பொன்மொழிகள்
101. தகுதிக்கு மேல் செலவு செய்வது உன் உயிரை
முடித்துக் கொள்ள நீயே கயிறு திரிப்பது போன்றது.
--- பரோஸ்
102. பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும்
ஆபரணம் போன்றது.
--- அரிஸ்டாட்டில்
103. உன் நல்ல செயல்களின் மூலம் பிறருக்கு
வழி காட்டியாக இரு.
--- இங்கர்சால்
104. மகிழ்ச்சியும் உழைப்பும் வாழ்நாளை வளர்ப்பவை.
--- பிராங்க்ளின்
105. பணிவு என்பது தோரணங்களில் அல்ல.
செயல்களில்தான் இருக்க வேண்டும்.
--- ஆண்ட்ரூமேசன்
106. உற்சாகமும் முயற்சியும் உள்ளவனுக்கு எங்கும்
வேலை கிடைக்கும்.
--- இங்கர்சால்
107. கோபத்துடன் செயல்படுபவனும், புயலில் கப்பல் விடுபவனும்
சரிசமமானவர்கள்.
--- பீச்சர்
108. "எனது" என்ற எண்ணம் நீங்கினால் ஆசையே தோன்றாது.
--- வாரியார்
108. ஒழுக்கமும், தன்னம்பிக்கையுடன் கூடிய ஆற்றலும்
மதிப்புள்ள முதலீடுகள்.
--- லிட்டீன்
109. எவன் ஒருவன் விடாமுயற்சி செய்கிறானோ அவனே
வெற்றி என்ற புகழை அடைகிறான்.
110. வாழ்வது முக்கியமன்று; சிறப்பாக வாழ வேண்டும்
என்பதே முக்கியம்.
--- சாக்ரடீஸ்
111. நம்பிகையுடன் இருக்கும்போது எந்தக் காரியமும்
கடினமாகத் தெரிவதில்லை.
--- ஜோன்ரேட்
112. அடக்கமுள்ளவன் மகிழ்ச்சி அடைகிறான்.
அடக்கம் இல்லாதவன் துன்பத்தை அடைகிறான்.
113. பொறுமையாக இருப்பது கடினம்தான்.
அதன் முடிவோ சமாதானம்.
--- புல்லர்
114. நீங்களும் நன்றாக வாழுங்கள். மற்றவர்களையும்
நன்கு வாழவிடுங்கள்.
--- ஸ்சில்லர்
115. நம்பிக்கை என்பது புயல் காற்றில் துவண்டு விழும்
மெல்லிய மலரல்ல; அது அடிபெயரா இமயம் போன்றது.
--- காந்திஜி
116. அமைதியான மனம் மனிதன் அடையும் பெரும் பாக்கியம்.
--- அகஸ்டின்
117. கோபம் அன்பை அழிக்கிறது.
செருக்கு அடக்கத்தை அழிக்கிறது.
--- சாணக்கியர்
118. ஒருபோதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டு;
அது நாம் செய்யும் நற்செயலே.
--- மேட்டர்லிங்க்
119. நாம் பிறரால் ஏமாற்றப்படுவதில்லை. நம்மை நாமே
ஏமாற்றிக் கொள்கிறோம்.
--- ப்யூலர்
120. உள்ளத்தில் உண்மையுடையவர்கள் ஒரு போதும்
தோல்வி அடையமாட்டார்கள்.
--- ஷிண்டே
121. பிறர் செய்த உபகாரம் உன் கையில் அதிகமாக
தங்கிவிடாமல் பார்த்துக்கொள்.
--- எமர்சன்
122. பிறரிடம் உள்ள நூறு குறைகளைச்
சுட்டிக்காட்டுவதைவிட நம்மிடம் இருக்கும்
ஒரு குறையையாவது போக்க வேண்டும்.
--- புத்தர்
123. அதிருப்திக்கெல்லாம் வேர் சுயநலமே.
--- கிளார்க்
124. முன்னேறும் சந்தர்ப்பங்கள் தாமாக வருவதில்லை;
அவை உருவாக்கப்படுகின்றன.
--- ஆரிஸன் ஸ்வெட்மார்டன்
125. நம் ஒவ்வொருவரிடமும் எல்லையற்ற சக்தியும்
தூய்மையும் ஆற்றலும் உள்ளன.
