Translate

Sunday, January 20, 2013

திருக்குறள்




திருக்குறள்

     (see below in English)

 1.அறத்துப்பால்
8. அன்புடைமை

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கண்நீர் பூசல் தரும்.                            71

அன்பை மனத்துள் பூட்டி வைக்க முடியுமோ?
அவரது சிறு கண்ணீர் துளி உள்ளே இருக்கும்
அன்பை பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

kural-71

And is there bar that can even love restrain?
The tiny tear shall make the lover's secret plain.

Is there any fasterning that can shut in love? Tears of the
affectionate will publish the love that is within.



அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.                           72

அன்பு இல்லாதவர்கள் எல்லாப் பொருள்களையும்
தமக்கே உரிமையாக்கிக் கொள்வர். அன்புடையவர்கள்
தன் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

kural-72

The loveless to themselves belong alone;
The loving men are others' to the very bone.

Those who are destitute of love appropriate all they have to
themselves; but those who possess love consider even their
bonesto belong to others.


அன்பொடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்பொடு இயைந்த தொடர்பு.                              73

அருமையான உயிருக்கு உடலோடு கூடிய தொடர்பே

அன்போடு பொருந்தி வாழும் அறவாழ்க்கையின்

பயன் என்பர்.


kural-73

Of precious soul with body's flesh and bone,
The union yields one fruit, the life of love alone.

They say that the union of soul and body in man is the
 fruit of the union of love and virtue(in a former birth).

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.                               74

மற்றவரிடம் பிரியம் கொள்ளச் செய்வது அன்பு.
அது எல்லோரிடமும் நட்பையும் நற்பெயரையும் பெற்றுத் தரும்.


kural-74

From love fond yearning springs for union sweet of minds;
And that of bond of rare exelling friendship binds.

Love begets desire: and that(desire) begets the immeasureable
excellence of friendship.



அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்துஞ் சிறப்பு.                       75

உலகத்தில் சுகமாக வாழ்பவர் அன்புடையவர்
என்ற சிறப்பைப் பெற்றிருப்பார். அதுவே வாழ்வின் பயன்.

kural-75

Sweetness on earth and rarest bliss above,
These are the fruits of tranquil life of love.

They say that the felicity which those who, after enjoying
the pleasure( of the conjugal state) in this world,
obtain in heaven is the result of their domestic state imbued
with love.



அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.                      76

அன்பு அறத்திற்கு மட்டுமே துணை என்பர்
அறியாதவர். ஆராய்ந்து பார்த்தால் அது
வீரத்திற்கும் துணையாக இருக்கிறது.


kural-76

The unwise deem love virtue only can sustain,
It also helps the man who evil would restrain.

The ignorant say that love is an ally to virtue only,
but it is also a help to get out of vice.



என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.                                        77

எலும்பு இல்லாத புழுவை வெயிலில் போட்டால்
துடித்து இறந்து விடும். அதுபோல் அன்பு இல்லாத
உடலைப் தரும தேவதை தண்டிக்கும்.

kural-77

As sun's fierce ray dries up the boneless things,
So loveless beings virtue's power to nothing brings.

Virtue will burn up the soul which is without love, even as the
sun burns up the creature which is without bone,i.e.worms.


அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.                           78

மனதில் அன்பு இல்லாமல் வாழும் வாழ்க்கை
பாலைவனத்தில் மொட்டை மரம் தளிர்த்ததைப்
போன்றது.


kural-78

The loveless soul, the very joys of life may know,
when flowers, in barren soil,on sapless trees,shall blow.

The domestic state of that man whose mind is without love is
like the flourishing of a withered tree upon the parched desert.



புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.                                 79

உடம்பின் உள் உறுப்பான அன்பு இல்லாதவரின்
உடலிலுள்ள வெளி உறுப்புக்கள் எல்லாம்
என்ன பயனைத் தரும்?


kural-79

Though every outward part complete,the body's fitly framed;
what good, when soul within, of love devoid,lies halt and maimed?

Of what avail are all the external members( of the body) to those
who are destitute of love,the internal member.


அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.                      80

உயிரின் இருப்பிடமே அன்பு வழியாக வரும்
தருமச் செயல்கள். அந்த அன்பு இல்லாதவர்களுக்கு
உள்ள உடம்பு எலும்பு, தோல் இவற்றால் போர்த்தப்பட்ட
உடம்பாகும்.

kural-80

Bodies of loveless men are bony framework clad with skin;
Then is the body seat of life, when love resides within.

