Sunday, December 9, 2012
திருக்குறள்
திருக்குறள்
(see below in English)
1.அறத்துப்பால்
6.வாழ்க்கைத் துணைநலம்
மனைத்தக்க மாண்புடையன் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துண. 51
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்குணம் உடையவளாகி,தன் கணவனின்
வருமானத்திற்குத் தகுந்தபடி வாழ்க்கைநடத்தும் மங்கை
சிறந்த மனைவி ஆவாள்.
kural-51
As doth the house beseem, she shows her wifely dignity;
As doth her husband's wealth befit, she spends; help-meet is she.
she who has the excellence of home virtues, and can expend within
the means of her husband,is a help in the domestic state.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். 52
இல்வாழ்க்கைக்கு நற்குணம் மனைவியிடத்தில்
இல்லையாயின் வாழ்க்கையில் எத்தனை சிறப்புக்கள்
இருந்தாலும் பயன் இல்லை.
kural-52
If household excellence be wanting in the wife,
Howe'er with splender lived,all worthless is the life.
If the wife is devoid of domestic excellence,whatever(other)
greatness be possesed, the conjugal state, is nothing.
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக்கடை. 53
இல்லத் துணைவி நற்குணங்கள் பெற்றிருந்தால்
வாழ்க்கையில் இல்லாதது ஒன்றும் இல்லை. அவள்
துர்குணம் பெற்றவளானால் வாழ்க்கையில் இருப்பதும்
ஒன்றும் இல்லை.
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின். 54
கற்பு என்கிற நிலையான சிந்தனை பெண்ணிடம்
இருந்தால், அதைவிடப் பெருமையுடையது என்ன இருக்கிறது?
kural-54
If women might of chastity retain,
What choicer treasure doth the world contain?
What is more excellent than a wife, if she possess the stability
of chastity.
தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. 55
தன் கணவனையே தெய்வமாக நினைக்கும் ஒரு பெண்
தினமும் எழுந்ததும் கணவனைத் தொழுது எழுந்தால் அவள்
பெய் என்று சொன்னால் மேகங்களும் அவளுக்குக் கட்டுப்பட்டு
மழையைப் பொழியும்.
kural-55
No God adoring,low she bends before her lord;
Then rising,serves; the rain falls instant at her word!
If she, who does not worship God, but who is rising worships
her husband,say , "it will rain" it will rain.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துஸ் சோர்விலாள் பெண். 56
கற்பு நெறி தவறாமல் தன்னைக் காத்துக் கொண்டு,
தன் கணவனையும் காத்து, தன் பரம்பரைப் புகழையும்
காப்பாற்றி உறுதியோடு வாழ்பவளே பெண்.
kural-56
Who guards herself, for husband's comfort cares,her household's fame,
In perfect wise with sleepless soul preserves, give her a womens name.
She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and
preserves an unsullied fame.
சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை. 57.
பெண்களைப் பூட்டி வைத்துக் காப்பாற்றுவது என்ன
பலனைத்தரும்? இருக்கும் வாழ்க்கையில் திருப்தியுற்று
தன்னைத்தான் ஒரு பெண் காத்துக்கொள்வதே சிறந்த
காவலாகும்.
kural-57
Of what avail is watch and ward?
Honour's woman's safest guard.
What avails the guard of a prison? The chief guard of a women is her chastity.
பெற்றார் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. 58
பெண்கள் தன் கணவனோடு முரண்படாமல், அன்போடு
கடமைகளைச் செய்து வந்தால், கணவனின் அன்பைப்
பெறுவதோடு தேவர் உலகத்திலும் பெருஞ் சிறப்பை அடைவர்.
kural-58
If wife be wholly true to him who gained her as his bride,
Great glory gains she in the world where gods bliss abide.
If women shew reverence to their husbands, they will obtain
great excellence in the world where the gods flourish.
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை. 59
புகழை விரும்பிக்காக்கும் மனைவி அமையாதவர்களுக்கு,
தன்னைக் கேலி செய்யும் பகைவர் முன் காளை போல்
பெருமிதமாக நடக்க முடியாது.
Who have not spouses that in virtue's praise delight,
They lion-like can never walk in scorner's sight.
The man whose wife seeks not the praise(of chastity) cannot walk
with lion like stately step.before those who revile them.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. 60
மனைவியின் நற்பண்புகளே இல்வாழ்க்கைக்கு மங்களம்
என்பார்கள். நல்ல குழந்தைகள் வாய்ப்பது குடும்பத்திற்குச்
சிறந்த ஆபரணங்கள் அணிவித்தது போலாகும்.
kural-60
The house's ' blessing', men pronounce the house-wife excellent;
The gain of blessed children is its goodly ornament.
