திருக்குறள்
(see below in English)
2. பொருட்பால்
64. அமைச்சு
MINISTRY
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு. 631
செயலுக்குரிய கருவியும், தகுந்த காலமும் செயலை
முடிக்கும் வகையும், செய்யப்படும் அரிய செயலும்
சிறப்படையச் செய்பவரே அமைச்சர்.
Kural-631
He is excellent minister who can administer
Knowing the means, the time, the acts and
their esteem.
He who can know the administration of the
Instrumental causes, the suitable time for the
use of them, the mode of doing them, the
importance of doing the acts and the gain thereby
is only fit for the post of Minister.
வண்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு. 632
அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறமையும், கற்றறிந்த
அறிவும், விடாமுயற்சியும் ஆகிய இவ்வைந்தும் செமையாகக்
கொண்டவர் சிறந்த அமைச்சர்.
Kural-632
The minister is, he who has the five character
Learned knowledge,Nobility, Ability, Bravery and Power.
The person who has the following five attributes,viz.
Capability in doing things free from sloth;
Exclusive for learning in all respects like rules and
regulations including ethical science, politics, economics
and know what to drop; Should be from Noble family and
with full of ruling power or capability is the seeming one
for the post of a minister.
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு. 633
எதிரியின் துணை பலத்தைப் பிரிப்பதும்,
தன்னுடன் இருப்பவரை பேணிக் காப்பதும்,
பிரிந்தவர்களைத் தக்கது சொல்லி இணைப்பதும்
செய்ய வல்லவரே சிறந்த அமைச்சர்.
Kural-633
That who is competent of division, nourishment
And unine the separate' men,is minister to select.
One who is fit for dividing the enemies from one another
Fostering of friends by benefaction and yielding them
in all respects and also reunite those who once gone
away from the king by some ill-will or for any other
reason by giving them money or reconciling with
treaty is only to be selected as a Minister.
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு. 634
எத்தகைய செயலையும் ஆராய்வதிலும், அதற்குரிய
வழிகளை ஆராய்ந்து செய்வதும், நல்லதைச் சொல்ல
அஞ்சாமல் துணிச்சலாக இருப்பதும் ஓர் அமைச்சனின்
இலக்கணம்.
kural-634
Selection and performance after selection and
certainly of utterance is the minister, suited.
To deliberate upon the acts in many ways as
possible one among them and to know about
the strength of acts to be executed after so
Selected and to pronounce steadily in dividing or
retaining somebody ,deciding that is a suitable
action is only the minister suitable for the post.
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை. 635
தரும நீதிகளை உணர்ந்து, புத்திக்கூர்மையோடு
பேசக் கூடியவராய், எப்போதும் காரியமாற்றும்
ஆற்றல் உள்ளவராய் இருப்பவர் தக்க துணையாயிருப்பர்.
Kural-635
He will be the helper who knew full of virtue,
A speaker full of lore'nd aware ever facts, true.
The person who is aware of the righteousness
performed by the king speaking suitably with
his good knowledge and always knowing the
truth of strength will be helpful in ministry.
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாஉள முன்நிற் பவை. 636
புத்திசாலித்தனத்தோடு படிப்பறிவும் சேர்ந்து கொண்டால்
எதிரிகள் மிக நுட்பமாக சூழ்ச்சி செய்தாலும் அவர்முன்
எடுபடாமல் அழிந்து விடும்.
Kural-636
What stands as subtlest wisdom before one
Who is an erudite with knowledge of learning.
Before a person who is a well learned wisemen
with good deal of knowledge got by free learning
what is that which stands as minute wit?
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல். 637
நூலறிவால் செயலைச் செய்யும் முறை அறிந்த
போதிலும் உலகத்தின் இயல்புக்குப் பொருந்தும்படி
செய்யவேண்டும்.
Kural-637
Though knew fairly well of the mode of doings
Should perform them, still knowing the world of claims.
Even then one is aware of the ways and means of
Performance of acts due to his exclusive learning
he should attempt to perform the doings according
to the nature of the world.
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன். 638
அறிவுறுத்துவோரின் அறிவை அலட்சியம் செய்து
தானும் அறியாதவனாய் தலைவன் இருந்தாலும்
உறுதியான நல்லவற்றைக் கூறுவது அமைச்சன்
கடமை.
Kural-638
While despises to know 'nd doesn't himself know
It is he, the neighbour to admonish the ruler.
When a person who is well-versed to advise the
king who does not care but despise and he himself
does not understand at that time, the minister
Should not keep quiet but should advise him
and lead him to a right way.
பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும். 639
எழுபது கோடிப் பகைவர்களை விட அருகில் இருந்து
சதிசெய்யும் அமைச்சன் கொடியவன்.
Kural-639
To keep, it is better seventy million foes near
Than to keep a minister who seeks defects for ever.
It is far better to a king to keep seventy millions of
foes by himself than keeping by him such a bad
Minister who finds faults often with the king.
முறைப்பட சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர். 640
செயல்களைச் செய்து முடிக்கும் திறமை இல்லாத
அமைச்சன், மனத்துள் முறைப்படித் திட்டம் வகுத்துக்
கொண்டிருந்தாலும் செய்யும் போது நிறையக் குறைகள்
இருக்கும்.
