர்கள் தாங்கள் செய்வதையே வித்தியாசமாகச் செய்கிறார்கள்.

                                          --- ஷிவ்கெரா  

566. நம்முடைய சக்திமிக்க ஆற்றலையும் அறிவையும் குலைத்து
    மதிப்பையும் புனிதத்துவத்தையும் பாழாக்கும் ஒரே ஆயுதம்
    பயம்தான். பயத்தை நம் மனத்திலிருந்து அகற்ற வேண்டும்.

567. அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும்.
     பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும்.

568. உழைப்பு வறுமையை மட்டும் விரட்டாமல் தீமையான
    எண்ணங்களையும் விரட்டுகிறது.

569. உன்னையே அடக்கி ஆளப் பழகிக்கொள்; உலகு உன்வசமாகும்.

570. வேலை இல்லாமல் சும்மா இருக்க நேர்ந்தால் தனித்திருக்காதீர்கள்.
     தனித்திருக்க நேர்ந்தால் சும்மா இருக்காதீர்கள்.  

571. செயலின்மூலம் மனத்தைத் தூய்மையாக்குவதே கர்மயோகமாகும்.
    நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியானம் செய்.

572. மகிழ்சிக்கான மூன்று இரகசியங்கள் :

    தீயதைப் பார்க்காதே.
    தீயதைக் கேட்காதே.
    தீயதைச் செய்யாதே.
                        --- சீனம்  


573. இந்த உலகம் கோழைகளுக்கல்ல; பயந்து ஓட முயலாதே.
    வெற்றியோ, தோல்வியோ எதிர்பார்க்காதே.


574. ஆன்மாவின் உறுதியான மனோதிடத்தை தடுக்கவோ அடக்கவோ
     ஒதுக்கவோ எந்த சூழ்நிலையாலும் முடியாது. மனோதிடத்துக்கு
     முன் எல்லா அமைப்புக்களும் வழிவிட்டேதீரும்.

                                                 --- ஹக்ஸ்ஸி

பொன்மொழிகள்

575. சான்றோர்களின் வாழ்க்கை வரலாறுகள் அவர்களைப்போல்
    நாமும் ஆகலாம் என்று நினைவூட்டுகின்றன.

                                               --- லாங்பெல்லோ

576. அறிவு பலவீனமானது; நம்பிக்கை சர்வசக்தி உள்ளது.

                                                --- ராமகிருஷ்ண பரமஹம்சர்

577. பகைவனின் புன்சிரிப்பைவிட நண்பனின் கோபம் மேலானது.

                                             --- ஜேம்ஸ்ஹோபெல்

578. உணவை அருந்தும்போது அவசரமும் கூடாது; பொறுமையும் கூடாது.

                                             --- வாரியார்

579. முகத்தில் புன்சிரிப்பு இல்லாதவன் கடை திறக்கக்கூடாது.

                                              --- ஹில்
580. உள்ளத்தில் ஒழுங்கு முற்றிலும் குறைந்திருந்தால் நாம் புறத்தில்
    ஒழுங்கை நிலை நாட்ட முடியாது.

                                             --- ஷேக்ஸ்பியர்


581.பிரார்த்தனையைவிட மிகவும் உயர்ந்தது பொறுமைதான்.

                                             --- புத்தர்

582. அதிகம் பேசுபவர்கள் எப்போதும் பெரும் அறிவாளியாய்
     இருப்பதில்லை.

                                             --- ஜான்சன்


583. ஒரு குறிப்பிட்ட வேலையை உங்களால் செய்ய முடியுமா?
     என்று யாரேனும் கேட்டால், " ஓ! நிச்சயமாய் முடியும் "
     என்று சொல்லுங்கள். அப்படிச் சொல்லிவிட்டு அதை எப்படிச்
     செய்வது என்று கண்டுபிடியுங்கள்.

                                                       --- தியோடர் ரூஸ்வெல்ட்


584. கருணையிலும் பெரிய அறமில்லை; மன்னித்தலிலும் மிக்க
    கருணை இல்லை.
                                                                       --- இங்கர்சால்

585. அதிகம் பேசுபவர்கள் எப்போதும் பெரும் அறிவாளியாய் இருப்பதில்லை.

                                                                         ---ஜான்சன்

   
586. ஆசை உள்ளவன் கையில் அவனையும் அறியாமல் விலங்கு
     பூட்டப்பட்டிருக்கும்.

                                                                         --- எபிக் டெட்டஸ்


587. கோபப்படுவதைவிட அமைதியாக இருப்பவன் ஆபத்தான எதிரி
     என்பதை அறிந்தவன் புத்திசாலி.

                                                                                 --- சாணக்கியன்


588. வீட்டையோ நாட்டையோ விமர்சனம் செய்யுமுன் நமக்கான
     தர்மத்தைச் சரியாகச் செய்தோமா என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.


   589. வேலை செய்வதில் அவசரமும் கூடாது;
            இடையில் இளைப்பாறுவதும் கூடாது.

                                                                        --- சாணக்கியன்


590. அடக்கம், பணிவு, மரியாதை, நம்பிக்கை இவை இல்லாமல்
     ஆன்மீகம் இல்லை.

                                                                           --- விவேகானந்தர்


591. இந்த உலகம் கோழைகளுக்கல்ல. பயந்து ஓட முயலாதே.
    வெற்றியோ, தோல்வியோ எதிர்பார்க்காதே.                                          


592. தேடுங்கள், கண்டுபிடியுங்கள், கடவுள் எல்லாவற்றையும்
     உரித்த வாழைப்பழமாக வைத்திருக்கவில்லை. சிப்பிக்குள்தான்
      முத்து இருக்கிறது;சுரங்கத்தின் கீழேதான் தங்கம் இருக்கிறது.

                                                                               --- விவேகானந்தர்

593. உலகில் கோழையாக மட்டும் இருக்கக்கூடாது.

                                                                                   --- மகாவீர்

594. சூழ் நிலைகேற்ப தன்னை மாற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.                              ---


595. வெற்றிகளிலிருந்து தேவையானதைப் பெற்றுத் தன்னம்பிக்கையை
      வளர்த்துக்கொள்ளுங்கள். அதன் மூலம் மகத்தான வெற்றிகளை
     அடைவீர்கள்.
                                                                                        ---- காரல் மார்க்ஸ்

596. தோல்வி என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்கிற நினைப்புத்தான்
     பலருக்கு நிரந்தரத் தோல்வியைக் கொடுத்து விடுகிறது. இந்தக் காரியத்தில்
     நாம் தோற்றுவிடுவோமோ என்கிற அச்சம்தான் பலரை சராசரி
      மனிதர்களாக  வைத்திருக்கிறது.

597. உணவைத் தேட வேண்டும் என்றால் பறவைகள் பறந்துதான்
     ஆக வேண்டும்.
                                                                     --- சாணக்கியன்


598. ஒரு நல்ல இலட்சியத்தை நிறைவேற்ற வேண்டுமானால் நேர்மையான,
     நல்ல வழிமுறைகளைத்தான் கைக்கொள்ள வேண்டும்.
       
                                                    ---காந்தியடிகள்

599. வெற்றி பெறுபவர்களின் முக்கிய பண்புகளில் தன்னம்பிக்கையும் ஒன்று.


600. பிறருடைய குற்றங்களைப் பற்றி ஒரு போதும் பேசாதே. அவை எவ்வளவு
    கெட்டவை ஆனாலும் சரி. அதனால் எந்தப் பயனும் என்றும்                                  விளைவதில்லை.