The excellence of a wife is the good of her husband;
and good children are the jewels of that goodness.
My blogs:
http://saivasiddhantam.blogspot.in/
http://sansalternatetherapy.blogspot.in/
http://behaviourtherapy.blogspot.in/
Wednesday, November 28, 2012
திருக்குறள்
திருக்குறள்
(see below in English)
1.அறத்துப்பால்
5.இல்வாழ்க்கை
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. 41
இல்லறத்திலிருப்போன் தரும வழி நடக்கும் துறவிகளுக்கும்,
ஏழைகளுக்கும், இறந்தவர்களுக்கும் நல்லொழுக்க வழியில் உறுதியான
துணையாவான்.
kural-41
The men of household virtue,firm in way of good,sustain
The other orders three that rule professed maintain.
He will be called a (true) house holder, who is a firm support to the virtuous of the three orders
in their good path.
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை. 42
இல்லற வாழ்க்கை மேற்கொண்டோர், துறவிகளுக்கும்,தரித்திரர்களுக்கும்,
பிதுர்க்களுக்கும் கடமைகளை தவறாது செய்யவேண்டும்.
kural-42
To anchorites; to indigent, to those who've passed away,
The man for house hold virtue famed is needful held and stay.
He will be said to flourish in domestic virtue who aids the forsaken,the poor and the dead.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. 43
பிதுர்க்கள்,தெய்வம், விருந்தினர்,உறவினர், தன் குடும்பத்தினர்
என்ற ஐந்து வகையினருக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளைத்
தவறாது செய்வது இல்லறத்தாருக்குச் சிறந்த அறமாகும்.
kural-43
The manes,God, guests kindred,self in due degree,
These five to cherish well is chiefest charity.
The chief(duty of house older) is to preserve the five - fold rule ( of conduct) towards the manes,
Thed God, his guests,his relations and himself.
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். 44
குற்றமற்ற முறையில் பணம் சம்பாதித்து, அதை பகிர்ந்து கொடுத்து
வாழ்பவர்க்கு வாழ்க்கையில் எந்தக் குறையும் ஏற்படாது.
kural-44
Who shares his meal with other,while all guilt he shuns,
His virtuous line unbroken though the ages runs.
His descendants shall never fail who, living in domestic state, fears vice( In the acquisition of property)
and shares his food (with others)
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. 45
குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் அன்புடனும், உதவும் மனப்பான்மையுடனு ம்
நடந்துகொண்டால் அந்த இல்வாழ்க்கையில் மகிழ்ச்சியும், பெருமையும்
குறைவதில்லை.
kural-45
If love and virtue in the household reign,
This is of life the perfect grace and gain.
If the married life possess love and virtue, these will be both its duty and reward.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவது எவன். 46
இல்லறத்தை நேர்மையாக நடத்துபவர்க்கு தவறான வழியில்
சென்று பெறத்தக்கது என்ன இருக்கிறது?
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை. 47
தருமமும், நேர்மையும் கொண்டு வாழ்கிற இல்லறத்தார்
இல்லறத்தை மேற்கொள்பவருக்குச் சிறந்த எடுத்துக்காட்டாயிருப்பர்.
kural-47
In nature's way who spends his calm domestic days,
'Mid all that strive for virtue's crown hath foremost place.
Among all those who labour(for future happiness) he is greatest who lives well in the house hold state.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. 48
தவசிகளுக்கு உரிய வகையில் உதவி, தானும் தருமம் தவறாது
இல்லறக் கடமைகளைச் செய்பவர்,தவசிகளை விட பெருமை
பெற்றவராகிறார்.
kural-48
Others it sets upon their way,itself from virtue ne'er declines;
Than stem ascetics' pains such life domestic brighter shines.
The house holder who, not swerving from virtue,helps the ascetic inn his way, endures more than
those who endure penance.
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று. 49
இல்+அறம் என்று சிறப்பாகப் போற்றப்படுவது இல்வாழ்க்கை
ஆகும். மற்றவர் பழிக்கு அஞ்சி நடத்தும் இல்லறம் சிறப்பானதாகும்.
kural-49
The life domestic rightly bears true virtue's name;
That other too,if blameless found,due praise may claim.
The marriage state is truly called virtue.The other state is also good,if others
do not reproach it.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும். 50
உலகத்தில் வாழவேண்டிய நெறிப்படி வாழ்கின்றவர்
வானுலகத்தில் உள்ள தேவர்களுள் ஒருவராக மதிக்கப்படுவார்.
kural-50
Who shares domestic life,by household virtues graced.
shall,mid the Gods,in heaven who dwell,be placed.
