பொன்மொழிகள்
551. அருள் உணர்ச்சி இல்லாதவர்கள் தன்னையும் அறியமாட்டார்கள்;
பிறரையும் அறிய மாட்டார்கள்.
---வாரியார்
552. எதையும் எதிர்பாராதவன் ஞானி; அவனுக்கு ஏமாற்றம் இல்லை.
--- வில்லியம் ஹெப்பர்
563. மன்னிப்பதால் மனம் தெளிவடைகிறது.
564. ஏழைக்கு சொந்தக்காரன் கூட பகைவனே; பணக்காரனுக்கு
பகைவன் கூட சொந்தக்காரனே.
--- செர்பியன்
565. வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை.
அவர்கள் தாங்கள் செய்வதையே வித்தியாசமாகச் செய்கிறார்கள்.
--- ஷிவ்கெரா
566. நம்முடைய சக்திமிக்க ஆற்றலையும் அறிவையும் குலைத்து
மதிப்பையும் புனிதத்துவத்தையும் பாழாக்கும் ஒரே ஆயுதம்
பயம்தான். பயத்தை நம் மனத்திலிருந்து அகற்ற வேண்டும்.
567. அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும்.
பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும்.
568. உழைப்பு வறுமையை மட்டும் விரட்டாமல் தீமையான
எண்ணங்களையும் விரட்டுகிறது.
569. உன்னையே அடக்கி ஆளப் பழகிக்கொள்; உலகு உன்வசமாகும்.
570. வேலை இல்லாமல் சும்மா இருக்க நேர்ந்தால் தனித்திருக்காதீர்கள்.
தனித்திருக்க நேர்ந்தால் சும்மா இருக்காதீர்கள்.
571. செயலின்மூலம் மனத்தைத் தூய்மையாக்குவதே கர்மயோகமாகும்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியானம் செய்.
572. மகிழ்சிக்கான மூன்று இரகசியங்கள் :
தீயதைப் பார்க்காதே.
தீயதைக் கேட்காதே.
தீயதைச் செய்யாதே.
--- சீனம்
573. இந்த உலகம் கோழைகளுக்கல்ல; பயந்து ஓட முயலாதே.
வெற்றியோ, தோல்வியோ எதிர்பார்க்காதே.
574. ஆன்மாவின் உறுதியான மனோதிடத்தை தடுக்கவோ அடக்கவோ
ஒதுக்கவோ எந்த சூழ்நிலையாலும் முடியாது. மனோதிடத்துக்கு
முன் எல்லா அமைப்புக்களும் வழிவிட்டேதீரும்.
--- ஹக்ஸ்ஸி
பொன்மொழிகள்
575. சான்றோர்களின் வாழ்க்கை வரலாறுகள் அவர்களைப்போல்
நாமும் ஆகலாம் என்று நினைவூட்டுகின்றன.
--- லாங்பெல்லோ
576. அறிவு பலவீனமானது; நம்பிக்கை சர்வசக்தி உள்ளது.
--- ராமகிருஷ்ண பரமஹம்சர்
577. பகைவனின் புன்சிரிப்பைவிட நண்பனின் கோபம் மேலானது.
--- ஜேம்ஸ்ஹோபெல்
578. உணவை அருந்தும்போது அவசரமும் கூடாது; பொறுமையும் கூடாது.
--- வாரியார்
579. முகத்தில் புன்சிரிப்பு இல்லாதவன் கடை திறக்கக்கூடாது.
--- ஹில்
580. உள்ளத்தில் ஒழுங்கு முற்றிலும் குறைந்திருந்தால் நாம் புறத்தில்
ஒழுங்கை நிலை நாட்ட முடியாது.
--- ஷேக்ஸ்பியர்
581.பிரார்த்தனையைவிட மிகவும் உயர்ந்தது பொறுமைதான்.
--- புத்தர்
582. அதிகம் பேசுபவர்கள் எப்போதும் பெரும் அறிவாளியாய்
இருப்பதில்லை.