Kural-640
Those who are not qualified to finish well
Though well planned first will do unsuccessful.
The persons who do not possess suitalble qualifications
To finish a work up to the end fully which they have
Begun even then they planned carefully the scheme
at the beginning, they will not carry out successfully
but fail.
திருக்குறள்
(see below in English)
2. பொருட்பால்
65. சொல்வன்மை
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று. 641
நாவன்மை என்பது ஒரு பெரிய செல்வமாகும். அந்நா
நலம் சாதரண நலங்களுள் ஒன்றாக அடங்காது.
Kural-641
To keep good tongue which is considered good
Is not found among anything else are good.
For the ministers, as told by the elders, the
Indispensable character is to keep good language
which is good are rare to find out as excellent
among anything which seem to be good.
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு. 642
முன்னேற்றமும், அழிவும் பேசும் வார்த்தைகளால்
உண்டாவதால் பேச்சில் குற்றம் வராமல் யோசித்துப்
பேச வேண்டும்.
Kural-642
Gain and evil occur only by that; for that
Speeches which are to utter should be free from fault.
The profit and the loss to their king or his ministry,
by his own talks, for that; therefore,the minister
must be aware of the fauty speaking while keeping
with their king.
கேட்பார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல். 643
கேட்பவரை ஈர்க்கும் தன்மை உடையதாகவும்,
கேட்காதவரும் கேட்க விரும்பும்படியாகவும் கூறுவதே
சொல்வன்மையாகும்.
Kural-643
'Tis the speech eloquent, fit wishing to bind audience
and also the opponent who should wish for audience.
It is the fluent speech of the minister only wishing
to get his friends and men to hear and over power
them and his foes too be desires to hear the same.
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல். 644
நாம் சொல்லும் வார்த்தையால் விளையும் நன்மை
தீமைகளை உணர்ந்து பேசவேண்டும். அதைப் போன்ற
தருமமும், செல்வமும் வேறில்லை.
Kural-644
Knowing its strength say the sayings, after
The righteousness and wealth aren't than that,better.
The speeches spoken by a minister should correspond
with his own strength and that of the audience; it
surpasses even the virtue as well as opulence.
சொல்லுக சொல்லைப் பிரிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. 645
நாம் பேசும் பேச்சை மற்றவர் பேச்சு ஜெயிக்க முடியாதபடி
பேசுவதே நாவன்மையாகும்.
Kural-645
Know that other saying which cannot outwit
'Nd then say that saying as you deem fit.
First understand that no other saying surpasses
as that of yours and after that proceed to express
what you wanted whatsoever will seeming for the
the time being.
வேட்பதாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள். 646
தான் பிறர் விரும்பும்படிச் சொல்லி, பிறர் பேசும்போது
அச் சொல்லின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வது
குற்றமற்ற குணங்கள் கொண்டவரின் இயல்பாகும்.
Kural-646
To express being desirous and renting of the other's
Discourse, is the quality of great and mobile gentry.
While expressing to others, it should be desirous
for the audience to hear such speech on and on
and while hearing from others, their speech
sholud be rated and understand the gain therin
it should be the attribuite of noble and learned
Gentleman.
சொல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது. 647
எண்ணியதை வார்த்தைகளில் அழகாக வெளிப்படுத்தத்
தெரிய வேண்டும். பேசுகையில் தயக்கம் வரக்கூடாது.
அச்சமின்றித் தெளிவாக தைரியமாகப் பேசவேண்டும்.
அவரை எந்தப் பகைவராலும் ஜெயிக்க முடியாது.
Kural-647
The ablest as a speaker languidless and fearless
Man's impossible to conquer by contrast and oppose.
A person who is ablest while explaining a matter
to others so that they aspire and take his speech
feels no tiredness even though such speeches are
ample and feels no timidity in the presence of
audience of a council ; it will not be an easy thing
to subdue him by contrary and opposing.
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின். 648
கருத்துக்களைக் கோர்வைப்படுத்தி இனிமையாக
சொல்லவல்லவரின் ஏவலை உலகத்திலுள்ளவர்
மதித்துக் கேட்பர்.
kural-648
The world hurrieldly take his words to carry out
If one is able to speak in series about work,sweet.
If a person is able to deliver his speeches sweetly
in series about any matter he intended, the people
in the world hastily take his words and carry out them.
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர். 649
குற்றமற்ற சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர்
பயனற்ற பல சொற்களைச் சொல்லி தன் தரத்தைத்
தாழ்த்திக் கொள்வர்.
Kural-649
They who aren't skilled like to say many;
But practised, expound the clear and pure to say.
They who are not in practise of speaking clearly
and purely and also unskilled in speaking wish to
speak talkatively.
இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார். 650
தான் படித்ததை, புரிந்து கொண்டதை மற்றவர்க்குத்
தெளிவாகச் சொல்லத் தெரியாதவர், கொத்துக் கொத்தாக
மலர்ந்தும் மணம் கமழாத பூக்களைப் போன்றவர்.
Kural-650
Those who aren't able to explain what they learned,
To sentless flowers bloomed in a bunch, are equal.
Even though they may be eridites, if they are not
able to explain lucidly the matter what they have
already learned; they are treated as equal to
Odourless flowers bloomed in a bunch.
