Translate

Friday, March 7, 2014

திருக்குறள்


திருக்குறள் 
 (see below in English)
 2. பொருட்பால்
  41. கல்லாமை

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.                 401

அறிவு பூர்த்தியாவதற்குக் காரணமான
புத்தகங்களைப் படிக்காமல் கற்றறிந்தவரிடம்
பேசுதல், சூதாட்ட அரங்கம் இல்லாமல்
பாய்ச்சிக் காய்களை வீணே உருட்டிக்
கொண்டிருபதற்கு இணையாகும்.


kural-401

Like those at draughts would play without the chequered square,
Men void of ample lore would counsels of the learned share.

To speak in assembly  ( of the learned) withoutfullness of
 knowledge, is like playing at chess (on a board) without
squares.

திகல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.                        402

படித்தவர் நிறைந்த சபையில் படிக்காதவன் ஒன்றைச்
சொல்ல விரும்புவது முலை இரண்டும் இல்லாதவள்
பெண்ணாக இருக்க ஆசைப்பட்டதற்கு ஒப்பானது.

kural-402

Like those who doat on hoyden's undeveloped charms are they,
Of learning void , who egarly their power of words display.

The desire of the unlearned to speak ( in an assembly),
is like a women without breasts  desiring ( the enjoyment)
women-hood.


கல்லா தவரும் நனினல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.                       403

படித்தவர் முன்னால் படிக்காதவர் மௌனமாக
இருந்தாரானால் அவரது அறிவின்மை வெளிப்படாது.


kural-403

The blockheads, too,may men of worth appear,
If they can keep from speaking where the learned hear!

The unlearned also are very excellent men, if they know
how to keep silence before the learned.


கல்லாதான் ஒட்பம் கழிய நன் றாயினும்
கொள்ளார் அறிவுடையார்.                      404

படிக்காதவனுடைய அறிவு எத்தனை சிறந்ததாக
இருந்தாலும் அறிவுடையோர் அதை ஏற்றுக்
கொள்ளமாட்டார்.
kural-404

From blockheads'lips , when words of wisdom glibly flow,
The wise receive them not, though good they seem to show.

Although the natural knoweledge of an unlearned man
may be very good, the wise will not accept for true knowledge.



கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.                          405

படிக்காதவன் படித்தவருடன் சொற்போர்
நடத்தினால் அவனது சுய கௌரவமும்,
தன்னம்பிக்கையும் அழியும்.

kural-405
As worthless shows the worth of man unlearned,
When council meets, by words he speakes discerned.

The self-conceit of  an unlearned man will fade away,
as soon as he speakes in an assembly (of  the learned).

உளரென்னும் மாத்திரையர் அல்லார் பயவாக்
களரனையர் கல்லா தவர்.                     406

ஒன்றும் விளையாத களர் நிலமும் நிலம்தான்
படிக்காமல் உயிரோடு நடமாடும் மனிதரும்
களர்நிலமும் ஒன்றுதான்.

kural-406

'They are': so much is true of men untaught;
But,like a barren field , they yield us nought!

The unlearned are like worthless baren land:
all that can be said of them is, that they exist.



நுண்மான் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மான் புனைபாவை யற்று.                    407

எதையும் நுணுக்கமாக ஆராயும்  அறிவற்றவனுடைய
அழகு மண்ணால் செய்யப்பட்ட பதுமையைப் போன்றது.
(மண் பொம்மை  கீழே விழுந்தால் உடைந்து விடும்)


kural-407

who lack the power of subtle,large and penetrating sense,
Like puppet,decked with ornaments of  clay,their beauty's vain pretence.

The  beauty and goodness of one who is destitute of knowledge
by the study of great and exquisite works,is like (the beauty and
goodness) of a  painted earthen doll.