--- ஜான்சன்
583. ஒரு குறிப்பிட்ட வேலையை உங்களால் செய்ய முடியுமா?
என்று யாரேனும் கேட்டால், " ஓ! நிச்சயமாய் முடியும் "
என்று சொல்லுங்கள். அப்படிச் சொல்லிவிட்டு அதை எப்படிச்
செய்வது என்று கண்டுபிடியுங்கள்.
--- தியோடர் ரூஸ்வெல்ட்
584. கருணையிலும் பெரிய அறமில்லை; மன்னித்தலிலும் மிக்க
கருணை இல்லை.
--- இங்கர்சால்
585. அதிகம் பேசுபவர்கள் எப்போதும் பெரும் அறிவாளியாய் இருப்பதில்லை.
---ஜான்சன்
586. ஆசை உள்ளவன் கையில் அவனையும் அறியாமல் விலங்கு
பூட்டப்பட்டிருக்கும்.
--- எபிக் டெட்டஸ்
587. கோபப்படுவதைவிட அமைதியாக இருப்பவன் ஆபத்தான எதிரி
என்பதை அறிந்தவன் புத்திசாலி.
--- சாணக்கியன்
588. வீட்டையோ நாட்டையோ விமர்சனம் செய்யுமுன் நமக்கான
தர்மத்தைச் சரியாகச் செய்தோமா என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.
589. வேலை செய்வதில் அவசரமும் கூடாது;
இடையில் இளைப்பாறுவதும் கூடாது.
--- சாணக்கியன்
590. அடக்கம், பணிவு, மரியாதை, நம்பிக்கை இவை இல்லாமல்
ஆன்மீகம் இல்லை.
--- விவேகானந்தர்
591. இந்த உலகம் கோழைகளுக்கல்ல. பயந்து ஓட முயலாதே.
வெற்றியோ, தோல்வியோ எதிர்பார்க்காதே.
592. தேடுங்கள், கண்டுபிடியுங்கள், கடவுள் எல்லாவற்றையும்
உரித்த வாழைப்பழமாக வைத்திருக்கவில்லை. சிப்பிக்குள்தான்
முத்து இருக்கிறது;சுரங்கத்தின் கீழேதான் தங்கம் இருக்கிறது.
--- விவேகானந்தர்
593. உலகில் கோழையாக மட்டும் இருக்கக்கூடாது.
--- மகாவீர்
594. சூழ் நிலைகேற்ப தன்னை மாற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். ---
595. வெற்றிகளிலிருந்து தேவையானதைப் பெற்றுத் தன்னம்பிக்கையை
வளர்த்துக்கொள்ளுங்கள். அதன் மூலம் மகத்தான வெற்றிகளை
அடைவீர்கள்.
---- காரல் மார்க்ஸ்
596. தோல்வி என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்கிற நினைப்புத்தான்
பலருக்கு நிரந்தரத் தோல்வியைக் கொடுத்து விடுகிறது. இந்தக் காரியத்தில்
நாம் தோற்றுவிடுவோமோ என்கிற அச்சம்தான் பலரை சராசரி
மனிதர்களாக வைத்திருக்கிறது.
597. உணவைத் தேட வேண்டும் என்றால் பறவைகள் பறந்துதான்
ஆக வேண்டும்.
--- சாணக்கியன்
598. ஒரு நல்ல இலட்சியத்தை நிறைவேற்ற வேண்டுமானால் நேர்மையான,
நல்ல வழிமுறைகளைத்தான் கைக்கொள்ள வேண்டும்.
---காந்தியடிகள்
599. வெற்றி பெறுபவர்களின் முக்கிய பண்புகளில் தன்னம்பிக்கையும் ஒன்று.
600. பிறருடைய குற்றங்களைப் பற்றி ஒரு போதும் பேசாதே. அவை எவ்வளவு
கெட்டவை ஆனாலும் சரி. அதனால் எந்தப் பயனும் என்றும் விளைவதில்லை.
No comments:
Post a Comment