Translate

Friday, July 11, 2014

பொன்மொழிகள்


பொன்மொழிகள்

501. ஒருவன் எதை உடையவன் என்பதன்று; எத்தகையவன்
     என்பதே வாழ்வின் முக்கியக் கேள்வி.

                                         --- ஸ்டீவன்ஸன்


502. பெருமையின் மூன்று அறிகுறிகள்:
     1. தோற்றத்தில் எளிமை.
     2. செயலில் மனித்தத் தன்மை.
     3. வெற்றியில் வெறியின்மை.

                                --- பிஸ்மார்க்


503. வாழ்க்கையின் சிறந்த பகுதி அவ்வப்போது அன்புடன்
    சிறு சிறு செயல்களைச் செய்வதுதான்.

                                      --- வோர்ட்ஸ்வொர்த்

504. அறியாமையே துர்பாக்கியத்தின் ஆணிவேர்.

                                      --- பிளேட்டோ


505. கொடுத்த வேலையைத் திறம்படச் செய்து முடிப்பதே
     நமது கடமை.

                                       --- எபிடெக்டஸ்


506. மனசாட்சி எதை நியாயமாக நினைக்கிறதோ, அதைத்
    தைரியமாகச் செய்.
                                   டாக்டர் ராமகிருஷ்ண பண்டார்கர்



507. வாழ்க்கையில் கடந்த காலம் ஒரு கனவு.
    வருங்காலம் ஒரு பெருமூச்சு.

                                --- அரேபியப் பழமொழி

                             
508. பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதைவிட,
    செய்யும் காரியத்தை நமக்குப் பிடித்ததாய் ஆக்கிக்கொள்ள
    வேண்டும்.

                                ---  கெமன்ஸ் வில்லியம்ஸ்



509. மகிழ்ச்சிகரமாகவும், வெற்றிகரமாகவும் வாழ
    விரும்பினால் எந்தச் சூழ்நிலையிலும் உங்கள்
    மன அமைதியைக் கலைக்கும் விதத்தில் எது
    நடந்தாலும் கவலைப்படாதீர்கள், கோபப்படாதீர்கள்,
    உங்கள் உயிர் வாழ்விற்கு இன்றியமையாதது
    கோபப்படாது அமைதியாக இருந்து பிரச்சினைகளைக்
    கையாளப் பழகிக் கொள்ளும் திறமைதான்.

                             --- என்.வி. பீல்

510.  நீங்கள் சாதிக்க வேண்டுமென்றால் 'முடியாது', 'நடக்காது'
     போன்ற வார்த்தைகளைச் சொல்லவே கூடாது.
     எதையும் நாளை என்று தள்ளிப் போடக்கூடாது.
                       
                            ---  கெமன்ஸ் வில்லியம்ஸ்



511. இரக்கம் உடைய இதயம், சிந்தனை, ஆற்றல் மிக்க மூளை,
     வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இம்மூன்றும்
     நமக்குத் தேவை.

                              --- சுவாமி விவேகானந்தர்

                           
                                 

512. தினமும் உங்களுக்கு எந்த வேலையைச் செய்யப் பிடிக்காதோ,
    அப்படிப்பட்ட வேலைகளில் ஒன்றிரண்டை செய்ய
    பழகிக்கொள்ளுங்கள். நாளடைவில் அப்படிப்பட்ட காரியங்கள்
    மீது உங்களுக்கு ஏற்பட்டுக்கொண்டிருந்த வெறுப்பு மறையும்,
    உங்கள் கடைமைகளை ஈடுபாட்டுடன் செய்வதற்கு இது
    மிகவும் உதவிகரமாக இருக்கும்.

                                    --- மார்க் ட்வைன்.                                                                            



513. அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில் எதனைப் பின்பற்றுவது
     என்ற போராட்டம் எழும்போது உள்ளம் கூறுவதையே
     பின்பற்றுங்கள்.

                                    --- சுவாமி விவேகானந்தர்


514. வாழ்க்கை என்பது திருப்பிப் படிக்க வேண்டிய கணக்குப் புத்தகம்.

                                    --- மண்பக்

515. செயலில் மட்டுமே நம்பிக்கை வையுங்கள். வாழ்க்கை
    செயல்மட்டத்தில்தான். பேச்சு மட்டத்தில் அல்ல.எனவே
    செயலில் நம்பிக்கை வையுங்கள்.