He who on earth has lived in the conjugal state as he should live,
will be placed among the Gods who dwell in heaven.
Wednesday, November 21, 2012
திருக்குறள்
திருக்குறள்
1.அறத்துப்பால்
4. அறன் வலியுறுத்தல்
ஆக்கம் எவனோ உயிர்க்கு. 31
kural-31
It yields distinction,yields prosperity,what gain
Greater than virtue can a living man obtain?
Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man posses.
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. 32
தருமச் செயல்களை விட முன்னேற்றத்தைத் தருவது வேறு ஏதுமில்லை.
தருமத்தை மறப்பதை விட கேடு விளைவிப்பது வேறு எதுவும் இல்லை.
kural-32
No greater gain than virtue aught can cause;
No greater loss than life oblivious of her laws.
There can be no greater source of good than(the practice of) virtue; there can be no greater
source of evil than the forgetfulness of it.
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல். 33
இயன்ற அளவு தரும காரியங்களை எக்காரணத்தாலும்
கைவிடாமல் தொடர்ந்து தேவைப்படும் இடமெல்லாம் செய்ய வேண்டும்.
kural-33
To finish virtue's work with ceaseless effort strive,
What way though may'st, where'er though see'st the work may thrive.
As much as possible, in every way,incessantly practise virtue.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. 34
மனத்தில் குற்றம் இல்லாதவராக இருப்பதே முழுமையான
அறமாகும். நெஞ்சில் தீய எண்ணங்களுடன் பகட்டுக்காகச்
செய்யப்படும் தருமங்கள் ஆரவாரத் தன்மை உடையவை.
kural-34
Spotless be thou in mind! This only merits virtu's name;
All else,mere pomp of idle sound,no real worth can claim.
Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue;
all else is vain show.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். 35
பொறாமை, பேராசை, சினம், கடும் சொல் ஆகிய நான்கு குற்றங்களுக்கும்
மனத்தில் இடம் தராமல் அவற்றை விலக்கி நடப்பதும் அறம்தான்.
kural-35
'Tis virtue when, his foot steps sliding not through envy,Wrath,
Lust,evil speech-these four, man onwards moves in ordered path.
That conduct is virtue which is free from these four things,viz. malice,desire,anger and bitter speech.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. 36
முதுமையில் அறம் செய்யலாம் என்று தள்ளிப் போடாமல்
தருமம் செய்யவேண்டும். தருமச் செயல்கள்தான் மரணமடையும்
காலத்தில் உறுதுணையாயிருக்கும்.
kural-36
Do deeds of virtue now. say not, To-morrow we'll be wise;
Thus, when though diest,shalt thou find a help that never dies.
Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend.
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. 37.
தருமச் செயல்களால் ஏற்படும் பயனை வார்த்தைகளால்
சொல்ல வேண்டாம்.பல்லக்கை சுமப்பவரையும்,அதில் ஏறிச் செல்வோரையும்
ஒப்பிட்டாலே புலப்படும்.
kural-37
Needs not in words to dwell on virtu's fruits; compare
The mannin litter borne with them that toiling bear!
The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of
a palanquin and the rider therein.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல். 38
அனுதினமும் தவறாமல் ஒருவர் தரும காரியங்களை
செய்து வந்தால் அதுவே மறு பிறப்பு என்ற துன்பம் நேராமல்
அடைக்கும் கல்லாக இருக்கும்.
kural-38
If no day passing idly, good to do each day you toil,
A stone it will be to block the way of future days of moil.
If one allows no day to pass without some good being done, his conduct will be a
Stone block up the passage to other births.
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல. 39
ஒருவருக்கு தான் செய்த தருமச் செயல்களால் வரும் இன்பமே
உண்மையான இன்பமாகும். தருமம் கலக்காமல் வரும் புகழும்
இன்பமும் பொய்யாகி அழியும்.
kural-39
What from virtue floweth, yieldeth deligt;
All else extern, is void of glory's light.
Only that pleasure which flows from domestic virue is pleasure; all else is not pleasure
and is without praise.
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி. 40
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் தருமச் செயல்களைக்
கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். அது போல, குற்றங்களைத்
தவிர்த்துப் பழி வராமல் காத்துக் கொள்ளவேண்டும்.
kural-40
'Virtue' sums the things that should be done;
'Vice'sums the things that man should shun.
That is virtue which each ought to do,and that is vice which each should shun.
Thursday, November 8, 2012
திருக்குறள்
திருக்குறள்
1.அறத்துப்பால்
3. நீத்தார் பெருமை
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. 21.
