Translate

Saturday, July 27, 2013

பொன்மொழிகள்

பொன்மொழிகள்

151. உங்கள் உள்ளம் உறுதியாய் இருக்கும் வரை உங்கள்
    முயற்சி எதிலுமே தோல்வி அடையாது.

                                        --- பாஸ்டிசர்

152. ஆர்வமே எதிர்காலத்தை உருவாக்குகிறது.

                                      --- ஆர்னால்டு


153. தன்னை எதிரி வென்றுவிடுவானோ என்று அஞ்சுபவன்
    நிச்சயம் தோல்வி அடைவான்.

                                       --- நெப்போலியன்

154. நிலத்தை நம்பி வாழலாம்; ஆனால் நிழலை நம்பி
    வாழக்கூடாது.

                                      --- யங்

155. பொறுமை என்பது ஒருகசப்பான காய்.
    ஆனால் அது கனிந்தால் மிகவும்
    இனிமையானதொரு பழமாகும்.

156. தோல்வி வந்தால் அது உனக்கு மிகவும் பிரியமானது
    போல் காட்டிக்கொள். வெற்றி வந்தால் அது உனக்கு
    மிகவும் பழக்கப்பட்டதைப் போல் காட்டிக்கொள்.

                                        --- எமர்சன்

157. தெளிந்த உள்ளம், கடுமையான உடலுழைப்பு,
     பிறருக்காகப் பாடுபடும் பண்பு இவைதான்
     மகிழ்ச்சியின் உதயத்தில் நிலைக்களன்.

                                      --- ஹெலன் கெல்லர்

158. ஒழுக்கம் போர்க்களத்தைப் போன்றது;
    நாம் ஒழுக்கத்தோடு வாழவேண்டுமானால்
    ஒயாமல் மனத்தோடு போராட வேண்டும்.

                                     --- ரூசோ


159. வாழ்க்கை என்பது  சின்னஞ்சிறு தீபமன்று;
    அது அற்புதமான தீப்பந்தம்.
    வருங்கால சந்ததிகளிடம் அதை அளிப்பதற்கு
    முன்னால் முடிந்தவரை அதைப் பிரகாசமாக
    எரியச் செய்யவே ஆசைப்படுகிறேன்.

                                 --- பெர்னாட்ஷா


160. நெருக்கடியின்போது நினைத்ததைக் கடைப்பிடிப்பது
     மிகவும் பெரிய பலம்.

                                        --- ஐசக்நியூட்டன்



161. கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசை ஆகிய மூன்றும்
    மனிதனை வீணாக்கிவிடும்.

                                       --- முகமதுநபி


162. நமக்கு எது தெரியுமோ அதைப் பற்றி மட்டும்
    பேசுவது நல்லது.

                                      --- பெர்னாட்ஷா

163. பெரிய வெற்றியோ தோல்வியோ கிட்டும்போது
    அமைதியுடன் செயல்பட வேண்டும்.

                                ---- பெர்ரண்ட ரஸ்ஸல்



164. இரக்கம் காட்டு; ஆனால் ஏமாறாதே.

                                    --- மாத்யூக்ரீன்

165. சினமே மனிதனுக்கு முதல் எதிரி.
       
                                --- ப்யூலர்

166. ஒரே குறிக்கோளுடன் உழைப்பவனுக்குத் தோல்வியே
    கிட்டாது.

                                   ---லிங்கன்


167. உங்கள் அதிர்ஷ்டத்தை உருவாக்கும் சிற்பி நீங்கள்தான்.

                                     --- பேகன்

168. நிறைகண்டால் மனிதனைப் போற்றுங்கள்;
    குறைகண்டால் ஒன்றுமே கூறாதீர்கள்.

                                  --- வால்டேர்.


169. எண்ணங்களை செயலாக்கும் ஆற்றலே வெற்றியாக உயர்கிறது.


170. எவரையும் எப்போதும் அவமதிக்கக்கூடாது.

                                   ---சாணக்கியன்

171. நீங்கள் பிறருக்குத் தரும் பரிசுப் பொருளைவிட
    மேன்மையானது நீங்கள் பழகும்விதம்தான்.

                                   ---கார்லைல்



172. எதையும் ஒரே இடத்தில் வைத்தால்தான் உனக்குத்
    தேடும் நேரம் குறைவு.

                                   --- கதே
173. கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்; தாமதப்படுத்துங்கள்.
     அதுவே உண்மையான வீரம்.

                                 --- செனேகா

174. அமைதியிலும் அசையா உறுதியிலுமே நம் வலிமை
    உள்ளது.

                                        ---ஓஸாயா

175. திருப்தியின்மை, ஏக்கம் ஆகிய இரண்டும் வளர்ச்சிக்கு
    அவசியமானவை.

                                    --- தாமஸ் ஆல்வா எடிசன்


176. அடக்கமுள்ளவன் மகிழ்ச்சி அடைகிறான்.
    அடக்கம் இல்லாதவன் துன்பத்தை அடைகிறான்.

177. தன்னை எதிரி வென்றுவிடுவானோ என்று அஞ்சுபவன்
    நிச்சயம் தோல்வி அடைவான்.

                                  --- நெப்போலியன்

178. தன்னுடைய சிந்தனையில் உயர்ந்த குறிக்கோள்களைக்
    கொண்ட மனிதன் வளருகிறான்.

179. எதிர்காலத்தை எண்ணி அஞ்சாதவனே
    நிகழ்காலத்துத் தூண்.

                             --- சைரஸ்

180. உலகில் வெற்றி பெற வேண்டுமானால் ஏற்கெனவே
    வெற்றி பெற்ற மாதிரி நீங்கள் தோற்றம் தரவேண்டும்.

                                  --- நெப்போலியன்


181. பிறருக்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை
    தேடிக்கொள்கிறான்.

                                 --- ஜெனீக்கா


182. நம்பிக்கையே வாழ்க்கையின் சக்தி.
   கவலை வாழ்க்கையின் எதிரி.

                              --- ஷேக்ஸ்பியர்

183. ஒழுங்குதவறிய இடத்தில் பயன் இருந்தும்
    மதிப்புகிடையாது.

                          --- பிராங்க்ளின்


184. அவசரம் சூறாவளியைப் போன்றது. அவசரத்தைப்போல்
     மோசமானது எதுவும் கிடையாது.
 
                                    --- எமர்சன்

185. உறுதியுடைய உத்தமர்க்கு உலகம் வளைந்து கொடுக்கிறது.

                                           --- ஏராஸ்பீஸ்

186. அழகுணர்ச்சி, அன்புணர்ச்சி, நன்னடத்தை ஆகியவை
    மனித குலத்துக்குப் பெருமையைக் கொடுக்கும்.

                                     --- அங்கர் பில்டி

187. காலத்தைத் தவிர நமக்கு எதுவும் சொந்தமில்லை.

                                       --- கிரேஷியன்

188. துணிவு பிறக்க, அறிவு பெருக, மகிழ்ச்சி உருவாக,
    கவலை மறைய நல்ல நூல்களைப் படிக்கவேண்டும்.

                                      --- லாங்பெல்லோ

189. தேவைக்கு அதிகமாகவும் எதையும் பேசாதீர்கள்.

                                      --- ரிச்சர்ட் பிரின்ஸ்லே

190. தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில்
    முடியாதது என்று எதுவுமே இல்லை.

                                     --- புக்கன்ஸ்


192. சிறந்த முடிவு எடுக்க ஆத்திரமும் அவசரமும் கூடாது.