திருக்குறள்
(see below in English)
2. பொருட்பால்
66. வினைத்தூய்மை
PURITY OF ACTION
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும். 651
ஒருவருக்கு வாழ்க்கைத் துணை அனுகூலமாயிருந்தால்
முன்னேற்றத்தைத் தரும். செய்யும்செயலில் விளையும்
நன்மை வேண்டியதெல்லாம் தரும்.
Kural-651
Goodness of a friend makes man affluent;
Goodness of one's deed yields all he want.
The kindness of a friend makes a person to
become a wealthy man; Nevertheless, the
goodness in one's actions entitles him to
get all he aspired.
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. 652
புகழையும், தருமத்தையும் தராத தூய்மையற்ற
செயல்களை எப்பொழுதும் செய்யக் கூடாது.
Kural-652
Should be abandoned forever, the action
Which does not add goodness along renown.
The deeds which do not give effect mundane,
to his master and the effect in the other world
including the fame should be given up by the minister
forever.
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர். 653
பிறகு நினைத்து வருந்தும் செயல்களைச்
செய்யக் கூடாது. ஒரு வேளை தவறிச் செய்து
விட்டால் மீண்டும் அத்தவறைச் செய்யாமலிருப்பது
நன்மை தரும்.
Kural-653
Those who need to prosper, should
Shun the deed the fame, which erode.
Those who think,'Let us improve should
give up such sinful deeds which erode
his renown.
இடுக்கட் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர். 654
உறுதியான தெளிந்த அறிவினை உடையவர்
இன்னல்களுக்கு உள்ளானாலும் ( அவற்றைப்
போக்க) இழிந்த செயல்கள் செய்யமாட்டார்கள்.
Kural-654
Though they suffer won't do ridiculus
The people who're wiser and also fearless.
Even though they undergo difficulties, the
undaunted men who are wiser will not
perform any derisive action as a requisite
against the persons who previously harmed
them.
எற்றென்றும் இரங்குவ செய்யற்க செய்வானேன்
மற்றன்ன செய்யாமை நன்று. 655
உறுதியான தெளிந்த அறிவினை உடையவர்
துன்பமுறும் காலத்திலும் இழிவான காரியங்களைச்
செய்யமாட்டார்கள்.
Kural-655
So as not to repent; as:'Ha! What we did?'
Should not be done,but act watch in future's gift.
Any evil action that is done so as to think of himself
as, ' of what sort of deed we did '; If ever erred and
did so, such actions should be watched so that they
may not be repeated in future, as it is the good thing.
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. 656
பெற்ற அன்னைக்குச் சாப்பாடு போட முடியாமல்
வருந்த நேரிட்டாலும் சான்றோர் பழிக்கும்
செயல்களைச் செய்யக்கூடாது.
Kural-656
Though sees mother , begot,suffering from hunger,
Shun to perform acts censurable by wiser.
Even though a person finds his mother who begot
him suffering from appetite, should give up to do
mean acts which are denounced by the learned
wisemen.
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. 657
பழியைச் செய்து வரும் செல்வத்தைவிட
சான்றோன் என்று பிறர் புகழும் நிலையிலுள்ள
வறுமை உயர்ந்தது.
Kural-657
The endurance of want is summit for noble
Than to accumulate riches by ways, ignoble.
Than thriving by hoarding the wealth by means of
mean and vile deeds and there by accepting the blame,
for the high bred men of nobility, it will be the apex
to forbear even the indigency due to their privation.
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும். 658
செய்யக் கூடாதவை என்று விலக்கப்பட்ட
செயல்களை விடாமல் செய்தால் அச்செயல்கள்
முடிவுற்ற போதிலும் துன்பத்தையே கொடுக்கும்.
Kural-658
If dares to do the deed by the wise, shunned,
Be distressed at its end though 'tis accomplished.
Only out of desire for money, if one undertakes to
Perform the deeds which are refrained by erudites,
ministers who do finish it with accquired interest
shall have to suffer distress for the sake of such deeds.
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. 659
மற்றவரை நோகடித்து அடைந்த செல்வம் அடைந்தவரை
அழ வைத்து விட்டுப் போய்விடும். நல்ல முறையில்
சேர்த்த செல்வம் ஊழ்வினையால் இழக்கப்பட்டாலும்
பின்னர் பயன்தரும்.
Kural-659
All gain from tears get away in tears;
Tho' lost, back it pays that gained by good ways.
All the affluence gained by a person afflicting others
with tears in their eyes vanish in their presence
afflicting them also in tears, but wealth accumulated
by means of good deeds, even though once caused loss,
will give effect afterwards.
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்
கலத்துள்நீர் பெதிரீஇ யற்று. 660
வஞ்சனையாய் பொருளைச் சேர்த்துப்
பாதுகாப்பது பச்சை மண் பாத்திரத்தில் நீரை
நிரப்பி பாதுகாப்பதைப் போன்றது.
Kural-660
To gain in sinful way and preserve it for gay,
Resembles aqua stay in a vase of raw clay.
A minister's trail to acquire wealth by means of
Bad ways preserve it and thereby wishing to add
gayety to his king is similar to fill in a vase with
water, which is made of wet clay and preserve it.
