Translate

Sunday, January 26, 2014

பொன்மொழிகள்

பொன்மொழிகள்


350. தன்னம்பிக்கை முன் எந்த ஆயுதமும் நிற்காது.


351. முதலில் சிந்தியுங்கள்; பிறகு பேசுங்கள்; பேசினாலும்
     குறைவாகப் பேசுங்கள்.

352. சோர்வு, வறுமை, தீயசெயல் மூன்றிலிருந்தும்
     நம்மைக் காப்பது உழைப்பு.

                              --- வால்டேர்


353. நீ என்ன சொல்கிறாய் என்பது முக்கியமன்று;
    அதை எப்படிச் சொல்கிறாய் என்பதுதான்
    மனித உறவுகளில் மாற்றம் செய்ய வல்லது.

                         --- ஹ்யூஸ்யியர்ன்ஸ்

354. பழைய துன்பங்களுக்காக புதிய கண்ணீரை
    ஏன் செலவழிக்க வேண்டும்? அது வீண்.


355. சிறந்த மனிதன் என்பவன் சொற்களைச் சிக்கனமாகப்
    பயன்படுத்துவான்; நடத்தையில் உறுதியாக இருப்பான்.

                                  --- கன்பூஷியஸ்


356. சினத்தில் துவங்கும் எதுவும் அவமானத்தில்தான் முடியும்.



357. மனிதனின் மன உறுதி மலைகளையும் தகர்த்தெறியும்.

                                          --- மார்க்ஸ்

358. படித்திருந்தாலும், பட்டம் பெற்றிருந்தாலும்
    பெரியவர் சொல் கொஞ்சமாவது கேள்.

                              --- வாரியார்


359. முறையாக முயற்சி செய்தாலொழிய எந்தக் காரியமும்
    வெற்றியடையாது.

                                --- வால்டேர்

360. எஜமானனாக இருந்தால் சில சமயம் குருடனாக
    இருங்கள். வேலையாளனாக இருந்தால் சில சமயம்
    செவிடனாக இருங்கள்.

                               --- புல்லர்


361. உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள்
    அமையும். உன் செயல்களுக்கு ஏற்றபடி உன்
    வாழ்க்கை அமையும்.

                             --- சாக்ரடீஸ்



362. மன்னித்தலே மனிதனுடைய முதற்கடமை.
    மற்றவற்றை நமக்காகப் பிறர் செய்யமுடியும்.
    ஆனால் மன்னித்தலை நாம்தான் செய்யமுடியும்.

                            --- ஜான் ஹெர்பர்ட்

363. உன் மகிழ்ச்சி நிலத்திருக்க வேண்டுமானால்
    எதிலும் மிதமாக இரு.

                           --- சார்லஸ் அகஸ்டின்


364. முதலில் நீங்கள் நல்லவனாய் இருங்கள்; கெடுதல்கள்
     பறந்து போய்விடும். உலகம் முழுவதும் மாறிவிடும்.

                                      --- விவேகானந்தர்

365. நீங்கள் சிந்திக்கும் ஒவ்வொரு நற்சிந்தனையும்
    நீங்களே எதிர்பாராத அளவிற்கு அற்புதமான
    முடிவுகளை ஒவ்வொரு முறையும் தரும்.

                      --- ஜான்ரோஜர்


366. புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்துப் படிப்பவன்தான்
    உண்மையான அறிவாளி.

                         --- லின்யுடங்

367. தவறாக வேண்டுமானால் சிந்தியுங்கள்; ஆனால்
    உங்களுக்காக நீங்களே சிந்தியுங்கள். அதுதான்
   முக்கியம்.

                                 --- வெஸ்லின்


368. முடியும் என்ற உணர்வு பிறக்கும் போதே அதைச்
    செய்து முடிக்கும் திறமையும் அந்த ஜீவனுக்குள்
    அடங்கி இருப்பதால்தான் வெற்றி பிறக்கிறது.

                                   --- ஜேம்ஸ் ஆலன்


369. நேற்றைய தோல்விக்களுக்கான காரணங்களைக்
    கண்டு கொண்டு அவற்றை விலக்கிப் புதிய பாதையில்
    உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் செல்லுங்கள்.

370. நல்ல ஆலோசனைகளை விரும்பிக் கேட்பது
    நம் திறமையை அதிகப்படுத்தும்.

                                   --- கதே


371. நீண்ட நேரம் சிந்தித்தபின் உங்கள் நாவை அசையுங்கள்;
    நீங்கள் அவமானம் அடையமாட்டீர்கள்.

                                          --- அரிஸ்டாட்டில்



372. அன்பையும் மரியாதையையும் தயங்காமல்
    ஒவ்வொருவருக்கும் கொடுப்பவன் இந்த உலகத்தில்
    எதையும் சாதித்துவிடுவான்.




373. எந்தப் பிள்ளை தன் நல்லொழுக்கங்களால் பெற்றோரை
    மகிழ்விக்கிறானோ அவனே நல்ல பிள்ளை.

                                     --- விவேகானந்தர்

374. உடல் நலம் உள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும்.
     நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்.

375. அடிமையைப்போல் உழைப்பவன் அரசனைப்போல்
    உண்பான்.

                                   --- பிராங்க்ளின்


376. மௌனமாக இருக்கத் தெரியாதவனுக்கு நன்றாகப்
     பேசவும் தெரியாது.

                                   --- புரு பர்க்

377. உற்சாகமுள்ளவனை எதிர்ப்பு தடைசெய்வதில்லை;
    மாறாக அவனுக்கு அது மேலும் ஊக்கத்தை ஊட்டுகிறது.

                                      ---ஹில்லர்

378. தவறுக்கு முன்னோர் இட்டபெயர் விதி. நீங்கள்
    தவறு செய்யாமல் உண்மையோடு போராடினால்
    விதியை வெல்லலாம்.

                              ---- ஆல்பாஷால்ஸ்

379. நேரத்தைத் தாமதப்படுத்தாதே; தாமதங்கள்
    தீமையான முடிவைத் தரும்.

                                 --- ஷேக்ஸ்பியர்

380. நல்ல இதயம் மட்டும் இருந்தால் போதும்;
    எல்லாத் துர்திஷ்டங்களையும் தகர்த்தெறிந்துவிடலாம்.

                                  --- ஸ்பெயின்


381. சந்தர்ப்பம் நிறைய பேரை அழைக்கிறது;
    ஆனால் சிலர்தான் எழுந்து நிற்கின்றனர்.

                 --- ஆலிவர் வோர்போண்ட்


382. அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும் வரை உங்களுக்கு
    என்றைக்கும் விடிவுகாலம்தான்.

                                 ---- பிளாட்டோ


383. தன்னந்தனியே எவனொருவன் நிற்கத் துணிகின்றானோ
    அவனே உலகில் வலிமைமிக்க மனிதன்.

                                      --- மாத்யூஸ்  


384. அழகு என்பது நாம் செய்துள்ள செயல்களில்தான்
    உள்ளது.செயலில் உண்மையிருந்தால் அந்த அழகு
    ஒவ்வொருவரையும் கவரும். உலகில் இதைத் தவிர
    வேறு நிலையான அழகு எதுவுமில்லை.


385. அறிஞர்கள் அறிவைத் தேடுகிறார்கள்; முட்டாள்கள்
    அதைப் பெற்றுவிட்டதாக நினைக்கிறார்கள்.

                                         ---ஜேம்ஸ் ஆலன்



386. அன்பு, பணிவு, நேர்மை, தாழ்மை, நன்றி, நம்பிக்கை
    உடையவராக இருந்து இறைவனை நம்புங்கள்;
    உங்களை யாராலும் அசைக்கவே முடியாது.

                                 --- விவேகானந்தர்


387. துன்பமும் ஏழ்மையும் போதிப்பதுபோல் வேறு ஒன்றும்
    போதிக்க முடியாது.



388. சிக்கனமாக வாழும் ஏழை சீக்கிரம் செல்வந்தனாவான்.

                                      --- செனேகா


389. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும்
    வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன்
    இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.

                                   --- விவேகானந்தர்




390. வாழ்நாளைப் பெருக்க உணவைச் சுருக்கு.


391. அகங்காரமில்லாமல் பழகுவரிடம் இந்த அகில உலகமும்
    திரண்டு வந்து ஆதரவாகக் கூடிவிடும்.

                                     --- எமர்சன்


392. காலம்! காலத்திற்கு உள்ள மகிமையை யாராலும்
    விளக்கிப் புரிய வைக்க முடியாது. நம்முடைய
    எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வே காலம்தான்.
    கால ஓட்டத்தால் எல்லாக் குறைகளுமே கரைவது
    மட்டுமல்ல, நிறைவாகவும் மாறுகின்றன.

393. மனநிறைவு என்பது இயற்கையாகவே நம்மிடம்
    உள்ள செல்வம்; ஆடம்பரம் என்பது நாமே
   தேடிக் கொள்ளும் வறுமை.


394. எதையும் செய்யாதிருப்பதைவிட ஏதாவது ஒன்றை
    நாள்தோறும் செய்துகொண்டிருப்பது மேல்.

                                      --- வில்லியம் ஜேம்ஸ்


395. மனிதன் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதைவிட அதை
    வாழ்ந்து பார்ப்பதே சிறந்த முயற்சி.
                                 --- சாந்தான்யா

395. நீங்கள் சிரிக்கும்போது உங்களுடன் சேர பலர் வருவார்கள்.
    ஆனால் நீங்கள் அழும்போது யாரும் வரமாட்டார்கள்.

                                        --- கார்லைல்



396. நாம் விரும்பினால் சோகம் மகிழ்ச்சியாக மாறும்.

                                      --- அரவிந்தர்

397. நண்பர்கள் இல்லாவிட்டால் பெரும்பாலோர் துன்பத்தின்
    தூணாகவே நின்றுகொண்டு இருப்பார்கள்.

                                 --- ஜெம்மிடெய்லர்


398. மின்மினிப் பூச்சி பறக்கும் போதுதான் சுடர்விடுகிறது.
    மனிதனும் செயல்படும்போதுதான் உயர்வடைகிறான்.


399. அரைகுறை தன்னம்பிக்கை கூடாது;
    எதிலும் முழுமை வேண்டும்.

                             --- வால்டேர்



400. புது நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு புதியவர்களைச்
    சந்தியுங்கள்.




Friday, January 10, 2014

திருக்குறள்



திருக்குறள் 
 (see below in English)
 1. அறத்துப்பால்
       37.அவா அறுத்தல்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.                         361

அனைத்து உயிர்களுக்கும் எப்பொழுதும் தொடரும்
பிறப்பை உண்டாக்கும் வித்து 'ஆசை' என்பர்
அறிவுடையோர்.

kural-361

It is said that For ever,to all lives Desire's,
the seed that produces birth, ceaseless.

It is said by the wise that for all the lives in
the world at any time; desire is the seed
that produces ceaseless birth.


வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்டவரும்.                        362

ஒருவர்  எதன் மீதாவது ஆசைப்பட எண்ணினால்
பிறவாதிருக்க ஆசைப்பட வேண்டும். ஆசையற்ற
நிலையை மேற்கொண்டால் பிறவி ஏற்படாது.

kural-362

If anyone is desirous, should desire birthless state;
If desires to be desireless,will  reach to such a state.

If  there is anyone among those who know  that birth is
an affliction and also desirous to get the birthless state
only;perhaps,it should be the desire  to be desireless  as
it takes him to such a birthless state.  



வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்பது இல்.                           363

ஆசை யொழித்த நிலைமை போலச் சிறந்த செல்வம்
இவ்வுலகில் இல்லை. அதற்கு நிகரானது வேறெங்கும்
கிடையாது.

kural-363

There's  is no excellent opulanace As desirelessness in the world.
If is one,  the matchless, In other world found.

Anything, mundane is not found so an excellent as
the desirelessness;it is the matchless one found in
other world.


தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.                     364

ஆசை இல்லாமலிருப்பதே தூய்மையாகும்.
ஆசையற்ற நிலை ஏற்பட ஆண்டவனைப்
பிரார்த்திக்க வேண்டும்.

kural-364

For purity is meant To keep away from craving;
Further such a state comes for a truth, by craving.

What is meant by salvation is to cease from longing;
further, such a state comes by craving for truth.


அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.                                  365

ஆசை இல்லாதவர்களே பற்றற்றவர். நிறைவேறாத
ஆசைகளை மட்டுமே விட்டவர் பற்றற்றவரல்லர்.
 
kural-365

The desireless people are said to be the birthless;
But all others are not free from  grievance.

Such men who are repugnant to desires, are said
to be the destroyers of metempsychosis; but others
though removed other causes except desire and get
some relief thereby are  not as equal as they who
rooted  out metempsychosis.


அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.                    366

பேராசைகளை ஒதுக்கி வாழ்வதே தருமம்.
ஏனெனில் ஒருவரை ஆசை வஞ்சித்து
சோகத்தில்லாழ்த்திவிடும்.


kural-366

To dread for coveteousness is said to be righteousness
Because the coveteousness misleads and deceives.

As desire of a person who had already practised till the
Spiritual knoweledge is about to get beatitude and
makes him enter into oblivion; to comport righteous
and fear for longing is the seaming conduct for renouncer.

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.                    367

ஒருவர் ஆசைகளை முழுதும் அழித்தால்,
துன்பமின்றி, வாழ்வதற்கு உரிய நல்ல
செயல் அவர் எண்ணியபடி கிட்டும்.

kural-367

If anyone obliterate His longing  completely.
The good deed that comfort,will reach accordingly.

If a person fearing for his desire and entirely effaces it;
the good deed that comfort, such good deed which give
comfort will be, undestructively,reaching him of its
own accord.

அவாஇல்லார்க் கில்லாகுந்த் துன்பம் அஃதுண்டேல்
தவா அது மேன்மேல் வரும்.                          368

ஆசை இல்லாதவருக்குக் கஷ்டம் இல்லை.
ஆசை இருக்கும் அளவு துன்பங்களும் முடிவின்றி
வந்து கொண்டுதான் இருக்கும்.
 
kural-368

For the desireless men there won't be affliction;
If at all it exists, repeatedly comes disress.

There will be no grief  which could afflict  the reluctant
men; if at all it is found in man even  without any other
cause, all afflictions befall to him on their own accord
over and over.

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.                  369

இடைவிடாமல் இவ்வுலகிலும் இன்பமே
அனுபவிக்க விரும்புகிறவர்கள் துன்பங்களின்
வேரான ஆசையை அழிக்க வேண்டும்.  


kural-369

Desire, the grief of griefs if at all destroyed.
There's incessant bliss even in this world.

If desire, the greatest affliction is being removed
from one's mind; despite the everlasting beatitude,
he will be continuously enjoying bliss,mundane.

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.                             370

என்றும் திருப்தியைத் தராத ஆசையை
அழித்தால் எப்பொழுதும் நிலையான சுகத்தை
அடையலாம்.

kural-370

If natural wishes,the unfilled,are being annilated
such a state will yield the  grandeur which never  end.

If one  can avoid insatiate wishes which could not
be filled up for ever; the  same state provides him
beatitude which is eternal.



  திருக்குறள்
 (see below in English)
 1. அறத்துப்பால்
   38. ஊழ்

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் படி.                         371

செல்வம் சேர்வதற்குக் காரணமான விதி
முயற்சியைத் தரும். செல்வம் அழிவதற்கான
விதி சோம்பலைக் கொடுக்கும்.

kural-371

Formative fate of hoarding wealth makes deligent;
Losing fate for hoarding,makes one indifferent.

According to one's fate, if he is fortunate enough
to save  wealth through uneasing  attempts,it makes
him to be active; but the fate of misfortune makes one
to lose his fortune through his lethargy.

 திருக்குறள்
 (see below in English)
 1. அறத்துப்பால்
                                                 38. ஊழ்

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.                         372

செல்வத்தை இழந்ததற்குக் காரணமான
விதி அறியாமையை ஏற்படுத்தும். செல்வம்
அபிவிருத்தி அடைவதற்குக் காரணமான
விதி அறிவைப் பெருக்கும்.

kural-372

While there is losing fate,it makes man ignorant;
While there 's hoarding fate, it makes him to be deligent.

Even when a man is by all means  wise, if the losing time
befalls to him, such fate will make him a faultering man;
Even though he is unwise while the fate is favourable to
him,it makes him smart to amass wealth.



நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்.                            373

நுட்பமான நூல் பலவற்றைப் படித்தாலும்
ஊழ்வினைக்குத் தக்கபடிதான் ஒருவனுடைய
அறிவு பிரகாசிக்கும்.

kural-373

In subtle learning manifold though versed man be,
'The wisdom, truly his, will gain supremacy.

Although (a man) may study the most polished
treatises, the knowledge which fate has decreed
to him will  still prevail.


இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.                        374

உலகின் இயற்கை இருபகுதிகளாக இருக்கின்றது.
பணக்காரனாவதற்குரிய விதி வேறு.
அறிவுடையவனாவதற்குரிய விதி வேறு.

kural-374

Two fold the fashion of the world:some  live in  fortune's light;
While other some  have souls  in wisdom's radiance bright.

There are (through fate) two different  natures in the world,
hence the difference(observable in men) in (their acquisition of)
wealth,and in their attainment of knowledge.

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.                 375

செல்வத்தைச் சேர்க்க முயலும்போது நாம்
செய்யும் நற்செயல்களையும் விதி தீயவையாக்கிவிடும்.
அதுபோல தீய செயல்களும் நல்லவை ஆகிவிடும்.

kural-375

All things  that good appear will oft have ill success;
All evil things prove good for gain of happiness .

In the acquisition of property, every thing favourable
becomes unfavourable, and (on the other hand)
everything unfavourable becomes favourable,
(through the power of fate).




திருக்குறள்
 (see below in English)
 1. அறத்துப்பால்
                                                 38. ஊழ்

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.                    376

நமக்கு உரியனவல்லாத பொருளை அக்கறையோடு
காப்பாற்றினாலும் விதி அழித்து விடுவதுண்டு.
நமக்குரியவனவற்றை தானம், தருமம், விருந்து,
ஆடம்பரம் என்று சொரிந்தாலும் குறைந்து போகாமல்
நிற்கும்.

kural-376

Things not your own will yield no good, howe'er you guard with pain;
Your own, howe'er you scatter them abroad, will yours remain.

whatever is not conferred by  fate  cannot be preserved although
it be guarded with most painful care; and that, which fate has
made his,cannot be lost, although one should even take it and
throw it away.



வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தாற்கும் துய்த்தல் அரிது.                  377

கோடிக்கணக்கில் சிலர் சொத்துச் சேர்த்தாலும்
அனுபவிக்கும் விதி இருந்தாலொழிய அதை
அனுபவிக்கமுடியாது.

kural-377

Save as the 'sharer' shares to each in due degree,
To those who millions store enjoyment scarce can be.

Even those who gather together millions will only
enjoy them, as it has been determined by the disposer
(of all things).

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்.                      378

விதியால் வரும் துன்பங்கள் வராது நீங்குமென்றால்
அனுபவிக்கச் செல்வம் இல்லாத வறியவர் துறவு
மேற்கொள்வர்.

kural-378

The destitute with ascetics merit share,
If fate to visit with predestined ills would spare.

The destitute will  renounce desire (and become ascetics),
if (fate) do not make them suffer the hindrences to which
they are liable,and they pass away.




நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.                             379

 நல்வினையால் சுகம் ஏற்படும்போது மக்கள்
ஆனந்தப்படுகிறார்கள். தீவினை துயரங்களைக்
கொடுக்கும் போது சபிப்பது ஏன்?

kural-379

When good things come,men view them all as gain;
when evils come,why then should they complain?

How is it that those,who are pleased with good fortune,
trouble them selves when evil comes,(since both are
equally the decree of fate)?


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.                       380

விதியை விட வலிமையுள்ளது எதுவும் இல்லை.
அதை விலக்க ஒரு வழியை ஆராய்ந்தால் அங்கும்
அவ்விதியே முன்வந்து   நிற்கும்.

kural-380

What powers so great as those of Destiny? Man's skill
Some other thing contrieves; but fate's  beforehand still.

What is stronger than fate?  If we think of an expidient
(to avert it), it will  itself be with us before (the thought).

திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
                                              39. இறைமாட்சி

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் அஃஆறும்
உடையான் அரசருள் ஏறு.                      381

படை, குடிமக்கள்,செல்வம், அமைச்சர், நண்பர்,
கோட்டை என்னும் ஆறு அங்கங்களையும்
உடையவன் அரசர்களுள் ஆண் சிங்கம் போன்றவன்.

kural-381

An army, people,wealth,a minister,friends, fort: six things-
Who owns them all,a lion lives  amid  the kings.

He who possesses these six things,an army,a people ,wealth
,ministers,friends and a fortress is a lion among kings.


அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.                   382

அஞ்சாமை,கொடை,அறிவுடைமை, ஊக்கம்
இந்த நான்கும் குறைவு படாமல் இருப்பது
அரசருக்கான இலக்கணம்.


kural-382

Courage, a liberal hand,wisdom,and energy, these four
Are qualities a king adorn for evermore.

Never to fail in these four things, fearlessness,liberality,
Wisdom,and energy,is the kingly character.

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு.                               383

அரசருக்கு காலம் தாழ்த்தாமை,கல்வி,வீரம்
ஆகிய மூன்று குணங்களும் நீங்காமல் இருக்க
வேண்டும்.

kural-383

A sleepless promptitude, knowledge,decision strong:
These three  for aye to rulers of the land belong.

These three things,viz.,vigilance,learning, and bravery,
should never  be wanting in the ruler of a country.

திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
                                              39. இறைமாட்சி



அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.                            384

தரும நெறி தவறாது ஆட்சி செலுத்தி, குற்றங்களைப்
போக்கி, வீரத்தில் கறைபடாது, மானத்தை பெரிதாக
மதித்து வாழ்பவனே சிறந்த அரசன்.

kural-384

Kingship,in virtue failing not,all vice restrains,
In courage failing not, it honour's grace maintains.

He is a king  who,with manly modesty,swerves
not from virtue,and refrains from vice.


இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.                     385

செல்வத்தை விருத்தி செய்வதும், பல நியாயமான
வழிகளில் பொருளைச் சேர்ப்பதும், சேர்த்த பொருளைக்
காப்பதும், அதை நாட்டு நன்மைக்காகத் திறம்படச்
செலவு செய்வதும் தெரிந்தவனே சிறந்த அரசன்.

kural-385
A king is he who treasure gains, stores up, defends,
And duty for his kingdom's weal expends.

He is a king who is  able to acquire(wealth), to lay
it up,to guard, and to distribute it.
திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
                                              39. இறைமாட்சி

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.                            386

காண்பதற்கு எளியவனாய் கடுமையான சொல்
பேசாவதவனாய் இருந்தால் அந்த மன்னனின்
நாட்டை உலகம் புகழ்ந்து பேசும்.
 
kural-386

Where king is easy of acess, where no harsh word repels,
That land's high praises every subject swells.

The whole world will exalt the country of the king who is
easy of acess, and who is free from harsh language.

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான் கண்டனைத்திவ் வுலகு.                                      387

இனிய சொற்களே பேசி, வறுமையுற்றவர்களுக்குக் கொடுத்து,
நாட்டு மக்களைப் பேணும் மன்னனுக்குப் புகழ் கிடைப்பதோடு
அவன் நினைத்தபடி நாடு இருக்கும்.



kural-387

with pleasant speech,who gives  and guards with powerful lieral hand,
He sees the world obedient all to his command.

The world will praise and submit itself to the mind of the king
who is able to give with affability, and to protect all who come
 to him.


முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப்படும்.                           388

நீதி வழங்கி மக்களை வருத்தாமல் காக்கும்
வேந்தனை மக்கள் கடவுளென்று மதித்துக்
கொண்டாடுவர்.

kural-388

Who guards the realm and justice strict maintains,
That king as  god o'er subject people reigns.

That  king, will be esteemed a God among men,
Who performs  his own duties, and protects
(his subjects).


செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.                            389

குறை கூறுவோரின் வார்த்தைகளைச் செவி வெறுக்கும்
நிலையிலும் பொறுமையுடனிருக்கும் கொற்றவனின்
குடை நிழலில் எல்லா மக்களும் வசிக்க விரும்புவர்.

kural-389

The king of  worth,who can words bitter to his ear endure,
Beaneath the shadow of his power the world abides secure.

The whole world will dwell under the umbrella of the king,
who can bear words that embitter the ear.




கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.                      390

தரும குணம், இரக்கம், செங்கோல், குடிகளைக்
காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன்
அரசர்களுக்கெல்லாம் தீபம் போன்றவன்.

kural-390

Gifts,grace,right sceptre,care of people's weal;
These four a light of dreaded kings reveal.

He is the light of kings who has there four  things,
Benevolence,rectitude, and care  for his people.


திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
                                              40. கல்வி


கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.                        391

படிக்க வேண்டிய புத்தகங்களை ஆழ்ந்து
குற்றமில்லாமல் படிக்க வேண்டும்.படித்த
பிறகு அதில் சொல்லியபடி நடக்க வேண்டும்.

kural-391

So learn that you may full and faultless learning gain,
Then in obedience meet to lessons learnt remain.

Let a man learn thoroughly whatever he may learn,
and let his conduct be worthy of his learning.


எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.                      392

எண் என்று சொல்லப்படுபவையும், எழுத்து என்று
சொல்லப்படுபவையும் வாழும் மக்களுக்கு இரு
கண்களாகும்.


kural-392

The twain that lore of numbers and of letters give
Are eyes, the wise declare,to all on earth that live.

Letters and numbers are the two eyes of man.



கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.                          393

கண் உடையவர் என்பவர் கற்றவரே. கல்லாதவருக்கு
முகத்திலுள்ள கண்கள் இரண்டு புண்களெனக் கருதப்படும்.

kural-393

Men who learning gain have eyes, men say;
Blockheads'faces pairs of sores  display.

The learned are  said to have eyes,but the
unlearned have (merely) two sores in their face.


உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.               394

மகிழும்படி ஓரிடத்தில் கூடி 'இனி இவரை
எப்போது சந்திப்போம்' என ஏங்கும்படிப்
பிரிவதே கற்றுத் தேர்ந்தவரின் இயல்பு.

kural-394

You meet with joy , with pleasent thought you part;
Such is the  learned scholar's  wonderous art!

It is the part of the learned to give joy to those whom
they meet,and on leaving,to make them think(Oh!when
shall we meet them again.)


உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.                             395

செல்வர் முன் வறியவர் நிற்பது போல் கற்றவர் முன்
பணிந்து நின்று கல்வி பயின்றவரே உயர்ந்தவர்.
படிக்காதவர் இழிந்தவராவார்.

kural-395

With soul submiss they stand, as paupers front  a rich man's  face;
Yet learned men are first; th'unlearned stand in lowest place.

The unlearned are inferior to the learned, before whom they
stand begging, as the destitute before the wealthy.


தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.                            396

மணலில் உள்ள ஊற்று தோண்டிய அளவே நீர்
சுரக்கும். அதுபோல மனிதர்களுக்குப் படித்த அளவே
அறிவு  சுரக்கும்.

kural-396

In sandy soil, when deep you develve, you reach the springs below;
The more you  learn, the freer streams of wisdom flow.

water will flow from a well in the sand in prportion to
the depth to which it is dug,and knowledge will flow
from a man in proportion to his learning.



யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.                       397

படித்தவனுக்குத் தன் ஊரும், நாடும் போலவே
எல்லா நாடுகளும், ஊர்களும் பிழைப்பையும்,
பெருமையையும் தரும். அப்படி இருக்க, சிலர்
சாகும்வரை படிக்காமல் இருப்பது எதற்காக?

kural-397

The learned make each land their own, in every city find a home;
who, till they die; learn nought, along what weary ways they roam!

How is that any one can remain without learning,even to his death,
when (to the learned man) every country is his own (country),
and every town his own (town)?



ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து.                           398

ஒருவர்க்கு ஒரு பிறப்பில் கற்ற கல்வி அறிவு
அப்பிறப்பில் பயன் தருவதல்லாமல் அடுத்தடுத்து
வரும் ஏழுபிறப்புகளிலும் உதவும்.

kural-398

The man who store of learning gains,
In one, through seven  wolds, bliss attains.

The learning, which a man has acquired in one birth,
will yield him pleasure during seven births.

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.                   399

தான் மகிழ்வதற்குக் காரணமான கல்வி
உலகத்துக்கும் பயன்பட்டால் கற்றறிந்த
அறிஞர் மேலும் அக்கல்வியை நுணுக்கமாக
ஆராய்ந்து கற்பார்கள்.

kural-399

Their joy is joy of all the world,they see; thus more
The learners learn  to love their cherished lore.

The learned will long (for more learning), when they
see that while it gives pleasure to themselves, the world
also derives pleasure from it.




கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.                       400

எவருக்கும் அழிவில்லாத செல்வம் கல்வியே.
அதைத் தவிர மற்ற எதுவும் அத்தகைய
சிறப்புடையதல்ல.

kural-400

Learning is excellence of wealth that none destroy;
To man nought else affords reality of joy.

Learning is the true imperishable riches; all other
things are not riches.

Sunday, December 1, 2013

பொன்மொழிகள்



பொன்மொழிகள்

301. உங்களின் துணிவு, கடின உழைப்பு இந்த இரண்டையும்
    பொருத்துத்தான் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பிறக்கும்;
    நீடிக்கும்.

                                    --- பால்ஜாக்

302. வெற்றியை விட முக்கியமானது நல்ல பண்பு.
     வெற்றிமீது உள்ள தாகத்தால் அதை இழந்துவிட
     அனுமதிக்கக்கூடாது.

                       --- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்  


303. காலத்தின் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா? அப்படியானால்
    உங்கள் வாழ்வின் மதிப்பு உங்களுக்குத் தெரியும்.

                                            --- நெல்சன்


304. உழைப்பு மூன்று பெருந்தீமைகளை நம்மிடமிருந்து
    நீக்குகிறது.
    1. தொந்தரவு 2. தீயொழுக்கம் 3. தரித்திரம்.

                                        --- வால்டேர்


305. செல்வமும் சிபாரிசும் வளர்ச்சிக்கு உதவா.

                                    --- மாத்யூஸ்

306. பார்க்காமல் எதையும் பருகாதீர்கள்;
    படிக்காமல் எதிலும் கையெழுத்துப்
    போடாதீர்கள்.

                           --- ஸ்பானிஷ்


307. வெற்றி என்பது இலட்சியத்தைப் படிப்படியாகப்
     புரிந்து கொள்வதேயாகும்.


308. மனோசக்தியுள்ள மனிதனுக்கு நன்மையான இடம்
    கிடைத்தே தீரும்.

                                      --- எமர்சன்


309. பழக்கம் முதலில் சிலந்திவலையைப் போல்தான்
    இருக்கும். அதைத் தொடர்ந்து செய்தால் இரும்பு
    சங்கிலியைப் போன்று மாறி விடும்.

                                         --- எட்வர்ட்ஸ்

310. ஒருவன் எப்போதும் வீரனாகவே வாழமுடியாது;
    ஆனால் என்றென்றைக்கும் மனிதனாக வாழமுடியும்.

                                        --- கதே


311. செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான்;
    செய்யத்தெரியாதவன் போதிக்கிறான்.

                            --- சாக்ரடீஸ்


312. வளமான காலத்தில் நண்பர்கள் நம்மைத் தெரிந்து கொள்கிறார்கள்.
    வறுமைக் காலத்தில் நண்பர்களை நாம் தெரிந்துகொள்கிறோம்.

                                         --- இங்கர்சால்


313. இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொண்டால் இந்த பிரபஞ்சமே
    இறைவனின் குரலைக் கேட்கச் சொல்லும். பிரபஞ்சமே
    இறைவனின் சிந்தனைகள் என்ற ஞானமும் பிறக்கும்.

                                          --- வால்டேர்



314. மன அமைதி பெற  நீ விரும்பினால் ஒன்று நான் கூறுவேன்.
     பிறர் குறைகளைக் காணாதே; அதற்குப் பதிலாக உன்
    குறைகளைக் காண்.

                                 --- அன்னை சாரதாமணி

315. நீங்கள் முதலில் நல்லவனாய் வாழுங்கள்;
    கெடுதல்கள் எல்லாம் பறந்துபோய்விடும்.
    உலகம் முழுவதும் மாறிவிடும்.

