Translate

Monday, June 17, 2013

பிராணாயாமம்

பிராணாயாமம்

செய்முறைகளும் விளைவுகளும்:


சூர்ய பேடனா பிராணாயாமம்:


சூர்ய பேடனா பிராணாயாமத்தில் சுவாசம் வலது  நாசித்துவாரத்தின்
மூலமாக உள்ளே இழுக்கப்படுகிறது. வேறு விதமாகச் சொல்வதானால்,
பிராணா பிங்கல சூர்யநாடி வழியாக நுழைந்து செல்கிறது.
அதன் பின்னர் ஒரு கும்பகம் பயிற்சி செய்யப்பட்டு மூச்சு
இடது நாசித்துவாரத்தின் வழியாக , இடா நாடி வழியாகச்செல்கிறது.

செய்முறை:

1. பத்மாசனம், சித்தாசனம் (அ) வீராசனம் போன்ற ஏதாவது ஒரு
  சௌகரியமான தோற்றத்தில் அமரவும்.

2. முதுகை நேராகவும் விறைப்பாகவும் வைக்கவும்.
   தலையை உடலின் மேல்புறத்திற்குத் தாழ்த்தவும்.

   முகவாயை மார்பெலும்புக்கு சற்று மேலாக கழுத்துப்பட்டை
   எலும்புகளுக்கு இடையில் உள்ள குழிவில் பதிக்கவும்.
   (இதுதான் ஜலதர பந்தா. ஜல என்றால் வலை அல்லது
    பின்னல் என்று பொருள்.)

3. இடது கரத்தை நீட்டவும். இடதுமணிக்கட்டின் பின்புறத்தை
  இடது முழங்காலின் மீது வைக்கவும். இடதுகையை ஞான முத்திரையில்
  வைக்கவும்.
  [பெருவிரல்கள் மற்றும் சுட்டு விரல்களை மடக்கி ஒன்றையொன்று
  தொடும்படி வைக்கப்பட வேண்டும்.
  பிறவிரல்களை நீட்டி வைக்கவும்.
  இதுவே ஞானமுத்திரை. இங்கு சுட்டுவிரல் தனிப்பட்ட ஆன்மாவையும்,
  பெருவிரல் பிரபஞ்சாஆன்மா,பரமாத்மாவையும்குறிக்கின்றன.
  இவ்விரண்டும் இணைவது அறிவைக் குறிக்கின்றது.]

.4. வலது கரத்தை முழங்கையில் மடிக்கவும். சுட்டுவிரல் மற்றும் நடுவிரலை
உள்ளங்கையை நோக்கி மடக்கவும். அவற்றை அசைவற்று வைக்கவும்.
மோதிரவிரல் மற்றும் சுண்டுவிரலை பெருவிரலை நோக்கிக் கொண்டு வரவும்.

5. வலது பெருவிரலை மூக்கின் வலது புறமும், மோதிர மற்றும் சுண்டுவிரல்களை   மூக்கின் இடது புறமும், மூக்கு எலும்புக்கு சற்று கீழேயும், நாசிகளின் கொழுப்புத்  திசுவுக்குச் சற்று மேலும் மேல் தாடைக்கு மேலே வைக்கவும்.

6. மோதிர மற்றும் சுண்டு விரல்களை அழுத்தி மூக்கின் இடது புறத்தை முழுவதுமாக  அடைத்து விடவும்.

7. வலது பெருவிரலால், வலது நாசியின் வெளி ஒரம், மூக்கை பிரிக்கும் குருத்தெலும்பின்   கீழ் ஓரத்துடன் இணையாக இருக்கும்படி மூக்கின் வலது புறத்தின் கொழுப்புத் திசுவை   அழுத்தவும்.

8. வலது பெருவிரல் மேல் மூட்டில் மடங்கியுள்ளது. அதன் நுனி மூக்கின் குறுக்குஸ் சுவருடன்  நேர்கோணத்தில் வைக்கப்பட்டுள்ளது.

9. இப்போது வலது நாசியின் துவாரத்தை பெருவிரலின் நகத்தருகில் உள்ள நுனியால்  கட்டுப்படுத்தியபடி, மெதுவாகவும், ஆழமாகவும் சுவாசிக்கவும். நுரையீரலை அவை  கொள்ளுமளவு முழுவதும் நிரப்பவும்.(பூரகம்).

10. பின்னர், இரண்டு நாசித்துவாரங்களும் மூடியுள்ளபடி வலது நாசியை அடைக்கவும்.

11. சுவாசத்தை சுமார் 5 வினாடிகளுக்கு தக்க வைத்துக்கொள்ளவும்.(அந்தர கும்பகம்).