That body alone which is inspired with love contains
a living soul: if void of it,( the body) is bone overlaid
with skin.



source book.com link:


Up to 60% off Parenting & Children's Books



77 kids.com link


Primary





My blogs:

http://saivasiddhantam.blogspot.in/

http://sansalternatetherapy.blogspot.in/

http://behaviourtherapy.blogspot.in/



Thursday, January 10, 2013

திருக்குறள்




திருக்குறள்
     (see below in English)

 1.அறத்துப்பால்

7.மக்கட்பேறு



பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற.                                          61


எல்லாப் பெருமைகளிலும் ,அறிய வேண்டியவற்றை

அறியும் நல்ல மக்களைப் பெறுவது முதன்மையானது.

மற்ற பெருமைகளெல்லாம் அதன்பின்தான்!



kural-61

Of all that men acquire, we Know not any greater gain,
Than that which by the birth of learned children men obtain.

Among all the benefits that may be acquired, we know no greater
benefit than the acquisition of intelligent children.


எழுபிறப்பும் தீயவை தீண்டா பழியிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.                         62


பழிப்புக்கு இடமில்லாத நல்ல குழந்தைகளைப்

பெறுவது அவனை ஏழு பிறப்புகளிலும் துன்பங்கள்

அனுகாமல் காப்பாற்றும்.


kural-62

who children gain, that none reproach, of virtuous worth,
No evils touch them, through the sev'n-fold maze of birth.

The evils of the seven births shall not touch those who obtain
 chldren of a good disposition,free from vice.

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும்.                         63


பிள்ளைகளை மக்கட்செல்வம் என்று சான்றோர் கூறுவார்கள்.

அச்செல்வம் அவரவர் செய்யும் வினைக்கேற்றபடி அமையும்.



kural-63

'Man's children are his fortune,' say the wise;
From each one's deeds his varied fortunes rise.

Men will call their sons their wealth,because it flows through
the deeds which they(sons) perform on their behalf.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்.                                       64

தன் குழந்தைகளின் பிஞ்சுக் கைகளால் அளையப்பட்ட

உணவு பெற்றவர்களுக்கு அமிர்தத்தை விட இனிமை

உடையதாகும்.

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.                             65


தன் குழந்தைகளின் உடம்பைத் தொடுவது தேகத்துக்கு

சுகத்தைத் தரும். அவர்களின் மழலைச் சொற்களைக்

கேட்பது செவிக்கு இன்பமாகும்.


குழலினிது யாழினிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.                     66


தன் குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்டு

மகிழாதவர்கள்தான் குழலிசையையும், யாழிசையையும்

இனியது என்று கூறுவர்.


kural-66

'The pipe is sweet,''the lute is sweet,' by them't will be averred,
who music of their infants' lisping lips have never heard.

"The pipe is sweet,the lute is sweet," say those who have not heard
the prattle of their own children.
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து

முந்தி யிருப்பச் செயல்.                          67


தன் பிள்ளைகளைக் கல்வியில் மேம்படச் செய்து,

கற்றவர் சபையில் முதவனாயிருக்கச் செய்வதே

ஒரு தந்தை ஆற்றக்கூடிய உயர்ந்த நன்மையாகும்.


kural-67

Sire greatest boon on son confers, who makes him meet,
In councils of the wise to fill the higest seat.

The benefit which a father should confer on his son is to give him
precedence in the assembly of the learned.


தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது.                      68

தன் பிள்ளைகளின் அறிவுடைமை தனக்கு இன்பம்

தருவதை விட உலகத்தாருக்கெல்லாம் மிகுந்த நன்மையைத்

தருவது சிறப்பாகும்.

kural-68

Their children's wisdom greater than their own confessed,
Through the wide world is sweet to every human breast.

That their children should posses knowledge is more pleasing
to all men of this great earth than to themselves.


ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.                     69


தன் குழந்தையை உலகத்தார் சான்றோன் என்று

கொண்டாடுவதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற

பொழுதிற் கொண்ட மகிழ்சியை விட அதிக மகிழ்சியடைவாள்.


kural-69

When mother hears him named'fulfill'd of wisdom's lore',
Far greater joy she feels, than when her son she bore.

The mother who hears her son called " a wise man"
will rejoice more than she did at his birth.


மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்னோற்றான் கொல்எனுஞ் சொல்.                 70


பிள்ளை தன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு

" இவன் தந்தை இவனைப் பெற என்ன புண்ணியம்

 செய்தானோ" என்று ஊரார் புகழும்படிச் செய்வதேயாகும்.

kural-70

To,sire,what best requital can by grateful child be done?
To make men say, 'what merit gained the father such a son?'