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.                        408

படிக்காதவரிடம் உள்ள செல்வம் படித்தவரிடம்
உள்ள தரித்திரத்தை விட மிகுந்த துன்பத்தைத்
தரும்.

kural-408

To men  unlearned,  from fortune's favour greater-evil springs
Than poverty  to men of  goodly wisdom brings.

Wealth,gained by the unlearned,will give more sorrow than
the poverty which may come upon the learned.

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.                              409

படிக்காதவர் உயர்ந்த குலத்தில் பிறந்திருந்தாலும்
தாழ்ந்தகுலத்தில் பிறந்து நன்கு படித்தவருக்கு
ஈடாகமாட்டார்.


kural-409

Lower are men unlearned, though noble be their race,
Than low-born men adorned with learning 's grace.

The unlearned,though noble born in a high caste,
are not equal in dignity to the learned; though they
may have been in a low caste.


விலொங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனையவர்.                          410

அறிவு பிரகாசிப்பதற்குக் காரணமான நூல்களைக்
கற்றவரோடு கல்லாதவரை ஒப்பிடும் போது
மக்களுக்கும், மிருகங்களுக்கும் உள்ள வேற்றுமை
காணப்படுகிறது.

kural-410

Learning's irradiating grace who gain,
others excel, as men the bestial train.

As beasts by the side of men, so are other
Men by the side of those who are learned
in celebrated works;


செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.                             411

செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செவியால்
அறியப்படும் கேள்வி ஞானம் எல்லாச் செல்வத்திலும்
முதன்மையானது.



kural-411

Wealth of wealth is wealth acquired be ear attent;
Wealth  mid all wealth supremely excellent.

Wealth (gained) by wealth of wealth;  that wealth
is the chief of all wealth.


செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்.                        412

காதுக்களுக்கு கேட்டலாகிய உணவு கொடுக்காத
போது கேட்பதற்குச் சக்தி கிடைப்பதற்காக
வயிற்றுக்கு சிறிது உணவு கொடுக்கலாம்.

kural-412

When 'tis no longer time the listening ear to feed
With trifling dole of food supply the body's need.

When there is no food for the ear,give a little also
to the stomach.
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.                    413

செவிக்கு உணவான கேள்வி ஞானத்தைப்
பெறுபவர் பூவுலகில் வாழ்ந்தாலும் யாக ஹவிஸை
உண்ணும் தேவர்களுக்கு சமமானவர்.

kural-413

Who feed their ear with learned teachings rare,
Are like the happy gods oblations rich  who share.

Those who in this world enjoy instruction which is
the food of the ear,are  equal to the Gods, who
Enjoy the food of the sacrifices.


கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்க்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.                    414

நல்ல நூல்களைப் படிக்க முடியாவிட்டாலும்
கற்றறிந்தவரிடம் கேட்டறிதல் நன்மை தரும்.
அது சங்கடங்கள் நேரும் காலத்தில் ஊன்றுகோல்
போல் துணையாயிருக்கும்.

kural-414

Though learning none hath he, yet let him hear alway:
In weakness this shall prove a staff and stay.

Although a  man be without learning,let him listen
( to the teaching of  the  learned); that will be to him
a staff in adversity.


இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.                  415

ஒழுக்கமுடைய சான்றோரின் அறிவுரை
வழுக்கல் உடைய சேற்று  நிலத்தில் ஊன்று
கோல் போல் வாழ்க்கையில் உதவும்.

kural-415

Like staff in hand of him in slippery ground who strays
Are words from mouth of those who walk in righteous  ways.

The words of the good are like a staff in a slippery place.


எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.                                 416

எவ்வளவு சிறியதானாலும் நல்ல விஷயங்களைக்
கேட்பது, கேட்டு மனத்தில் பதித்துக் கொண்ட அளவு
நன்மையைக் கொடுக்கும்.

kural-416

Let each man good things learn, for e'en as he
Shall learn, he gains increase of perfect dignity.

Let a man listen, never so little, to good (instruction),
even that will bring him great dignity.