12. வலது நாசியை முழுவதும் அடைத்து வைத்தபடி இடது நாசியைப் பாதியளவு திறந்து,    அதன் வழியாக மெதுவாகவும்,ஆழமாகவும் வெளி சுவாசம் விடவும்.

13. வெளிசுவாசத்தின்போது இடது நாசியிலிருந்து காற்று லயத்துடன் வெளிவருவதை   மோதிர மற்றும் சுண்டு விரல்களின் அழுத்தத்தை சரி செய்வதன் மூலம்   ஒழுங்குபடுத்தவும். இச்சமயம் இடது நாசியின் வெளி ஓரம் குறுக்குச் சுவருக்கு   இணையாக வைக்கப்படவேண்டும்.அழுத்தம் விரல் நுனிகளில் உள்பக்கங்களால்   (நகத்தை விட்டு விலகியுள்ளவை) கொடுக்கப்படவேண்டும்.

14. இது சூர்ய பேடனா பிராணாயாமத்தின் ஒரு சுழற்சியை முடிவு செய்கிறது.
   உங்கள்  திறனைப் பொறுத்த அளவு, விடாமல் 5-10 நிமிடங்களுக்கு மேலும்
   சுழற்சிகளைச் செய்யவும்.

15. சூர்ய பேடனாவின் எல்லா உள்சுவாசங்களும் வலது நாசியிலிருந்தும்,
   எல்லா வெளிசுவாசங்களும் இடது நாசியிலிருந்தும் வருகின்றன.

16. செய்முறையின் நேரம் முழுதும் காற்று செல்லும் பாதை விரல்கள் மற்றும்
   பெருவிரல்களின் நுனிகளிலும்,அழுத்தம் தரப்படும் நாசி சவ்வுகளிலும்
   உணரப்படுகிறது. காற்று செல்லுவது,சைக்கிள் டியூபிலிருந்து காற்று வெளிச்   செல்லும் ஒலி போன்ற ஒரு ஓசையை எழுப்புகிறது. நாசிகளின் மீதுள்ள   அழுத்தத்தை மாறுபடுத்துவதன் மூலம் இந்த ஒலி ஒரே சீராக வைக்கப்பட   வேண்டும்.

17. கண்கள்,  நெற்றிப்பொட்டுக்கள்,புருவங்கள் மற்றும் நெற்றியின் தோல்
   இவைகள் முற்றிலும் அசைவற்று இருக்க வேண்டும்.

18. மனம், காற்று செல்வதின் சரியான ஓசையைக் கவனிப்பதிலும்,
   சுவாசத்தை சரியான லயத்துடன் வைத்திருப்பதிலும், முழுமையாக
  ஈர்க்கப்பட்டு இருக்க வேண்டும்.

19. ஒவ்வொரு உள்சுவாசமும் வெளிசுவாசமும் ஒரே அளவு நேரம்
   நிலைத்திருக்க வேண்டும்.

20. உள்சுவாசமும் வெளிசுவாசமும் சிரமப்பட்டு வற்புறுத்தலுடன்
   செய்யப்படக்கூடாது. ஒரே சீரான மெதுவான லயம் நேரம் முழுவதிலும்
  வைத்திருக்கப்பட வேண்டும்.

21. பிராணாயாமத்தைச் செய்து முடித்த பின்னர் சவாசனத்தில் படுக்கவும்.


விளைவுகள்:

                  நாசித் துவாரங்களில் அழுத்தம் ஏற்படும் காரணத்தால்,
இந்தப் பிராணாயாமத்தில், உஜ்ஜயியில் செய்வதைவிட அதிக அளவு வேலையைநுரையீரல்கள் செய்யவேண்டியுள்ளது. சூர்யபேடனாவில் அவை உஜ்ஜயியை விடவும்மேலும் மெதுவாக, நிதானமாக, முழுமையாக நிரம்பின.

                 சூர்யபேடனா ஜீரண சக்தியை அதிகரித்து,நரம்புகளை ஆசுவாசப்படுத்திசக்தியூட்டி மூக்கின் எலும்புப் புழைகளைச் சுத்தம் செய்கிறது.


குறிப்பு :

          தாழ்வான இரத்த அழுத்தத்தால் அவதியுறும் நபர்கள் இதனால் பயன் பெருவார்கள்.
ஆனால் உயர்ந்த இரத்த அழுத்தம் அல்லது இருதயக் கோளாறு உள்ளவர்கள் இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்யும் பொழுது உள் சுவாசத்திற்குப் பின்னர் மூச்சைத்தக்க வைத்துக் கொள்ளக் கூடாது(அந்தர கும்பகம்).




No comments:

Post a Comment