(so to act) that it may be said " by what great penance did his
father beget him," is the benefit which a son should render
to his father.


source book.com link:


Up to 60% off Parenting & Children's Books



77 kids.com link


Primary





My blogs:

http://saivasiddhantam.blogspot.in/

http://sansalternatetherapy.blogspot.in/

http://behaviourtherapy.blogspot.in/









Tuesday, January 1, 2013

பொன்மொழிகள்






பொன்மொழிகள்


1.வாழ்க்கையில் வெற்றியின் ரகசியம் என்பது சந்தர்ப்பத்திற்காகக்

காத்திருத்தலும், வந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதுமே ஆகும்.

                                                        --- வால்டேர்.

2.மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்.

                                     ---காப்மேயர்

3.வெற்றியைக் காண்பதற்கு நம்பிக்கையும் முயற்சியுமே சிறந்த வழிகள்.

வேறு குறுக்கு வழிகள் இல்லை.
                                     ---எட்மண்ட் பர்க்.

4.உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் அமையும்;

உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை அமையும்.

                                                     ----சாக்ரடீஸ்

5.உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல் உழைப்புக்கு முதலிடம்

கொடுத்தால், வாழ்க்கை உன்னதமாக இருக்கும்.
                                            ---எடிசன்

6.விடாமுயற்சியுடையவன் விரும்பிய அனைத்தையும்

பெற்றுவிடுகிறான்.
                                      ---ரூஸ்வெல்ட்.

7.இயற்கை, காலம், பொறுமை இவையே சிறந்த மருத்துவர்கள்.

                                       ---ஜார்ஜ் போஹன்

8. செயலை விதையுங்கள்; பழக்கம் உருவாகும்.

   பழக்கத்தை விதையுங்கள்; பண்பு உருவாகும்.

   பண்பை விதையுங்கள்; எதிர்காலம் உருவாகும்.

                                           ஜேம்ஸ் ஆலன்

9. மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளும் அல்ல.

  இடையூறுகளும் துன்பங்களுமே.
                                           ---மாத்பூன்    

10. நிதானமாகச் சிந்திக்கவேண்டும். விரைவாகச் செயல்படவேண்டும்.

                                            ---புட்ஸர்
11. உன் விதியை வகுப்பவன் நீயே! உனக்குத் தேவையான எல்லா

    வலிமைகளும் உனக்குள்ளேயே குடிகொண்டு இருக்கின்றன.

                                                --- சுவாமி விவேகானந்தர்

12. ஓர் இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண்ணால் மட்டுமே முடியும்.

                                                ---- கோல்ரிட்ஜ்

13. உயர்ந்த விஷயங்களை எளிமையாகக் கூறுவதே சான்றாண்மை.

                                                ----எமர்சன்

14. அகந்தையை வென்றுவிட்டால் அடக்கம் தானாகவே

    நம்மை வந்து சேரும்.
                                                 ----மகாவீர்

15. தீயுள்ள இடத்தில் சூடுண்டு; சூடுள்ள இடத்தில் தீயுண்டு.

   அறிவுள்ள இடத்தில் நினைப்புண்டு; நினைப்புள்ள இடத்தில் அறிவுண்டு

                                                  --- ஜேம்ஸ்ஆலன்

16. தோல்வியைக் கண்டு அஞ்சுபவர்களிடமிருந்து வெற்றி தானாகவே

     ஒதுங்கிக் கொள்கிறது.
                                                 --- எமர்சன்

17. ஆத்திரத்தில் சக்தி குறையும்; பொறுமையில் சக்தி கூடும்.

    உங்கள் சக்தியைச் சேகரித்துக் கொள்ளுங்கள்.

                                                --- இயேசுநாதர்

18. உங்கள் கௌரவம் உங்கள் நாக்கின் நுனியில்தான் இருக்கிறது.

                                                --- மில்டன்

19. தன்னம்பிக்கையே எல்லாவற்றிற்கும் முதல்படி.

                                               ---ப்ரெமர்

20. எளிமையும் மரியாதையும் உயர்ந்த பண்புகள்.

                                               ---நபிகள் நாயகம்

21. வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டுமானால் கஷ்டங்களை

    ஏற்றுக்கொள்ள வேண்டும்.
                                                 --- நெப்போலியன்

22. மனம் சொர்க்கத்தை நரகமாக்கும்/நரகத்தை சொர்க்கமாக்கும்
    தன்மையுடையது.
                                                --- மில்டன்


23. அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர். காரணம் அது முதலில்

    பரிட்சை வைக்கிறது. பின்னர் பாடம் கற்பிக்கிறது.
                                                   ---- வெர்ணன்

24. வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை.

    அதுபோலத்தான் வாழ்வில் உயர்வதும்.
                                             ---ரூசோ

25. காதல் அடிமேல் அடி வைத்து மெள்ள வருகிறது.

