Translate

Sunday, January 26, 2014

பொன்மொழிகள்

பொன்மொழிகள்


350. தன்னம்பிக்கை முன் எந்த ஆயுதமும் நிற்காது.


351. முதலில் சிந்தியுங்கள்; பிறகு பேசுங்கள்; பேசினாலும்
     குறைவாகப் பேசுங்கள்.

352. சோர்வு, வறுமை, தீயசெயல் மூன்றிலிருந்தும்
     நம்மைக் காப்பது உழைப்பு.

                              --- வால்டேர்


353. நீ என்ன சொல்கிறாய் என்பது முக்கியமன்று;
    அதை எப்படிச் சொல்கிறாய் என்பதுதான்
    மனித உறவுகளில் மாற்றம் செய்ய வல்லது.

                         --- ஹ்யூஸ்யியர்ன்ஸ்

354. பழைய துன்பங்களுக்காக புதிய கண்ணீரை
    ஏன் செலவழிக்க வேண்டும்? அது வீண்.


355. சிறந்த மனிதன் என்பவன் சொற்களைச் சிக்கனமாகப்
    பயன்படுத்துவான்; நடத்தையில் உறுதியாக இருப்பான்.

                                  --- கன்பூஷியஸ்


356. சினத்தில் துவங்கும் எதுவும் அவமானத்தில்தான் முடியும்.



357. மனிதனின் மன உறுதி மலைகளையும் தகர்த்தெறியும்.

                                          --- மார்க்ஸ்

358. படித்திருந்தாலும், பட்டம் பெற்றிருந்தாலும்
    பெரியவர் சொல் கொஞ்சமாவது கேள்.

                              --- வாரியார்


359. முறையாக முயற்சி செய்தாலொழிய எந்தக் காரியமும்
    வெற்றியடையாது.

                                --- வால்டேர்

360. எஜமானனாக இருந்தால் சில சமயம் குருடனாக
    இருங்கள். வேலையாளனாக இருந்தால் சில சமயம்
    செவிடனாக இருங்கள்.

                               --- புல்லர்


361. உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள்
    அமையும். உன் செயல்களுக்கு ஏற்றபடி உன்
    வாழ்க்கை அமையும்.

                             --- சாக்ரடீஸ்



362. மன்னித்தலே மனிதனுடைய முதற்கடமை.
    மற்றவற்றை நமக்காகப் பிறர் செய்யமுடியும்.
    ஆனால் மன்னித்தலை நாம்தான் செய்யமுடியும்.

                            --- ஜான் ஹெர்பர்ட்

363. உன் மகிழ்ச்சி நிலத்திருக்க வேண்டுமானால்
    எதிலும் மிதமாக இரு.

                           --- சார்லஸ் அகஸ்டின்


364. முதலில் நீங்கள் நல்லவனாய் இருங்கள்; கெடுதல்கள்
     பறந்து போய்விடும். உலகம் முழுவதும் மாறிவிடும்.

                                      --- விவேகானந்தர்

365. நீங்கள் சிந்திக்கும் ஒவ்வொரு நற்சிந்தனையும்
    நீங்களே எதிர்பாராத அளவிற்கு அற்புதமான
    முடிவுகளை ஒவ்வொரு முறையும் தரும்.

                      --- ஜான்ரோஜர்


366. புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்துப் படிப்பவன்தான்
    உண்மையான அறிவாளி.

                         --- லின்யுடங்

367. தவறாக வேண்டுமானால் சிந்தியுங்கள்; ஆனால்
    உங்களுக்காக நீங்களே சிந்தியுங்கள். அதுதான்
   முக்கியம்.

                                 --- வெஸ்லின்


368. முடியும் என்ற உணர்வு பிறக்கும் போதே அதைச்
    செய்து முடிக்கும் திறமையும் அந்த ஜீவனுக்குள்
    அடங்கி இருப்பதால்தான் வெற்றி பிறக்கிறது.

                                   --- ஜேம்ஸ் ஆலன்


369. நேற்றைய தோல்விக்களுக்கான காரணங்களைக்
    கண்டு கொண்டு அவற்றை விலக்கிப் புதிய பாதையில்
    உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் செல்லுங்கள்.

370. நல்ல ஆலோசனைகளை விரும்பிக் கேட்பது
    நம் திறமையை அதிகப்படுத்தும்.

                                   --- கதே


371. நீண்ட நேரம் சிந்தித்தபின் உங்கள் நாவை அசையுங்கள்;
    நீங்கள் அவமானம் அடையமாட்டீர்கள்.

                                          --- அரிஸ்டாட்டில்



372. அன்பையும் மரியாதையையும் தயங்காமல்
    ஒவ்வொருவருக்கும் கொடுப்பவன் இந்த உலகத்தில்
    எதையும் சாதித்துவிடுவான்.




373. எந்தப் பிள்ளை தன் நல்லொழுக்கங்களால் பெற்றோரை
    மகிழ்விக்கிறானோ அவனே நல்ல பிள்ளை.

                                     --- விவேகானந்தர்

374. உடல் நலம் உள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும்.
     நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்.

375. அடிமையைப்போல் உழைப்பவன் அரசனைப்போல்
    உண்பான்.

