பொன்மொழிகள்
51. வெற்றியின் அடிப்படை எடுத்த செயலில் நிலையாக நிற்பதே.
----வால்டேர்
52. உங்களுடைய முயற்சிகளுக்கு நீங்கள் எந்தவிதமான எல்லையையும்
ஏற்படுத்திக் கொள்ளாமல் இருந்தால் உங்களால் மிகப் பெரிய
காரியங்களைச் சாதிக்க முடியும்.
----- நியூமேன்.
53. பெரிய பெரிய சாதனைகளெல்லாம் செய்து முடிக்கப்படுவது
ஆழ்ந்த மௌனத்தால்தான்.
--- எமர்சன்
54. பேச்சாற்றலைவிட செயலாற்றல் சிறந்தது.
---- லாங்பெல்லோ
55. காதல் என்பது ஒரு கண்ணாடிக் குவளை.
அதை இறுகப் பற்றினாலோ இலேசாகப் பிடித்தாலோ
உடைந்துவிடும்.
---- ராபர்ட்
56. மனிதனின் மன உறுதி மலைகளையும் தகர்த்தெறியும்.
---மார்க்ஸ்
57. முதலாவது செல்வம் ஆரோக்கியமே.
--- எமர்சன்
58. முன்னேறும் சந்தர்ப்பங்கள் தாமாக வருவதில்லை;
அவை உருவாக்கப்படுகின்றன.
--- ஆரிஸன் ஸ்வெட்மார்டன்.
59. பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு,
செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவரால்
எதையும் சாதிக்கமுடியும்.
--- புல்லர்
60. காலத்தின் மதிப்பு தெரிந்தால்தான் வாழ்க்கையின்
மதிப்பு தெரியும்.
--- நெல்சன்
61. உறுதியுடைய உத்தமர்க்கு உலகம் வளைந்து கொடுக்கிறது.
---- ஏராஸ்பீஸ்
62. எந்த ஒரு செயலிலும் உணர்ச்சிவசப்படாத
சகிப்புத் தன்மையும் நிதானமும் சிறப்புக்குரியவை.
--- நபிகள் நாயகம்.
63. நம்மைக் காப்பாற்றுபவை நீதி,தன்னடக்கம்,
உண்மையான எண்ணம் ஆகியவைதான்.
---ரஸ்கின்
64. அமைதியிலும் அசையா உறுதியிலுமே
நம் வலிமை உள்ளது.
----ஓஸாயா
65. வெல்ல முடியும் என்று நினைப்பவரே வெல்ல முடியும்.
---வேர்ஜில்
66. வருவதும் போவதும் : செல்வம்,வறுமை, நோய்.
வந்தால் போகாதது : கல்வி,ஞானம்,புகழ்.
போனால் வராதது : உயிர், மானம், காலம்.
கூடவே வருவது : பாவம், புண்ணியம், நிழல்.
--- வாரியார்
67. இன்றே செயல்பட்டு, இன்றே சேமித்து,
இன்றே நல்லது செய்தால் நாளைக்கு நன்றாக
ஓய்வு எடுக்கலாம்.
--- பிராங்ளின்
68. சோர்வும் கவலையும்தான் வெற்றிக்குத் தடைபோடும்
கற்கள்.
--- பிளாட்டோ
69. எங்கு அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு இருக்கிறது.
--- காந்திஜி
70. அளவில்லாத ஆசை நம் நல்ல குணங்களை அழித்துவிடும்.
--- வாரியார்.
71. அளவில்லாத சோதனைகளைத் தாங்கிக்கொண்டு சாதனை
படைக்கின்றவன்தான் மேதை.
--- ஹோம்கின்ஸ்
72. வெற்றியைவிட தோல்விதான் அதிகப் படிப்பினையை
சொல்லித்தருகிறது.
--- கார்ல்மெனிங்கர்
73. நம்பிக்கையானது முயற்சியை வாழ்த்திப் புன்னகைக்கிறது.
--- ப்ராண்டே
74. உயர்ந்த குறிக்கோளைக் கொண்ட வாழ்க்கையே
பெருமையுள்ள வாழ்க்கை.
--- அல்மெரான்
75. நாளை என்பது சோம்பேறிகளின் கூற்று.
இன்றைய நாளின் அருமையை உணர்ந்தோர்
உயர்ந்து கொண்டிருக்கின்றனர்.