   போகும்போது கதவைப் பலமாகச் சாத்திவிட்டுப் போகிறது.

                                              ---லெம்ப்கே

26. நீங்கள் செயலாற்றப் பிறந்திருக்கிறீர்கள். உங்களுடைய

   செயல் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும்

   தேவையாக இருக்கிறது.
                                               ---விவேகானந்தர்  


27. நாம் முதலில் தெரிந்துகொள்ளவேண்டியது மற்றவர்களை

   மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைத்தான்.

                                                --- எமர்சன்

28. ஆனந்தமாக இரு; அடக்கமாக வாழ்;

    தைரியசாலியாகச் செயல் படு;

    நேர்மையாக இரு. இதுவே வெற்றியின் பாதை.

                                                 ---ஜான்விலி

29. பிரச்னையைத் தீர்க்க மௌனமொழியே சிறந்தது.

                                                 ---சாணக்கியன்


30. அடுத்தவரின் வாழ்க்கையுடன் ஒப்பிடாமல் தன் வாழ்க்கையை

   மகிழ்ச்சியாக நினைப்பவன் புத்திசாலி.
                                               --- சாணக்கியன்

31.சந்தர்ப்பத்தை உருவாக்குபவர்கள் வெற்றியை ஈட்டுகின்றனர்.

                                                --- பெர்னாட்ஷா


32. வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள்.

   பிறகு எஜமானனாகும் தகுதி தானாக வரும்.

                                             --- விவேகானந்தர்  

33. சுயமரியாதை, சுயபுத்தி, தன்னடக்கம் இம் மூன்று குனங்களே

    வாழ்க்கையை சிறப்பான வெற்றிக்கு வழி நடத்திச் செல்லும்.

                                              ---டென்னிசன்.
                                 
34. மனிதனின் கெட்ட குணங்களை வெறுத்துவிடு;

    மனிதனை வெறுக்காதே.
                                             --- ஷேக்ஸ்பியர்

35' பாராட்டுக்கு நாவின் ஈரம் மட்டும் போதாது;

   மனதின் ஈரமும் வேண்டும்.
                                        --- காண்டேகர்.

36. பேசப்படும் சொல்லைவிட எழுதப்படும் சொல்லே

    வலிமை வாய்ந்தது.
                                         --- ஹிட்லர்

37. உள்ளம் வசமானால் உலகம் வசமாகும்.
                                         --- பைரன்

38. பிடிவாதமுள்ளவன் நஷ்டத்திற்கு அதிபதி.
                                     --ஷேக்ஸ்பியர்

39.வாக்கு தவறாத மனிதன் மனிதருள் மாணிக்கம்.

                                      --- ரஸ்கின்

40. உலகில் தன்னம்பிக்கையே நிகரில்லா செல்வம்.

                                                        --- ஒளவையார்

41. அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;

   அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது.

                                                                 --- ரஸ்கின்

42. எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம் என்பது இப்போது

   நாம் செய்யும் செயல்களையும் எண்னும் எண்ணங்களையும்

   பொருத்தது.
                                          --- விவேகானந்தர்

43, வாழ்க்கையில் முன்னேற:

   1. குன்றாத உழைப்பு,

   2. குறையாத முயற்சி,

   3. வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை

      இம் மூன்றும் இருந்தால் போதும்.

                                  --- தாமஸ் ஆல்வா எடிசன்.

44. பணம், ஆற்றல், திறமை இவையெல்லாம் வாழ்க்கைக்குரிய

    பொருள்களே அன்றி அவையே வாழ்க்கை ஆகா.

                                    --- ஜேம்ஸ் ஆலன்

45. தன்னைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவந்தான் வலிமையானவன்.

                                      --- சாணக்கியன்.

46. காதல் மயக்கத்தில் தோன்றினால் மங்கும்.

   அன்பில் தோன்றினால் பொங்கும்.
                                     --- கண்ணதாசன்

47. அறிவு மௌனத்தைக் கற்றுத்தரும்.

    அன்பு பேச்சைக் கற்றுத்தரும்.
                                    ---ரிக்டர்

48. உறுதியைப் போல உழைப்பும் இருந்தால் வெற்றி காண்பாய்.

                                                  --- ஷெல்லி

49. எல்லாத் தடைகளையும் தாண்டி, எடுத்த செயலை

    நன்னெறிப் பாதையில் முடிப்பவனே உண்மையான

    மனிதன்.
                                             --- துளசிதாசர்.

 50. நேரம் என்பது செலுத்தப்பட்ட அம்பைப் போன்றது;

   அது திரும்பிவராது.
                                             ---ஜேஷி