                              ---விவேகானந்தர்  


316. பேசும் முன் கேளுங்கள்,
    எழுதும் முன் யோசியுங்கள்,
   செலவு செய்யுமுன் சம்பாதியுங்கள்,
   முதலீடு செய்யுமுன் விசாரியுங்கள்,
   குற்றம் செய்யும் முன் நிதானியுங்கள்:,
   ஓய்வு பெறும் முன் சேமியுங்கள்,
   இறப்பதற்கு முன் தர்மம் செய்யுங்கள்.

             --- வில்லியம் ஆர்தர்

317. செயலே புகழ்பரப்பும்;வாய் அல்ல.

                             --- ஆவ்பரி



318. திட்டங்கள் தீட்டிக்கொண்டிருப்பதை விட்டு ஒழியுங்கள்;
    முதலில் செயலில் இறங்குங்கள்.

                                     --- பிளாரன்ஸ்

319. சின்னஞ்சிறு செலவுகளைப் பற்றிக் கவனமாக இருங்கள்.
    கப்பலையே கவிழ்ப்பது சிறிய ஓட்டைதான்.

                                    --- பெஞ்சமின் பிராங்கிளின்


320. எதற்கும் அஞ்சாதே; எதையும் வெறுக்காதே; யாரையும்
    ஒதுக்காதே; உன் பணியை ஊக்கத்துடன் செய்.

                                     ---அரவிந்தர்.


321. ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும்.

                                   --- குய்நாட்

322. வாழ்க்கை என்பது எண்ணங்களால் ஆனது.

                         ---மார்க்ஸ் அரேலியஸ்

323. எவன் தவிர்க்க முடியாததைத் துணிச்சலுடன்
    ஏற்றுக்கொள்வதோடு அதை விருப்பத்துடன்
    பொறுத்துக்கொள்கிறானோ அவன்தான் மாமனிதன்.

                             --- நீட்ஸே  
324. நாம் அனைவருமே நமக்குள்ளே ஒரு தெய்வீக
    அக்கினியுடன் பிறந்திருக்கிறோம். இந்த அக்னியைக்
    கொழுந்துவிடவைத்து அதன் பொன்னொளியை
   இந்த உலகத்தில் பரப்புவதற்காக முனைவது
   நமது கடமை.

                             --- ஏ.பி.ஜே. அப்துல்கலாம்



325. வாழ்க்கைத் தேர்வில் காப்பி அடிக்க முடியாது;
    ஏனெனில் அதை நீயே எழுதி நீயே திருத்துகிறாய்.

                                 --- இங்கர்சால்



326. பிறரைச் சீர்திருத்தும் கடமையைவிடத் தன்னை
    சீர் திருத்துவதே முதற்கடமை.

                             --- பெர்னாட்ஷா


327. தன்னைத்தானே வெற்றிக்கொண்டவன் ஆயிரம்
    வீரர்களை வெற்றிக் கொண்டவனைவிட மேலானவன்.

                                  --- புத்தர்


328. என்னுடைய தவறுகளை எனக்குச் சொல்பவர்
    என்னுடைய ஆசிரியராக இருக்கிறார். என்னுடைய
    புண்ணியங்களை எனக்குச் சொல்பவர் எனக்குத்
    தீங்கு செய்கிறார்.

                              --- கன்பூஷியஸ்

329. சிக்கனம்தான் பெரிய வருமானம்.

                             ---செனீகா


330. ஆணவம் கொண்டவருக்கு ஆபத்து எப்பொழுது
     வருமோ  அது ஆண்டவனுக்கே  தெரியாது.


                                   ---வால்டேர்
 

331.வாழ்க்கையில் மட்டும் போராட்டங்கள் இல்லையென்றால்
   இது ஒரு மேடை நாடகமாகவே இருந்திருக்கும்.

                            --- வில்லியம் ஜேம்ஸ்


332. படித்தல் ஒரு மனிதனை முழு மனிதனாய் ஆக்குகிறது.
    எழுதுதல் ஒரு மனிதனை சரியான மனிதனாகச் செய்கிறது.
    வரலாறு ஒருவனை அறிவாளியாக ஆக்குகிறது.
    நீதி நூல்கள் ஒருவனைக் கண்டிப்பானவனாக்குகிறது.

                                   --- பேகன்



333. நடந்ததை அமைதியுடன் ஏற்றுக்கொண்டு
    நடக்க வேண்டியதைக் கவனி.

                                   --- கார்லைல்


334. மனம் சாந்தமாகவும் சமாதானமாகவும்
    இருக்கவேண்டுமென்றால் அதை அறிவுள்ள
    உயர்ந்த எண்ணங்களைக் கொண்டு நிரப்பவேண்டும்.

                                  --- ஆவ்பரி

335. நாம் கோபத்தை வென்றுவிட்டால் அடக்கம்
    தானாக வரும்.

                             --- மகாவீர்



336. ஒருவர் நன்கு வாழ்கிறார் என்றால் அவர் இடைவிடாது
    முயற்சி செய்கிறவர் என்பதே உண்மையான பொருள்.

                                         ---- ஜெர்மனி



337. தன்னைப் பற்றியே சிந்திப்பவன் பிறரைக் கவரமுடியாது.

                                          --கதே

338. உழைத்து உண்பது நமது கடமை. உழைக்காமல் இருப்பது
    நமது மடமை.

                                        --- வால்டேர்


339. பேசப்படும் முன் நன்றாக யோசி.

                             --- ஷேக்ஸ்பியர்


340. உன்னைப் பிறர் விரும்பி நட்பு கொள்ள வேண்டுமென்று
    ஆசைப்பட்டால் மக்களால் பாராட்டத் தக்க நற்பண்புகளை
    நீ பெற்றிருக்க வேண்டும்.

                                 --- ஜார்ஜ்எலியட்


341. வாழ முடிவுசெய்யுங்கள். முடியும் என்று ஆக்கப்பூர்வமாக
    சிந்தித்தால் துன்பங்களைத் துன்பப்பட வைத்துத் தொடர்ந்து
    செயலாற்றல் கொண்டவர்களாக வாழலாம்.

                                      --- இங்கர்சால்


342. மனம் தளர்வதனால் எதையும் சாதிக்க முடியாது.


343. ஒவ்வொருவரும் தன்நெற்றி வியர்வை சிந்தி
    உழைத்துப் பிழைத்தால் மண்ணுலகம்
    விண்ணுலகமாகிவிடும்.

                         --- மகாத்மா காந்தி


344. எப்பொழுதும் உழைத்துக்கொண்டே இரு. உழைப்பு
    வீண் போகாது.உழைப்பிலே சுகமிருக்கிறது. வறுமை,
    நோய் போன்ற குட்டிப் பேய்களெல்லாம் உழைப்பைக்
    கண்டவுடன் ஓடிப்போய்விடும்.
    உழைப்பே இன்பம் தரும்.

                                  --- பஸ்கால்  


345. இன்பத்தில் உண்டாகும் மறதி. துன்பத்தில் உண்டாகும் உறுதி.



346. வானத்து நட்சத்திரங்கள் பாடல்களாக விளங்குதல் போல
     பெண்கள் உலகின் பாடல்களாக விளங்குகின்றனர்.

                                           --- ஹார்கி ரோவ்


347. பிறரை நம்பி வாழ்பவனிடம் வறுமை இருந்து
    கொண்டே இருக்கும்.

                         --- வில்லியம் டெம்பிள்
     
348. உள்ளதைச் சொன்னால் நான் பொல்லாதவன்.
    சொல்லாமல் இருந்தால் நான் அறிவில்லாதவன்.


349. எந்த அளவுக்கு ஒருவர் தம் அறிவைத் தொழிற் கல்வியோடு
     சேர்த்துப் பயன்படுத்துகிறாரோ, அந்த அளவிற்கு முன்னேறுவார்.

                                 --- இங்கர்சால்

350. தன்னம்பிக்கை முன் எந்த ஆயுதமும் நிற்காது.


Wednesday, November 27, 2013

திருக்குறள்



திருக்குறள் 
 (see below in English)
 1.அறத்துப்பால்
32.இன்னா செய்யாமை

சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.                    311

சிறப்பைத் தரும் பெருஞ் செல்வத்தை அடைவதாக
இருந்தாலும் மற்றவர்க்குத் துன்பம் செய்யாதிருப்பதே
குற்றமற்றவரின் குறிக்கோள்.

kural-311

Though ill to neighour wrought should glorious  pride of wealth secure,
No ill to do is fixed decree of men in sprit pure.

It is the determination of the spotless not to cause sorrow
to others although they could (by so causing) obtain the
wealth which confers greatness.

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.                             312

ஒருவன் பகை கொண்டு துன்பம் செய்தாலும் அவனைப்
பழி வாங்க எண்ண மாட்டார் சான்றோர்.

kural-312

Though malice work its worst, planning no ill return,to endure,
And work no ill,  is fixed decree of men in sprit pure.

It is the determination  of the spotless not to do evil,
even in return, to those who have cherished enmity
and done them evil.


செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்.                             313

தான் துன்பம் செய்யாதிருக்க, தனக்குத் துன்பம்
செய்தவருக்கு தான் திரும்பக் கேடு விளைவித்தால்
அது துரத்தி வந்து துன்பத்தைக் கொடுக்கும்.

kural-313

Though unprovoked thy soul malicious foes should sting,
Retaliation wrought inevitable woes will bring.

In an ascetic inflict suffering even those who hate him,
When he has not done them any evil, it will afterwards
give him irretrievable sorrow.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம்  செய்து விடல்.                   314

துன்பம் செய்தவரை தண்டிக்க நினைத்தால்
அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மைகள்
செய்து அவர் செய்த தீமையை மறந்து விட வேண்டும்.

kural-314

To punish wrong, with kindly benefits the doers ply;
Thus same their souls; but pass the ill unheeded by.

The (proper) punishment to those who have done
evil (to you),is to put them to shame by showing
them kindness,in return and to forget both the evil
and the good done on both sides.


அறிவினான் ஆகுவ துண்டோ  பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக்கடை.                   315

பிற உயிர்படும் துன்பத்தைத் தன் துன்பம் போல்
எண்ணிக் காப்பாற்றாவிட்டால் அறிவு பெற்று,
படித்து என்ன பயன்?

kural-315

From wisdom's vaunted lore what doth the learner  gain,
If as his own he guard not others' souls from pain?

What benefit has he derived from his knowledge,
who does not endeavour to keep of pain from another
as much as  from himself?



இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.                 316

கஷ்டத்தைக் கொடுக்கக் கூடியவை என்று
தான் அறிந்தவற்றை மற்றவர்க்குச் செய்யாமல்
விலக்க வேண்டும்.


kural-316

What his own soul has felt as bitter pain,
From making others feel should man abstain.

Let not a man consent to do those things  to
another which , he knows, will cause sorrow.



எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.                             317

துன்பம் தருபவை என்று கருதும் செயல்களை
எப்பொழுதும் எவரிடத்திலும் சிறிதளவும் செய்யாமலிருப்பது
நல்லது.

kural-317

To work no wilful woe, in any wise,through all the days,
To any living soul, is virtue's highest price.