                                     --- சாணக்கியன்

193. முதலாவது செல்வம் ஆரோக்கியமே.

                          --- எமர்சன்


194. தனது குற்றங்களை மறந்து பிறரின் குற்றத்தைக்
    கண்டுபிடிப்பது தவறு.

                                ---  ரூஸோ

195. எந்த ஒரு செயலிலும் உணர்ச்சிவசப்படாத சகிப்புத்                          
    தன்மையும் நிதானமும் சிறப்புக்குரியவை.

                                --- நபிகள் நாயகம்

196. மனத்தை வெல்லத் தெரிந்தவனே வாழ்க்கையை
    வெல்கிறான்.

                         --- சாணக்கியன்



197. அறிவு காட்டும் வழியில் மட்டும் செல்லாதே;
    ஆன்மா கூறும் வழியில் செல்.

                                 --- டால்ஸ்டாய்

198. எதற்கும் அஞ்சாதே; எதையும் வெறுக்காதே;
    யாரையும்  ஒதுக்காதே; உன் பணியை
    ஊக்கத்துடன் செய்.
                        --- அரவிந்தர்


199. தீவிர நம்பிக்கையிருந்தால் தேடும் பொருள்
    கிடைத்தே தீரும்.

                                        ஸ்ரீ ராமகிருஷ்ணர்


200. நிலத்தை நம்பி வாழலாம்;
   ஆனால் நிழலை நம்பி வாழக்கூடாது

                           --- யங்

Sunday, July 21, 2013


திருக்குறள்
 (see below in English)
 1.அறத்துப்பால்
21. தீவினையச்சம்

தீவினையார் அஞ்சார் விழுமியர் அஞ்சுவர்
தீவினை என்னுஞ் செருக்கு.                     201

ஆணவம் கொண்டவரே தீயசெயல்களை அஞ்சாமல்
செய்வர். சான்றோர் தீயசெயல்களைக் கண்டாலே
நடுங்குவர்.

kural-201

With sinful act men cease to feel the dread of ill within,
The excellent will dread the wanton pride of cherished sin.

Those Who have experience of evil deeds will not fear,
But the excellent will fear the pride of sin.


தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.                      202

தீய செயல்கள் கஷ்டத்தைக் கொடுப்பதால்
அந்தத் தீவினைகளைத் தீயை விடக்
கொடியவையாகக் கருதி அவற்றை விலக்கவேண்டும்.

kural-202

Since evils new from evils ever grow,
Evil than fire works out more dreaded woe.

Because evil produces evil, therefore should
evil be feared more than fire.

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.                   203

தனக்குத் துன்பம் தருபவர்க்கும் தீங்கு
செய்யாதிருத்தலை முதன்மையான குணமாகப்
பாராட்டுவர் அறிவுடையோர்.
kural-203

Even to those that hate make no return  of ill;
So shalt though wisdom's highest law,'tis said,fulfil.

To do no evil to enimies will be called the chief of
all virtues.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.               204

மறந்தும் மற்றவர்க்குக் கேடுதரும் செயலைச்
செய்ய எண்ணக்கூடாது. அப்படி நினைத்தால்
நினைத்தவருக்கு தரும தேவதை துன்பம் தர
எண்ணும்.

kural-204

Though good thy soul forget, plot not thy neighour's fall,
Thy plans shall 'virtue's power' by ruin to thyself forestall.

Even though forget fullness mediate not the ruin of another.
Virtue will meditate the ruin  of  him who thus meditates.

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.                      205

' நான் தரித்திரன்' என நினைத்துத் தீய செயல்களில்
இறங்கக்கூடாது. அப்படித் தீமைசெய்தால் மேலும்
மேலும் பல துன்பங்கள் அவனை வருத்தும்.



kural-205

Make not thy poverty a plea for ill;
Thy evil  deeds will make thee poorer still.

Commit not evil, saying, " I am poor": If you do,
you will become poorer still.


தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல் வேண்டா தான்.                 206

துன்பம் தரும் தீமைகள் தன்னை வருத்தக் கூடாது
என நினைப்பவன் தீய செயல்களைப் பிறருக்குச்
செய்யக் கூடாது.

kural-206

What ranks  as evil spare to do,if thou  would'st shun
Affliction sore through ill to thee by others done.

Let him not do evil to others who desires not that
sorrows should pursue him.


எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.                           207

எத்தனை பெரிய பகையாக இருந்தாலும் அதிலிருந்து
தப்பிவிடமுடியும். தீவினையாகின்ற பகை விடாமல்
பின் தொடர்ந்துவந்து கொல்லும்.

kural-207

From every enimity incurred  there is to 'scape, a way;
The wrath of evil deeds will dog men's steps, and slay.

However great be the enmity men have incurred they
may still live.The enmity of sin will incessantly pursue
and kill.

தீயவை செய்தார் கெடுதல்  நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.                             208

தீயசெயல்கள் செய்தவரைக் கேடுகள் நிழலைப்
போல நடந்தால் கூடவே வரும். நின்றால்
அதுவும் நிற்கும்.

kural-208

Man's shadow dogs  his steps wher'er he wends;
Destruction thus on sinful deeds attends.

Destruction will dwell at the heels of those who
commit evil even  as their shadow  that leaves
them not.


தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.                                  209

தன் நலனை விரும்புவர் தீவினை என்ற பிரிவினுள்
எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதை செய்யாதிருக்க
வேண்டும்.

kural-209

Beware, if to thyself thyself is dear,
Lest thou to aught that ranks as ill draw near!

If a man love himself, let him not commit any
sin however small.



அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.                    210

ஒருவர் தவறான வழியில் சென்று தீய செயல்களைச்
செய்யாதிருந்தால் அவர் கேடில்லாதவர்
என்று அறியலாம்.


kural-210

The man , to devious way of sin that never turned aside,
From ruin rests secure,whatever ills betide.

Know ye that he is freed from destruction  who commits
no evil, going to  side of the right path.

திருக்குறள்
 (see below in English)
 1.அறத்துப்பால்
22. ஒப்புரவறிதல்

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றுங் கொல்லோ உலகு.                     211

நமக்கு மழையை கொடுத்து உதவுகின்ற மேகத்துக்கு
உலகத்தார் என்ன கைம்மாறு செய்கின்றனர்?
மழையைப் போன்று சிலர் கைம்மாறு வேண்டாமல்
உதவுவர்.
kual-211

Duty demands no recompense; to  clouds of heaven,
By men on earth, what answering gift is given?

Benevolence seeks not a return. what does the
World give back to the clouds?


தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.                   212

பாடுபட்டு நல்லவர் பணம் சேர்ப்பது தகுதி
உடையவர்க்கு சமயத்தில் உதவுவதற்கே ஆகும்.

kural-212

The worthy say, when wealth rewards their toil -spent hours,
For uses of beneficence alone ,tis ours.

All the wealth acquired with perseverance by the worthy is
for the excercise of benevolence.

திருக்குறள்
 (see below in English)
 1.அறத்துப்பால்
22. ஒப்புரவறிதல்

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.                         213

அமரர் உலகிலும், பூலோகத்திலும் உபகாரம்
செய்வது போன்ற நல்ல செயல்களைப்
பெறுவது அரிதாகும்.

kural-213

To'due beneficence' no equql good we know,
Amid the happy gods, or in this world below.

It is difficult to obtain another good equql to
benevolence either in this world or in that of
the gods.