--- வெயின்
76. ஆசை முடியும் கட்டத்தில்தான் அமைதி பிறக்கிறது.
--- எட்வர்ட்யங்
77. உணர்ச்சி அரியணையில் அமர்ந்திருக்கும் போது
அறிவு வெளியே போய்விடும்.
--- எம். ஹென்றி
78. உலகிலேயே அனைவருக்கும் சமமாகவும் இலவசமாகவும்
கிடைக்கும் அபூர்வமான மூலதனம் காலம்.
--- விவேகானந்தர்
79. உழைப்பை விற்கலாம்; ஒரு நாளும் ஆன்மாவை விற்கக்கூடாது.
--- ரஸ்கின்
80. எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.
அப்படி எதிர்பார்த்தால் இறுதிவரை எதையும்
சாதிக்காமல் போய்விடுவீர்கள்.
--- எட்பஸ்ட் பர்ஸி
81. அவசரப்படுவது வீண்செலவு உண்டாக்கும் என்பதை
அறிந்தவன் புத்திசாலி.
--- சாணக்கியன்
82. பிழை செய்வது மனிதர்க்கு இயற்கை. நமது பிழைகள்
எல்லாம் நமது மேம்பாட்டுக்குப் படிக்கல்லே அல்லாது
நமக்குத் தாழ்வைத் தருவதல்ல.
--- ஜேம்ஸ் ஆலன்
83. உழைப்பின்றி வெற்றி எதுவும் தழைப்பதில்லை.
--- ஜேம்ஸ் ஆலன்
84. வாக்கு தவறாத மனிதன் மனிதருள் மாணிக்கம்.
---ரஸ்கின்
85. சிக்கனமில்லாமல் வாழ்ந்தால் சிறு குடும்பமும் சீரழியும்.
--- உட்வெல்
86. ஒருவரையும் நம்பாமல் இருப்பது ஆபத்து. எல்லோரையும்
நம்புவது பேராபத்து.
--- ஆபிரகாம்லிங்கன்
87. நேர்வழியே ஒழுக்கத்திற்குச் சுருக்குவழி.
--- ரஹேஸ்
88. நம்பிக்கையும் அன்பும் ஆன்மாவின் தாய்ப்பால்.
இவ்விரண்டையும் பெறாவிட்டால் ஆற்றல் முழுவதும்
அழிந்துபோகும்.
--- ரஸ்கின்
89. தன்னைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவன்தான் வலிமையானவன்.
--- சாணக்கியன்
90. உழைப்பினால் கிடைத்த சொந்த பொருளுக்கு உள்ள
சிறப்பு, கடன் வாங்கிய முதலுக்குக் கிடையாது.
--- ஹென்றி ஃபோர்டு
91. அன்பைக் கடன் கொடு. அதிக வட்டியுடன் உன்னிடம்
திரும்பி வரும்.
--- கதே
92. மகிழ்ச்சியைத் தேடாதீர்கள். ஆனால் மகிழ்ச்சியாக
இருக்க சதாகாலமும் தயாராக இருங்கள்.
--- ரஸ்கின்
93. அகந்தையை வென்றுவிட்டால் அடக்கம் தானாகவே
நம்மை வந்து சேரும்.
--- மகாவீர்
94. ஆலோசனையோ , உப்போ வேண்டப்பட்டால் ஒழிய
வழங்கப்படக்கூடாது.
--- பேகன்
95. மன அமைதியோடு இருப்பவனுக்கு என்றும் ஆபத்து இல்லை.
---லாவோத்சு
96. களங்கமற்ற மனம் மிகச் சிறந்த அறிவாற்றலை விட மேலானது.
--- சாகுல்
97. முடியாது என்பது முட்டாளின் தத்துவம்.
--- நெப்போலியன்
98. அடுத்தவரின் வாழ்க்கையுடன் ஒப்பிடாமல் தன் வாழ்க்கையை
மகிழ்ச்சியாக நினைப்பவன் புத்திசாலி.
---- சாணக்கியன்
10
99. உலகிற்கு நீ வழங்குவது அதிகமாகவும், உலகிடமிருந்து
நீ ஏற்பது குறைவாகவும் இருக்கட்டும்.
--- புருஸ்
100. காலத்தின் நிலையை அறிந்துகொள். அதை வீணாக்குவது
உன்னையே கொலைசெய்தது போல ஆகும்.
--- ஜேம்ஸ்ஆலன்