It is the chief of all virtues not knowingly to do any
personal evil, even in the lowest  degree, and at any
time.


தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.                       318

தனக்குத் துன்பம் தரும் என்று தெரிந்ததை மற்ற
உயிர்களுக்கு செய்வது எதற்காக?

kural-318

Whose soul has felt the bitter smart of wrong, how can
He wrongs inflict on ever-living soul of man?

Why  does a man inflict upon other creatures those
sufferings,  which he has found by experience are
sufferings to himself?




பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.                             319

ஒருவருக்கு முற்பகலில் (நிகழ்காலம்) துன்பம் செய்தால்,
செய்தவருக்கு அத் துன்பம் வருங்காலத்தில் தேடிவரும்.

kural-319

If,ere the noontide ,you to others evil do
Before the eventide will evil visit you.

If a man inflict sorrow upon others in the
morning, it will come upon him unsought
in the very evening.


நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டுபவர்.                               320

எவருக்குத் துன்பம் செய்தாலும் அத்துன்பம் செய்தவரை
விடாது பற்றிக்கொள்ளும். அதனால் துன்பமின்றி வாழ
விரும்புபவர் யாருக்கும்  துன்பம் செய்யமாட்டார்கள்.

kural-320

O'er every evil-doer evil broodeth still;
He evil shuns who freedom seeks from ill.

Sorow will come upon those who cause pain to others;
therefore those, who desire to be from sorrow,
give no pain to others.

திருக்குறள்
 (see below in English)
 1.அறத்துப்பால்
33.கொல்லாமை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.                     321

தருமவழி எதுவென்றால் எந்த உயிரையும்
கொல்லாதிருத்தலாகும். கொல்லுதல் தருமமற்ற
மற்ற செயல்களையும் செய்ய வைக்கும்.

kural-321

What is the work  of virtue? 'Not to kill',
For 'killing' leads to every work of ill.

Never to destroy life is the sum of all virtuous conduct.
The destruction of life leads to every evil.

and the preservation of the mainfold life of other creatures.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.               322

பகிர்ந்து கொடுத்து, தானும் உண்டு, பல உயிர்களைக்
காப்பாற்றுதல், அறநூலார் தொகுத்த அறங்கள்
எல்லாவற்றிலும் முதன்மையானது.

kural-322

Let those that need partake your meal;  guard every-thing that lives;
This the chief and sum of lore that hoarded wisdom gives.

The chief of all (the virtues) which authors have summed up,
is the partaking of food that has been shared with others,

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.                      323

உண்மை பேசுவதை விட ஓர் உயிரையும்
கொல்லாதிருப்பது முதன்மையானது.

kural-323

Alone,first of goods things, is 'not to slay',
The second is , no untrue  word to stay.

Not to destroy life is an incomparably (great)
good next to it in goodness ranks freedom falsehood.

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.                                324

நல்ல வழி என்று சொல்லப்படுவது எதுவென்றால்
எந்த உயிரையும் கொல்லாத அறத்தைக் கடைப்பிடிப்பது.

kural-324

you ask , What is the good and perfect way?
'Tis  path of him who studies not to slay.

Good path is that which considers how it may
avoid killing any  creature.

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.                     325

வாழ்வின் துயரங்களைக் கண்டு பயந்து துறவறம்
மேற் கொண்டவர்களுள்ளும், உயிர் வதை செய்ய
அஞ்சி, கொல்லா விரதத்தைப் போற்றுபவன்
உயர்ந்தவனாவான்.


kural-325
 
Of those who 'being' dread, and  all  renounce, the chief are they,
Who dreading crime of slaughter, study nought to slay.

Of all those who, fearing the permanence of earthly births,
have  abandoned desire, he is the chief who,fearing(the guilt of)
murder,considers how he may avoid the destruction of life.


கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.                       326


கொல்லா நோன்பைக் கடைப்பிடித்து வாழ்கின்றவன்
ஆயுளில் உயிரைக் கவரும் யமனும் பார்வை செலுத்திக்
குறைக்கமாட்டான்.

kural-326

Ev'n death that life devours, their happy days shall spare,
Who law,'Though shall not kill', uphold with  reverent care.

Yama,the destroyer of life,will not attack the life of him,
who acts under the determination of never destroying life.


திருக்குறள்
 (see below in English)
 1.அறத்துப்பால்
33.கொல்லாமை

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.                        327

தன் உயிர் போவதாக இருந்தாலும் அதைத்
தடுப்பதற்காக தான் வேறோர் உயிரைப்
போக்கும் செயலைச் செய்யக்கூடாது.

kural-327

Though thine own life for that spared life the price must pay,
Take not from aught that lives gift of sweet life away.

Let no one do that which would destroy the life of another,
although he should by so doing, lose his own life.


of great good.

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை.                            328

கொலை செய்வதால் பெரிய முன்னேற்றம்
ஏற்படுமென்றாலும், சான்றோர் உயிர்க்கொலையால்
வரும் முன்னேற்றத்தைக் கேவலமாக நினைப்பர்.

kural-328

Though great the gain of good should seem, the wise
will any gain by staughter won despise.

The  advantage which might flow from destroying life
in sacrifice , is dishonourable to the wise (who renounced
the world) ,even although it should be said to be productive



கொலைவினைய ராகிய மாக்கள் புலவினையர்
புன்மை தெரிவா ரகத்து.                       329

கொலைத் தொழிலைச் செய்பவர்கள், நல்லவர்கள்
கருத்தில் கேவலமானவராய்த் தோன்றுவர்.  

kural-329

Whose trade is 'killing' always vile they show,
To minds of them who what is vileness know.

Men who destroy life are base men, in the estimation
of  those who know the nature of meannes.



உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.                              330

சதா வியாதியுடன், தரித்திரமும் சேர்ந்து கொள்ள,
தீய தொழில் செய்து வாழ்பவரை, சான்றோர் சென்ற
பிறவியில் கொலைகாரனாய் இருந்திருப்பான் என்று
கூறுவர்

kural-330

Who lead a lothed life in bodies sorely pained,
Are men, the wise  declare, by guilt of slaughter stained.

(The wise) will say that men of diseased bodies,
who live in degradation and in poverty, are those
who separated the life from the body of animals
(in a former birth).


திருக்குறள்
 (see below in English)
 1. அறத்துப்பால்
34. நிலையாமை

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.                     331

நிலையில்லாதவற்றை நிலையானவை என்று
நினைத்து நடக்கும் பேதமை இழிந்த அறிவாகும்.

kural-331

Lowest and meanest lore,that bids men trust secure,
In things that pass away, as things  that shall endure!

That ignorance which considers those things to be
stable which are not so, is dishonourable(to the wise).


கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.                             332

திரண்ட செல்வம் சேர்வது நாடக அரங்கில் கூடும்
கூட்டத்தைப் போன்றது. அந்தச் செல்வம் வற்றிப்
போவது நாடகம் முடிந்து கூட்டம் கலைவதைப்
போன்றது.

kural-332

As crowds  round dancers fill the hall, is wealth's increase;
Its loss, as throngs  dispersing, when the dances cease.

The acquisition of wealth is like gathering  together of an
assembly for a theatre; its expenditure is like the breaking
up of that assembly.

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.                         333

செல்வம் நில்லா இயல்புடையது. தரும
புண்ணியங்கள் நிலையானவை. மறுபிறப்புக்கும்
வரும்.அதனால் நிலையாச் செல்வத்தைக் கொண்டு
நிலையான அறச் செயல்களை அடையவேண்டும்.

kural-333

unenduring is all  wealth; If you wealth enjoy,
Enduring works in working wealth straightway employ.

Wealth is perishable; let  those who obtain it immediately
practise those (virtues) which are imperishable.


நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.                    334

காலத்தின் ஓர் அளவுபோல் காட்டி நாள்
என்பது ஒரு வாளைப் போல நம் ஆயுளை
அறுத்துக் கொண்டு வருகிறது என்பர் அறிஞர்.    

kural-334

As 'day' it vaunts itself, well understood,'tis  knife',
That daily  cuts away  a portion from thy life.

Time,which shows itself ( to the ignorant) as if it
were  something (real) is in the estimation of the
wise(only) a saw which cuts down life.


திருக்குறள்
 (see below in English)
 1. அறத்துப்பால்
34. நிலையாமை

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப்படும்.                           335

மரணம் வரும் சமயம் பேசமுடியாது. விக்கல்
வந்து  திணறடிக்கும். அதனால் அதற்குள்
தருமச்  செயல்களை வேகமாகச் செய்வது நல்லது.  

kural-335

Before the tongue lie powerless,'mid the gasp of gurgling breath,
Arouse thyself, and do good deeds beyond the power of death.

Let virtuous deeds be done quickly, before the biccup comes
making the tongue silent.



நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.                    336

ஒருவன் நேற்று இருந்தான்; இன்று இல்லாது
போனான் என்று சொல்லும் பெருமையை
உடையது இவ்வுலகம்.


kural-336

Existing yesterday,today to nothing hurled!
Such greatness owns this transitory world.

This  world possess  the greatness that one
who yesterday was is not today.

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.                      337

அறிவற்றவர் வாழ்க்கையின் நிலையாமையை
பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. ஆனால் அவர்
மனத்தில் பயனற்ற எண்ணங்கள் ஒரு கோடிக்கும்
மேல் எழும்.  

kural-337

Who know not if their happy lives shall last the day,
In fancies  infinite beguile the hours away!

Innumerable are the thoughts which occupy the mind
of (the unwise), Who know not that they shall live
another moment.


குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிடை நட்பு.                     338

உடம்பொடு உயிருக்கு உள்ள தொடர்பு
முட்டை தனித்துக் கிடக்க, பறவை பறந்து
போகும் இயல்பாகும்.
kural-338

Birds fly away, and leave the nest deserted bare;
Such is the short-lived friendship soul and body share.

The love of the soul to the body is like (the love of)
a bird to its egg which it flies away from and leaves
empty.


உறங்கு வதுபோலும் சாக்காடு  உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.                      339

மரணம் என்பது  தூங்குவதைப் போன்றது.
பிறப்பு என்பது தூக்கம் நீங்கி விழித்துக்
கொள்வதைப் போன்றது.

kural-339

Death is sinking into slumbers deep;
Birth again is waking out of sleep.

Death is like sleep; birth is like awaking
from it.


புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.                      340

   உடம்பின் ஓர் ஓரத்தில் தங்கி இருக்கும்
உயிருக்கு நிலையாக வசிக்க ஓர் இடம் இதுவரை
அமையவில்லையோ?

kural-340

The soul in fragile shed as lodger courts repose:-
Is it because no home's conclusive rest  it knows?

It seems as if the soul, which takes a temporary
shelter in a body, had not attained a home.




