திருக்குறள்
1.அறத்துப்பால்
2.வான் சிறப்பு
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணர் பாற்று. 11
மழை தவறாமல் பெய்ய உலகம் நிலை பெற்று வாழும்.
ஆதலால் மழை உலகத்து உயிர்களுக்கு அமிர்தம்
என்று கூறலாம்.
துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. 12
உண்பவர்களுக்கு பல்வேறு உணவுகளை உண்டாக்கி
தாகம் தணிக்கும் நீருமாகி இருப்பது மழையாகும்.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள் நின்று உடற்றும் பசி. 13
பருவமழை பெய்யாதிருந்தால் கடலால் சூழப்பட்ட உயிர்கள்
பசியால் வருந்தும். தாவரங்களும் அழிந்துவிடும்.
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால் 14
மழை வளம் குறைந்தால் உழவர் வயலை
உழ ஏர் கொண்டு செல்ல மாட்டார்.
கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றா\ங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. 15
பெய்யாமல் நின்று வாழ்வைக் கெடுப்பதும் மழை.
மழை இன்றி வளம் கெட்டு துன்புறுவோர்க்கு துணையாக
பெய்து காப்பதும் மழையாகும்.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. 16
வானிலிருந்து மழைத்துளி விழாவிட்டால் பசுமையான
புல்லின் தலையையும் காண்பது அரிது.
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். 17
மேகமானது கடலிலிருந்து நீரை கிரகித்து மறுபடியும்
அந்நீரையே மழையாகத் தருகிறது. அவ்வாறு இல்லாவிடின்
கடலும் வற்றிவிடும்.
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. 18.
மழை பொழியாவிடில், இப்பூமியில் வானவர்க்காண
பூஜைகள் நடைபெற இயலாது.
தானம் தவம் இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின். 19
மழை பொழியாவிடின் இந்தப் பரந்த உலகில்
தானம், தவம் என்ற இரண்டு அறங்களும் கிடையாது.
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. 20
அனைத்து உயிர்களும் தண்ணீர் இல்லாமல்
வாழமுடியாது. தொடர்ந்து மழை இல்லாவிடில்
ஒழுக்கமும் மறைந்து போகும்.
source book.com link:
Up to 60% off Parenting & Children's Books
77 kids.com link
Primary
My blogs:
http://saivasiddhantam.blogspot.in/
http://sansalternatetherapy.blogspot.in/
http://behaviourtherapy.blogspot.in/