யோகாசனம்
பிராணாயாமம் :
`பிராணா என்பதற்கு மூச்சு,சுவாசம், வாழ்க்கை, உயிர்சக்தி
காற்று, சக்தி அல்லது வலிமை என்று பொருள் உள்ளது
ஆயாமா என்றால் நீளம் , விரித்தல், நீட்டுதல் அல்லது
அடக்குதல் என்று பொருள்.
சுவாசித்தல்:
1. உள் சுவாசம். இது பூரகா (நிறைத்துக் கொள்ளுதல்) என
அழைக்கப்படுகிறது.
2.. வெளி சுவாசம். இது ரேசகா ( காலி செய்தல் ) என
அழைக்கப்படுகிறது.
3. கும்பகம் இது தக்க வைத்துக் கொள்ளுதல் மூச்சை பிடித்துவைத்துக்
கொள்லுதலாகும்) . இது இரண்டுவகைப்படும்.
1) உட்சுவாசத்திற்குப் பின் மூச்சு நிறுத்தப்படுகிறது. [அந்தர கும்பகம்]
2) வெளிசுவாசத்திற்குப் பின் மூச்சு நிறுத்தப்படுகிறது. [ பாஹ்ய
கும்பகம்]
பிரத்யாகாரம்:
ஒரு மனிதனின் பகுத்தறிவு அவனது புலன்கள் இழுத்த
இழுப்புக்கெல்லாம் அடி பணிந்து கொண்டிருந்தால் அவன் தொலைந்து
போகிறான். இதற்கு மாறாக, சுவாசத்தில் அளவான கட்டுப்பாடு இருந்தால்,
புலன்கள் ஆசைகளுக்குக் காரனமான வெளிப் பொருள்களை நாடி
ஓடுவதற்குப் பதிலாக, உட்புறம் திரும்புகின்றன. அவற்றின்
கொடுங்கோன்மையிலிருந்து அவன் விடுபடுகிறான். இதுவே யோகாவின்
ஐந்தாவது கட்டம்.
இந்து தத்துவத்தின்படி, உணர்வு நிலை மூன்று வெவ்வேறு
தன்மைகளாக வெளிப்படுகிறது.
அவையாவன;
1. சாத்வம் ( ஒளிவிடும்,தூய்மையான அல்லது நல்ல தன்மை). இது தெளிவு
மற்றும் மன அமைதியைத் தரும்.
2. ராஜஸம் ( அசைவு மற்றும் செயல்பாட்டின் தன்மை). இது ஒரு மனிதரை
சக்தி மிக்கவராகவும், செயலூக்கமுள்ளவராகவும், இறுக்கமும் பிடிவாதமும்
உள்ளவராகவும் ஆக்கும்.
3. தாமஸம் என்பது மாயை, மறைபொருள், செயலற்ற தன்மை, அறியாமை
ஆகியவற்றின் தன்மையாகும். இத்தன்மை கொண்டவர் செயலற்ற மந்த
நிலையில் இருப்பார்.
சாத்வம் என்ற தன்மை தெய்வீகத்திற்கும், தாமஸம் அரக்கத்தனத்திற்கும்
இட்டுச் செல்கின்றன. இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட தன்மை ராஜஸம்
ஆகும்.
ஒரு தனி மனிதனால் கடைபிடிக்கப்படும் நம்பிக்கை, உண்ணப்படும் உணவு,
செய்யப்படும் தியாகங்கள், கடைபிடிக்கப்படும் கடுமையான விரதங்கள்,
கொடுக்கப்படும் பரிசுகள் இவை எல்லாமே அவரிடம் மேலோங்கியுள்ள
குணத்தைப் பொறுத்து மாறுபடுகின்றன.
தாரணம் :
உடல் ஆசனங்களால் பக்குவப்படுத்தப்பட்டு,
பிராணாயாமத்தால் சுத்தப்படுத்தப்பட்டு,
மற்றும் புலன்கள் பிரத்தியாகாரத்தால் கட்டுக்குள்
கொண்டுவரப்பட்ட பின்னர் தாரணம் என்ற ஆறாவது
கட்டத்தை அடைகிறான் ஒரு பயிற்சியாளன்.
