திருக்குறள்
(see below in English)
1.அறத்துப்பால்
29. கள்ளாமை
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு. 281
தான் பிறர் பழிக்கு ஆளாகக்கூடாது என நினைப்பவர்,
எவர் பொருளையும் வஞ்சனையால் அடையாதபடி
மனத்தைக் கட்டுப்படுத்தவேண்டும்.
kural-281
Who seeks heaven's joys,from impious levity secure,
Let him from every fraud preserve his spiit pure.
Let him , who desires not to be despised, keep his mind
from (the desire of) defrauding another of the smallest
thing.
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். 282
தவறான எண்ணங்களை மனத்தால் நினைப்பதும்
குற்றமே. அப்படியிருக்க மற்றவர் உடைமையை
வஞ்சகமாய் அபகரிக்க நினைப்பது மாபெரும் குற்றம்.
kural-282
'Tis sin if in the mind man but thought conceive;
'By fraud i will my neighbour of his wealth bereave'.
Even the thought (of sin) is sin; think not then of crafiily
stealing the property of another.
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக்கெடும். 283
மற்றவரை வஞ்சித்து சேர்த்த செல்வம்
முதலில் வளர்வது போல் தோன்றி,
எல்லையைத் தாண்டியபின் அழிந்து விடும்.
kural-283
The gain that comes by fraud,although it seems to grow
with limitless increase, to ruin swift shall go.
The property, which is acquired by fraud, will entirely
perish, even while it seems to increase.
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும். 284
மற்றவர் பொருளை வஞ்சித்துச் சேர்த்துக் கொள்ளும்
ஆசை அப்போது இன்பமாகி, பலன் கொடுக்கும்போது
நீங்கா துன்பத்தைத் தரும்.
kural-284
The lust inveterate of fraudful gain,
yields as its fruit undying pain.
The eager desire of defrauding others will,
When it brings forth its fruit, produce undying
sorrow.
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். 285
கருணையைப் பெரிதாக மதித்து அன்போடு
நடப்பது மற்றவர் பொருளை அபகரிக்கத் திட்டமிட்டு,
பொருளை இழந்தவர் சோகமாயிருப்பதை லட்சியம்
செய்யாதவர்களுக்குக் கிடையாது.
kural-285
'Grace' is not in their thoughts, nor know they kind affection's power,
Who neighbour's goods desire, and watch for his unguarded hour.
The study of kindness and the excercise of benevolence
is not with those who watch for another's forgetfulness,
though desire of his property.
அளவின் கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர். 286
திருடுவதில் ஆசை உள்ளவர் ஆடம்பரமின்றி
சிக்கனமாய் வாழும் நெறியைக் கடைப்பிடிக்க
மாட்டார்.
kural-286
They cannot walk restrained in wisdom's measured bound,
In whom inveterate lust of fraudful gain is found.
They cannot walk stead fastly, according to rule,
who egarly desire to fraud others.
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல். 287
வருமானத்திற்கேற்றபடிச் செலவு செய்து
வாழ்பவருக்குப் பிறர் பொருளை அபகரிக்கும்
திருட்டு புத்தி என்ற இருண்ட அறிவு ஒரு
நாளும் வராது.
kural-287
Practice of fraud's dark cunning arts they shun,
Who long for power by 'measured wisdom' won.
That black-knowledge which is called fraud,
is not in those who desire that greatness
which is called rectitude.
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு. 288
அளவறிந்து வாழ்கின்றவர் நெஞ்சில் நிலையாக
அறம் குடியிருப்பது போல் கள்வர்களின் மனத்தில்
வஞ்சகம் குடி கொண்டிருக்கும்.
kural-288
As virtue dwells in heart that 'measured wisdom's gains;
Deceit in hearts of fraudful men established reigns.
Deceit dwells in the mind of those who are conversant
with fraud, even as virtue in the minds of those who
are conversant with rectitude.
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர். 289
களவைத் தவிர மற்ற நல்ல வழிகளைக்
கடைப்பிடிக்காதவர் அதையே அள்:அவில்லாமல்
செய்து அழிவைத்தேடிக்கொள்வர்.
kural-289
Who have no lore save that which fraudful arts supply,
Acts of unmeasured vice committing straightway die.
Those, who are acquainted with nothing but fraud,
will perish in the very commission of transgression.
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு. 290
களவாடுபவர்களுக்கு வாழ்வில் பெருமை கிடையாது.
உயிருக்கும் உறுதி இல்லை. பிறர் பொருளை
விரும்பாதவர்களுக்கு தேவலோக வாசம் காத்திருக்கும்.
kural-290
The fraudful forfeit life and being here below;
Who fraud eschew the bliss of heavenly beings know.
Even their body will fail the fraudulent, but even the
World of Gods will not fail those who are free from fraud.
திருக்குறள்
(see below in English)
1.அறத்துப்பால்
30.வாய்மை
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல். 291
வாய்மை என்று சொல்லப்படுவது எதுவென்றால்
மற்றவருக்குத் தீங்கு வராதபடிப் பேச வேண்டும்.
kural-291
You ask, in lips of men what 'truth' may be;
'Tis speech from every taint of evil free.
Truth is the speaking of such words as are free
from the least degree of evil ( to others).
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். 292
நன்மை தருமானால் நாம் சொல்லும்பொய்கூட
வாய்மை என்ற இடத்தில் அமரும்.
kural-292
Falsehood may take the place of truthful word;
If blessing, free from fault, it can afford.
Even falsehood has the nature of truth,
if it confer a benefit that is free from fault.
தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும். 293
ஒருவன் மனமறிந்து பொய் சொல்லக்கூடாது.
அப்படிச் சொன்னால் அவனது மனசாட்சி அவனை
வருத்தும்.
kural-293
Speak not a word which false thy own heart knows
Self-kindled fire within the false one's spirit glows.
Let not a man knowingly tell a lie; for after he has told
the lie, his mind will burn him (with memory of his guilt).
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன். 294
ஒருவர் தன் மனமறியப் பொய் பேசாது நடந்தால்
அவன் உலகத்தார் நெஞ்சில் பெருமையோடு
போற்றப்படுவான்.
kural-294
True to his inmost soul who lives,-enshrined
He lives in souls of all mankind.
He who, in his conduct, preserves a mind free
from deceit , will dwell in the minds of all men.
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை. 295
ஒருவன் மனமொப்பி உண்மை பேசிவந்தால்
அவன் தவத்தொடு தானமும் செய்பவரை விட
உயர்ந்தவனாவான்.
kural-295
Greater is he who speaks the truth with full consenting mind.
Than men whose lives have penitence and charity combined.
He, who speaks truth with all his heart, is superior to those
who make gifts and practice austerities.
திருக்குறள்
(see below in English)
1.அறத்துப்பால்
30.வாய்மை
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும். 296
ஒருவருக்கு உண்மை பேசுவதால் ஏற்படும்
புகழுக்கு ஈடு, இணை இல்லை. அது அவனுக்கு
எல்லா நன்மைகளையும் கொடுக்கும்.
kural-296
No praise like that of words from falsehood free;
This every virtue yields spontaneously.
There is no praise like the praise of never uttering
a falsehood: without causing any suffering, it will
lead to every virtue.
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. 297
பொய் பேசுவதில்லை என்ற தர்மத்தை
உண்மையாகப் போற்றி வாழ்பவர் மற்ற தருமங்களைச்
செய்யாவிட்டாலும் உயர்ந்தவராவார்.
kural-297
If all your life be utter truth, the truth alone,
'Tis well, though other virtuous acts be left undone.
If a man has the power to abstain from falsehood,
it will be well with him, even though he practice no
other virtue.
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும். 298
குளித்தால் உடல் சுத்தமாகும். உன்மையே
சொல்பவருக்கு மனம் தூய்மையாக இருக்கும்.
kural-298
Outward purity the water will bestow;
Inward purity from truth alone will flow.
Purity of body is produced by water and
purity of mind by truthfulness.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. 299
வெளியிலுள்ள இருட்டைப் போக்கும் விளக்குகளைவிட
சான்றோர் பொய்பேசாதிருத்தலையே நிஜமான விளக்காகக்
கருதுவர்.
kural-299
Every lamp is not a lamp in wise men's sight;
That's the lamp with truth's pure radiance bright .
All lamps of nature are not lamps; the lamp of
Truth is the lamp of the wise.
யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற. 300
யாம் உண்மையாக ஆராய்ந்து பார்த்ததில் உண்மை
சொல்வதைவிட எந்த வகையிலும் சிறந்தது வேறொன்றும்
இல்லை.
kural-300
Of all good things we 've scanned with studios care,
There's nought that can with truthfulness compare.
Amidst all that we have seen (described) as real(excellence),
there is nothing so good as truthfulness.