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.                    214

சமூகத்தை அனுசரித்துப் பிறருக்கு உதவி
செய்து வாழ்கின்றவன் உயிர் வாழ அருகதை
உள்ளவனாகிறான். அப்படீல்லாதவன் வாழ்வது
பிணம் ந்டமாடுவதைப் போன்றது.

kural-124

Who knows what's human life's  befitting grace,
He lives;the rest 'mongst dead men have their place.

He truly lives who knows  (and discharges) the proper
duties( of benevolence). He who knows them not will be
reckoned among the dead.


ஊருணி நீர் நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.                                     215

சிறந்த அறிவுடையவனின் செல்வம் உலகத்தார்
வாழ உதவுவதற்கே சேர்க்கப்படுகிறது.
அது ஊரார் தண்ணீர் குளம் நீர் நிறைந்ததைப்
போன்றது.

kural-125

The wealth of men who love the 'fitting way,' the truly wise,
Is as when water fills the lake that village needs suppliess.

The wealth of that man of eminent knowledge who desires
to excercise the benevolence approved of by the world,
is like the full waters of city tank.

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.                   216

உபகார மனம் படைத்தவனிடம் சேரும் செல்வம்
ஊர் நடுவே உள்ள பழமரத்தில் பழம் பழுத்தது
போலாகும்.

kural-216

A tree that fruits in th' hamlet's central mart,
Is wealth that falls to men of liberal heart.

The wealth of a man (possessed of the virtue) of
benevolence is like the ripening of a fruitful tree
in the midst of a town.


மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.                         217

பெருந்தன்மை உள்ளவனிடம் செல்வம் சேர்ந்தால்
அது இலை,பஞ்சு,வேர்,பட்டை,சமித்து,காய்,பழம்
இப்படி எல்லா உறுப்புகளும் மருந்தாகிப்
பயன்படும் மரத்தைப் போன்றதாகும்.

kural-217

unfailing tree that healing balm distils from every part,
Is ample wealth that falls to him of large and noble heart.

If wealth be in the possession of a man who has great
excellence (of benevolence), it is like a tree which has
a medicine is an infaliable cure for disease.


இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.                          218

தன் கடமையை உணர்ந்து நடக்கும் அறிவுடையோர்
செல்வம் வற்றினாலும் உதவி செய்வதை நிறுத்த மாட்டார்.

kural-218

E'en when resources fall, they weary not of'kindness due',
They to whom Duty's self appears in vision true.

The wise who know what is duty will not  scant their
enevolence even when they are without wealth.

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.                               219

உதவி செய்யும் நற்குணம் உடையவனுக்கு வறுமை
வந்தால் உபகாரம் செய்யமுடியவில்லையே என
மனம் வருந்துவான்.
kural-219

The  kindly- hearted man is poor in this alone,
When powerdoing deeds of goodness he finds none.

The poverty of a benevolent man, is nothing but
his inability to exercise the same.


ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.                   220

மற்றவருக்கு உபகாரம் செய்வதால் கெடுதல்
வரும் என்றால் ஒருவன் தன்னை விற்றாவது
அதை வாங்கிக் கொள்ளலாம்.

kural-220

Though by 'beneficence,'the loss of all should come,
'Twere meet man sold himself, and bought it with  the sum.

If it be said that loss will result from benevolence, such loss is
worth being procured even by the sale of one's self.
திருக்குறள்
 (see below in English)
 1.அறத்துப்பால்
23. ஈகை

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.                     221

வறியவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுப்பதே
தருமம். மற்றபடிக் கொடுப்பதெல்லாம் பலனை
எதிர்பார்த்துக் கொடுப்பதாகும்.


kural-221

Call that a gift to needy men thou dost dispense,
All else is void of good, seeking for recompense.

To  give to the  destitute is true charity. All other gifts
have the nature of  ( what is done for) a measured return.

திருக்குறள்
 (see below in English)
 1.அறத்துப்பால்
23. ஈகை

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.                          222

பிறரிடமிருந்து பொருள் பெறுவது தவறன்றெனினும்
கொள்ளுதல் தீமை பயக்கும். சொர்க்கவாசம்
கிடைக்காதெனினும் தருமம் செய்வது நன்மை தரும்.
kural-222

Though men declare it heavenward path, yet to receive is ill;
Though upper heaven were not, to give is virtue still.

To beg is evil, even though it were said that is a good path(to heaven) .
To give is good, even though it were said that those who do so cannot
obtain heaven.

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள.                  223

இல்லை என்ற துன்பம் தரும் வார்த்தையைச்
சொல்லாமல் கொடுப்பது நல்ல குலத்தில்
பிறந்தவனிடம் இருக்கும்.

kural-223

'I've nought'is ne'er the high-born man's reply;
He gives to those who raise themselves that cry.

(Even in a low state) not to adopt the mean expedient
of saying"I have nothing," but to give, is the characteristic
of the mad of noble birth.


இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.                224

யாசிப்பவர் வேண்டியதைப் பெற்று முகமலர்ச்சி
அடையும் வரை அவர் முகத்தைப் பார்ப்பதே
துன்பமானது.


kural-224

The suppliants' cry for aid  yields scant delight,
Until you see his face with grateful gladness bright.

To see men begging from us in disagreeable, until
we see their pleasant countenance.



ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.                         225

தவத்தின் வலிமையால் தபசிகள் பசியை
அடக்கிக் கொள்வர். அந்த பசியைத் தீர்ப்பவர்
அந்தத் தபசிகளை விட உயர்ந்தவர் .
kural-225

'Mid devotees they're great who hunger's  pangs sustain,
Who hunger's pangs relieve a higher merit gain.

The power of those who perform penance is the power
of enduring hunger. It is inferior to the power of those
who remove the hunger (of othes).

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.                   226

வறியவரின் கடும் பசியைப் போக்கவேண்டும்.
அதுவே தனக்குப்பின் உதவப் பொருளைச்
சேர்த்து வைக்கும்  சிறந்த இடமாகும்.

kural-226

Let man relieve the wasting hunger men endure;
For treasure gained thus finds he tresure-house  secure.

The removal of the killing hunger of the poor is  the place
for one tolay up his wealth.

பாத்தூண் மரீஇ யவனைப்  பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.                                  227

இருப்பதை மற்றவரோடு பகிர்ந்து கொடுத்து உண்டு
வாழ்பவரைப் பசி என்னும் கொடிய நோய்தீண்டாது.
kural-227

Whose soul  delights with hungry men to share his meal,
The hand of hunger's sickness sore  shall never feel.

The fiery disease  of hunger shall never touch him
who habitually distributes his food to others.


ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.                                 228

தான் சேமித்த பொருளை மற்றவர்க்குக் கொடுக்காமல்
பாதுகாத்துப் பின் இழந்துவிடும் கஞ்சமனம் படைத்தவர்
பிறருக்குக் கொடுத்து ஆனந்தப்படுவதை அறியமாட்டாரோ?
kural-228

Delight of glad'ning human hearts with gifts do they not know.
Men of unpitying eye, who hoard their wealth and lose it so?

Do-the hard-eyed who lay up and lose their possessions
not know the happiness which springs from the pleasure
of giving?


இரத்தலின்  இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.                          229

நிறைந்திருக்கும் உணவைத் தானே தனியாக
இருந்து உண்பது வறுமையால் பிச்சை எடுப்பதை
விடக் கொடியது.

kural-229

They keep their garners full, for self alone the board they spread;
'Tis  greater pain, be sure, than  begging daily bread!