திருக்குறள்
 (see below in English)
 1. அறத்துப்பால்
                                              35. துறவு

யாதனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.                           341

    ஒருவன் எந்தெந்தப் பொருளில்
ஆசைவைப்பதில்லையோ அந்தந்தப்பொருள்களால்
ஏற்படும் துன்பங்கள் அவனை அடைவதில்லை.

kural-341

From whatever,aye,whatever,man gets free,
From  what,aye,from that, no more of pain hath he!

whatever thing, a man has renounced, by that thing;
he cannot suffer pain.



வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.                        342

துறவறம் பூண்டபின் அடையும் பெருமைகள்
பலவாகும். அப்பெருமைகளை அடைய
விரும்பினால் செல்வமும்,வசதிகளும் இருக்கும்
போதே துறவு கொள்ளவேண்டும்.

kural-342

'Renunciation'  made-eve'n here true pleasures men acquire;
'Renounce' while time is yet, if to those pleasures you aspire.

After a man has renounced (all things), there will still be
many things  in this world(which he may enjoy; if he should
desire them, let him,while it is time abandon(the world)


அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு.                                  343

ஐம்புலன்களையும் அடக்கி வென்றவரே துறவு கொள்ள
முடியும். ஐம்புல நுகர்ச்சிக்குரியவை எல்லாவற்றையும்
ஒருசேர விடவேண்டும்.

kural-343

'Perceptions of the five' must all expire;-
Relinquished in its order each desire.

Let the five senses be destroyed; and at the
same time, let everything be abandoned that
(the ascetic)has(formerly)desired.

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.                            344

தவம் செய்ய ஓர் ஆசையும் இல்லாதிருக்க  வேண்டும்
என்பது மரபு. பற்று உடையவராக இருந்தால் மீண்டும்
மயங்குவதற்கு ஏதுவாகும்.

kural-344

'Privation absolute' is penance true;
'Possession' brings bewilderment anew.

To be altogather destitute is the proper
condition of those who perform austerities;
If they possess anything, it will change their
(resolution) and  bring them back to their
confused state.


மற்றும் தொடர்ப்பாடு எவென்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.                        345

பிறவியைத் தொலைக்க எண்ணுபவர்க்கு உடம்பே
சுமை. அப்படி இருக்க மற்றவற்றில் பற்று வைத்தால்
எப்படி?

kural-345

To those who sev'rance seek from being's varied strife,
Flesh is burthen sore; what then other bonds of life?

What means the addition of other things those who
are attempting to cut off (future) births, when even
their body is too much (for them).



யான்எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.                                346

நான்,இது என் சொந்தம் என்ற பற்றுக்களை உண்மையாக
விட்டவன் தேவர்களுக்கும் அப்பாற்பட்ட உலகினை
அடைவான்.
kural-346

Who kills conceit that utters "I" and 'mine',
shall enter realms above the powers divine.

He who destroys the pride which says "I",
"mine" will  enter a world which is difficult
even to the Gods to attain.


பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.                          347

பற்றுக்களை விரும்பி அவற்றை இறுகப்
பற்றிக் கொள்வோரை துன்பங்கள் விடாது
இறுகப் பற்றிக் கொள்ளும்.

kural-347

Who cling to things that cling and eager claps,
Griefs cling to them with  unrelaxing grasp.

Sorrows will never let go  their hold of those
who give not up their hold of desire.



தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.                  348

ஆசைகள் முழுவதையும் துறந்தவரே
உயர்ந்தவராவார். அவ்வாறு துறக்காதவர்
மயங்கி, பிறப்பென்னும் வலையில் அகப்பட்டவராவார்

kural-348

Who thoroughly'renounce' on highest height are set;
The rest bewildered, lie entangled in the net.

Those who have entirely renounced (all things  and
all desire) have obtained (absorption into God);
all others wander in confusion, entangled in the net
of (many ) births.

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.                    349

    ஆசைகளை முழுதும் ஒழித்தவரே
பிறப்பென்னும் துன்பத்தில் அகப்படாதவராவார்.
சிறிது ஆசை இருந்தாலும் கூட பிறவித் துன்பம்
வாய்த்து நிலையாமை உண்டாகும்.

kural-349

When  that which clings falls off , severed is being's tie;
All else will then be seen as instability.

At the moment in which desire has been abandoned,
(other) births will be cut off; when that has not been done,
instability will be seen.



பற்றுக பற்றற்றான் பற்றிணை அப்பற்றைப்
பற்றுக பற்று  விடற்கு,                            350

பற்றற்றவரான  இறைவனின் தாளினை மட்டுமே
பற்றிக் கொள்ளவேண்டும். எல்லா ஆசைகளையும்
ஒழிக்க அப்பற்றைக் கை கொள்வது  சிறப்பானது.

kural-350

Cling thou to that which He, to  whom nought clings, hath bid thee cling,
Cling to that bond,to get thee from every Clinging thing.

Desire the desire of Him who is without desire; in order to renounce
desire,desire that desire.


திருக்குறள்
 (see below in English)
 1. அறத்துப்பால்
                                              36. மெய்யுணர்தல்

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.                     351

உண்மை அல்லாதவற்றை நிஜம் என்று நம்பி
அறியாமையால் மயங்குவோருக்குச் சிறப்பற்ற
பிறவி வாய்க்கும்.

kural-351

Of  things devoid of truth as real things men deem;-
Cause of degraded birth the fond  delusive dream!

Inglorious births are produced by the confusion(Mind)
which considers those things to be real which are not real.
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.                       352

மயக்கம் நீங்கிக் குற்றமற்ற மெய்யுணர்வை
உடையவர்க்கு அம்மெய்யறிவு அறியாமையை
நீக்கி இன்பத்தைத் தரும்.

kural-352

Darkness departs, and rupture  springs to men who see,
The mystic vision  pure,from  all delusion free.

A clear, undimmed vision of things will deliver its
possessors fromthe darkness of future births,
and confer the felicity ( of heaven).


ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியதுடைத்து.                      353

ஐயம் நீங்கி மெய்ப்பொருளைக் கண்டவர்களுக்கு
பூலோகத்தை விட சொர்க்க லோகம் பக்கத்தில்
உள்ளதாகும்.

kural-353

When doubts disperse, and mists of error  roll
Away, neaer is heav'n than  earth to sage's soul.

Heaven is nearer than earth to those men of purified
minds who are freed from doubt.


ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.                  354

மெய்யுணர்வு இல்லாதவர் ஐம்புலங்களையும்
அடக்கிக் கட்டுப்படுத்துவதனால் ஒரு
பிரயோஜனமும் இல்லை.

திருக்குறள்
 (see below in English)
 1. அறத்துப்பால்
                                              36. மெய்யுணர்தல்


kural-354

Five fold perception  gained, what benefits accrue
To them whose spirits lack perception  of the true?

Even those who have all the knowledge which can be
attained by the five senses,will derive no benefit from
it, if they are without a knowledge of the true nature
of things.


எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.                    355

ஒரு பொருள் எத்தன்மையுடையதாக இருந்தாலும்
(வெளித்தோற்றத்தைக் கொண்டு மதிப்பிடாமல்)
அப்பொருளின் உண்மையான இயல்பை அறிவதே
மெய்யுணர்வாகும்.  

kural-355

Whatever thing, of  whatsoever kind it be,
'Tis wisdom's part in each the  very  thing to see.

(True) knowledge is the perception concerning
every thing of whatever kind, that the thing is
the true thing.


கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.                                 356

படிக்க வேண்டியதைப் படித்து மெப்பொருளை
அறிந்தவர் மீண்டும் இப்பிறப்பிற்கு வராத
வழியை அடைவர்.

kural-356

Who learn, and here the knowledge of the true obtain,
Shall find the path that hither cometh not again.

They, who in this birth have learned to know the True
Being, enter the road which returns not in to this world.

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.                  357

ஒருவருடைய உள்ளம் உண்மைப் பொருளை
ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால் அவருக்கு
மீண்டும் பிறவி வாய்க்காது.    


kural-357

The mind that knows with certitude what is , and ponders  well,
Its thoughts on birth again to other life need  not to dwell.

Let it not be  thought there is another birth for him whose
mind having thoroughly considered(all it has been taught)
has known the True Being.


பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.                           358

பிறப்புக்குக் காரணமான அறியாமை நீங்கும்
பொருட்டு முக்திக்குக் காரணமான இறைவனைக்
காண்பதே மெய்யறிவு.                                

kural-358

When folly,cause of bitrhs,departs; and soul can view
The truth of things, man's  dignity-'tis wisdom true.

True knowlege consists in the removal of ignorance;
which is (the cause of ) births, and the perception of
the true Being who  is (the bestower of) heaven.


சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.                       359

எல்லா உயிர்களுக்கும் துணையான கடவுளை
அறிந்து ஆசைகளைத் துறந்து நடக்கவல்லவரை
துன்பங்கள் தீண்டாது.



kural-359

The true 'support' who knows-rejects'supports' he sought before-
Sorrow that clings all destroys,  shall cling to him no more.

He who so lives as to know Him who is support of all  things
and abandon all desire, will be freed from the evils which
would otherwise cleave to him and destroy (his efforts
after absorption).


காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.                        360

ஆசை, கோபம், மயக்கம் இந்த மூன்றையும்
அழித்து வாழ்பவரைத் துன்பங்கள் தொட
முடியாத தூரத்தில் நின்று கெடும்.

kural-360

When lust and  wrath and error's tripple tyranny is o'er
Their  very names  for  aye extinct, then pain shall be no more.

If the very names of these three things, desire,anger and
confusion of mind,be destroyed, then will also perish the
evils(which flow from them).


Sunday, October 6, 2013

பொன்மொழிகள்

பொன்மொழிகள்

251. புகழை வெறுக்கத் தெரிந்துகொள். காரணம் தீமையை
    வளர்ப்பவை புகழ்மொழிதான்.  

                                        --- ஹதீஷ்

பொன்மொழிகள்

252. தடைகள் ஏற்படும் போதெல்லாம் துணிவு
    இருந்தால்தான்  செயல்பட முடியும்.

                                   ---  டால்ஸ்டாய்



253. மேலோர்கள் கெட்டாலும் அவர்களுடைய மேன்மையான
    பண்புகள் ஒரு போதும் கெடாது.

                                  ---- லாங்பெல்லோ
                     
                                   
254. பலவீனமானவர்கள் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை
    வைக்கிறார்கள்.
    பலமுடையவரோ காரணகாரியத்தில் நம்பிக்கை
    வைக்கின்றனர்.

                                 --- எமர்சன்



255. தனது நாட்டை நேசிக்காதவன் எதையுமே
    நேசிக்கமுடியாது.

                                --- பைரன்


256. துன்பமும் தோல்வியும் நம் மனத்தைப் பதப்படுத்தும்
    சோதனைகள். பதப்படாத மனத்தால் எதையும்
    சாதிக்க முடியாது.

                               ---சுவாமி விவேகானந்தர்


257. நீ எண்ணித் துணிந்த பின்பு உலகம் முழுவதும்
    வாளெடுத்து வந்து எதிர்த்து நின்ற போதும் உன்னுடைய
    இலட்சியத்தைக் கைவிடாதே.  