பிழைத்துணர்ந்தும் பேதமை சொல்லார் இழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.                               417

நுட்பமாக அறிந்து நிறைந்த கேள்வி ஞானம் உடையவர்
ஒன்றைத் தவறாகப் புரிந்து கொண்டாலும் தன் அறியாமை
வெளிப்பட அதை வெளியே சொல்லமாட்டார்.

kural-417

Not e'en through inadvertence speak they foolish  word,
With clear discerning mind who've learning's ample lessons heard.

Not even when they have imperfectly understood ( a matter),
will those men speak foolishly,who have profoundly studied
and diligently listened(to instruction).

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.                        418

நல்ல விஷயங்களைக் கேளாத செவிகள்
கேட்கும் தன்மையைப் பெற்றிருந்தும், செவிட்டுத்
தன்மை உடையதாகவே கருதப்படும்.
kural-418

Where teaching  hath not oped the learner's ear,
The man may listen, but he scarce can hear.

The ear which has not been bored by instruction,
although it hears, is  deaf.



நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.                         419

நுட்பமானவற்றைக் கேட்டுத் தெளிந்தவர்
அல்லாது மற்றவரின் வாய் பணிவான,
பண்புள்ள பேச்சுக்களைப் பேசுவது அரிதாகும்.

kural-419

'Tis  hard for mouth to  utter gentle, modest word,
When ears discourse of lore refined have never heard.

It is a rare thing to find modesty,a revered mouth-with
those who have not received choice instruction.

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.                            420

காதுகளால் சிறந்த செய்திகளைக் கேட்டு உணராமல்
நாவின் சுவை மட்டுமே உணர்ந்த மக்கள் இறந்தால்
என்ன?  உயிருடன் வாழ்ந்தால் என்ன?
 
kural-420

His mouth can taste, but ear no taste of joy can give!
What matter if he die,or prosperous live?

What does it matter whether those men live or die,
who can judge of tastes by the mouth, and not by
the ear?


திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
                                              43. அறிவுடைமை

அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.                     421

அழிவு வராமல் காக்கும் கருவி அறிவு.
அறிவி பகைவரால் அழிக்க முடியாத கோட்டையுமாகும்.


kural-421

True wisdom wards off woes, A circling fortress high;
Its inner strength man's eager foes unshaken will defy.

Wisdom is a weapon to ward of destruction;
It is an inner fortress which enemies cannot destroy.



சென்ற  இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.                     422

மனம் ஆசைப்படும் விதமெல்லாம் போகவிடாமல்
தீமையிலிருந்து காத்து நன்மையானதில் ஈடுபடுத்துவது
அறிவாகும்.
 
kural-422

Wisdom restrains, nor suffers mind to wander where it would
From every evil calls it back, and guids in way of good.

Not to permit the mind to go where it lists, to keep it from
evil and to employ it in good,this is wisdom.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.                       423

எந்த விஷயத்தையும் எவரெவர் வாய் மூலமாகக்
கேட்டாலும் அந்த விஷயத்தின் நிஜத்தை அறிவது
அறிவு.



kural-423

Though things diverse  from divers sages'lips we learn,
'Tis wisdom's part in each the true thing  to discern.

To discern the truth in every thing, by whomsoever
spoken,is wisdom.

எண்பொருள வாகச்செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.                              424

கேட்பவர் மனத்தில் சுலபமாய்ப் புரியும்படிச் சொல்லி
மற்றவர் பேச்சில் உள்ள நுணுக்கமான விஷயங்களைப்
புரிந்து கொள்வதே அறிவுடைமை.

kural-424

Wisdom hath use of lucid speech, wods that acceptance win,
And subtle sense  of other men's discourse takes in.

To speak so as that the meaning may easily enter the mind
of the hearer, and to discern the subtlest thought which may
lie hidden in the words of others,this is wisdom.


உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.                       425

உலகத்தில் உயர்ந்தவரை நட்பாக்கிக் கொள்வது
சிறந்த அறிவு. முதலில் மகிழ்ந்து, பின் சினம் கொண்டு
நடக்காதது அறிவுடைமையாகும்.

kural-425

Wisdom emraces frank the world, to no caprice exposed;
Unlike the lotus flower, now opened wide, now petals strictly closed.

To secure the friendship  of the great is true wisdom; it is (also)
wisdom to keep(that friendship unchanged,and ) not  opening
and closing (like the lotus flower).



எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு.                            426

உலகம் எப்படி நடை பெறுகின்றதோ அதற்கு
ஏற்றமுறையில் நடப்பது சிறந்த அறிவு.

kural-426

As dwells the world , so with the world to dwell
In harmony-this is to wisely live and well.

To live as the  world lives, is wisdom.

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.                                  427

அறிவுடையோர் எதிர்காலத்தில் நடக்கப் போவதை
முன்பே யூகித்துக் கொள்வர். அறிவற்றவரால் அப்படி
அறிய முடியாது.

kural-427

The wise discern, the foolish fail to see,
And minds prepare for things about to be.

The wise are those who know beforehand what will happen;
those who do not know this are the unwise.


அஞ்சுவ தஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.                    428

பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமலிருப்பது
பேதமை. அறிவுடையோர் பயப்பட வேண்டியதற்கு
நிச்சயம் பயப்படுவார்.

kural-428

Folly meets fearful ills with fearless heart;
To fear where cause of fear exists is wisdom's part.

Not to fear what ought to feared, is folly; it is the
work of the wise to fear what should be feared.


எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.                               429

வரப் போவதை யூகித்துக் காத்துக் கொள்ளும்
அறிவுடையோருக்கு அவர் நடுங்கும்படி வரும்
துன்பம் ஒன்றும் இல்லை.


kural-429

The wise with watchful soul who coming ills foresee;
From coming evil's dreaded shock are free.

No terrifying calamity will happen to the wise,
Who (foresee) and guard against coming evils.




அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.                       430

அறிவுடையார் செல்வம் இல்லாதவரானாலும்
எல்லாம் உடையவராகவே சான்றோர் கருதுவர்.
அறிவற்றவர் செல்வந்தராயினும் ஒன்றும்
இல்லாதவராகவே நினைப்பர்.

kural-430

The  wise is rich,with ev'ry blessing blest;
The fool is poor,of everything possessed.

Those who possess wisdom, possess every thing;
Those who have not  wisdom, whatever they may
possess, have nothing.

திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
                                              44. குற்றங்கடிதல்

செருக்குஞ்சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.                 431

அகம்பாவமும், கோபமும், அற்பகுணமும்
இல்லாதவருடைய வாழ்வில் உண்டாகும்
முன்னேற்றம் பெருமை உடையது.


kural-431

Who arrogance, and wrath, and littleness of low desire restrain,
To sure increase of lofty dignity attain.

Truely great is the excellence of those(kings) who are free
from pride,anger,and lust.



இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.                        432

கருமித்தனமும்,புகழற்ற மானமும், தகுதியற்ற
மகிழ்ச்சியும் தலைமைப் பதவியிலுள்ளவனுக்குக்
குற்றங்களாகும்.


kural-432

A niggard hand,o'erweening self-regsrd, and mirth
Unseemingly, bring disgrace to men of kingly birth.

Avarice, undignified pride, and  low pleasures are faults
in a king.


தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழி நாணு வார்.                                    433

பழிக்கு அஞ்சுகின்ற சான்றோர், தினையளவாகிய
சிறு குற்றம் செய்தாலும் அதைப் பனையளவாக
நினைத்து மனம் வருந்துவார்.

kural-433

Though small as millet-seed the fault men deem;
As palm tree vast to those who fear disgrace 'twill seem.