                                 --- ஆல்பிரட் இட்லர்


516. 'இலட்சியங்கள்' நட்சத்திரங்கள் போன்றவை. அவற்றை
    கைக்குள் அடக்கிவிட முயன்றால் தோல்வி நிச்சயம்.
    ஆனால் அவற்றை வழிகாட்டிகளாகக் கொண்டு
    பிந்தொடர்ந்து சென்றால் போக வேண்டிய இடத்தை
    அடைவது உறுதி.

                                   --- கார்ல் ரூஸ்

517. வாழ்வில் நாம் இரண்டு குறிக்கோள்களைக் கொள்ள
     வேண்டும். ஒன்று நாம் விரும்புவதை அடையவேண்டும்.
     அதற்குப்பின் அடைந்ததை அனுபவிக்க வேண்டும்.
     மனிதரில் விவேகம் மிக்கவராலேயே இரண்டாவதைச்
     சாதிக்க இயலும். அத்தகைய நபராக நீங்கள் இருங்கள்.

                                   --- சாமுவேல் ஸ்மித்

518. நம்பிக்கையும், உறுதியுமே வாழ்வின் அடிப்படை.
    இவை இரண்டும் இருந்தால் எல்லாம் இருந்தது
    மாதிரிதான்.

                                 --- சாரதா தேவியார்


519. ஓடுவதால் பயனில்லை. குறித்த நேரத்திற்கு முன்பே
     புறப்படுவதுதான் அவசியம்.


520. வாய்மூடாமல் பேசுபவன் அடுத்தவர் பேச்சைக்
     கேட்கவும் மாட்டான்; எதையும் கற்றுக்கொள்ளவும்
     மாட்டான்.


521. உலகில் சாகாவரம் பெற்றவை என்று ஒன்றைத்தான்
    சொல்லமுடியும். அவை புத்தகங்களே.

                                         --- கதே

522. கடுகளவு சிறந்த சிந்தனை பூசணியளவு நற்பயனைத் தரும்.

                                        --- வாரியார்


523. திட்டவட்டமான இலட்சியம் இல்லாதவர்கள்தான்
    இலக்குகள் உள்ளவர்களுக்காக என்றென்றும் வேலை
    செய்பவர்களாக வாழ்கின்றனர்.

                                    ---பிரையன் டிரேசி              


524. மனவலிமை இல்லாதவர்கள் சந்தர்ப்பங்களுக்காகக்
     காத்திருக்கிறார்கள்.

                                       --- வில்லியம்மார்டின்

525. ஆசைகள் குறைய குறைய அமைதி பெருகும்.


526. பொறுமை இல்லாதவர்கள் நீதிமான்களாக இருக்கமுடியாது.

                                            --- மார்க்கஸ்

527. இந்த உலகத்தை மாற்ற உங்களால் முடியாது. ஆனால்
     உங்களை மாற்றிக் கொள்ள முடியும். நீங்கள் சுதந்திரமாகவும்
     இன்பமாகவும் இருக்க வேண்டுமெனில் உலகக் கவலைகளையும்
     உங்கள் கவலைகளையும் மூட்டைக்கட்டுங்கள். இப்போது
     உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளத் திட்டமிட்டு
     முயற்சி செய்யுங்கள்; அது போதும்.

                                        டாக்டர் ராபர்ட் அந்தோணி


528. படித்து அறிபவனைவிட அனுபவித்து உணர்பவன் அறிஞன்.

                                        --- இங்கர்சால்
529. உங்கள் துணிவு, கடின உழைப்பு இந்த இரண்டையும்
    பொருத்துத்தான் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பிறக்கும்;
    நீடிக்கும்.

                                    --- பால்ஜாக்


530. வாழ்க்கை அனுபவம் இல்லாத எவரும் கல்வி
    கற்றவராக முடியாது.