Solitary  and unshared eating for the sake of filling up one's
own riches is certainly much more  unpleasant than begging.

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக்  கடை.                           230

மரணத்தைப் போல் கொடுமையானது எதுவும்
இல்லை. ஆனால் யாசிப்பவருக்கு ஒருபொருளைக்
கொடுக்க முடியாத நிலை வந்தால் அதைவிடச்
சாதலே இனிமையானதாகும்.

kural-230

'Tis bitter pain to die,'Tis worse to live.
For him who nothing finds to give!

Nothing is more unpleasant than death: yet even that
is pleasant where charity cannot  be  exercised.
திருக்குறள்
 (see below in English)
 1.அறத்துப்பால்
24. புகழ்

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.                     231

இல்லாதவர்களுக்குக் கொடுத்து தருமவான் எனப்
புகழ் பெறுவதே உயிருக்கு நாம் தரும் பரிசாகும்.

kural-231

See that thy life the praise of generous gifts obtain;
save this for living man exists no real gain.

Give to the poor and live with praise. There is no
Greater profit to man than that.


உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.                               232

உலகத்தில் உயர்வாகப் பேசுபவை அனைத்தும்
யாசிப்பவர்களுக்கு முகம் மலரக் கொடுப்பவர்களின்
புகழ்தான்.

kural-232

The speech of all that speak agrees to crown
The men that give to those that ask, with fair renown.

whatsoever is spoken in the world will abide as praise
upon that man who gives alms to the poor.



ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல்.                      233

ஒப்பில்லாமல் உயர்ந்து நிற்கும் புகழைத் தவிர
உலகத்தில் அழியாதது ஒன்றும் இல்லை.

kural-233

Save praise alone that soars on high,
Nought lives on earth that shall not die.

There is nothing that stands forth in the world
imperishable,except fame, exalted in solitary
greatness.

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.                       234

பூமியெங்கும் ஒருவரின் புகழ் பரவுமானால்
தேவர் உலகம் தேவரைப் போற்றாமல் அவரையே
போற்றும்.

kural-234

If men do virtuous deeds by world-wide ample glory crowned,
The heavens will cease to laud the sage for other gifts renouned.

If one has acquired extensive fame within the limits of this earth,
the word of the Gods will no longer  praise those sages who have
attained that world.

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.                                  235

புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ஏற்படும் கெடுதல்களும்,
மரணமும் கூட புகழ் பெறும். இது நற்குணங்கள் நிறைந்த
அறிவுடையோருக்கே பொருந்தும்.

kural-235

Loss that is gain, and death of life's  true bliss fulfilled,
Are fruits  which only  wisdom rare can yield.

Prosperity to the body of fame, resulting in poverty to the
Body of flesh and the stability to the former araising from
the death of the later, are achievable only by the wise.
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.                    236

மனிதனாகப் பிறவி எடுத்தால் முடிந்தவரை
எல்லா வகையிலும் புகழ் பெற முயல வேண்டும்.
அப்படி முயற்சி செய்யாதவர் பிறவாமலே
இருந்திருக்கலாம் என்று ஊர் பேசும்.



kural-236

If man you walk the stage,appear adorned with glory's grace;
save glorious you can shine, 'twere better hide your face.

        If you are born(in this world), be born with qualities
conductive to fame.From those who are destitute of them
it will be better not to be born.
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.                         237

தனக்குப் புகழ் உண்டாகும்படி வாழத் தெரியாதவர்
தன்னை நொந்துகொள்ளாமல், தன்னைக் கேலி
செய்வாரைக் கடிந்து கொள்ளக் காரணம் என்ன?

 திருக்குறள்
 (see below in English)
 1.அறத்துப்பால்
24. புகழ்


kural-237

If you your  days will spend devoid of goodly fame,
When men despise, why blame  them? You've yourself to blame.

Why do those who cannot live with praise,grieve those
who despise them, instead of grieving themselves for
their own inability.




வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.                                          238

தனக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழைப் பெற முடியாது
போனால்,உலகத்தவர் அத்தகைய வாழ்க்கையை
இகழ்ந்தே பேசுவர்.

kural-238
Fame is virtue's child, they say; if, then,
you childless live, you live the scorn of men.

Not to  beget fame will be esteemed a disgrace
by the wise in this world.


kural-239

The blameless fruits of fields' increase  will dwindle down,
If earth the burthen bear of men without renoun.

The  ground which supports a body without fame will
diminish in its rich produce.

 வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்தனிலம்.                            239

புகழில்லாதவனின் உடம்பைச் சுமந்த நிலம்,
வளமாக விளையாமல் ஊரார் பழிக்கு ஆளாகும்.
My blogs:
http://saivasiddhantam.blogspot.in/

http://sansalternatetherapy.blogspot.in/

http://behaviourtherapy.blogspot.in/


வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.                           240

வாழ்க்கையில் பழி ஏற்படாமல் வாழ்கின்றவரே உயிர்
வாழ்கின்றவராவார். புகழ் பெறாமல் வாழ்கின்றவர்
நடைப்பிணம் போன்றவராகிறார்.

kural-240

Who live without reproach, them living men we deem;
Who live without renown, live not, though living men they seem.

Those live without disgrace.Those who live without fame live not.

Monday, June 17, 2013

பிராணாயாமம்

பிராணாயாமம்

செய்முறைகளும் விளைவுகளும்:


சூர்ய பேடனா பிராணாயாமம்:


சூர்ய பேடனா பிராணாயாமத்தில் சுவாசம் வலது  நாசித்துவாரத்தின்
மூலமாக உள்ளே இழுக்கப்படுகிறது. வேறு விதமாகச் சொல்வதானால்,
பிராணா பிங்கல சூர்யநாடி வழியாக நுழைந்து செல்கிறது.
அதன் பின்னர் ஒரு கும்பகம் பயிற்சி செய்யப்பட்டு மூச்சு
இடது நாசித்துவாரத்தின் வழியாக , இடா நாடி வழியாகச்செல்கிறது.

செய்முறை:

1. பத்மாசனம், சித்தாசனம் (அ) வீராசனம் போன்ற ஏதாவது ஒரு
  சௌகரியமான தோற்றத்தில் அமரவும்.

2. முதுகை நேராகவும் விறைப்பாகவும் வைக்கவும்.
   தலையை உடலின் மேல்புறத்திற்குத் தாழ்த்தவும்.

   முகவாயை மார்பெலும்புக்கு சற்று மேலாக கழுத்துப்பட்டை
   எலும்புகளுக்கு இடையில் உள்ள குழிவில் பதிக்கவும்.
   (இதுதான் ஜலதர பந்தா. ஜல என்றால் வலை அல்லது
    பின்னல் என்று பொருள்.)

3. இடது கரத்தை நீட்டவும். இடதுமணிக்கட்டின் பின்புறத்தை
  இடது முழங்காலின் மீது வைக்கவும். இடதுகையை ஞான முத்திரையில்
  வைக்கவும்.
  [பெருவிரல்கள் மற்றும் சுட்டு விரல்களை மடக்கி ஒன்றையொன்று
  தொடும்படி வைக்கப்பட வேண்டும்.
  பிறவிரல்களை நீட்டி வைக்கவும்.
  இதுவே ஞானமுத்திரை. இங்கு சுட்டுவிரல் தனிப்பட்ட ஆன்மாவையும்,
  பெருவிரல் பிரபஞ்சாஆன்மா,பரமாத்மாவையும்குறிக்கின்றன.
  இவ்விரண்டும் இணைவது அறிவைக் குறிக்கின்றது.]

