பொன்மொழிகள்
1.வாழ்க்கையில் வெற்றியின் ரகசியம் என்பது சந்தர்ப்பத்திற்காகக்
காத்திருத்தலும், வந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதுமே ஆகும்.
--- வால்டேர்.
2.மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்.
---காப்மேயர்
3.வெற்றியைக் காண்பதற்கு நம்பிக்கையும் முயற்சியுமே சிறந்த வழிகள்.
வேறு குறுக்கு வழிகள் இல்லை.
---எட்மண்ட் பர்க்.
4.உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் அமையும்;
உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை அமையும்.
----சாக்ரடீஸ்
5.உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல் உழைப்புக்கு முதலிடம்
கொடுத்தால், வாழ்க்கை உன்னதமாக இருக்கும்.
---எடிசன்
6.விடாமுயற்சியுடையவன் விரும்பிய அனைத்தையும்
பெற்றுவிடுகிறான்.
---ரூஸ்வெல்ட்.
7.இயற்கை, காலம், பொறுமை இவையே சிறந்த மருத்துவர்கள்.
---ஜார்ஜ் போஹன்
8. செயலை விதையுங்கள்; பழக்கம் உருவாகும்.
பழக்கத்தை விதையுங்கள்; பண்பு உருவாகும்.
பண்பை விதையுங்கள்; எதிர்காலம் உருவாகும்.
ஜேம்ஸ் ஆலன்
9. மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளும் அல்ல.
இடையூறுகளும் துன்பங்களுமே.
---மாத்பூன்
10. நிதானமாகச் சிந்திக்கவேண்டும். விரைவாகச் செயல்படவேண்டும்.
---புட்ஸர்
11. உன் விதியை வகுப்பவன் நீயே! உனக்குத் தேவையான எல்லா
வலிமைகளும் உனக்குள்ளேயே குடிகொண்டு இருக்கின்றன.
--- சுவாமி விவேகானந்தர்
12. ஓர் இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண்ணால் மட்டுமே முடியும்.
---- கோல்ரிட்ஜ்
13. உயர்ந்த விஷயங்களை எளிமையாகக் கூறுவதே சான்றாண்மை.
----எமர்சன்
14. அகந்தையை வென்றுவிட்டால் அடக்கம் தானாகவே
நம்மை வந்து சேரும்.
----மகாவீர்
15. தீயுள்ள இடத்தில் சூடுண்டு; சூடுள்ள இடத்தில் தீயுண்டு.
அறிவுள்ள இடத்தில் நினைப்புண்டு; நினைப்புள்ள இடத்தில் அறிவுண்டு
--- ஜேம்ஸ்ஆலன்
16. தோல்வியைக் கண்டு அஞ்சுபவர்களிடமிருந்து வெற்றி தானாகவே
ஒதுங்கிக் கொள்கிறது.
--- எமர்சன்
17. ஆத்திரத்தில் சக்தி குறையும்; பொறுமையில் சக்தி கூடும்.
உங்கள் சக்தியைச் சேகரித்துக் கொள்ளுங்கள்.
--- இயேசுநாதர்
18. உங்கள் கௌரவம் உங்கள் நாக்கின் நுனியில்தான் இருக்கிறது.
--- மில்டன்
19. தன்னம்பிக்கையே எல்லாவற்றிற்கும் முதல்படி.
---ப்ரெமர்
20. எளிமையும் மரியாதையும் உயர்ந்த பண்புகள்.
---நபிகள் நாயகம்
21. வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டுமானால் கஷ்டங்களை
ஏற்றுக்கொள்ள வேண்டும்.
--- நெப்போலியன்
22. மனம் சொர்க்கத்தை நரகமாக்கும்/நரகத்தை சொர்க்கமாக்கும்
தன்மையுடையது.
--- மில்டன்
23. அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர். காரணம் அது முதலில்
பரிட்சை வைக்கிறது. பின்னர் பாடம் கற்பிக்கிறது.
---- வெர்ணன்
24. வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை.
அதுபோலத்தான் வாழ்வில் உயர்வதும்.
---ரூசோ
25. காதல் அடிமேல் அடி வைத்து மெள்ள வருகிறது.
போகும்போது கதவைப் பலமாகச் சாத்திவிட்டுப் போகிறது.