ஒழுக்கத்தில் உறுதியாக நின்று ஆசையை
துறந்தவர்களின் பெருமையை போற்றிக் கூறுவதே
நூல்களின் இலக்கணமாகும்.
kural-21
The settled rule of every code requires, as highest good,
Their greatness who, renouncing all,true to their rule have stood.
The end and aim of all tretise is to extol beyond all other excellence, the greatness of thosewho,
while abiding in the rule of conduct peculier to their state have abandoned all desire.
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 22
ஆசைகளைத் துறந்தவர்களின் பெருமையை
விவரித்துச் சொல்லுவது, இதுவரை பிறந்து இறந்தவர்களைக்
கணக்கிடுவதற்கு ஒப்பானது.
kural-22
As counting those that from the earth have passed away,
'Tis vain attempt the might of holy men to say.
To describe the measure of the greatness of those who have forsakenthe two-fold desires,
is like counting the dead.
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. 23
இம்மை, மறுமைகளின் தன்மைகளை ஆராய்ந்து
அறிந்த பின் துறவறத்தை மேற்கொண்டவரின் பெருமை
உலகத்தில் உயர்ந்ததாகும்.
kural-23
Their greatness earth transcends, who, way of both worlds weighed,
in this world take their stand, in virtu's robe arrayed.
The greatness of those who have discovered the properties of both states of being,
and renounced the world,shines forth on earth( beyond all others).
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. 24
யானையைப் போன்ற ஐம்புலங்களையும் அறிவென்னும்
அங்குசத்தால் கட்டுப்படுத்தவேண்டும். அப்படி அடக்குபவன்
முக்தி என்னும் வீடு பேறு அடைவதற்கு விதை ஆகிறான்.
He,who with firmness, curb the five restrains,
is seed for soil of yonder happy plains
he who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven.
(wikisource)
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. 25
ஐம்புலன்களையும் அடக்கியவனின் ஆற்றலுக்கு
தேவலோகத்தின் தலைவனான இந்திரனே போதிய சான்றாகிறான்.
kural-25
Their might who have destroyed 'the five' shall soothly tell
Indra,the lord of those in heaven's wide realms that dwell.
Indra,the king of the inhabitants of the spacious heaven,is himself, a sufficient proof of the
strength of him who has subdued his five senses.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். 26
செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்பவரே
பெரியவர். அப்படி செய்யமுடியாது வாழ்பவர் சிறியவர்.
kural-26
Things hard in the doing will great men do;
Things hard in the doing mean eschew.
The great will do those things which is difficult to be done; but the mean cannot do them.
( thanks to wikisource)
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. 27
சுவை,ஒளி,ஊறு,ஓசை, மணம் என்ற
ஐந்து தன்மைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனின்
அறிவைச் சார்ந்து உள்ளது இந்த உலகம்.
kural-27
Taste, light, touch,sound, and smell: who knows thw way
of all the five-the world submissive owns his sway.
The world is within the knowledge of him who knows the properties of taste,sight,touch,
hearing and smell.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். 28
உபயோகமானவற்றைக் எடுத்துரைக்கும் சான்றோர்களின்
பெருமையை உலகத்தில் அவர்களுடைய எழுத்தே
சொல்லிக் கொண்டிருக்கும்.
kural-28
The might of men whose word is never vain,
The 'secret word' shall to the earth proclaim.
The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world.
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. 29
நற்குணங்கள் என்ற உயர்ந்த மலையில் ஏறி நிற்கின்ற
பெரியோரின் கோபம் ஒருகணம் தான் நிற்கும் என்றாலும்
அதனின்று தப்புவது மிகவும் கடினம்.
kural-29
The wrath 'tis hard e'en for an instant to endure,
of those who virtue's hill have scaled, and stand and secure.
The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment,
cannot be resisted.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிற்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். 30
அனைத்து உயிர்களிடமும் சிறந்த இரக்கத்தோடு
நடந்துகொள்ளும் தரும சீலர்களை அந்தணர் என்றே கூறலாம்.
kural-30
Towards all that breath,with seemly graciousness adorned they live,
And thus to virtue's sons the name of 'Anthanar' men give.
The virtuous are truely called Anthanar; because in their conduct towards all creatures
they are clothed in kindness.