.4. வலது கரத்தை முழங்கையில் மடிக்கவும். சுட்டுவிரல் மற்றும் நடுவிரலை
உள்ளங்கையை நோக்கி மடக்கவும். அவற்றை அசைவற்று வைக்கவும்.
மோதிரவிரல் மற்றும் சுண்டுவிரலை பெருவிரலை நோக்கிக் கொண்டு வரவும்.

5. வலது பெருவிரலை மூக்கின் வலது புறமும், மோதிர மற்றும் சுண்டுவிரல்களை   மூக்கின் இடது புறமும், மூக்கு எலும்புக்கு சற்று கீழேயும், நாசிகளின் கொழுப்புத்  திசுவுக்குச் சற்று மேலும் மேல் தாடைக்கு மேலே வைக்கவும்.

6. மோதிர மற்றும் சுண்டு விரல்களை அழுத்தி மூக்கின் இடது புறத்தை முழுவதுமாக  அடைத்து விடவும்.

7. வலது பெருவிரலால், வலது நாசியின் வெளி ஒரம், மூக்கை பிரிக்கும் குருத்தெலும்பின்   கீழ் ஓரத்துடன் இணையாக இருக்கும்படி மூக்கின் வலது புறத்தின் கொழுப்புத் திசுவை   அழுத்தவும்.

8. வலது பெருவிரல் மேல் மூட்டில் மடங்கியுள்ளது. அதன் நுனி மூக்கின் குறுக்குஸ் சுவருடன்  நேர்கோணத்தில் வைக்கப்பட்டுள்ளது.

9. இப்போது வலது நாசியின் துவாரத்தை பெருவிரலின் நகத்தருகில் உள்ள நுனியால்  கட்டுப்படுத்தியபடி, மெதுவாகவும், ஆழமாகவும் சுவாசிக்கவும். நுரையீரலை அவை  கொள்ளுமளவு முழுவதும் நிரப்பவும்.(பூரகம்).

10. பின்னர், இரண்டு நாசித்துவாரங்களும் மூடியுள்ளபடி வலது நாசியை அடைக்கவும்.

11. சுவாசத்தை சுமார் 5 வினாடிகளுக்கு தக்க வைத்துக்கொள்ளவும்.(அந்தர கும்பகம்).

12. வலது நாசியை முழுவதும் அடைத்து வைத்தபடி இடது நாசியைப் பாதியளவு திறந்து,    அதன் வழியாக மெதுவாகவும்,ஆழமாகவும் வெளி சுவாசம் விடவும்.

13. வெளிசுவாசத்தின்போது இடது நாசியிலிருந்து காற்று லயத்துடன் வெளிவருவதை   மோதிர மற்றும் சுண்டு விரல்களின் அழுத்தத்தை சரி செய்வதன் மூலம்   ஒழுங்குபடுத்தவும். இச்சமயம் இடது நாசியின் வெளி ஓரம் குறுக்குச் சுவருக்கு   இணையாக வைக்கப்படவேண்டும்.அழுத்தம் விரல் நுனிகளில் உள்பக்கங்களால்   (நகத்தை விட்டு விலகியுள்ளவை) கொடுக்கப்படவேண்டும்.

14. இது சூர்ய பேடனா பிராணாயாமத்தின் ஒரு சுழற்சியை முடிவு செய்கிறது.
   உங்கள்  திறனைப் பொறுத்த அளவு, விடாமல் 5-10 நிமிடங்களுக்கு மேலும்
   சுழற்சிகளைச் செய்யவும்.

15. சூர்ய பேடனாவின் எல்லா உள்சுவாசங்களும் வலது நாசியிலிருந்தும்,
   எல்லா வெளிசுவாசங்களும் இடது நாசியிலிருந்தும் வருகின்றன.

16. செய்முறையின் நேரம் முழுதும் காற்று செல்லும் பாதை விரல்கள் மற்றும்
   பெருவிரல்களின் நுனிகளிலும்,அழுத்தம் தரப்படும் நாசி சவ்வுகளிலும்
   உணரப்படுகிறது. காற்று செல்லுவது,சைக்கிள் டியூபிலிருந்து காற்று வெளிச்   செல்லும் ஒலி போன்ற ஒரு ஓசையை எழுப்புகிறது. நாசிகளின் மீதுள்ள   அழுத்தத்தை மாறுபடுத்துவதன் மூலம் இந்த ஒலி ஒரே சீராக வைக்கப்பட   வேண்டும்.

17. கண்கள்,  நெற்றிப்பொட்டுக்கள்,புருவங்கள் மற்றும் நெற்றியின் தோல்
   இவைகள் முற்றிலும் அசைவற்று இருக்க வேண்டும்.

18. மனம், காற்று செல்வதின் சரியான ஓசையைக் கவனிப்பதிலும்,
   சுவாசத்தை சரியான லயத்துடன் வைத்திருப்பதிலும், முழுமையாக
  ஈர்க்கப்பட்டு இருக்க வேண்டும்.

19. ஒவ்வொரு உள்சுவாசமும் வெளிசுவாசமும் ஒரே அளவு நேரம்
   நிலைத்திருக்க வேண்டும்.

20. உள்சுவாசமும் வெளிசுவாசமும் சிரமப்பட்டு வற்புறுத்தலுடன்
   செய்யப்படக்கூடாது. ஒரே சீரான மெதுவான லயம் நேரம் முழுவதிலும்
  வைத்திருக்கப்பட வேண்டும்.

21. பிராணாயாமத்தைச் செய்து முடித்த பின்னர் சவாசனத்தில் படுக்கவும்.


விளைவுகள்:

                  நாசித் துவாரங்களில் அழுத்தம் ஏற்படும் காரணத்தால்,
இந்தப் பிராணாயாமத்தில், உஜ்ஜயியில் செய்வதைவிட அதிக அளவு வேலையைநுரையீரல்கள் செய்யவேண்டியுள்ளது. சூர்யபேடனாவில் அவை உஜ்ஜயியை விடவும்மேலும் மெதுவாக, நிதானமாக, முழுமையாக நிரம்பின.

                 சூர்யபேடனா ஜீரண சக்தியை அதிகரித்து,நரம்புகளை ஆசுவாசப்படுத்திசக்தியூட்டி மூக்கின் எலும்புப் புழைகளைச் சுத்தம் செய்கிறது.


குறிப்பு :

          தாழ்வான இரத்த அழுத்தத்தால் அவதியுறும் நபர்கள் இதனால் பயன் பெருவார்கள்.
ஆனால் உயர்ந்த இரத்த அழுத்தம் அல்லது இருதயக் கோளாறு உள்ளவர்கள் இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்யும் பொழுது உள் சுவாசத்திற்குப் பின்னர் மூச்சைத்தக்க வைத்துக் கொள்ளக் கூடாது(அந்தர கும்பகம்).




Thursday, May 23, 2013

திருக்குறள்



திருக்குறள் 
 (see below in English)
 1.அறத்துப்பால்
20. பயனில சொல்லாமை

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.                    191

மற்றவர் வெறுக்கும்படிப் பயனற்ற பேச்சுக்களைப்
பேசினால் எல்லோரும் இகழ்வார்கள்.
kural-191

Words without sense, while chafe the wise,
Who bables, him will all despise.

He who to the disgust of many speaks useless
things will be despised by all.


பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது.                   192

பலர்முன் பயனற்ற சொற்களைச் சொல்வது,
நண்பர்களிடம் அவர்கள் வெறுக்கும் செயல்களைச்
செவதை விடத் தீயது.
kural-192

Words without sense, where many wise men hear, to pour
Than deeds to friends ungracious done offendeth more.

To speak useless things in the presence of many is a greater
evil than to do unkind things towards friends.


நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.                         193

பயனில்லாதவற்றை வளவளவென்று சொன்னால்
இவன் சிறப்பு இல்லாதவன் என்பதைப் பிறர்
புரிந்துகொண்டு விடுவார்கள்.
kural-193
Diffusive speech of useless words proclaims
A man who  never righteous wisdom gains.

That conversation in which a man utters forth useless
things will say of him "he is without virtue."


நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.                194.

பயனும் தராமல் பண்பில்லாமலும் பேசினால்,
அவனுக்கு நன்மை தராததோடு அவமதிப்பும்
ஏற்படும்.

kural-194
 
unmeaning,worthless words,said to the multitude,
To none delight afford,and sever men from  good.

The words devoid of profit or pleasure which a man
speaks will, being inconsistent with virtue, remove
him from goodness.

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.                      195

நல்ல குணமுடையவர்கள் பயனற்ற பேச்சுக்களைப்
பேசினால் அவருடைய நற்குணத்தையும், மற்ற
மேன்மைகளையும் அது அழித்துவிடும்.
kural-195
Gone are both fame and boasted excellence,
When men of worth speak of words devoid of sense.

If the good speak vain words their eminence and
excellence will leave them.


பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.                             196

பயனற்ற சொற்களைப் பல தடவை பலரிடத்தில்
பேசும் ஒருவனை மனிதரில் பதர் என்றே சொல்வார்கள்.

kural-196

Who makes display of idle words' inanity,
call him not man, -chaff of humanity!

call not him a man who parades forth his
empty words. Call him the chaff of men.

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.                        197

சான்றோர் நன்மை தராத சொற்களைச் சொன்னாலும்
பயனற்ற பேச்சுக்களைப் பேசக்கூடாது.

kural-197

Let those who list speak things that no delight afford,
'Tis good for men of worth to speak no idle word.

Let the wise if they will, speak things without excellence;
It will be well for them not to speak useless things.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.                198

அருமையான பயன்களை ஆராயவல்ல
அறிவுடையோர் பயனற்ற சொற்களைச்
சொல்ல மாட்டார்கள்.

kural-198

The wise  who weigh the woth of every utterence,
speak none but words of deep significance.

The wise who seek after rare pleasures will not speak
words that have not much weight in them.


பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.                               199

மயக்கம் நீங்கிய குற்றமற்ற அறிவுடையோர்
மறந்தும் பயனற்ற பேச்சுக்களைப் பேச மாட்டார்கள்.

 kural-199

The men of vision pure, from wildering folly free,
Not e'en in thoughtless hour,speak  words of vanity.

Those wise men   who are without faults and are freed
from ignorance will not even forgetfully speak things
that profit not.


சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.                       200

ஒருவன் பேசுகிறபோது பயனுடைய சொற்களை
மட்டுமே சொல்ல வேண்டும். பயனற்ற பேச்சுக்களை
தவிர்ப்பது நல்லது.

kural-200

If speak you will, speak words that fruit afford,
If speak you  will,speak never fruitless word.

Speak what is useful,and speak not useless words.

Tuesday, May 14, 2013

யோகாசனம்




யோகாசனம்


பிராணாயாமம் : 

                    `பிராணா என்பதற்கு மூச்சு,சுவாசம், வாழ்க்கை, உயிர்சக்தி

                     காற்று, சக்தி அல்லது வலிமை என்று பொருள் உள்ளது

                    ஆயாமா என்றால் நீளம் , விரித்தல், நீட்டுதல் அல்லது

                    அடக்குதல் என்று பொருள்.

                   சுவாசித்தல்:

                  1. உள் சுவாசம். இது பூரகா (நிறைத்துக் கொள்ளுதல்) என 

                      அழைக்கப்படுகிறது.

                  2.. வெளி சுவாசம். இது ரேசகா ( காலி செய்தல் ) என 

                        அழைக்கப்படுகிறது.

                  3. கும்பகம் இது தக்க வைத்துக் கொள்ளுதல் மூச்சை பிடித்துவைத்துக் 

                     கொள்லுதலாகும்) . இது இரண்டுவகைப்படும்.

                     1) உட்சுவாசத்திற்குப் பின் மூச்சு நிறுத்தப்படுகிறது. [அந்தர கும்பகம்]

                     2) வெளிசுவாசத்திற்குப் பின் மூச்சு நிறுத்தப்படுகிறது. [ பாஹ்ய 

                           கும்பகம்]

பிரத்யாகாரம்:

                   ஒரு மனிதனின் பகுத்தறிவு அவனது புலன்கள் இழுத்த 

இழுப்புக்கெல்லாம் அடி பணிந்து கொண்டிருந்தால் அவன் தொலைந்து 

போகிறான். இதற்கு மாறாக, சுவாசத்தில் அளவான கட்டுப்பாடு இருந்தால், 

புலன்கள் ஆசைகளுக்குக் காரனமான வெளிப் பொருள்களை நாடி 

ஓடுவதற்குப் பதிலாக, உட்புறம் திரும்புகின்றன. அவற்றின் 

கொடுங்கோன்மையிலிருந்து அவன் விடுபடுகிறான். இதுவே யோகாவின் 

ஐந்தாவது கட்டம்.

               இந்து தத்துவத்தின்படி, உணர்வு நிலை மூன்று வெவ்வேறு 

தன்மைகளாக வெளிப்படுகிறது.

அவையாவன;

1. சாத்வம் ( ஒளிவிடும்,தூய்மையான அல்லது நல்ல தன்மை). இது தெளிவு 

மற்றும்  மன அமைதியைத் தரும்.

2. ராஜஸம் ( அசைவு மற்றும் செயல்பாட்டின் தன்மை). இது ஒரு மனிதரை 

சக்தி   மிக்கவராகவும், செயலூக்கமுள்ளவராகவும், இறுக்கமும் பிடிவாதமும் 

உள்ளவராகவும்  ஆக்கும்.

3. தாமஸம் என்பது மாயை, மறைபொருள், செயலற்ற தன்மை, அறியாமை 

ஆகியவற்றின்  தன்மையாகும். இத்தன்மை கொண்டவர் செயலற்ற மந்த 

நிலையில் இருப்பார்.

  சாத்வம் என்ற தன்மை தெய்வீகத்திற்கும், தாமஸம் அரக்கத்தனத்திற்கும் 

இட்டுச்  செல்கின்றன. இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட தன்மை ராஜஸம் 

ஆகும்.

ஒரு தனி மனிதனால் கடைபிடிக்கப்படும் நம்பிக்கை, உண்ணப்படும் உணவு,

செய்யப்படும் தியாகங்கள், கடைபிடிக்கப்படும் கடுமையான விரதங்கள்,

கொடுக்கப்படும் பரிசுகள் இவை எல்லாமே அவரிடம் மேலோங்கியுள்ள

குணத்தைப் பொறுத்து மாறுபடுகின்றன.