--- விவேகானந்தர்
126. நீ புறக்கணிக்கும் ஒவ்வொரு கடமையும்
நீ தெரிந்துகொள்ளத் தவறிய ஓர் உண்மையைப்
புலப்படுத்தும்.
--- வாஷிங்டன்
127. பிறரை அறிந்தவன் கெட்டிக்காரன்;
தன்னை அறிந்தவன் ஞானி.
---லோட்ஸே
128. தேவைக்கு அதிகமான செல்வம் சுமையாகும்.
--- மார்ஸோ
129. பேராசை உள்ளவரை பேரலைச்சலும் உண்டு.
--- பீட்டர்பெரோ
130. நாணயமாக நடப்பவர்கள் ஒளிக்கும் இருளுக்கும்
அஞ்சுவதில்லை.
--- கதே
131. வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது;
பாசத்தால்தான் வெல்ல முடியும்.
132. மனோதைரியம் இல்லையேல் வாய்மை இல்லை.
--- மில்டன்
133. செல்வத்தை மட்டுமே நாடுபவன் வீழ்ச்சி அடைவான்.
நற்பண்பு உடையவன் கிளைபோல் செழித்து இருப்பான்.
--- மவுண்டர்
134. அதிர்ஷ்டத்தின் வலக்கை தொழில். இடக்கை சிக்கனம்.
--- காண்டேகர்
135. எவன் பூரணமாக அகத்தூய்மை உள்ளவனோ அவனே
உண்மையான பக்திமானாகிறான். மனத்தைப் பெருமளவுக்குத்
தூய்மைப் படுத்துவதுதான் பக்தி ஏற்பட சிறந்த குணம்.
--- சுவாமி விவேகானந்தர்
136. நட்பு நம் இன்பத்தைப் பெருக்கித் துன்பத்தைக் குறைக்கிறது.
--- எடிசன்
137. நாளைய தினத்தைக் குறித்துக் கவலைப்படாதே;
இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள உழை.
--- மூர்
138. கோபம் முட்டாள்தனத்தில் துவங்கி வருத்தத்தில் முடிகிறது.
---பிதாகரஸ்
139. அழகற்ற மனதைவிட அழகற்ற முகம் மேலானது.
--- எல்லீஸ்
140. மனிதகுல முன்னேற்றத்திற்காக மனிதன் உழைக்கிற
இடமே உயர்ந்த கோயில்.
பொன்மொழிகள்
141. தனது குற்றங்களை மறந்து பிறரின் குற்றத்தைக்
கண்டுபிடிப்பது தவறு.
--- ரூஸோ
142. விலை கொடுக்காமல் பெற இயலாத பொருள் அனுபவம்.
--- பியேர்
143. சோகம் என்பது பறவையாகும். உங்கள் தலைக்குமேல்
அதைத் தடுக்க இயலாது. ஆனால் அது உங்கள் தலையில்
கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்.
--- ஸ்டிலி
144. உண்மையாக நடந்துவரும் மனிதனுக்கு எந்த உபதேசமும்
தேவையில்லை.
--- வாரியார்
145. முன்னேற்றம் என்பது நம் கைகளில்தான் இருக்கிறது.
--- உட்வெல்
146. ஆசைகளைத் திருப்திசெய்வதில் அமைதி இல்லை;
மட்டுப்படுத்துவதில்தான் அமைதி உள்ளது.
--- ஹிபர்
147. அதர்மம் ஆதிக்கம் செய்வதைப்போல் தோன்றினாலும்
தர்மமே வெல்லும்.
--- ஜோசப்ரூக்ஸ்
148. எஜமானனாக இருந்தால் சில சமயம் குருடனாக இருங்கள்.
வேலையாளனாக இருந்தால் சில சமயம் செவிடனாக
இருங்கள்.
--- புல்லர்
149. பேச்சு பெரியதே. ஆனால் மௌனம் அதனினும் பெரியதாகும்.
--- வாரியார்
150. நேரம் என்பது செலுத்தப்பட்ட அம்பைப் போன்றது;
அது திரும்பி வராது.
--- ஜேஷி
No comments:
Post a Comment