258. நீங்கள் செயல்படுகிறவர்கள் என்றால் அறிவைத்
    தேடிப் பெற்றுப் பயன்படுத்திக் கொள்கிறவராக
    இருக்க வேண்டும்.

                                 --- எஸ்.ஷர்மா

259. தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதைவிட பெரிய
    அவமானம் வேறில்லை.

                               ---காந்திஜி

260. கூடிவாழும் இயல்பு இல்லாதவனுக்கு சமுதாய வாழ்வு
    சுகமாக இருக்காது.

                                  --- ஷேக்ஸ்பியர்

261. பிறரைப் பாராட்டவும் அங்கீகரிக்கவும் சிக்கனம் காட்டாதீர்கள்.

                                         ---- ஸ்டேபிள்



262. நண்பன் இதயத்தின் ஒளியாக இருக்கிறான்.

                                 --- எமர்சன்

263. இந்த நிமிடத்தை முறையாகப் பயன்படுத்தும் போது
    இன்றைய நாளை முறையாகப் பயன்படுத்திக்கொள்கிறோம்.  


264. அதிருப்தி என்பது நம்பிக்கையின்மையாகும்.

                                        --- எமர்சன்



265. தொழில் இல்லாத கல்வி நீரின்றி வாடும் தாவரத்தைப் போன்றது.
   
                                             ---போவி


266. செலவுக் கணக்கு எழுதாதவன் சேமிக்கத் தெரியாதவன்.



267. உங்களால் நம்பிக்கையுடன் கனவுகாண முடியும் என்றால்
    கனவில் கண்டதை நிஜத்திலும் செயல்வடிவில் செய்து
    முடிக்கமுடியும்.

                                             --- பில்கேட்ஸ்


268. நீங்கள் செய்யும் தவறை உடனே திருத்திக் கொள்ளுங்கள்.
    இல்லாவிட்டால் இன்னொரு தவறைச் செய்தவராகி
    விடுவீர்கள்.
                                      --- கன்பூஷியஸ்


269. காலம் நதியைப் போன்றது; உற்பத்தியாகும் இடத்துக்கு
    அது திரும்பவே திரும்பாது.


270. தன்னம்பிக்கை ஓர் உந்து சக்தி. அது உங்களையும்
    ஊக்குவிக்கும். அடுத்தவரையும் ஊக்குவிக்கும்.

                                       ---வால்டேர்


271. துன்பங்களைப் பலர் பொறுத்துக் கொள்கின்றனர்,
    ஆனால் அவமதிப்பைச் சகிப்பவர்கள் வெகுசிலரே.

                                     --- தாமஸ்


272. இனிய சொல்லால் இரும்புக் கதவைக்கூடத் திறக்கலாம்.

                               --- துருக்கிய பழமொழி          



273. நம் கையில் பணமிருந்தால் எல்லா வாசல்
   கதவுகளும் திறந்திருக்கும்.

                                --- இங்கர்சால்


274. நல்லொழுக்கம் பகைவனையும் வென்று விடுகிறது.

                                 --- சாணக்கியன்


275. ஊக்கமுள்ள மனிதன் தன் கடமைகளைத் தொடர்ந்து
    செய்து கொண்டே இருப்பான்.

                                 --- எமர்சன்

276. ஏழைகள் உணவைத் தேடுகிறார்கள்;
    செல்வர்கள் பசியைத் தேடுகின்றனர்.

                      --- பெஞ்சமின் பிராங்ளின்  


277. வாழ்க்கையில் தைரியமாக எதையும் அணுக
   முடியாதவர்களுக்கு அவர்கள் விரும்பிய எதுவுமே
   கிடைப்பதில்லை.          
                               --- தாமஸ் ஏ. செப்வில்


278. அன்பினால் ஊக்கப்பட்டு அறிவினால் நடத்தப்படுவது
    வாழ்க்கை.

                               --- ரஸ்ஸல்

279. எது நன்மை என்பது அதை இழந்தபின்தான் தெரியும்.

                                   ---- இங்கர்சால்


280. நாளைக்கு நல்ல காரியம் செய்வேன் என்று
    சொல்பவன் முட்டாள். அறிவுள்ளவன் நேற்றே
    அதை செய்து முடித்திருப்பான்.

                                   --- மார்ஷல்



281. சரியாகத் சிந்திக்கத் தெரிந்துகொண்டால் உலகத்தையே
    மாற்றிவிடலாம்.

                                --- போவீ

282. நீங்கள் உயர்த்திக்கொள்ள விரும்பினால்
   வேறொருவரை உயர்த்துங்கள்.

                     --- டி. வாஷிங்டன்


283. நட்பு கொள்வதில் நிதானமாக செல்லவும். ஆனால்
    நட்பு கொண்டபின் உறுதியாகவும் நிலையாகவும்
    நிற்கவும்.

                             --- சாக்ரடீஸ்




284. பிறருடைய பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால்
    மகத்தான காரியம் எதையும் செய்யமுடியாது.


285. உன் நோக்கத்தை வாளால் சாதித்துக் கொள்வதைவிட
    புன்சிரிப்பால் சாதித்துக்கொள்வதே சிறந்தது.

                                     --- ஷேக்ஸ்பியர்

286. நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்தி முனையில்
    நடப்பதைப்போல மிகவும் கடினமானதுதான். எனினும்
    எழுந்திரு, விழித்துக்கொள். மனம் தளராதே. நீ அடைய
   வேண்டிய உனது லட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.

                                    --- விவேகானந்தர்


287. திடமான மனம் இருந்தால் வெற்றி தானகவே தேடிவரும்.

                               --- சாணக்கியன்

288. எதையும் நம்பிக்கையுடன் தாங்குபவன் இறுதியில்
    வெற்றியடைவான்.

                              --- பெர்னியஸ்


289.உள்:ளத்தில் மட்டும் அன்பு இருந்தால் போதாது:
   அது செயலில் பயன்படவும் வேண்டும்.

                                       --- டால்ரிக்ஸ்



290. உலகிலுள்ள எந்த சக்தியாலும் அளக்க முடியாத சக்தி
    ஒன்று உள்ளது. அதுவே மனிதனுடைய மனோசக்தி.

                                      --- ஸ்டாலின்

291. கவலை நமது சவப் பெட்டியில் ஓர் ஆணியை
    அறைகிறது.சிரிக்கும் ஒவ்வொரு சிரிப்பும் ஓர்
   ஆணியைக் கழற்றுகிறது.

                          --- வால்காட்


292. நடந்ததை அமைதியுடன் ஏற்றுக்கொண்டு
    நடக்க வேண்டியதைக் கவனி.

                             --- கார்லைல்


293. உழைப்பு கொழுப்பைக் கரைக்கும்; கொழுப்பு கண்ணை
    மறைக்கும்.

                                 --- வாரியார்


294. இரண்டு சதவீதம் கற்பனையும் தொண்ணூற்று
    எட்டு சதவீதம் கடும் உழைப்பும் உள்ளவனே
    மேதையாக இயலும்.

                              --- மில்டன்



295. உன் மகிழ்ச்சி நிலைத்திருக்க வேண்டுமானால்
    எதிலும் மிதமாக இரு.

                            --- சார்லஸ்  அகஸ்டின்


296. இவ்வுலகில் கடமையை விட கவலையே பலரைக்
    கொன்று விடுகிறது. ஏனெனில் அநேகர் கடமையைச்
    செய்வதைவிட்டுவிட்டுக் கவலைப்பட்டுக்கொண்டேயிருக்கின்றனர்.

                                --- இராபர்ட்


297. ஆசை பேராசையாகவும்,அன்பு வெறியாகவும் மாறும் போது
     அமைதி அவ்விடத்தைவிட்டு நகர்ந்து விடுகிறது.

                                   ---மாக்ஸிம் கார்க்கி.


298. மற்றவர்களிடம் வாதமிடாதே. குற்றங்களில் எல்லாம்
    பெரிய குற்றம் வாய்ப்பேச்சுதான்.

                             --- ஆல்பிரட் நோபல்


299. வீண்பேச்சு, வீண்வம்பு, வீராப்பு குடும்பத்தைக் கெடுக்கும்.
    விடியும் வரை தூங்குவது கஷ்டத்தைக் கொடுக்கும்.

                               --- பெர்னாட்ஷா



300. மனத்தை மறைக்க முடியாது. உள்ளதே உள்ளிருந்து
    வெளிவரும்.

                                     --- ஸ்ரீ அரவிந்தர்

Sunday, September 29, 2013



திருக்குறள்
 (see below in English)
 1.அறத்துப்பால்
29. கள்ளாமை

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.                       281

தான் பிறர் பழிக்கு ஆளாகக்கூடாது என நினைப்பவர்,
எவர் பொருளையும் வஞ்சனையால் அடையாதபடி
மனத்தைக் கட்டுப்படுத்தவேண்டும்.

kural-281

Who seeks heaven's joys,from  impious levity secure,
Let him from every fraud preserve his spiit pure.

Let him , who desires not to be despised, keep his mind
from (the desire of) defrauding another of the smallest
thing.




உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.                      282

தவறான எண்ணங்களை மனத்தால் நினைப்பதும்
குற்றமே. அப்படியிருக்க மற்றவர் உடைமையை
வஞ்சகமாய் அபகரிக்க நினைப்பது மாபெரும் குற்றம்.

kural-282

'Tis sin if in the mind  man but thought conceive;
'By fraud i will my neighbour of his wealth  bereave'.

Even the thought (of sin) is sin; think not then  of crafiily
stealing the property of another.


களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக்கெடும்.                     283

மற்றவரை வஞ்சித்து சேர்த்த செல்வம்
முதலில் வளர்வது போல் தோன்றி,
எல்லையைத் தாண்டியபின் அழிந்து விடும்.


kural-283

The gain that comes by fraud,although it seems to grow
with limitless increase, to ruin swift shall go.

The property, which is acquired by fraud, will entirely
perish, even while it seems to increase.



களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.                                  284

மற்றவர் பொருளை வஞ்சித்துச் சேர்த்துக் கொள்ளும்
ஆசை அப்போது இன்பமாகி, பலன் கொடுக்கும்போது
நீங்கா துன்பத்தைத் தரும்.

kural-284

The lust inveterate of fraudful gain,
yields as its fruit undying pain.

The eager desire of defrauding others will,
When it brings forth  its fruit,  produce undying
sorrow.


அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.                  285

கருணையைப் பெரிதாக மதித்து அன்போடு
நடப்பது மற்றவர் பொருளை அபகரிக்கத் திட்டமிட்டு,
பொருளை இழந்தவர் சோகமாயிருப்பதை லட்சியம்
செய்யாதவர்களுக்குக் கிடையாது.


kural-285

'Grace' is not in their thoughts, nor know they kind affection's power,
Who neighbour's goods desire, and watch for his unguarded hour.

The study of kindness and the excercise of benevolence
is not with those who watch for another's forgetfulness,
though  desire of his property.