தாரணம் :

           உடல் ஆசனங்களால் பக்குவப்படுத்தப்பட்டு, 

           பிராணாயாமத்தால் சுத்தப்படுத்தப்பட்டு,

          மற்றும் புலன்கள் பிரத்தியாகாரத்தால் கட்டுக்குள்

          கொண்டுவரப்பட்ட பின்னர் தாரணம் என்ற ஆறாவது

          கட்டத்தை அடைகிறான் ஒரு பயிற்சியாளன்.

இக்கட்டத்தில்,அவன்தான் முழுமையாக ஆழ்ந்துள்ள ஒரு தனிப்புள்ளி

அல்லது பணியில் முற்றிலும் ஒருமுகப்படுத்தப்பட்டு இருக்கிறான்.இதை

அடைய மனம் அமைதிப்படுத்தப்படவேண்டும்.

மனம் என்பது வெளிஉலகிலிருந்து வருகின்ற கருத்துப்பதிவுகளையும்,

தனக்குள்ளே உள்ள கருத்துப்பதிவுகளையும் ஒழுங்குபடுத்தி, மதிப்பீடு

செய்து ஒருங்கமைக்கும் ஒருகருவியாகும்.

மனம் எண்ணங்களின் உருவாக்கம் ஆகும். எண்ணங்கள் நுண்மையாகவும்

மாறிக்கொண்டே இருப்பனவையாகவும் இருப்பதால்  இவற்றைக் 

கட்டுப்படுத்துவது கஷ்டம்.


தியானம்;


எண்ணெய் ஆனது ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரதிற்கு

ஊற்றப்படும் பொழுது அதன் தொடர்ந்த நிலையான வீழ்ச்சியைக்

காணலாம். 

ஒருமுகப்படுத்துதலின் வீழ்ச்சி குறுக்கீடு இன்றித் தொடர்ந்து செல்லும்போது

ஏற்படும் நிலைதான் தியானம்.

ஒழுங்கான இடைவெளியற்ற மின்சாரம் பாயும் பொழுது மின்விளக்கு 

சுடர்விட்டு ஒளிவிடுவதுபோல யோகியின் மனம் தியானத்தால் ஒளிவிடும்
.
அவனது உடல்,சுவாசம் ,புலன்கள், மனம்,பகுத்தறிவு மற்றும் அகங்காரம்

எல்லாமே பரமாத்மாவின் பால் ஒருங்கிணைந்து,அசைக்க முடியாத ஒரு

உணர்வு நிலையில் நிலைத்திருக்கிறான். ஒரு மின்னல் கீற்றைப் போல

பூமியையும், வானத்தையும் தாண்டி அப்பால் ஒளிவிடுகிற ஒரு வெளிச்சத்தை

யோகி காண்கிறான்.

யோகாவின் பாதையில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் ஆரோக்கியம்,

உடலில் ஒரு லேசான தன்மை, திடம், முகத்தில் தெளிவு, இனிய குரல்,

உடலில் நறுமணம் மற்றும் விழைவிலிருந்து விடுதலை ஆகியன ஆகும்.

அவன் தன் செயல்பாடுகள் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம்

செய்து அவனிடம் அடைக்கலம் புகுகின்றான்.


சமாதி:


  சமாதி என்பது பயிற்சியாளனின் தேடுதலின் முடிவு ஆகும். தனது

தியானத்தின் உச்சக்கட்டத்தில் அவன் சமாதி நிலைக்குள் புகுந்து

செல்லுகிறான். 

இதில்,அவன் உறக்கத்தில் இருப்பது போல,அவனது

உடலும்,புலன்களும் ஓய்வாக இருக்கின்றன.

அவன் விழித்திருப்பது போல அவனது மனமும் திறன்களும்

விழிப்புடன் இருக்கின்றன.

சமாதி நிலையில் உள்ள ஒரு நபர் முழுவதும் உணர்வு நிலையிலும்,

விழிப்புடனும் இருக்கிறார்.

                                                                                                (வளரும்)

சந்தானம்.

Sunday, May 12, 2013

திருக்குறள்



 திருக்குறள் 

 (see below in English)
 1.அறத்துப்பால்
17. அழுக்காறாமை


ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.                              161

உள்ளத்தில் பொறாமை இல்லாமல் வாழ்வது
ஒழுக்கத்தின் ஒரு பகுதியாகும்.

kural-161

As 'strict decorum's' laws, that all men bind,
Let each regard unenvying grace of mind.

Let a man esteem that disposition which is
free from envy in the same manner as propriety
of conduct.

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.                          162

எவரிடத்திலும் பொறாமை கொள்ளாதிருப்பது ஒருவர்
பெற்ற செல்வங்களிலெல்லாம் மேலான செல்வமாகும்.

kural-162

If man can learn to envy none on earth,
'Tis richest gift,beyond compare its worth.

Amongst all attainable excellences there is
None equal to that of being free from envy
towards others.


அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.                                163

மற்றவருடைய முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்படுகிறவன்
தனக்கு முன்னேற்றத்தை விரும்பாதவனாகிறான்.

kural-163

Nor wealth nor virtue does that man desire 'tis plain,
Whom others' wealth delights not,feeling envious pain.

Of him who instead of rejoicing in the wealth of others,
envies it, it will be said " he neither desires virtue not
wealth "

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழ்க்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.                              164

தவறான செய்கைகளால் குற்றம் ஏற்படும் என்பதை
உணர்ந்து சான்றோர் தருமமற்ற செயலைப் பொறாமை
கொண்டு செய்யமாட்டார்.

kural-164

The wise through envy break not virtu's laws,
Knowing ill-deeds of foul disgrace the cause.

(The wise) knowing the misery that comes from
transgression will not through envy commit
unrighteous deeds.


அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது.                         165

பொறமைக் குணம் உடையவர்க்கு அதுவே எதிரி.
பகைவர் தீங்கு செய்ய மறந்தாலும், பொறாமை
தவறாமல் கேடு விளைவிக்கும்.

kural-165

Envy they have within!  Enough to seat their fate!
Though foemen fail, envy can ruin consumte.

To those who cherish envy that is enough. Though
free from enemies that(envy) will bring destruction.


கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.                     166

மற்றவருக்குத் தானம் செய்யும்பொருளைக் கண்டு
பொறாமைப்படுகின்ற உறவினர், உணவுக்கும்,
உடைக்கும் கூட தரித்திரப்படுவர்.

kural-166

Who scans good gifts to others given with envious eye,
His kin, with none to clothe or feed them, surely die.

He who is envious at a gift ( made to another) will
with his relations utterly perish destitute of food and
rainment.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.                               167

பொறாமைக் குணமுடையவனைத் திருமகள்
ஆத்திரம் கொண்டு தன் தமக்கையான
மூதேவியிடம் ' இவனோடு போய்ச் சேர்ந்து கொள்'
எனச் சொல்லிவிடுவாள்.


kural-167

From envious man good fortune's goddess turnes away,
Grudging him good, and points him out misfortune's prey.

Lakshmi envying ( the prosperity) of the envious man will
depart and introduce him to her sister.


அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்துவிடும்.                            168

பொறாமை எனப்படும் பாவி ஒருவனுடைய
செல்வத்தை அழித்து அவனைத் தீயவழிகளில்
இறக்கிவிடும்.

kural-168
Envy,embodied ill, incomparable  bane,
Good fortune slays, and soul consignes to fiery pain.

