Translate

Friday, October 26, 2012

திருக்குறள்







                                                            திருக்குறள்


                                                            1.அறத்துப்பால்


                                           
                                                          1. கடவுள் வாழ்த்து


      அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

       பகவன் முதற்றே உலகு.          1


எழுத்துகள் அனைத்தும் "அ" என்ற எழுத்தை முதலாவதாகக் கொண்டு

உள்ளதுபோல் உலகத்து உயிர்கள் எல்லாம் இறைவனை முதலாவதாகக்

கொண்டுள்ளன.



  கற்றதனா லாய பயனெங்கொல் வாலறிவன்

  நற்றாள் தொழாஅர் எனின்.              2


           தூய அறிவினன் ஆகிய இறைவனின் திருப்பாதங்களை

தொழாதவன் எத்தனை கற்றும் பயன் இல்லை.



   மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

   நிலமிசை நீடுவாழ்வார்.                  3


            அடியவர்களின் மனமென்னும் மலரில் வீற்றிருக்கும் இறைவனின்

திருவடிகளை   இடைவிடாமல் நினைக்கின்றவர்கள் இந்த உலகில் நீண்ட

ஆயுளுடன்வாழ்வார்கள்.



       வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

       யாண்டும் இடும்பை இல.                              4.


             வேண்டியவர் வேண்டாதவர் என்பதே இல்லாத இறைவனின்
           
    திருவடிகளை எப்போதும் நினைப்பவர்களுக்கு எக்காலத்திலும் துன்பங்கள்

அணுகாது.



         இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

       பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.                 5


                இறைவனின் புகழை விரும்பி அன்பு செலுத்துபவர்களுக்கு,

       இம்மையிலும் மறுமையிலும் துன்பங்கல் ஏற்படுவதில்லை.  




           பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

         நெறிநின்றார் நீடுவாழ் வார்.                   6


                  மெய், வாய் , கண், காது, மூக்கு  என்ற ஐம்பொறிகளின் வழியாக

        உண்டாகும் பேராசைகளை நீக்கி இறைவனின் ஒழுக்க நெறிகளை

கடைபிடித்து நிற்பவர்கள் சிறந்த வாழ்க்கை வாழ்வார்.




          தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

       மனக்கவலை மாற்றல் அரிது.                      7


                கடவுளுக்கு ஈடு கடவுள்தான். அவரது திருவடிகளை பக்தியுடன்

            வணங்குபவர்களைத் தவிர மற்றவர்களுக்கு மனக்கவலையை

             மாற்றுவது கடினம்.


             

            அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

          பிறவாழி நீத்தல் அரிது.                        8


                     தருமக் கடலாக விளங்கும் இறைவனின் திருவடிகளைப்

               பற்றியவர்களைத் தவிர மற்றவர் பொருள், இன்பம் போன்ற

              கடல்களை  கடத்தல் இயலாது.





                  கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

               தாளை வணங்காத் தலை.                        9.


                          எட்டு குணன்களை உடைய இறைவனின் பாதங்களை

வணங்காதவரின் தலையானது, தங்களுக்குரிய செயல்களை ஆற்றாத

( கேட்காத செவி, பார்க்காத கண், சாத வாய், நுகராத மூக்கு, இயங்காத தேகம்)

ஐம்புலங்களைப் போலப் பயனற்றதாகும்.





               பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

            இறைவன் அடிசேரா தார்.                10


                    இறைவனின் திருவடிகளை அடைந்தவர்கள் பிறவி என்ற 

பெருங்கடலை கடக்க இயலும். மற்றவர்களால் எளிதில் இயலாது.




source book.com link:


Up to 60% off Parenting & Children's Books



77 kids.com link


Primary







My blogs:

http://saivasiddhantam.blogspot.in/

http://sansalternatetherapy.blogspot.in/

http://behaviourtherapy.blogspot.in/









No comments:

Post a Comment