அளவின் கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.                                286

திருடுவதில் ஆசை உள்ளவர் ஆடம்பரமின்றி
சிக்கனமாய் வாழும் நெறியைக் கடைப்பிடிக்க
மாட்டார்.


kural-286

They cannot walk  restrained in wisdom's measured bound,
In whom inveterate lust of fraudful gain is found.

They cannot walk stead fastly, according to rule,
who egarly desire to fraud others.



களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.                       287

வருமானத்திற்கேற்றபடிச் செலவு செய்து
வாழ்பவருக்குப் பிறர் பொருளை அபகரிக்கும்
திருட்டு புத்தி என்ற இருண்ட அறிவு ஒரு
நாளும் வராது.

kural-287

Practice of fraud's dark cunning arts they shun,
Who long for power by 'measured wisdom' won.

That black-knowledge which is called fraud,
is not in those who desire that  greatness
which is called rectitude.


அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.                  288

அளவறிந்து வாழ்கின்றவர் நெஞ்சில் நிலையாக
அறம் குடியிருப்பது போல் கள்வர்களின் மனத்தில்
வஞ்சகம் குடி கொண்டிருக்கும்.

kural-288

As virtue dwells in heart that 'measured wisdom's gains;
Deceit in hearts of fraudful men established reigns.

Deceit dwells in the mind of those who are  conversant
with fraud, even as virtue in  the minds of those who
are conversant with rectitude.

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.                    289

களவைத் தவிர மற்ற நல்ல வழிகளைக்
கடைப்பிடிக்காதவர் அதையே அள்:அவில்லாமல்
செய்து அழிவைத்தேடிக்கொள்வர்.

kural-289

Who have  no lore save that which fraudful arts supply,
Acts of unmeasured vice committing straightway die.

Those, who are acquainted with nothing but fraud,
will perish  in the very commission of transgression.



கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு.                              290

களவாடுபவர்களுக்கு வாழ்வில் பெருமை கிடையாது.
உயிருக்கும் உறுதி இல்லை. பிறர் பொருளை
விரும்பாதவர்களுக்கு தேவலோக வாசம் காத்திருக்கும்.

kural-290

The fraudful forfeit life and being here below;
Who fraud eschew the bliss of heavenly beings know.

Even their body will fail the fraudulent, but even the
World of Gods will not fail those who are free from fraud.
திருக்குறள்
 (see below in English)
 1.அறத்துப்பால்
30.வாய்மை




வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.                          291

வாய்மை என்று சொல்லப்படுவது எதுவென்றால்
மற்றவருக்குத் தீங்கு வராதபடிப் பேச வேண்டும்.

kural-291

You ask, in lips of men what 'truth' may be;
'Tis speech from every taint of evil free.

Truth is the speaking of such words  as are free
from the least degree of evil ( to others).



பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.                        292

நன்மை தருமானால் நாம் சொல்லும்பொய்கூட
வாய்மை என்ற இடத்தில் அமரும்.

kural-292

Falsehood may take the place of  truthful word;
If blessing, free  from fault, it can afford.

Even falsehood has the nature of  truth,
if it confer a benefit that is free from fault.

தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்.                   293

ஒருவன் மனமறிந்து பொய் சொல்லக்கூடாது.
அப்படிச் சொன்னால் அவனது மனசாட்சி அவனை
வருத்தும்.

kural-293

Speak not a word which false  thy own heart knows
Self-kindled fire within the false one's spirit glows.

Let not a man knowingly tell a lie; for after he has told
the lie, his mind will burn him (with memory of his  guilt).




உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.                     294

ஒருவர் தன் மனமறியப் பொய் பேசாது நடந்தால்
அவன் உலகத்தார் நெஞ்சில் பெருமையோடு
போற்றப்படுவான்.

kural-294

True to his inmost soul who lives,-enshrined
He lives in souls of all mankind.

He who, in his conduct, preserves a mind  free
from deceit , will dwell in the minds of all men.


மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.                     295

ஒருவன் மனமொப்பி உண்மை பேசிவந்தால்
அவன் தவத்தொடு தானமும் செய்பவரை விட
உயர்ந்தவனாவான்.


kural-295

Greater is he who speaks the truth  with full consenting mind.
Than men whose lives have penitence and charity combined.

He, who speaks  truth  with all his heart, is superior to those
who make gifts and practice austerities.


திருக்குறள்
 (see below in English)
 1.அறத்துப்பால்
30.வாய்மை

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.                          296

ஒருவருக்கு உண்மை பேசுவதால் ஏற்படும்
புகழுக்கு ஈடு, இணை இல்லை. அது அவனுக்கு
எல்லா நன்மைகளையும் கொடுக்கும்.  

kural-296

No praise like that of words from falsehood free;
This every virtue yields spontaneously.

There is no praise like the praise of  never uttering
a falsehood: without causing any suffering, it will
lead to every  virtue.


பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.                    297

      பொய் பேசுவதில்லை என்ற தர்மத்தை
உண்மையாகப் போற்றி வாழ்பவர் மற்ற தருமங்களைச்
செய்யாவிட்டாலும் உயர்ந்தவராவார்.

kural-297

If all your life be utter truth, the truth alone,
'Tis well, though other virtuous acts  be left undone.

If a man has the power to abstain from  falsehood,
it will be well with him, even though he practice no
other virtue.


புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.                     298

குளித்தால் உடல் சுத்தமாகும். உன்மையே
சொல்பவருக்கு மனம் தூய்மையாக இருக்கும்.

kural-298

Outward purity the water will bestow;
Inward purity from truth alone will flow.

Purity of body is produced by water and
purity of mind by  truthfulness.


எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.                         299

வெளியிலுள்ள இருட்டைப் போக்கும் விளக்குகளைவிட
சான்றோர் பொய்பேசாதிருத்தலையே நிஜமான விளக்காகக்
கருதுவர்.

kural-299

Every lamp is not a lamp in wise men's sight;
That's the lamp with truth's pure radiance bright .

All lamps of nature are not lamps; the lamp of
Truth is the lamp of the wise.


யாம்மெய்யாக்  கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.                               300

யாம் உண்மையாக ஆராய்ந்து பார்த்ததில் உண்மை
சொல்வதைவிட எந்த வகையிலும் சிறந்தது வேறொன்றும்
இல்லை.

kural-300

Of all good things we 've scanned with studios care,
There's nought that can with truthfulness compare.

Amidst all that we have seen (described) as real(excellence),
there is nothing so good as truthfulness.
திருக்குறள்
 (see below in English)
 1.அறத்துப்பால்
31.வெகுளாமை


செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.                       301

தன் கோபம் பலிக்கும் இடத்தில் சினத்தைக்
கட்டுப்படுத்தி எழாமல் செய்பவனே கோபத்தை
அடக்கியவனாவான். பலிக்காத இடத்தில் அதை
அடக்கினால் என்ன? அடக்காவிட்டால் என்ன?


kural-301

Where though hast power thy angry will to work, thy wrath restrain;
Where power is none, what matter if though check or give it rein?

He restrains his anger  who restrains it when it can injure;
When  it cannot injure,what does it matter whether he
restraint it, or not?


செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.                                302

பலிக்காத இடத்தில் கோபப்படுவது தீமையைத்
தரும்.பலிக்கும் இடத்தில் சினத்தைக் காட்டினால்
அதுவும் அழிவைத் தரும்.


kural-302

Where power is none to wreak the wrath,wrath importent is ill;
where thou hast power thy will to work,'tis greater, evil still.

Anger is bad, even when it cannot injure;when it can injure;
there is no great evil.

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.                  303

எவரிடத்திலும் கோபம் கொள்ளாமல்
கோபமென்ற பாபத்தை மறந்து விடுவது நல்லது.
கெடுதல்களுக்கெல்லாம் அக்கோபமே ஆணிவேர்.

kural-303

If any rouse thy wrath, the trespass straight forget;
For wrath an endless train of evils will beget.

Forget anger towards every one,as fountains of evil
spring from it.




நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.                            304

முகமலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் கெடுத்து
எழுகின்ற கோபத்தை விட கொடிய பகைகளும்
உண்டோ?

kural-304

Wrath robs the face of smiles, the heart of joy,
What other foe to man works such annoy?

Is there a greater enemy than anger,which kills
both laughter and joy?


தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.                         305

தன்னைக் காத்துக் கொள்ள நினைப்பவன் கோபம்
வராமல் கட்டுப்படுத்த வேண்டும். அப்படிக்
கட்டுப்படுத்தத் தவறினால் அக்கோபம் அவனையே
அழித்துவிடும்.

kural-305

If thou would'st guard  thyself, guard against wrath alway;
'Gains wrath who guards not, him his  wrath shall slay.

If a man would guard  himself, let him guard against anger;
if he do not guard it, anger will kill him.




சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.                               306

சினம் என்னும்  நெருப்பு சூழ்ந்துள்ளவரை எரித்து
விடும். உறவு, நட்பு என்ற இன்பத் தெப்பத்தையும்
அழிக்கும்.

kural-306

Wrath, the  fire that slayeth whose draweth near,
Will burn the helpful 'raft' of kindred  dear.

The fire of anger will burn up even the pleasant
raft of friendship.




சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையாதற்று.             307

கோபம் கொண்டு பூமியில் அறைந்தால் கைவலிக்கும்.
சினத்தை அடக்காதவன் மன நோய் கொண்டே
மடிவான்.


kural-307

The hand that smites the earth unfailing feels the sting;
So perish they who nurse their wrath as noble thing.

Destruction will come upon him who regards anger
as a good thing, as surely as the hand of him who
strikes the ground  will not fail.



இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.                 308

ஜ்வாலையாக கொழுந்து விட்டெறியும்
தீயில் போட்டாற் பொன்ற தீமையைச்
செய்தாலும், கூடுமானால் அவனிடம்
கோபம் கொள்ளாதிருக்க வேண்டும்.

kural-308

Though men should work thee woe , like touch of tongues of fire.
'Tis well if thou  canst save thy soul from  burning ire.

Though one commit things against you as painful (to bear)
as if a bundle of fire had been thrust upon you, it will be well,
to refrain, if possible, from anger.

உள்ளிய வெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.                          309

மனத்தினாலும் சினத்தை எந்த சந்தர்ப்பத்திலும்
நினைக்காதவனானால் அவன் நினைத்தவையெல்லாம்
ஒருங்கே பெறுவான்.

kural-309

If man his soul preserve from wrathful fires,
He gains with  that  whate'er his soul  desires.

If a man never indulges anger in his heart, He will
 at once obtain whatever he has  thought of.

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.                   310

கோபம் கொண்டு நடப்பவர்(அந்த சமயம்)
இறந்தவரைப் போன்றவர்.கோபத்தை விட்டவரோ
துறவிகளை ஒத்தவர்.

kural-310

Men of surpassing wrath are like the men who've passed away;
Who wrath renounce, equals of all-renouncing  sages they.

Those, who give way to excessive anger, are no better  than
Dead men;but those, who are freed from it, are equal to those
who are freed ( from death).