இக்கட்டத்தில்,அவன்தான் முழுமையாக ஆழ்ந்துள்ள ஒரு தனிப்புள்ளி
அல்லது பணியில் முற்றிலும் ஒருமுகப்படுத்தப்பட்டு இருக்கிறான்.இதை
அடைய மனம் அமைதிப்படுத்தப்படவேண்டும்.
மனம் என்பது வெளிஉலகிலிருந்து வருகின்ற கருத்துப்பதிவுகளையும்,
தனக்குள்ளே உள்ள கருத்துப்பதிவுகளையும் ஒழுங்குபடுத்தி, மதிப்பீடு
செய்து ஒருங்கமைக்கும் ஒருகருவியாகும்.
மனம் எண்ணங்களின் உருவாக்கம் ஆகும். எண்ணங்கள் நுண்மையாகவும்
மாறிக்கொண்டே இருப்பனவையாகவும் இருப்பதால் இவற்றைக்
கட்டுப்படுத்துவது கஷ்டம்.
தியானம்;
எண்ணெய் ஆனது ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரதிற்கு
ஊற்றப்படும் பொழுது அதன் தொடர்ந்த நிலையான வீழ்ச்சியைக்
காணலாம்.
ஒருமுகப்படுத்துதலின் வீழ்ச்சி குறுக்கீடு இன்றித் தொடர்ந்து செல்லும்போது
ஏற்படும் நிலைதான் தியானம்.
ஒழுங்கான இடைவெளியற்ற மின்சாரம் பாயும் பொழுது மின்விளக்கு
சுடர்விட்டு ஒளிவிடுவதுபோல யோகியின் மனம் தியானத்தால் ஒளிவிடும்
.
அவனது உடல்,சுவாசம் ,புலன்கள், மனம்,பகுத்தறிவு மற்றும் அகங்காரம்
எல்லாமே பரமாத்மாவின் பால் ஒருங்கிணைந்து,அசைக்க முடியாத ஒரு
உணர்வு நிலையில் நிலைத்திருக்கிறான். ஒரு மின்னல் கீற்றைப் போல
பூமியையும், வானத்தையும் தாண்டி அப்பால் ஒளிவிடுகிற ஒரு வெளிச்சத்தை
யோகி காண்கிறான்.
யோகாவின் பாதையில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் ஆரோக்கியம்,
உடலில் ஒரு லேசான தன்மை, திடம், முகத்தில் தெளிவு, இனிய குரல்,
உடலில் நறுமணம் மற்றும் விழைவிலிருந்து விடுதலை ஆகியன ஆகும்.
அவன் தன் செயல்பாடுகள் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம்
செய்து அவனிடம் அடைக்கலம் புகுகின்றான்.
சமாதி:
சமாதி என்பது பயிற்சியாளனின் தேடுதலின் முடிவு ஆகும். தனது
தியானத்தின் உச்சக்கட்டத்தில் அவன் சமாதி நிலைக்குள் புகுந்து
செல்லுகிறான்.
இதில்,அவன் உறக்கத்தில் இருப்பது போல,அவனது
உடலும்,புலன்களும் ஓய்வாக இருக்கின்றன.
அவன் விழித்திருப்பது போல அவனது மனமும் திறன்களும்
விழிப்புடன் இருக்கின்றன.
சமாதி நிலையில் உள்ள ஒரு நபர் முழுவதும் உணர்வு நிலையிலும்,
விழிப்புடனும் இருக்கிறார்.
(வளரும்)
சந்தானம்.
மிக எளிமையாக தொடுத்த மாலை! யோகம் பற்றிய பகிர்வு.பகிர்விற்கு நன்றி. தங்களின் ஓய்வில் வருகை தாருங்கள் கிருஷ்ணாலயா விற்கு(http://www.krishnaalaya.com)
ReplyDeleteUyirsakthi apdina?
ReplyDelete