Translate

Friday, August 24, 2012

திருத்தொண்டத்தொகை


திருத்தொண்டத்தொகை


இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க்கு அடியேன்

ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்

கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்

கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்

மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்

எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்

அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க்கு அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்

முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்

செம்மையே திரு நாளைப் போவார்க்கும் அடியேன்

திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்

மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க

வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த

அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கு அடியேன்

ஆரூரான் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

                                                                                  (தொடரும்)

No comments:

Post a Comment