Those who fear guilt, if they commit a fault small
as a Millet-seed, will consider it to be as large as a
Palmyra tree.



குற்றமே காக்க  பொருளாகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை.                         434

குற்றம் அழிவைக் கொடுக்கும் பகையாகும்.
அதனால் குற்றம் செய்யாமல் இருப்பதை
லட்சியமாகக் கொண்டு கட்டுப் பாட்டோடு
வாழ வேண்டும்.


kural-434

Freedom from faults is  wealth; watch heedfully
'Gainst these, for fault is fatal enmity.

Guard against faults as a matter (of great consequence;for)
faults are deadly enemy.


வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.                       435

குற்றம் வருவதற்கு முன் வராமல் காத்துக்
கொள்ளாதவனுடைய வாழ்க்கை நெருப்பின் முன்
இருக்கும் வைக்கோல் போர் போல் அழிந்து விடும்.

kural-435

His joy who guards not 'gainst the coming evil day,
Like straw before the fire shall swift consume away.

The prosperity of him who does not timely guard
against faults, will perish like straw  before fire.

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.                    436

முதலில் தன்னைக் குற்றமில்லாதவனாகச் செய்து
கொண்டு, பிறகு மற்றவர் குற்றங்களை ஆராயும்
நற்குணம்  கொண்ட தலைவனிடம் என்ன குற்றம் வரும்.

kural-436

Faultless the king who first his own faults cures,and then
permits himself to scan faults of other men.

What fault will remain in the king who has put away
His own evils, and looks after the evils of others.


செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.                       437

செய்யத்தக்க நல்லவற்றைச் செய்யாமல் பொருளைச்
சேர்த்து வைத்திருப்பவனின் செல்வம் பெருமையின்றி
அழியும்.

kural-437

Who leaves undone what should be done, with niggard mind,
His wealth perish, leaving not a wrack behind.

The wealth of the avaricious man, who does not expend it
for the purposes for which he ought to expend it will waste
away and not continue.

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.                     438

பொருளை செலவழிக்க மனமின்றி கஞ்சத்தனமாக
நடந்து கொள்வது எந்தப் பிரிவிலும் சேராத
தனிக்குற்றமாகும்.

kural-438

The greed of soul that avarice men call,
When faults are summed,is worst of all.

Griping avarice is not to be reconed as
one among other faults;(it stands  alone-
greater than all).



வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.                              439

சுயகர்வம் கொண்டு தன்னைதானே புகழ்ந்து
பேசக் கூடாது. நன்மை தராத செயல்களை
விரும்பவும் கூடாது.

kural-439

Never indulge in self-complaisant  mood,
Nor deed desire that yields no gain of good.

Let no (one) praise himself, at any time let
him not desire to do useless things.


காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.                                440

தன் விருப்பம் மற்றவர்களுக்குத் தெரியாதபடி
விரும்பியதை அனுபவிக்க வல்லவனானால்
அவனை வஞ்சிக்க நினைக்கும் பகைவரின்
சூழ்ச்சிகள் வியர்த்தமாகும்.

kural-440

If, to your foes unknown, you cherish what you love,
Counsels of men who wish you harm will harmless prove.

If ( a king) enjoys, privately the things which he desires,
the designs of his enemies will  be useless.


திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
                                          45. பெரியாரைத் துணைக்கோடல்

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.                 441

தரும நெறிகளை அறிந்தவராய், தன்னை
விடமுதிர்ந்த அறிவுடையவராய் உள்ளவரின்
தோழமையை அடையும் வகையறிந்து அடைய
வேண்டும்.  

kural-441

As friends the men who virtue know, and riper wisdom share,
Their worth weighed  well, the king  should choose with  care.

Let  (a king) ponder well its value, and secure the  friendship
of men of virtue and  of mature knowledge.

உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.                   442

வந்த துன்பம் போக்கி இனி துன்பம் வராமல்
முன்னதாகவே காத்துக் கொள்ளும் தன்மை
உடையவரைப் போற்றி அவர் நட்பைப் பெற
வேண்டும்.

kural-442

Cherish the all-accomplished men as friends,
Whose skill the present ill removes, from coming ill defends.

Let ( a king) procure and kindly care for men who can
overcome difficulties when they occur,and guard
against them before they happen.


அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.                          443

சான்றோரைப் போற்றித் தனக்குச் சுற்றமாகக்
கொள்ளுதல் அரியவை எல்லாவற்றிலும்
அரியதாகும்.

kual-443
To cherish men of mighty soul, and make them all  their own,
Of kingly treasures rare,as rarest gift is known.

To cherish great men  and  make them his own,is the
Most difficult of all difficult things.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.                   444

தம்மை விட அறிவில் பெரியவர் தனக்கு
வேண்டியவராக அமைவது எல்லா பலத்திலும்
முதன்மையானது.

kural-444

To live with men of greatness that their own excels,
As cherished friends, is greatest power that with a monarch dwells.

So to act as to make those men, his own,
Who are greater than himself is of all
Powers the highest.


சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.                    445

நல்ல வழிகளை ஆராய்ந்து கூறுவோரையே
உலகம் கண்ணாகக் கொண்டு நடப்பதால்
மன்னனும் அத்தகையோரையே ஆராய்ந்து
துணையாகக் கொள்ளவேண்டும்.

kural-445

The king, since counsellors are monarch's eyes,
Should counsellors select with counsel wise.

As a king must use  his ministers as eyes
(in managing his kingdom), let him well
examine their character and qualifications
before he engages them.


தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.                         446

சான்றோர் கூட்டத்தில் ஒருவனாய், தானும்
அறிவுடன் நடக்க வல்லவனுக்கு அவன்
பகைவர்களால் எந்த தீங்கும் செய்ய முடியாது.

kural-446

The king,who knows to live with worthy men allied,
Has nought to fear any foeman's pride.

There will be nothing left for enemies to do,
against him who has the power of acting
(so as to secure) the fellowship of worthy men.

இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.                  447

கடிந்து புத்திமதி கூறும் பெரியாரின் துணை
கொண்டு ஆளும் தலைவனைக் கெடுக்கும்
ஆற்றல் எவருக்குண்டு?
kural-447

What power can work his fall, who faithful ministers
Employs, that  thunder out reproaches when he errs.

Who are great enough to destroy him who has servants
that have power to rebuke him?


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.                      448

கடிந்து அறிவுரை கூறும் சான்றோரின் துணை
இல்லாத அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர்
இல்லாத போதும் கெடுவான்.

kural-448

The king with none to censure him, bereft of safeguards all,
Though none his ruin work, shall surely ruined fall.

The king,who is without the guard of men who  can rebuke
Him, will perish, eventhough there be no one to destroy him.



முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாஞ்
சார்பிலார்க்கு இல்லை நிலை.                      449

முதல் சேர்க்காத மனிதருக்கு அதனால் வரும்
வருமானம் கிடையாது. அது போல தன்னைத்
தாங்கும் துணையில்லாதவர்களுக்கு நிலையான
பாக்கியம் கிடையாது.


kural-449

Who owns no principal,can have no gain of usuary;
Who lacks support of friends, knows no stability.

There can be no gain to those who have no capital;
And in like manner there can be no permanence to
those who are without the support of adherents.


பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.                       450

நல்லவரான பெரியவர்களின் நட்பை விட்டு
விலகி இருத்தல் பலருடைய பகையைக்
கொள்வதை விடப் பத்து மடங்கு தீமையானது.


kural-450

Than hate of many foes incurred, works greater woe
Ten-fold, of worthy men the friendship  to  forego.

It is tenfold more injurious to abandon the friendship
of the good, than to incur the hatred of the many.


No comments:

Post a Comment