திருக்குறள்
(see below in English)
2. பொருட்பால்
67. வினைத்திட்பம்
STRENGTH OF DEEDS
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. 661
ஒரு செயலின் உறுதி அதை முன்னின்று நடத்துபவரின்
மன உறுதியைப் பொறுத்தே அமையும். மற்றதெல்லாம்
அதன் பின்தான்.
Kural-661
The strength of deed is one's firmness;
The rest are said to be some others.
The firmness of one's mind is said to be the
strength of his deed which is begun to carry out
successfully, but others , that not, are different.
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். 662
துன்பம் வருமுன் காத்துக் கொள்ளுதல், வந்தபின்
மனம் தளராமை ஆகிய இரண்டும்தான் செயலின்
உறுதிக்கு ஆதாரம் என்பது ஆராய்ந்து அறிந்தவர்களின்
முடிவு.
Kural-662
Shunning of obstructions and guarding them fore
Are the two doctrines of the men of lore.
The tenets of the gentlemen( the ministers) of
learning who researched the ethical sciences are
to stop the work which will be unsuccessful and to
carry out with courage, the work which is begun,
even if any obstruction caused casually, are the two
ways.
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும். 663
செய்யும் செயலின் வெற்றியை முடிவில் வெளிப்படுத்துவதே
வலிமை. நடுவில் வெளிப்படுமானால் நீங்காத துன்பத்தைத்
தரும்.
Kural-663
'Tis the strength of work to exhibit at its end
It gives woe to the work, to exhibit fore its end.
It will be the strength for a work to carry it
without knowing it to others till its finishing
and should then show it after its end; It gives
misery to the worker and his work if it is exhibited
in the middle before its completion.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். 664
எதையும் வாயால் சொல்லுவது எல்லோருக்கும்
சுலபம். சொன்னபடிச் செய்வதுதான் கடினம்.
Kural-664
Saying is for every one and all;
But it is rare to do as they tell.
It is very easy for anybody to say devices; but
it is hard to bring it into practice as per one's
sayings.
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும். 665
செயல்திறனால் பெருமை பெற்று உயர்ந்தவரின்
மன வலிமை நாட்டை ஆளும் தலைவருக்கும்
எட்டி மதிக்கப்படும்.
Kural-665
Men, who are valiant by their strengthy deeds
To the king, they get at, who the formers,lauds.
The brave men whose acts, strengthy; the rumour of
such important deeds reach the ruler of that territory
for which he eulogizes their valour and deeds.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின். 666
ஒரு செயலை மனத்தில் திட்டமிட்டவர் திட்டமிட்டபடி
முடிப்பதில் வல்லவராக இருந்தால் அவர் எண்ணியபடி
அதில் லாபம் பெறுவார்.
Kural-666
The thoughts as thought will be fullfilled;
If he who thought were strong by mind.
If a man who thought a thought were steady in his
Mind in carrying out his idea while its performance
whatever the good thought , he thought be, it will be
fruitful to him and yield good gain.
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து. 667
உருண்டு செல்லும் பிரமாண்டமான தேருக்கு அச்சாணி
போன்ற சிறிய பொருளும் முக்கியமானதே. அதனால்
உருவத்தைக் கண்டு எவரையும் இகழ்ச்சியாகப் பேசக்கூடாது.
Kural-667
For a rolling, great chariot,like pivot,
There are men,do not for their shape, mock at.
There are capable men whocan fulfil work with
firmness on their mind as important as linch pins
to great chariot which runs along; so, they should
not be treated slightly by their mere appearance.
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடித்து செயல். 668
மனம் கலங்காமல், மேற்கொண்ட செயலில்
தளர்ச்சியடையாமல், காலம் தாழ்த்தாமல்
செய்து முடிப்பதே நல்லது.
Kural-668
Do the chosen business without any puzzling;
Shunning indolence 'nd steadily without lengthening.
Carry out the work already as culled with no confusion;
giving over the idleness, standing steadfast and without
lengthening it.
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை. 669
துன்பத்தை நடுவில் தந்தாலும் இறுதியில்
மகிழ்ச்சியைத் தரும் செயலைத் துணிவுடன்
செய்து முடிக்க வேண்டும்.
Kural-669
With steadyness of mind accomplish the business
which gives fruit, good though pile of grief occurs.
Even obstructions occur in the meanwhile,
with firm Mind , do the work which will give good
fruit at the end.
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டும் உலகு. 670
செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவர் வேறு
விதமான துணிச்சல்களைப் பெற்றிருந்தாலும்
உலகத்தார் அவரை நேசித்துப் போற்றமாட்டார்கள்.
Kural-670
The world dislike those who aren't strong;
As a work but are those who are otherwise strong.
The people in the world will not like,ministers who are not
particular of their strength in the business ,except they who possess
strength inmany other ways.
திருக்குறள்
(see below in English)
2. பொருட்பால்
68. வினை செயல்வகை
THE MODE OF DOING
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. 671
ஆலோசித்து முடித்தபின் துணிவுடன் செயலில்
ஈடுபட வேண்டும். தைரியமின்றிக் காலம்
தாழ்த்துவது குற்றமாகும்.
Kural-671
The limits of the planning is determination;
Such determination, whiling away gives molestation.