Envy will destroy (a man's) wealth (in his world) and
drive him into the pit of fire ( in the world to come)

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமுஞ் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.                         169

பொறாமை கொண்டவர் முன்னேற முடியாது.
பொறாமை இல்லாதவர் தரித்திரப் படமாட்டார்.
அப்படி இருந்தால் அது ஆராய்ச்சிக்குட்பட்டது.


kural-169
To men of envious heat, when comes increase of joy,
or loss to blameless men , the 'why' will thoughtful hearts employ.

The wealth of a man of envious mind and the poverty
of the righteous will be pondered.

அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.                    170

பொறாமை கொண்டு பெருமை பெற்றவரும் இல்லை.
அது இல்லாதவர்கள் சிறுமை பெற்றதுமில்லை.

kural-170
No envious men to large and full felicity attain;
No  men from envy free have failed a sure increase to gain.

Never have the envious become great;
Never have those who are free from envy
been without greatness.

திருக்குறள்
 (see below in English)
 1.அறத்துப்பால்
18. வெஃகாமை


நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.                             171

மனசாட்சிக்கு விரோதமாக மற்றவரிடமுள்ள
நல்ல பொருளை விரும்பினால் அது அவன்
குடியைக் கெடுத்து பல துன்பங்களையும் தரும்.


kural-171
With soul unjust to covet othyers' well-earned store,
Brings ruin to the home, to evil opes the door.

If a man departing from equity covet the property
(of others), at that very time will his family  be destroyed
and  guilt be incurred.



படுபயன் வெஃகிப் பழிபடுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.                     172

நடுநிலைமை தவற அஞ்சுகின்றவர் தனக்குக்
கிடைக்கும் பலனுக்காக பழிவரும் செயல்களைச்
செய்யமாட்டார்.


kural-172
Though lust of gain, no deeds that retribution bring,
Do they, who shink  with shame from every unjust thing.

Those who  blush at the want of equity will not commit
disgraceful acts through desire of the  pofit that may be
gained.

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.                      173

தருமவழி நடந்து அதனால் கிடைக்கும் இன்பத்தை
விரும்புகின்றவர், நிலையில்லாத சிற்றின்பத்தை
விரும்பி அதருமச் செயல்களைஸ் செய்யமாட்டார்.

kural-173

No deeds of ill , misled by base desire,
Do they, whose souls to other joys  aspire.

Those who desire the higher pleasures(heaven)
will not act unjustly through desire of the
Trifling joy.(in this life)
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.                          174

ஐம்புலன்களையும் வென்ற குற்றமற்ற
அறிவுடையோர் தரித்திரப்பட்டாலும் பிறர்
பொருளுக்கு ஆசைப்படமாட்டார்கள்.

kural-174

Men who have conquered  sense, with sight from sordid vision freed,
Desire not other's goods,e'en in  the hour of  sorest need.

The wise who have conquered their senses are free from crime,
will not covet  (the things of others), with the thought
"we are destitute'.

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெரிய செயின்.                                   175

பொருளுக்காக அறிவில்லாத செயல்களைச் செய்தால்,
நுணுகி, ஆராய்ந்து பெற்ற விரிந்த அறிவுக்கு ஏது ம்திப்பு?

kural-175

What gain , though lore refined of amplest reach he learn,
His acts towards all mankind if covetous desire to folly turn?

What is the advantage of extensive and acurate knowledge
if a man through covetousness act senselessly towards all?
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக்கெடும்.                              176

இறைவன் அருளை விரும்பி தரும நெறியில்
வாழ்பவன் பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு பொல்லாத
குற்றங்களை எண்ணினால் கேடு வரும்.

kural-176

Though, grace desiring, he invirtue's way stand strong,
He's lost who wealth desires, and ponders deeds of wrong.

If he, who through desire ofthe virtue of kindness abides
in the domestic state i.e  , the path in which it may be obtained,
covet ( the property of others)  and think of evil methods
(to obtain it), he will perish.


வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.                             177

பிறர் பொருளை மோசம் செய்து உடைமையாக்கிக்
கொள்வதால் ஏற்படும் முன்னேற்றத்தின் பின் விளைவுகள்
பயங்கரமாயிருக்கும். அதனால் மற்றவர் பொருளுக்கு
ஆசைப்படக்கூடாது.

kural-177
Seek not increase by greed of gain acquired;
That fruit matured yields never good desired.

Desire not the gain of covetousness. In the
 Enjoyment of its fruits there is no glory.
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.                        178

செல்வம் சுருங்காமலிருக்க வேண்டுமானால்,
மற்றவர் விரும்பிப் போற்றுகின்ற அவரது பொருளை
தான் விரும்பக்கூடாது.
kural-178
What saves prosperity from swift decline?
Absence of lust to make another's cherished riches thine!

If it is weighed, " what is the indestructibility of wealth,"
it is freedom from covetousness.


அறனறிந்து வெஃகா அறியுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.                             179

தருமவழி நடந்து மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாத
அறிவுடையோரைத் திருமகள் தான் சென்று சேர வழி
அமைத்துக்கொண்டு தக்க காலத்தில் சேர்வாள்.

kural-179
Good fortune draws anigh in helpful time of need,
To him who, schooled in virtue, guards his soul from greed.

Lakshmi, knowing the manner(in which she may approach)
will immediately come to those wise men who, knowing
that is virtue, covet  not the property of  others.

இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.                  180

பின்னல் நடப்பதை எண்ணாமல் மற்றவர்
பொருளை விரும்புவது அழிவைத்தரும்.
மற்றவர்பொருளை விரும்பாதிருந்தால்
அது வாழ்வில் வெற்றியைத் தரும்.

kural-180

From thoughtless lust of other's goods springs fatal ill,
Greatness of soul  that covets not shall triumph still.

To covet ( the wealth of another) regardless of consequences
will bring destruction. That greatness(of mind) which covets
not will give victory.

Tuesday, May 7, 2013

யோகாசனம்


யோகாசனம்




பி.கே.எஸ் ஐய்யங்கார் அவர்கள் அருளிய யோகாசனம்
(செய்முறை விளக்கம்) ஓர் உன்னத நூலாகும். அதிலிருந்து
திரட்டுக்கள் இங்கே அளிக்கப்படுகிறது.

யமம்: ( நடைமுறை ஒழுக்கங்கள்)

அவையாவன: அஹிம்சை,
               சத்தியம்,
               அஸ்தேயம் (திருடாமை)
               பிரம்மச்சரியம் ( தன்னடக்கம்)
                      மற்றும்
               அபரிக்ரஹம் ( விழையாமை)    

நியமம்: இவை தனிநபரின் ஒழுக்கத்திற்கு ஏற்ற விதிமுறைகளாகும்.

பதஞ்சலியால் வரிசைப்படுத்தப்பட்ட ஐந்து நியமங்கள்:

                  ஸௌச்சம் (தூய்மை)
                சந்தோஷம் (திருப்தி)
                தபஸ் ( கண்டிப்பான எளிமை)
                ஸ்வாத்யாயம் (தன்னைப் பற்றிய ஆய்வு)
                ஈஸ்வரப்ரணிதானம் ( இறைவனிடம் பக்தி)
                                       
                                        (வளரும்)

ஆசனம் :

            யோகாவின் மூன்றாவது கட்டம் ஆசனம் அல்லது தோற்றம் ஆகும்.
            ஆசனங்கள் ஆரோக்கியம் மற்றும் கை, கால்களுக்கு லகுவான
            அசைவுகளைத் தருகிறது. மனதில் சமநிலையை உருவாக்கி
            மனச் சலனங்களைத் தவிர்க்கிறது.

                                                   ( வளரும்)

சந்தானம்.