                                   --- பிராங்க்ளின்


376. மௌனமாக இருக்கத் தெரியாதவனுக்கு நன்றாகப்
     பேசவும் தெரியாது.

                                   --- புரு பர்க்

377. உற்சாகமுள்ளவனை எதிர்ப்பு தடைசெய்வதில்லை;
    மாறாக அவனுக்கு அது மேலும் ஊக்கத்தை ஊட்டுகிறது.

                                      ---ஹில்லர்

378. தவறுக்கு முன்னோர் இட்டபெயர் விதி. நீங்கள்
    தவறு செய்யாமல் உண்மையோடு போராடினால்
    விதியை வெல்லலாம்.

                              ---- ஆல்பாஷால்ஸ்

379. நேரத்தைத் தாமதப்படுத்தாதே; தாமதங்கள்
    தீமையான முடிவைத் தரும்.

                                 --- ஷேக்ஸ்பியர்

380. நல்ல இதயம் மட்டும் இருந்தால் போதும்;
    எல்லாத் துர்திஷ்டங்களையும் தகர்த்தெறிந்துவிடலாம்.

                                  --- ஸ்பெயின்


381. சந்தர்ப்பம் நிறைய பேரை அழைக்கிறது;
    ஆனால் சிலர்தான் எழுந்து நிற்கின்றனர்.

                 --- ஆலிவர் வோர்போண்ட்


382. அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும் வரை உங்களுக்கு
    என்றைக்கும் விடிவுகாலம்தான்.

                                 ---- பிளாட்டோ


383. தன்னந்தனியே எவனொருவன் நிற்கத் துணிகின்றானோ
    அவனே உலகில் வலிமைமிக்க மனிதன்.

                                      --- மாத்யூஸ்  


384. அழகு என்பது நாம் செய்துள்ள செயல்களில்தான்
    உள்ளது.செயலில் உண்மையிருந்தால் அந்த அழகு
    ஒவ்வொருவரையும் கவரும். உலகில் இதைத் தவிர
    வேறு நிலையான அழகு எதுவுமில்லை.


385. அறிஞர்கள் அறிவைத் தேடுகிறார்கள்; முட்டாள்கள்
    அதைப் பெற்றுவிட்டதாக நினைக்கிறார்கள்.

                                         ---ஜேம்ஸ் ஆலன்



386. அன்பு, பணிவு, நேர்மை, தாழ்மை, நன்றி, நம்பிக்கை
    உடையவராக இருந்து இறைவனை நம்புங்கள்;
    உங்களை யாராலும் அசைக்கவே முடியாது.

                                 --- விவேகானந்தர்


387. துன்பமும் ஏழ்மையும் போதிப்பதுபோல் வேறு ஒன்றும்
    போதிக்க முடியாது.



388. சிக்கனமாக வாழும் ஏழை சீக்கிரம் செல்வந்தனாவான்.

                                      --- செனேகா


389. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும்
    வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன்
    இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.

                                   --- விவேகானந்தர்




390. வாழ்நாளைப் பெருக்க உணவைச் சுருக்கு.


391. அகங்காரமில்லாமல் பழகுவரிடம் இந்த அகில உலகமும்
    திரண்டு வந்து ஆதரவாகக் கூடிவிடும்.

                                     --- எமர்சன்


392. காலம்! காலத்திற்கு உள்ள மகிமையை யாராலும்
    விளக்கிப் புரிய வைக்க முடியாது. நம்முடைய
    எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வே காலம்தான்.
    கால ஓட்டத்தால் எல்லாக் குறைகளுமே கரைவது
    மட்டுமல்ல, நிறைவாகவும் மாறுகின்றன.

393. மனநிறைவு என்பது இயற்கையாகவே நம்மிடம்
    உள்ள செல்வம்; ஆடம்பரம் என்பது நாமே
   தேடிக் கொள்ளும் வறுமை.


394. எதையும் செய்யாதிருப்பதைவிட ஏதாவது ஒன்றை
    நாள்தோறும் செய்துகொண்டிருப்பது மேல்.

                                      --- வில்லியம் ஜேம்ஸ்


395. மனிதன் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதைவிட அதை
    வாழ்ந்து பார்ப்பதே சிறந்த முயற்சி.
                                 --- சாந்தான்யா

395. நீங்கள் சிரிக்கும்போது உங்களுடன் சேர பலர் வருவார்கள்.
    ஆனால் நீங்கள் அழும்போது யாரும் வரமாட்டார்கள்.

                                        --- கார்லைல்



396. நாம் விரும்பினால் சோகம் மகிழ்ச்சியாக மாறும்.

                                      --- அரவிந்தர்

397. நண்பர்கள் இல்லாவிட்டால் பெரும்பாலோர் துன்பத்தின்
    தூணாகவே நின்றுகொண்டு இருப்பார்கள்.

                                 --- ஜெம்மிடெய்லர்


398. மின்மினிப் பூச்சி பறக்கும் போதுதான் சுடர்விடுகிறது.
    மனிதனும் செயல்படும்போதுதான் உயர்வடைகிறான்.


399. அரைகுறை தன்னம்பிக்கை கூடாது;
    எதிலும் முழுமை வேண்டும்.

                             --- வால்டேர்



400. புது நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு புதியவர்களைச்
    சந்தியுங்கள்.




No comments:

Post a Comment