திருக்குறள்
(see below in English)
1.அறத்துப்பால்
31.வெகுளாமை
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என். 301
தன் கோபம் பலிக்கும் இடத்தில் சினத்தைக்
கட்டுப்படுத்தி எழாமல் செய்பவனே கோபத்தை
அடக்கியவனாவான். பலிக்காத இடத்தில் அதை
அடக்கினால் என்ன? அடக்காவிட்டால் என்ன?
kural-301
Where though hast power thy angry will to work, thy wrath restrain;
Where power is none, what matter if though check or give it rein?
He restrains his anger who restrains it when it can injure;
When it cannot injure,what does it matter whether he
restraint it, or not?
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற. 302
பலிக்காத இடத்தில் கோபப்படுவது தீமையைத்
தரும்.பலிக்கும் இடத்தில் சினத்தைக் காட்டினால்
அதுவும் அழிவைத் தரும்.
kural-302
Where power is none to wreak the wrath,wrath importent is ill;
where thou hast power thy will to work,'tis greater, evil still.
Anger is bad, even when it cannot injure;when it can injure;
there is no great evil.
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும். 303
எவரிடத்திலும் கோபம் கொள்ளாமல்
கோபமென்ற பாபத்தை மறந்து விடுவது நல்லது.
கெடுதல்களுக்கெல்லாம் அக்கோபமே ஆணிவேர்.
kural-303
If any rouse thy wrath, the trespass straight forget;
For wrath an endless train of evils will beget.
Forget anger towards every one,as fountains of evil
spring from it.
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற. 304
முகமலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் கெடுத்து
எழுகின்ற கோபத்தை விட கொடிய பகைகளும்
உண்டோ?
kural-304
Wrath robs the face of smiles, the heart of joy,
What other foe to man works such annoy?
Is there a greater enemy than anger,which kills
both laughter and joy?
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம். 305
தன்னைக் காத்துக் கொள்ள நினைப்பவன் கோபம்
வராமல் கட்டுப்படுத்த வேண்டும். அப்படிக்
கட்டுப்படுத்தத் தவறினால் அக்கோபம் அவனையே
அழித்துவிடும்.
kural-305
If thou would'st guard thyself, guard against wrath alway;
'Gains wrath who guards not, him his wrath shall slay.
If a man would guard himself, let him guard against anger;
if he do not guard it, anger will kill him.
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும். 306
சினம் என்னும் நெருப்பு சூழ்ந்துள்ளவரை எரித்து
விடும். உறவு, நட்பு என்ற இன்பத் தெப்பத்தையும்
அழிக்கும்.
kural-306
Wrath, the fire that slayeth whose draweth near,
Will burn the helpful 'raft' of kindred dear.
The fire of anger will burn up even the pleasant
raft of friendship.
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையாதற்று. 307
கோபம் கொண்டு பூமியில் அறைந்தால் கைவலிக்கும்.
சினத்தை அடக்காதவன் மன நோய் கொண்டே
மடிவான்.
kural-307
The hand that smites the earth unfailing feels the sting;
So perish they who nurse their wrath as noble thing.
Destruction will come upon him who regards anger
as a good thing, as surely as the hand of him who
strikes the ground will not fail.
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று. 308
ஜ்வாலையாக கொழுந்து விட்டெறியும்
தீயில் போட்டாற் பொன்ற தீமையைச்
செய்தாலும், கூடுமானால் அவனிடம்
கோபம் கொள்ளாதிருக்க வேண்டும்.
kural-308
Though men should work thee woe , like touch of tongues of fire.
'Tis well if thou canst save thy soul from burning ire.
Though one commit things against you as painful (to bear)
as if a bundle of fire had been thrust upon you, it will be well,
to refrain, if possible, from anger.
உள்ளிய வெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். 309
மனத்தினாலும் சினத்தை எந்த சந்தர்ப்பத்திலும்
நினைக்காதவனானால் அவன் நினைத்தவையெல்லாம்
ஒருங்கே பெறுவான்.
kural-309
If man his soul preserve from wrathful fires,
He gains with that whate'er his soul desires.
If a man never indulges anger in his heart, He will
at once obtain whatever he has thought of.
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. 310
கோபம் கொண்டு நடப்பவர்(அந்த சமயம்)
இறந்தவரைப் போன்றவர்.கோபத்தை விட்டவரோ
துறவிகளை ஒத்தவர்.
kural-310
Men of surpassing wrath are like the men who've passed away;
Who wrath renounce, equals of all-renouncing sages they.
Those, who give way to excessive anger, are no better than
Dead men;but those, who are freed from it, are equal to those
who are freed ( from death).
No comments:
Post a Comment