---லெம்ப்கே
26. நீங்கள் செயலாற்றப் பிறந்திருக்கிறீர்கள். உங்களுடைய
செயல் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும்
தேவையாக இருக்கிறது.
---விவேகானந்தர்
27. நாம் முதலில் தெரிந்துகொள்ளவேண்டியது மற்றவர்களை
மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைத்தான்.
--- எமர்சன்
28. ஆனந்தமாக இரு; அடக்கமாக வாழ்;
தைரியசாலியாகச் செயல் படு;
நேர்மையாக இரு. இதுவே வெற்றியின் பாதை.
---ஜான்விலி
29. பிரச்னையைத் தீர்க்க மௌனமொழியே சிறந்தது.
---சாணக்கியன்
30. அடுத்தவரின் வாழ்க்கையுடன் ஒப்பிடாமல் தன் வாழ்க்கையை
மகிழ்ச்சியாக நினைப்பவன் புத்திசாலி.
--- சாணக்கியன்
31.சந்தர்ப்பத்தை உருவாக்குபவர்கள் வெற்றியை ஈட்டுகின்றனர்.
--- பெர்னாட்ஷா
32. வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள்.
பிறகு எஜமானனாகும் தகுதி தானாக வரும்.
--- விவேகானந்தர்
33. சுயமரியாதை, சுயபுத்தி, தன்னடக்கம் இம் மூன்று குனங்களே
வாழ்க்கையை சிறப்பான வெற்றிக்கு வழி நடத்திச் செல்லும்.
---டென்னிசன்.
34. மனிதனின் கெட்ட குணங்களை வெறுத்துவிடு;
மனிதனை வெறுக்காதே.
--- ஷேக்ஸ்பியர்
35' பாராட்டுக்கு நாவின் ஈரம் மட்டும் போதாது;
மனதின் ஈரமும் வேண்டும்.
--- காண்டேகர்.
36. பேசப்படும் சொல்லைவிட எழுதப்படும் சொல்லே
வலிமை வாய்ந்தது.
--- ஹிட்லர்
37. உள்ளம் வசமானால் உலகம் வசமாகும்.
--- பைரன்
38. பிடிவாதமுள்ளவன் நஷ்டத்திற்கு அதிபதி.
--ஷேக்ஸ்பியர்
39.வாக்கு தவறாத மனிதன் மனிதருள் மாணிக்கம்.
--- ரஸ்கின்
40. உலகில் தன்னம்பிக்கையே நிகரில்லா செல்வம்.
--- ஒளவையார்
41. அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;
அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது.
--- ரஸ்கின்
42. எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம் என்பது இப்போது
நாம் செய்யும் செயல்களையும் எண்னும் எண்ணங்களையும்
பொருத்தது.
--- விவேகானந்தர்
43, வாழ்க்கையில் முன்னேற:
1. குன்றாத உழைப்பு,
2. குறையாத முயற்சி,
3. வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை
இம் மூன்றும் இருந்தால் போதும்.
--- தாமஸ் ஆல்வா எடிசன்.
44. பணம், ஆற்றல், திறமை இவையெல்லாம் வாழ்க்கைக்குரிய
பொருள்களே அன்றி அவையே வாழ்க்கை ஆகா.
--- ஜேம்ஸ் ஆலன்
45. தன்னைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவந்தான் வலிமையானவன்.
--- சாணக்கியன்.
46. காதல் மயக்கத்தில் தோன்றினால் மங்கும்.
அன்பில் தோன்றினால் பொங்கும்.
--- கண்ணதாசன்
47. அறிவு மௌனத்தைக் கற்றுத்தரும்.
அன்பு பேச்சைக் கற்றுத்தரும்.
---ரிக்டர்
48. உறுதியைப் போல உழைப்பும் இருந்தால் வெற்றி காண்பாய்.
--- ஷெல்லி
49. எல்லாத் தடைகளையும் தாண்டி, எடுத்த செயலை
நன்னெறிப் பாதையில் முடிப்பவனே உண்மையான
மனிதன்.
--- துளசிதாசர்.
50. நேரம் என்பது செலுத்தப்பட்ட அம்பைப் போன்றது;
அது திரும்பிவராது.
---ஜேஷி
No comments:
Post a Comment