The determination after taking a firm decision which is
thought to be indispensable will be the limit for the
planning, after deciding so , if it is lengthened for
some time, it is bad which gives affliction.
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. 672
காலம் தாழ்த்திச் செய்ய வேண்டியதைக் காலம்
தாழ்த்திச் செய்யவேண்டும். விரைந்து செய்ய
வேண்டியதை விரைந்து முடிக்க வேண்டும்.
Kural-672
Delay such a work which may be delayed;
Delay not the work which isn't to be delayed.
The business which may be done late may be put off;
But do not delay any work which is to worked and finished
forthwith.
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல். 673
இயலும் இடமெல்லாம் செயலைச் செய்தல் நன்மை
தரும். இயலவில்லையானால் பயன் தரும் வழியறிந்து
செயலைப் பூர்த்தி செய்யவேண்டும்.
Kural-673
The good is to work whenever it is suitable;
Consider and then work while it is unsuitable.
When one feels himself to be sronger, it is
profitable if he tries to get his business successful
by invation; While it is not suitable or possible,
then consider and proceed to work.
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத்தெறும். 674
செயல், பகை இரண்டையும் ஆராய்ந்தால் நெருப்பைப்
போல் இரண்டுமே வளரக்கூடியது. செயல்
தொடங்கியவுடன் பகை ஏற்படும். செயல் அழிந்தால்
பகையும் அழியும்.
Kural-674
What is left as remnant of the act or spite
Burns when thought about like the fire remnent.
Either the remainder of the deed which is not taken
in suitable time or the enimity which has to be
supressed in time, burns like the remaining fire which
is smouldering.
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். 675
தேவையான பொருள், ஏற்ற கருவி, தகுந்த காலம்,
மேற் கொண்ட தொழில், பொருத்தமான இடம் ஆகிய
ஐந்தையும் குழப்பமில்லாமல் தேர்ந்தெடுத்துச்
செய்ய வேண்டும்.
Kural-675
Think free from stupor and then proceed as per
Time, tool, place, store and actions, as they concur.
Think out well without ignorance, before begining
the work and then proceed on a work provided they
agree with the suitable time,place,tool, store and actions.
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
எடுபயனும் பார்த்துச் செயல். 676
செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய
தடங்கல்களும், செயல் முடிந்தபின் கிடைக்கும்
பயனையும் ஆராய்ந்து செயலில் இறங்கவேண்டும்.
Kural-676
Try to proceed on a work comparing end,
The obstruction therein 'nd gain after its end.
One must pursue to perform a work considering
well with its finishing,the obstacles caused in the
meanwhile, while they are under execusion and
the profit thereby gained, at its end.
செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல். 677
எந்தவொரு செயலையும் செய்யத் தொடங்குமுன்
அச்செயலை அறிந்தவர் கருத்தைக் கேட்டுச் செய்வதே
முறையான வழியாகும்.
Kural-677
The procedure of one before he proceeds, is;
To take the consultation of the skilled ones.
Before a work is about to be begun by a person,
What will have to adopt is to consult with skilled
persons in the work which is about to be performed
and adopt the method he advises to carry out.
வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானயாத்தற்று. 678
ஒரு யானையைக் கொண்டு மற்றொரு யானையைப்
பிடிப்பதைப் போன்று ஒரு செயலால் மற்றொரு
செயலைச் செய்வதே முறையான வழியாகும்.
Kural-678
Fulfill another task while performing a work;
As catching an elephant snared by another elephant.
One must try to undertake another work to fulfill
while a work is going on as same as elephant is
caught hold while snared by another elephant,
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக்கொளல். 679
நண்பர்களுக்கு நன்மை செய்வதைவிட பகைவரின்
பகைவரை நண்பராக்கிக் கொள்வதை விரைந்து
செய்ய வேண்டும்.
Kural-679
Be speedy in making friends with the friends
Of foes than doing good to the old friends.
One must be hasty in making friends with the
Comrades of his foes and making them as his
men than befriending to his old comrades.
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து. 680
பயப்பட வேண்டுமென்பதற்காக, தான் அஞ்சும் வலிமை
மிக்கவரிடம் பணிந்து வேண்டியதை சார்ந்துள்ளவர்
அறியாமல் பெறுவர்.
Kural-680
The weaker who reside in a mean place , terrified
By themselves , humbly gain the help of great, undaunted.
The weak minister who took refuge under a mean monarch;
Afraid by themselves of their own status, they hear and take
the advices of the great one who are fearless.
திருக்குறள்
(see below in English)
2. பொருட்பால்
69. தூது
THE EMBASSY
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. 681
அன்புள்ளவனாகவும், உயர்ந்த குலத்தில் பிறந்தவனாகவும்,
தலைவன் விரும்பும் பண்புகள் கொண்டவனாகவும் இருப்பது
தூதருக்குண்டான தகுதிகள்.
Kural-681
A noble man and friends' lover and also with behaviour
Commendable by king, are the qualities of ambassador.
The characteristics of ambassador are;
He should be born in a high family and also well bred,
Should be a lover to friends; He should be of good conduct
so that the king may admire him.
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று. 682
அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்லும் சொல்திறன்
ஆகியவை தூது செல்பவர்க்கு இருக்கவேண்டிய
முக்கியவையான மூன்று குணங்களாகும்.
Kural-682
The three essential nature of ambassador are;
Affection and erudition and speak with consideration.
The inevitable three charecters of an ambassador are:
to be affectionate to his own prince; to be proficient
in law and world experience and capable of explaining
things to opponents or others which will be beneficial
to him,his king and country,
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு. 683
வேல் பிடித்த அரசரிடம் சென்று, தன் மன்னனுக்கு
வெற்றி வரும்படிப் பேசும் தூதன் அரச நூல்
படித்தவர்களுள் சிறந்தவன் என்றே சொல்லலாம்.
Kural-683
The envoy who pleads with speeches, victorious
At the lanced prince, be savant of all savants.
The ambassador who speakes with the armed opponents
to prevail them with his mild speech completely, will be
proficient in law and argument among the erudites
and bold men.
அறிவுரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு. 684
புத்தி சாதுரியமும், வசீகரமான தோற்றமும்,
நல்ல படிப்பும் கொண்டவனே தூது செல்லும்
தொழிலுக்குப் பொருத்தமானவன்.
Kural-684
One in whom found densly three; the knowledge
The handsomeness and wit is fit for embassage.
A man in whom found the following three qualities
mostly viz.; the natural wisdom; comely appearence
and also sagacity with full research deserves for
appointment as an ambassador.
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது. 685
வந்த காரியத்துக்கு ஏற்றபடிப் பல விஷயங்களைத்
தொகுத்தும், பயனில்லாதவற்றை நீக்கியும்,
சந்தோஷப்படும்படிப் பேசுவதும் தன் தலைவனுக்கு
நன்மை தேடும் தூதனின் இலக்கணமாகும்.
Kural-685
He is said, embassy, To speak concisely
Removing words unnecessary and add good,kindly.
He is said one as ambassador who is capable of
explaining a matter torsely, shunning the unwanted
matters and converse with other men jocundly so that
they become desirous to hear him and also add profit
to his king and kingdom.
திருக்குறள்
(see below in English)
2. பொருட்பால்
69. தூது
THE EMBASSY
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது. 686
படிக்க வேண்டிய நூல்களைப் படித்து, பகைவர்
பார்வைக்கு பயப்படாதவனாய், கேட்பவர் மனத்தில்
பதியுமாறு சொல்லி, காலத்திற்குப் பொருத்தமானதை
அறிபவனே தூதன்.
Kural-686
'Tis only the embassay who is learned, fearless
concisely speaking and cognize as per time demands.
He is only said as a fitting ambassador who is well
learned bold enough, speak briefly but vividly
and know things according to the time.
திருக்குறள்
(see below in English)
2. பொருட்பால்
69. தூது
THE EMBASSY
கடனறிந்து காலம் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை. 687
தன் கடமையைத் தெளிவாக அறிந்து,
அதை நிறைவேற்ற ஏற்ற காலத்தை எதிர் நோக்கி,
இடத்தையும் அறிந்து ஆராய்ந்து சொல்பவனே
சிறந்த தூதன்.
Kural-687
It is embasy, the prime who explains knowing duties,
Thinking of the time and also knowing place.
It is related to everybody as an exalted ambassador
who is aware of his duties and explain, expecting
for a suitable time to relate about the business on
which he had gone and knowing about the place
too where he stood to speak.
திருக்குறள்
(see below in English)
2. பொருட்பால்
69. தூது
THE EMBASSY
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு. 688
தூய ஒழுக்கம் உடையவனாக இருப்பது, தக்க துணை
கொண்டவனாக இருப்பது, துணிவுள்ளவனாக இருப்பது
ஆகிய இம்மூன்றும் நேர்வழியில் தூதுரைப்பவனின்
குணங்களாயிருக்கவேண்டும்.
kural-688
Purity, help and hazard are the three needed
For an ambassador and virtue to convey other.
The chastity of thoughts in wishing; the aid of
his master for himself; to take the risk in addition
to these three , the truth also are the essentialities
for an embassy who is convey the matter, as it is,
to the opponent.
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன். 689
அரசர் சொல்லி அனுப்பிய விஷயத்தைக் கருத்து
மாறுபடாமல் குற்றமுடைய சொற்களை நீக்கி
நயம்படச் சொல்பவனே தூதனாகச் செல்லும்
தகுதி உடையவன்.
Kural-689
The ambassador, courageous won't slip from mouth,
The words erroneous while speaking monarch, with.
The ambassador who is bold enough in addressing
the other king will not even by mistake, or erring
the words of error by becoming bewildered for
opponent's stern countenance or for threatening.
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவர்க்கு
உறுதி பயப்பதாம் தூது. 690
தனக்கு மரணமே வருமென்றாலும் அதற்கு
அஞ்சாமல் தன் தலைவனுக்கு நன்மை
உண்டாகும்படிப் பேசுகின்றவனே சிறந்த
தூதன்.
Kural-690
Though gives fatal end facing without fear
The ambassador find' firmness to his master.
Even if it is so dangerous that they cause death,
without any fear for the opponent, at the critical
juncture also, the ambassador swells the greatness
of his emperor by all means.