                                --- பெர்னாட்ஷா

531. உலகத்தில் சோதனைக்கு உட்படாமலும் அதனிடம்
    படிக்காமலும் ஒருவன் நிறைவுற்ற மனிதனாக
    விளங்கமுடியாது! அனுபவம் ஊக்கமாக உழைப்பதிலிருந்து
    கிடைக்கிறது;காலத்தின் வேகம் அதைச் செம்மைப்படுத்துகிறது


532. நம்முடைய தனிப்பட்ட சிந்தனைகளும் அனுபவங்களே
    நமது நம்பிக்கைகளைத் தீர்மானிக்கின்றன.அவைதான்
    நம்மைப்பற்றிய சுயமான தன்மையையும் உயர்வான
    மதிப்பீட்டையும் தீர்மானிக்கின்றன.

                                    வால்டர் ஸ்டேபிலிஸ்

533. அதிகம் பேசுகிறவர்கள் செயலில் திறமையற்றவர்கள்.

                                       --- ஷேக்ஸ்பியர்


534. ஆசை புத்தியை மறைக்கும் போது அறிவு வேலை செய்யாமல்
     போகிறது.

535. நெற்றிவியர்வை நிலத்தில் விழப் பாடுபட்டு உழைப்பதானது
     ஒருவரின் சாபக்கேடோ முன்வினையின் பாவத்தாலோ
     அல்ல; அது கவலையைப் போக்கித் தேக ஆரோக்கியத்தை
     வளர்க்கும் டானிக்.
                                     ---டேவிட் லிவிங்ஸ்டன்


536. அரிய செயலைச் செய்து முடிப்பது வலிமையினால் அல்ல;
     விடாமுயற்சியினால்தான்.

                                      --- ஜேம்ஸ்ஆலன்

537. உலகத்தில் மிகவும் மலிவான பொருள் அன்புதான்.
    வாங்குகிறவனுக்கும் கொடுக்கிறவனுக்கும் அது
     பல மடங்கு மிகுதியான லாபத்தைத் தரும்.

                                           --- இங்கர்சால்

538. உதடுகளை மூடு; உன் இதயத்தைத் திற.

                                --- சுவாமி விவேகானந்தர்


539. உங்கள் எண்ணம் உங்கள் சுதந்திரத்தில் இருக்கிறது.
     இந்த உண்மையை அறிந்து உங்கள் உள்ளத்தைக்
    கட்டுப்படுத்தி அடக்கி ஆண்டு வாழ்வில் அமைதியையும்
     வெற்றியையும் அடையுங்கள்.

                                   --- மார்கஸ் அரேலியஸ்


540. நல்ல நூல்களைப் படிப்பது தலைசிறந்த மனிதருடன்
    உரையாடுவதைப் போன்றது.

                                      -- ரெனதெகார்த்


541. நேற்று என்பது கையை விட்டுப்போன பணம்.
     இன்று என்பது கையில் இருக்கும் பணம்.
     நாளை என்பது கைக்கு வரும் பணம்.

                                   --- சாண்டில்யன்


542. நீ சிறிய செயல்களுக்கு உண்மையுள்ளவனாக
    இருந்தால் பெரிய செயல்களுக்கு அதிகாரியாகலாம்.

                                    --- இயேசுபிரான்

543. இனாமாக ஒன்றைப் பெற்றுக் கொள்வதால் உங்களுடைய
     சுதந்திரம் குறைகிறது.
                                         --- போலந்து

544. எளிமையில்தான் பகவானின் அருளைப் பெற முடியும்.

                                 --- கிருபானந்தவாரியார்

545. சுறுசுறுப்பு, மனஉறுதி என்ற வெற்றிக்குதிரைகளில்
    பயணம் செய்வான் புத்திசாலி.

                                      --- சாணக்கியன்


546. ஆன்மாவைப் பிரதிபலிப்பதே உண்மையான பேச்சு.

                                         --- எமர்சன்


547. மனம் சுத்தமாக இருந்தால் செயல் நல்ல வழியில் செல்லும்.

                                          --- லெனின்


548. பண்பாடு இல்லாமலோ, தெரியாமலோ பேசக்கூடாது.

                                          --- வாரியார்


549. எவன் நம்முடன் போராடுகிறானோ அவன் நம்முடைய
     திறமையைக் கூர்மைப்படுத்துகிறான்.

                                       --- எட்வின்பர்க்



550. அதிருப்திக்கெல்லாம் வேர் சுயநலமே.

                               --- கிளார்க்

1 comment: