Translate

Sunday, December 7, 2014

பொன்மொழிகள்



                                                      பொன்மொழிகள்


601. மகிழ்ச்சி அடைவதற்கான வழி மற்றவர்களையும் மகிழச் செய்வதே.

                                                        --- இங்கர்சால்



602. பத்துமுறை முயன்றால்தான் ஒருமுறை வெற்றி கிடைக்கும்.
    எனவே பத்துமுறை வெற்றி பெற நூறுமுறை முயற்சி செய்யுங்கள்.


603. வெற்றிபெற ஒரு சதவிகிதமே வாய்ப்பு என்றாலும் ஓர் உண்மையான
    தொழில் முனைவோன் ஒரு சதவிகிதப் பொறியிலிருந்து பெரும்
    வெளிச்சத்தை உருவாக்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டு
    செயல்படுவான்.


604. ஒரு வீட்டுக்குரிய மதிப்பை அண்டைவீட்டுக்காரர்தான் கொடுக்கிறார்.

                                                        --- ஜெர்மன் பழமொழி


605. மிகவும் நம்பிக்கை வாய்ந்தவர்களாக இருங்கள்; பிறர்
    நம்பும்படியாக உண்மையாகவே நடந்துகொள்ளுங்கள்.
                                           
                                                   --- எஸ்.ஷர்மா




606. பைத்தியக்காரனை நிச்சயம் திருத்திவிடலாம். ஆனால் தற்பெருமை
     பேசுபவர்களை மட்டும் திருத்தவே முடியாது.

                                                  ---ரூஸோ  


607. நான் தோற்றால் பரவாயில்லை, கவலையில்லை;
    மீண்டும் முயல்வேன்.

                                                  --- பிளாட்டோ    


608. புத்திசாலி பிறரைப்பற்றி உங்களோடு பேசுவான். முட்டாள்
    தன்னைப்பற்றி உங்களிடம் பேசுவான். ஆனால் பேச்சாளி
    உங்களைப் பற்றியே உங்களிடம் பேசிவிடுவான்.

                                         --- எமர்ஸன்



609. நெருப்பு பொன்னைச் சோதிக்கிறது; துயரம் உயர்ந்த மனிதர்களைச்
     சோதிக்கிறது.
                                                       ---செனிகா



610. தன் வினை தன்னைச் சுடும்.

                                     --- பட்டினத்தார்



611. முன்னும் பின்னும் யோசிக்காமல் வார்த்தைகளை விடுகிறோம்.
    ஆனால் அதற்குரிய பலனை வட்டியும் முதலுமாக அனுபவிக்கிறோம்.
   



612. விதி நல்லவர்களுக்கு நண்பன்; ஞானமுள்ளவர்களுக்கு வழிகாட்டி.

                                                   --- ஆவ்னர்


613. பணம் கண்ணுக்குத் தெரியும்; ஆனால் காலம் கண்ணுக்குத் தெரியாது.


614. மனம் நல்லதாக, சுத்தமானதாக, பண்புடன் பழகக்கூடியதாக,
    நம்பிக்கை உள்ளதாக இருந்தால் நாம் கோயிலைத் தேடிப்
    போகவேண்டியது இல்லை.

                                          --- இங்கர்சால்



615. சவால்கள் வரும்போது நீங்கள் நினைத்திருக்காத திறமைகள்
    உங்களிடம் ஒளிந்திருப்பதை உணர்வீர்கள்.

                                           --- டோராஆல்பர்ட்


616. ஆணவம், அகங்காரம் மற்றும் நேர்மையின்மை ஒருவனை அழிவுப்
     பாதையில் தள்ளிவிடும்.

                                           --- சந்தானம்



617. கதிரவன் காற்றை வெப்பப்படுத்துகிறான். ஆனால் நட்புறவோ
    இதயத்தைக் கதகதப்பாக்குகிறது.



618. பக்குவமாய் பேசும் தத்துவம் பல நன்மைகளை உண்டாக்கும்.



619. அழையாத வீட்டுக்குப் போவது பிழையாகும்.

                                         --- கிருபானந்த வாரியார்
 

620. தர்மத்தைச் செய்ய முடியாதவனும் தர்மத்தைக் காக்க
    முடியாதவனும் வாழ்வதில் அர்த்தமில்லை.

621. நம் வீட்டு விளக்கு ஒளியும் , அடுத்த வீட்டு விளக்கு ஒளியும்
    ஒன்றோடொன்று உறவாடிக் கொள்கின்றன. நாம் மட்டும்
     சண்டை போடுகிறோம்.

                                               --- மில்டன்


622. இனி கிடைக்கப்போகும் பலாக்காயை விட (இப்போது)
    கிடைத்திருக்கும் களாக்காய் மேல்.
   
    A bird in the hand is worth two in the bush.

623. அளவில்லாத வேதனைகளைத் தாங்கிக்கொண்டு சாதனை
     படைக்கின்றவந்தான் மேதை.

                                               --- ஹோம்கின்ஸ்



624. நெருக்கடி நிலையிலும் நிதானமிழக்காமல் அமைதியாக
     முடிவெடுப்பது- உற்சாகமான சூழ் நிலையில் சம நிலை
     இழக்காமல் இருப்பது- யாரையும் திருப்திபடுத்த தனக்கு
      விருப்பமில்லாத செயல்களில் ஈடுபடாமலிருப்பது-
     இவையே உண்மையான தலைவனின் குணாதிசயங்கள்.

                                         --- தாமஸ் ஃபுல்லர்


625. நீ திறமைசாலியாக விளங்குவதை விட அருமையான விஷயம்-
    அபூர்வமான விஷயம்- இன்னொன்று  இருக்கிறது. அதுதான்
    பிறரிடம் உள்ள திறமையை இனம் கண்டு கொள்வது.

                                         --- ராபர்ட் ஹால்ஃப்
626. ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பர்கள் அவனுடைய பத்துவிரல்கள்.

                                        ---ஜேம்ஸ்ஆலன்


627. செருக்குள்ளவனின் மூளை காலியாக இருப்பதால் அங்கு கர்வம்
     குடிகொண்டு விடுகிறது. கர்வமானது மூளையை எடுத்துவிட்டுக்
     குப்பையை நிறைத்துவிடுகிறது.

                                         --- கோல்டன்



628. தன் வலிமையைக் கணித்த பிறகே செயலில் இறங்கவேண்டும்.

                                         --- சாணக்கியன்


629. நிலையான உறுதிதான் மற்ற பண்புகளுக்கெல்லாம் துணையாகும்.

                                             --- மாஜினி



630. வணக்கம் சொல்லாதவனைவிட வம்புகளில் மாட்டிவிடாதவன்
    எவ்வளவோ நல்லவன்.

                                               --- சாணக்கியன்

631. சோம்பி இருப்பவன் கிடைத்ததைப் பாதுகாத்துக் கொள்ளவும்
     அறியமாட்டான்.


632. குற்றங்களைப் பிறப்பிக்கும் இடங்களில் முக்கியமானவை
     குடியும்,அறியாமையுமே.

                                                --- ஆவ்பரி


633. ஒழுக்கம் உள்ளவனாக இரு.
     தைரியம் உள்ளவனாக இரு.
     இதய பூர்வனாக உறுதி பிறழாதவனாக
     ஒழுக்கத்தில் நிலைப் பெற்றிரு.

                                   --- விவேகானந்தர்

634. ஒருவருக்கொருவர் நல்ல பண்புகளுடன் நடந்துகொள்வது
    வாழ்க்கையில் மிகவும் அடிப்படையான தேவையாகும்.

                                            --- நபிகள் நாயகம்

  635. அச்சம், பொறாமை, துயரம் இவற்றிலிருந்து விடுதலை
    அடைந்தவனுடைய உள்ளம் இயற்கையான அமைதியுடையது.
    ஆடாத, அசையாத அவ்வுள்ளம் ஒவ்வொரு வினாடியின்
    உண்மையையும் மற்றும் பல காட்சிகளுக்கு அப்பாற்பட்டவற்றையும்
    காணும்.

                                              --- பிளாட்டோ




636. உங்களின் நரம்புகளை முறுக்கேற்றுங்கள். இரும்பைப் போன்ற
    தசைகளும் எஃகினைப் போன்ற நரம்புகளுமே நமக்குத் தேவை.

                                              --- விவேகானந்தர்
637. கோபத்தால் குலம் அழியும்; கொடுப்பதால் குலம் செழிக்கும்.



638. வரவுக்கு மிஞ்சி செலவு செய்யாதே; வாடிய முகத்தோடு
    துவண்டு போகாதே.



649. உண்மையாகவே பக்தி வேரூன்றி இருக்குமானால் பகை
     எண்ணங்களை மனத்திலிருந்து அகற்று. பக்தி மார்க்கத்திற்குத்
    துவேஷமே மிகப்பெரிய முட்டுக் கட்டையாகும்.


பொன்மொழிகள்

650. பிறவி எடுத்த எந்த உயிரும் இன்ப, துன்பகளிலிருந்து தப்பமுடியாது.
                   
                                                      --- சாணக்கியன்



651. நீ எதை இழந்தாலும் உனக்கு இன்னும் எதிர்காலம் இருக்கிறது.

                                                       --- போவே



652. உண்மையோடு வைக்கும் நம்பிக்கைதான் கை கூடும்.

                                                 --- இங்கர்சால்



653. பேசும் முன் கேளுங்கள்,
    எழுதும் முன் யோசியுங்கள்,
    செலவு செய்யுமுன் சம்பாதியுங்கள்,
    முதலீடு செய்யுமுன் விசாரியுங்கள்,
    குற்றம் செய்யும் முன் நிதானியுங்கள்,
    ஓய்வு பெறும் முன் சேமியுங்கள்,
    இறப்பதற்கு முன் தர்மம் செய்யுங்கள்.

                                           --- வில்லியம் ஆர்தர்


654. நாளை கிடைக்கும் மயிலைவிட இன்று கிடைக்கும் புறா மேலானது.

                                   --- சாணக்கியன்


655. நம்பிக்கையை ஒருபோதும் இழந்திடாதே. வாழ்க்கைப் பாதை ,
   கத்தி முனையில் நடப்பதைப் போன்று கடினமானதுதான்.
   என்றாலும் எழுந்திரு; விழித்திரு; மனம் தளர்ந்திடாதே.
   நீ அடைய வேண்டிய உனது இலட்சியமாகிய குறிக்கோளைக்
  கண்டுபிடி.

                                        --- விவேகானந்தர்
656. ஒவ்வொரு மனித மனமும் உறங்கும் சக்தியாகும்.
     அதைத் தட்டி எழுப்ப ஆர்வமிக்க வேட்கையும்,
    உறுதியான செயல் துணிவும் தேவை.

                                        --- எட்கர் ராபர்ட்ஸ்



657. உண்மையே கடவுள். எல்லா அறங்களும் உண்மையைப்
    பின் தொடர்கின்றன. உண்மையை விட மேலானது வேறு
    ஒன்று இல்லை.

                                           --- வால்மீகி

658. இன்சொல் உனது இனிய வாழ்க்கை.
    பொறுமை உனது ஆஸ்தி
    நேர்மை உனது வெற்றி
    கோபம் உனது சத்ரு
    உழைப்பு உனது உயர்வு
    அமைதி உனது ஆறுதல்.

                                   --- பாம்பாட்டி சித்தர்

659. பயணம் மேற்கொள்ளும் போது உங்கள் சகிப்புத் தன்மை
    அதிகமாகிறது.

                                           --- டிஸ்ரேலி

660. மற்றவர்களுக்கு நீ வல்லவனாக இருக்கும்போது உனக்கே
    நீ நல்லவனாக இருக்கிறாய்.

                                          --- பிராங்க்ளின்

661. சில சொற்களைப் பேசும் மனிதரே என்னைப் பொருத்தவரை
    சிறந்த மனிதர்.

                                                --- ஷேக்ஸ்பியர்

662. ஒரு மனிதன் உணர்ச்சிகளின் இளமையும், சிந்தனையில்
    முதிர்ச்சியும் கொண்டிருந்தால் அவன் வாழ்க்கை நன்கு அமையும்.

                                                ---ஜோஸப் ஜௌபர்ட்

663. ஒவ்வொரு நாள் காலையும் வாழ்க்கையைப் புதிதாகத்
    துவங்குங்கள். இந்த விதத்தில் இயற்கையைப் பின்பற்றுங்கள்.

                                             --- ஜார்ஜ் உட்பெரி

664. நிறைய பேர் அறிவுரை பெறுகிறார்கள். ஆனால் அறிவுள்ளவர்கள்தாம்
    அதனால் பயன் பெறுகிறார்கள்.

                                            ---ஸைரஸ்

665. வெற்றி பெறத் தேவையான மன ஊக்கம் உன்னிடத்தில்
    இருக்குமேயானால் வெற்றிக்கான பாதி தூரத்தை நீ
    கடந்து விட்டாய். ஊக்கம் இல்லாத பட்சத்தில் தோல்வியை
   நோக்கி உன் பயணம் பாதி தூரம் முடிந்துவிட்டது.  

                                           --- டேவிட் ஆம்ப்ரோஸ்


666. 'இல்லை' என்று ஒருபோதும் சொல்லாதே.' என்னால் இயலாது'
    என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா
    வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு
    ஒப்பிடும்போது காலமும் இடமும் கூட ஒரு பொருட்டல்ல.
    நீ எதையும் ,எல்லாவற்றையும் சாதிக்ககூடியவன்;
    சர்வ வல்லமை படைத்தவன் நீ.

                                         --- விவேகானந்தர்

667. நான்கு விஷயங்களைத் திரும்பப் பெற முடியாது.
   சொல்லிய வார்த்தை, விட்ட அம்பு, கடந்தகால வாழ்க்கை,
   நழுவவிட்ட வாய்ப்பு.

                                              --- அரபுப் பழமொழி  

668. மனித வாழ்க்கையின் உண்மையான அடிப்படை,
   எண்ணங்கள்தாம். நமது செயல்களை வழி நடத்துபவை
   அவைதாம். நமது எண்ணங்களை வெளிப்படுத்துவதன்
   முன்னர் அவற்றை நாம் முறைப்படுத்துதல் சரியான
   செயலாகும்.

                                                ---ஜொனாதன் மில்லர்


669. நம்பிக்கைதான் வாழ்வின் ஜீவாதாரம்.
     
                                            --- டால்ஸ்டாய்


670. நின்று கொண்டிருப்பவர்கள் மத்தியில் நீ உட்காராதே!
    உட்கார்ந்திருப்பவர்கள் மத்தியில் நீ நிற்காதே!
    சிரிப்பவர்கள் மத்தியில் நீ அழாதே!
    அழுபவர்கள் மத்தியில் நீ சிரிக்காதே!
     
                                --- யூத பழமொழி


671. மகத்தான மனத்திண்மை இல்லாமல் மகத்தான
    திறமை உருவாக இயலாது.

                                --- ஹோனோர் டி பால்ஸாக்


672. கற்றது ஒரு மடங்கு என்றால் அதை நடைமுறை வாழ்க்கைக்குப்
    பயனுள்ளதாக ஆக்க பொது அறிவு பத்துமடங்கு தேவை.

                                                   --- கலீல் ஜிப்ரான்

673. விவேகத்துடன் செயல்படு, பறந்து மேலே உயராதே!
    உன் வீழ்ச்சியும் வேகமாக இருக்கும். வளைந்து கொடுத்து
    படிப்படியாக முன்னேறு.
                           
                                     --- பிலிப் மாஸ்லிங்கர்

 674. ஒழுங்கான முறையான வாழ்க்கை நடத்தி வருகிற ஒரு
     மனிதன் கொந்தளிப்பு, குழப்பம் இவற்றினாலோ,
     தற்செயலாக நிகழ்கிற இடையூறுகளினாலேயோ
     பாதிக்கப்பட மாட்டான். ஒழுங்கற்ற வாழ்க்கை வாழ்பவர்கள்தான்
    பாதிப்புக்கு ஆளாவார்கள்.

                                 --- கான்ராட்


675. மனிதர்களில் மறு சிந்தனை செய்பவர்கள்தான் அறிவில் சிறந்தவர்கள்.

                                           --- யூரிபிடிஸ்


676. இதுவே சிறந்த வழி.உனக்கே நீ உண்மையாக நடந்துகொள்.
    பிறகு நீ மற்ற யாரிடத்திலும் போலியாக நடக்க முடியாது
    என்பது தானாகவே தொடரும்.

                                           --- ஷேக்ஸ்பியர்


677. வாழ்க்கை மேடுகளும், பள்ளங்களும் நிறைந்தது. மேடுகளில்
    ஏறும்போது நாம் ரசித்தபடி ஏறவேண்டும். பள்ளங்களில்
    இறங்கும்போது மனவலிமையுடன் இறங்கவேண்டும்.

                                          --- மிக்கி வாக்கர்

678. நம்மால் இனி என்ன செய்யமுடியும் என்பதைக் கொண்டு நம்மை
    நாம் எடை போடுகிறோம். நாம் இதுவரை செய்து முடித்த
    விஷயங்களை வைத்து பிறர் நம்மை எடைபோடுகிறார்கள்.

                                        --- லாங்ஃபெலோ


679. முயற்சி மேற்கொள்ளப் பயந்தே பாதி விஷயங்களில்
    மக்கள் வெற்றி பெறுவதில்லை.                      

                                       --- ஜேம்ஸ் நார்த்கோட்

680. இருபத்தைந்து வயதுவரை படித்தவண்ணம் இரு.
    நாற்பது வயதுவரை அலசி ஆராய்ந்து வா.
    அறுபது வயதுவரை உழைத்துப் பிழை.
    பிற்பாடு ஓய்வு கொள்.

                                       --- வில்லியம் ஆஸ்லர்


681. நாம் செலவழிக்கும் ஒவ்வொரு சிறு தொகைக்கும் கணக்கு
    இருக்க வேண்டும்.

                                     --- மில்டன்ஃப்ரீட்மன்


682. எதிர்காலம் இனிமை என்று நம்பவேண்டாம்.
    கடந்த காலம் புதைகுழிக்குள் மக்கிப் போகட்டும்.
    செயல்படு- உயிருள்ள நிகழ்காலத்தில் செயல்படு.
    இதயத்துடன் செயல்படு. கடவுள் நம்மைக் காப்பாற்றுவார்.

                                     --- லாங்ஃபெலோ


683. கரடுமுரடான பாதைகளிடையே ஆறு ஓடுகிறது. நண்பர்களே,
    திரண்ட ஆற்றலுடன் முன்னேறுங்கள். தலை நிமிர்ந்து
    நில்லுங்கள். நமக்கு நேரும் இடையூறுகளைப் புறக்கணிப்போம்.
    ஆற்றைக் கடந்து சென்று நமக்கு நன்மை தரும் சக்திகளைப்
   பெறுவோம்.

                                         --- ரிக்வேதம்.

684. தூங்குகிறவனை எழுப்புவதற்காக பொழுது இரண்டுமுறை விடிவதில்லை.

                                         --- அரபுப் பொன்மொழி


685. சினம் என்பது கண நேரமே உள்ள பித்துப் பிடித்த செயல்.
    அந்த உணர்ச்சியை நீ கட்டுப்படுத்தாவிட்டால் அது உன்னை
    விழுங்கிவிடும்.
                                          --- ஹோரேஸ்

686. பள்ளிக்கூட நாட்கள் முடிந்த பிறகு நீ கற்று அறியும் விஷயங்கள்தாம்
    மிக முக்கியமையானவை. இல்லாது போனால் எல்லாரும் அறிந்த
    மிகச் சில விஷயங்களையே நீயும் அறிந்தவனாய் இருப்பாய்.

                                                --- ஹென்றி டொஹர்ட்டி

687, மனிதனுக்கு வேண்டிய முதலாவது குணம் தைரியம் தான்.
    அதுவே மற்ற குணங்களுக்கெல்லாம் உத்தரவாதம் அளிக்கக்
    கூடியவை.

                                                 --- வின்ஸ்டன் சர்ச்சில்

688. பண்படுத்தாத நிலம் எவ்வளவுதான் வளமுள்ளதாயினும் பலன் தராது
    பண்படாத மனமும் இவ்விதமே நன்மை விளைவிக்காது.

                                                --- ஸெனீக்கர்


689. மனிதர்கள் தங்கள் பக்கம் நியாயம் குறையும்போது அதை
    சீற்றத்தால் ஈடுகட்டப் பார்க்கிறார்கள்.

                                             --- டபிள்யூ,ஆர். ஆல்கெர்


690. நம்மால் என்ன செய்ய முடியும் என்பதைக் கண்டு அறிவதை விட
    நம்மால் என்ன செய்ய முடியாது என்று கண்டு அறிவது சில
    நேரங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

                                              ---  லின் யு டாங்


691. திறமையினால் சாதிப்பதை விட பொறுமையினால்
    அதிகம் சாதிக்கலாம்.

                                            --- ப்ராங்க் டைசர்


692..நீ சினம் கொள்ளும்போது எந்த ஒரு கடிதத்திற்கும்
    பதில் எழுதாதே!

                                         --- சீனப் பழமொழி


693. தோல்வி எதை நிரூபிக்கிறது? வெற்றி அடைய வேண்டும் என்ற
     நமது தீர்மானத்தில் போதிய வலு இருக்கவில்லை என்ற
    ஒன்றை மட்டும்தான். வாழ்க்கை என்பது வாழும் கலையில்
    ஒரு பரீட்சை.. வாழும் கலையைக் கற்று, சிக்கனமாக,
    எளிமையாக வாழ்ந்து வெற்றி பெறலாம்.

                                  --- மேடம் க்யூரி


694. மிகுந்த இனிப்புடன் யாரிடமும் பழகாதே! அவர்கள் அப்படியே
    விழுங்கி விடுவார்கள். மிகுந்த கசப்பு உணர்ச்சியையும்
    காட்டாதே! அவர்கள் உன்னைத் துப்பிவிடுவார்கள்.

                                --- யூத பழமொழி


695. உலகத்தை அது உள்ள நிலையில் நீ ஏற்றுக் கொண்டு விடு.
    ஆனால், உன்னை மட்டும் அதற்கு மேலாக உயர்த்திக் கொ\ள்.

                                  --- மைக்கோல் கோர்டா
696. அப்பாக்கள் கட்டி வைத்த கூடாரங்களில் அயர்ந்து உறங்காதீர்கள்.
    உலகம் முன்னேறிய வண்ணம் இருக்கிறது. நீங்களும்
    முயற்சி செய்து அதனுடன் முன்னேறுங்கள்.

                                 --- மாஜினி

697. நீ பயணம் செய்வது சரியான பாதைதான் என்றாலும்
    நீ நகர்ந்தபடியே இருக்க வேண்டும்.வெறுமே ஒரு
    மூலையில் நின்றாலோ, ஓரமாக நகர்ந்தாலோ உன்னை
   மோதித் தள்ளிவிட்டு பிறர் முன்னேறி விடுவர்.

                                        --- வில் ரோஜர்ஸ்


698. திருத்தக் கூடியவற்றைத் திருத்தும் தைரியமும், திருத்த
    முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும்-
    இவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளும்
    அறிவையும் எனக்கு அருள்.

                                         --- ஜான்ஃபெனிமோர் கூப்பர்


699. வாழ்க்கை என்பது தீர்த்து வைக்க வேண்டிய ஒரு சிக்கல் அல்ல.
    பதிலளிக்க வேண்டிய ஒரு பிரச்சினையும் அல்ல. அலசி ஆராய
    வேண்டிய ஒரு மர்மமும் அல்ல. அது- வாழ்ந்தாக வேண்டிய
    ஒன்று அவ்வளவுதான்.

                                    --- ஹெரால்டு டபிள்யூ-ருவோப்

700. தம்மால் வெல்ல முடியும் என்று நம்புகிறவர்கள்தாம்
    வெற்றிகளைக் குவிப்பார்கள்.

                                      --- விர்ஜில்
701. ஒரு செயல் எப்படி செய்யப்பட வேண்டும் என்பதில்
    நீங்கள் உறுதிப்பாடாக இருங்கள். ஆனால், அதைச்
    செய்வதற்கு பிறரை எவ்வாறு தூண்டிவிடுவது என்ற
    கலையில் தேர்ச்சி பெறுங்கள். அப்போழுதுதான் நீங்கள்
    தலைமைப் பொறுப்பை ஏற்கத் தகுதி உடையவர்கள்
    ஆவீர்கள்.

                                       --- லான்ஸ் பாக்கார்ட்

702. உங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ள இதுவே
    ஏற்ற நேரம். ஆற்றல் மிக்க இளமைப் பருவத்தைப்
    பெற்றுள்ள உங்களுக்கு இந்த இளமைக்காலமே பொன்னான
   நேரமாகும். உழைப்பு! ஆம்! அதற்கு இதுவே பொன்னான
   நேரம்.

                                        ஸாமுவேல் பட்லர்


703. வெற்றிக்கான வழிமுறை என்ன என்பது எனக்குத் தெரியாது.
    ஆனால் தோல்விக்கான வழிமுறை என்ன என்பது எனக்குத்
    தெரியும். அது அனைவரையும் திருப்திப்படுத்த நினைப்பதுதான்,

                                        --- ஹெர்பர்ட் பாபர்ட் ஸ்வோப்

704. உழைக்காதவன் ஒரு பொழுதும் நேராகவே சிந்திக்க மாட்டான்.
    சோம்பேறித்தனம் மனதைக் கோணல் வழிக்கு இட்டுச் செல்லும்.
    ஆக்கப்பூர்வமான செயலில் ஈடுபடாமல் சிந்திப்பது ஒரு வகை
    மனோ வியாதியாகும்.

                                                --- ஹென்றிஃபோர்ட்


705. நம்முடைய தேவைகள் மிகக் குறைந்தனவாக இருக்க வேண்டும்.
    பிறர் சார்பின்றி நாமாகவே அவற்றைப் பூர்த்தி செய்து கொள்ள
    வேண்டும். இதை விட நேர்த்தியான விஷயம் உலகில் வேறு
   உண்டா?

                                            --- எமர்சன்

706. உன் வாய் வார்த்தைகள் மதிப்புப் பெறுவதற்கு நீ யாருடன்
    பேசுகிறாய், யாரைப் பற்றிப் பேசுகிறாய், எங்கு- எப்படிப்
    பேசுகிறாய், என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
             
                                    ---பேஜ் ஹாட்
707. நேர்மை இல்லாத இடத்தில் பெருந்தன்மை எப்படி காணப்படும்?

                                     --- ஸிஸரோ

708. தேளுக்குப் பின் பக்கம் விஷம், பாம்புக்கு முன் பக்கம் விஷம்,
    மனிதனுக்கு நடுவிலே விஷம்! முன்னாலும், பின்னாலும்
    வருகிறவர்களிடம் நீ ஜாக்கிரதையாக இருந்துவிட முடியும்.
    ஆனால் உனக்குள்ளே இருப்பவனிடம்தான் உன் லகான்
    இருக்கிறது. அவன் பெயரே மனம்.

                                 --- கவிஞர் கண்ணதாசன்


709. சத்தியத்தை எப்போதும் எந்நிலையிலும் கைக்கொள்ள
    முயற்சிக்க வேண்டும். இதனால் வேத சாஸ்திரங்கள்
    பொய்யாகப் போவதானாலும் சரி.இவை சத்தியத்தை விட
    உயர்ந்தவை இல்லை. சத்தியத்தின் முன் இவை அற்பமானவை.
    பிடிவாதத்தாலோ, மமதையாலோ அல்லது வெகு நாளைய
   பழக்கத்தினாலோ கண்ணை மூடிக் கொண்டு அசத்தியத்தை
   கடைப்பிடிப்பதில் புண்ணியமில்லை.

                                    சரத் சந்திரர்

710. ஒருவனைத் தொடர்ந்து நம்புவதுதான் அவனை
    நம்பிக்கைகுரியவனாக மாற்ற ஏற்பட்ட வழி.
   நீ அவனை சந்தேகப்படும்போது அவனும் உன்னை
   மோசம் செய்ய முற்படுவான்.

                               --- ஹென்றி லீவிஸ் டிம்சன்

No comments:

Post a Comment