திருக்குறள்
(see below in English)
2. பொருட்பால்
70. மன்னரைச் சேர்ந்தொழுகல்
BEHAVIOUR WITH KINGS
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
அரசரை அண்டி வாழ்கின்றவர் அவரை விட்டு
வெகுதூரம் நீங்காமலும்,வெகு அருகில் நெருங்காமலும்
நெருப்பில் குளிர்காய்வது போல் பழக வேண்டும்.
Kural-691
Like basking at fire neither for nor near
At the king of ire should be one's behaviour.
As the same as conducting at fire as it will be
of no use if one can keep away from it and if he
nears very nigh it will be very hot,intolerable;
One's approach should be at a hostile king in this
manner.
மன்னர் விழைய விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும். 692
அரசர் விரும்புகின்றவற்றைத் தான் விரும்பாமல்
இருப்பது அரசரைச் சார்ந்து வாழ்வோருக்கு
நிலையான முன்னேற்றங்களைத் தரும்.
Kural-692
As not be desirous one for which the king desires,
Will get lasting fortune as the king presents.
A person(minister),as he is not be anxious to get
something which is desired by his king will get
everlasting opulence as presented by the king.
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது. 693
தன்னைக் காத்துக் கொள்ள எண்ணுபவர்
அரிய தவறுகள் வராமல் எச்சரிகையாக
இருக்கவேண்டும். அரசருக்கு சந்தேகம்
வந்துவிட்டால் அதை தெளிவிப்பது மிகவும்
கடினம்.
Kural-693
If one wishes to guard himself, he should guard
Rare mistakes; after enraged, rare by none to mend.
If a minister wants to save himself, he should shun
the occational mistakes and remain blemishless;
Otherwise, the king, if angry due to the mistakes
done by his minister, rarely, no one be able to
convince and appease him.
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து. 694
சிறந்த பெரியவர்கள் கூட்டத்தில் இருக்கும்போது
காதில் ரகசியம் பேசுவதும், மற்றவர்களோடு சேர்ந்து
சிரிப்பதும் குற்றங்களாகும்.
Kural-694
Comport in the presence of the excellent elders
Shunning either whisper or laughing with other.
One should behave well in the presence of the king
or in the council keeping clear of wispering and
laughing with any other in the council.
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. 695
அரசர் அந்தரங்கமாக யாரிடமாவது பேசும்போது
அதைக் கவனிக்காதபடி இருப்பதும், அதைப்பற்றி
அரசரிடம் கேள்வி கேட்காமலும் இருப்பது நல்லது.
அவரே அதைச் சொன்னால் தான் கேட்கலாம்.
Kural-695
Should not overhear any nor interrogate;
Then only should hear if himself left that secret.
While the king is speaking some secret matter
with other, one should not overhear it; further
should not try to know about the matter by
questioning him. If the king himself spontaneously
reveals the secret, then only, one should hear it.
குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல். 696
அரசரின் மனக்குறிப்பை அறிந்து, தகுந்த
சமயம் பார்த்து, அவர் வெறுக்கக்கூடிய
விஷயங்களை ஒதுக்கி, விரும்பும் சமாச்சாரங்களை
அவர் ஆவலாக கேட்கும்படிச் சொல்ல வேண்டும்.
Kural-696
Knowing the mood 'nd time, waiting for,
Should relate the required disgustless to desire.
While telling a matter to the king, his mien,
then exists and also wait for suitable time
should begin to narrate the necessary,
disgustless and taking the matter only.
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல். 697
அரசர் விரும்பியவற்றைச் சொல்லி, பயனில்லாதவற்றைக்
கேட்டாலும் எப்போதும் சொல்லாமல் தவிர்க்க வேண்டும்.
Kural-697
Tell enlivening word but the useless word
Even if requested to abandon is good.
Even if the king did not ask for, narrate him
the unusual matter; but must be abandoned
without expressing the useless words to his
master even though he requests, will be good.
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப்படும். 698
வயதில் எனக்கு இளையவர், இன்ன உறவு
கொண்டவர் என்றெல்லாம் சாதாரணமாகப்
பேசுவது அரசரைத் தரக்குறைவாய் பேசுவதாகக்
கருதப்படும். அதனால் அவரது பதவிக்கு ஏற்ப
புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.
Kural-698
Despise not as kin or younger, considering;
His splender , to be taken and comport to it,according.
Do not despise the king considering his kinship or
as a younger one; his resplendence to be taken
and honour him.
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர். 699
அரசரின் மதிப்புக்கு உரியவராய் இருந்தாலும்
உறுதியான அறிவுடையோர் அரசருக்குப் பிடிக்காததைச்
செய்யமாட்டார்கள்.
Kural-699
The firmily wise accomplish not the unaccepted
Deeds , thinking themselves: 'we are unaccepted'.
Supporting by themselves that they are accepted
or honoured by the king; the noble men who are
firm in their wisdom do not carry out any deed,
not accepted by the king.
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகமை கேடு தரும். 700
அரசருக்கு நான் நண்பன் என்று நினைத்துத்
தகாதன செய்யும் உரிமை துன்பத்தைக் கொடுக்கும்.
Kual-700
Presuming old kinship if done improper
Deed, it brings disaster to intimacy and kinship.
If any one does any deed unacceptable for king
taking by himself by advantage of the old
kinship of the king, it will bring an end to the
kinship with the king and his intimacy.
திருக்குறள்
(see below in English)
2. பொருட்பால்
71. குறிப்பறிதல்
KNOWLEDGE OF GESTURE
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி. 701
ஒருவர் சொல்லாமலே அவர் முகத்தைப் பார்த்து
அவர் நினைப்பதை அறிகின்றவன் எப்பொழுதும்
உலகத்திற்கு ஓர் ஆபரணமாவான்.
Kural-701
Even tho' not commissioned but knows by mere sight
Is , in the sea-girt world, for ever an ornament.
Even while the king did not commission but one
who knows the intension of the king by merely
looking at his countenance will be ever treated
as an ornament to the world.
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல். 702
ஒருவர் மனத்தில் இருப்பதை சந்தேகமின்றித்
தெரிந்து கொள்பவரை தெய்வத்துக்குச் சமமாக
எண்ணவேண்டும்.
Kural-702
One who discerns what is latent without doubt,
Should be esteemed as equal to God.
A person who is able to know the intention of others
by his sagacity without any hesitation, should be
revered as equal to God.
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல். 703
முகக்குறிப்பிலிருந்து மனதிலுள்ளதை அறியும்
தன்மை உடையவரை தன் உறுப்பினுள்
(இருதயத்தை, மன அன்பை) ஏதாவதொன்றைக்
கொடுத்தாகிலும் தனக்கு உற்றவராக ஆக்கிக்
கொள்ளவேண்டும்.
Kural-703
Should afford any of the parts and accept
One who guesses of others by own concept.
The kings should give some benefaction from
their parts and take such man who is sagacious
in knowing others' gesture by his own knowledge.
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு. 704
மனத்தில் நினைப்பதைச் சொல்லாமலே
புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவரோடு
மற்றவர்கள் தோற்றத்தில் ஒத்திருந்தாலும்
அறிவால் மாறுபட்டவர்.
Kural-704
Though one is similar by limbs with the other.
The resemblance with other is separate, as he differ.
Even one is similar to other men by his limbs; as he
differs by mind from others, the similarity with others
is separate.
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண். 705
கண் பார்வையால் பிறர் குறிப்பை அறியாவிட்டால்
ஒருவர் உறுப்புகளில் கண்களால் எந்தப் பயனுமில்லை.
Kural-705
What are the eyes for, among member
If one is not sagacious to know other's gesture.
If a person is not capable of knowing other's
intention by means of looking at others mien;
what is the benefit of eyes for him among his limbs.
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம். 706
தனக்கு அருகில் உள்ள பொருள்களின் நிறத்தைக்
காட்டும் பளிங்கு போல், ஒருவன் மனத்தில் உள்ள
கோப தாபங்களை முகம் காட்டிக் கொடுத்துவிடும்.
Kural-706
Like the crystal reflect nearer things which rest
One's face reflect' mode of mind's thought.
As same as the crystal (mirror) which shows the
things rest nearer to it,a person's face as it appears
shows the inner feelings of his mind.
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும். 707
ஒருவர் மகிழ்ந்தாலும், கோபித்தாலும் அவருடைய
முகம் தெள்ளெனக் காட்டிக் கொடுத்து விடும். அந்த
முகத்தைவிட நுணுக்கமான உறுப்பு வேறேது?
Kural-707
Is there anything else than face which advances
To show when becomes furious or when felt joyance.
Will there be anything other than one's face which
advances first to demonstrate such emotions like
anger or joyance;nothing.
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின். 708
மனத்திலுள்ளதை அறியும் கூர்மையான
அறிவுள்ளவரிடத்தில் நாம் எதிரே போய் நின்றாலே
போதும். நம் உள்ளக் கிடக்கையை அவர் புரிந்து
கொள்வார்.
Kural-708
It's befitting to stand before such a person
Who can understand symptoms of mien.
To stand still without telling anything but
looking at him before a capable person
while he looks at and understands the inner
feeling by the countenance that only is
suitable.
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின். 709
விழி அசைவிலேயே மன உணர்வுகளை அறிய வல்லவர்,
ஒருவர் மனத்திலுள்ள பகையையும், நட்பையும் சுலபமாகப்
புரிந்து கொள்வார்.
Kural-709
The spite 'nd amity will be revealed by one's eyes
If one is available who infers looking at eyes. 709
If a minister who can infer the inner thoughts of
the king by mere looking at his countenance,
while is available the enmity and the friendship
vested in his mind will be made known by his mere
looks.
திருக்குறள்
(see below in English)
2. பொருட்பால்
71. குறிப்பறிதல்
KNOWLEDGE OF GESTURE
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற. 710
ஒருவருடைய கண்களே சிறந்த அள\வுகோல்.
இவர் நுட்பமான அறிவுடையவர் என்பதைக்
கண்களாலேயே அளந்து விடுவார்.
Kural- 710
Measuring tool of a person who says himself shrewd
Is only eyes but none if it's duely scrutinized.
If it is keenly examined, the measuring tool for a
Minister who says that he is tactful in knowing
other's intention, is only eyes of the king but
nothing else.
No comments:
Post a Comment