My blogs:
http://saivasiddhantam.blogspot.in/
http://sansalternatetherapy.blogspot.in/
http://behaviourtherapy.blogspot.in/
Tuesday, November 6, 2012
அருட்பெருஞ்ஜோதியட்டகம்
திரு அருட்பா திரட்டு
அருட்பெருஞ்ஜோதியட்டகம்
எங்குமாய் விளங்குஞ் சிற்சபை யிடத்தே
இதுவது வெனவுரைப் பரிதாய்த்
தங்குமோ ரியற்கைத் தனியனு பவத்தைத்
தந்தெனைத் தன்மய மாக்கிப்
பொங்கு மானந்த போகபோக் கியனாய்ப்
புத்தமு தருத்தியென் னுள்ளத்தே
அங்கையிற் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த
அருட்பெருஞ் ஜோதியென் னரசே.
Google affiliate Ads;
source book.com link:
Up to 60% off Parenting & Children's Books
77 kids.com link
Primary
littlepim.com link
My blogs:
My blogs:
http://saivasiddhantam.blogspot.in/
http://sansalternatetherapy.blogspot.in/
ht
Monday, November 5, 2012
அருட்பெருஞ்ஜோதியட்டகம்
திரு அருட்பா திரட்டு
அருட்பெருஞ்ஜோதியட்டகம்
தத்துவ மனைத்துந் தனித்தனி கடந்தேம்
தத்துவா தீதமே னிலையில்
சித்தியல் முழுதுந் தெர்ந்தன மலைமேற்
சிவநிலை தெரிந்திடச் சென்றேம்
ஒத்துவந் நிலைக்கண் யாமுமெம் முணர்வும்
ஒரு ங்குறக் கரைந்துபோ யினமென்
றத்தகை யுணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்
அருட்பெருஞ் ஜோதியென் னரசே. 7
Google affiliate Ads;
source book.com link:
Up to 60% off Parenting & Children's Books
77 kids.com link
Primary
littlepim.com link
My blogs:
My blogs:
http://saivasiddhantam.blogspot.in/
http://sansalternatetherapy.blogspot.in/
http://behaviourtherapy.blogspot.in/
Saturday, November 3, 2012
அருட்பெருஞ்ஜோதியட்டகம்
திரு அருட்பா திரட்டு
அருட்பெருஞ்ஜோதியட்டகம்
ஏகமோ வன்றி யனேகமோ வென்றும்
இயற்கையோ செற்கையோ சித்தோ
தேகமோ பொதுவோ சிறப்பதோ பெண்ணோ
திகழ்ந்திடு மாணதோ வதுவோ
யோகமோ பிரிவோ வொளியதோ வெளியோ
உரைப்பதெற் றோவென வுணர்ந்தோர்
ஆகமோ டுரைத்து வழுத்திநின் றோங்கும்
அருட்பெருஞ் ஜோதியென் னரசே. 6
Google affiliate Ads;
source book.com link:
Up to 60% off Parenting & Children's Books
77 kids.com link
Primary
littlepim.com link
My blogs:
http://saivasiddhantam.blogspot.in/
http://sansalternatetherapy.blogspot.in/
http://behaviourtherapy.blogspot.in/
Friday, November 2, 2012
அருட்பெருஞ்ஜோதியட்டகம்
திரு அருட்பா திரட்டு
அருட்பெருஞ்ஜோதியட்டகம்
சுத்தவே தாந்த மவுனமோ வலது
சுத்தசித் தாந்தரா சியமோ
நித்தநா தாந்த நிலையனு பவமோ
நிகழ்பிற முடிபின்மேல் முடிபோ
புத்தமு தனைய சமரசத் ததுவோ
பொருளிய லறிந்தில மெனவே
அத்தகை யுணர்ந்தோ ருரைத்திரைத் தேத்தும்
அருட்பெருஞ்ச ஜோதியென் னரசே. 5
Google affiliate Ads;
source book.com link:
Up to 60% off Parenting & Children's Books
77 kids.com link
Primary
littlepim.com link
My blogs:
http://saivasiddhantam.blogspot.in/
http://sansalternatetherapy.blogspot.in/
http://behaviourtherapy.blogspot.in/
Wednesday, October 31, 2012
அருட்பெருஞ்ஜோதியட்டகம்
திரு அருட்பா திரட்டு
அருட்பெருஞ்ஜோதியட்டகம்
நசைத்தமே னிலையீ தெனவுணர்ந் தாங்கே
நண்ணியுங்கண்ணுறா தந்தோ
திசைத்திமா மறைக ளுயங்கின மயங்கிதி
திரும்பின வெனிலத னியலை
இசைத்தலெங் ஙனமோ வையகோ சிறிதும்
இசைத்திடு வேமென நாவை
அசைத்திடற் கரிதென் றுணர்ந்துளோர் வழுத்தும்
அருட்பெருஞ் ஜோதியென் னரசே 4
Google affiliate Ads;
source book.com link:
Up to 60% off Parenting & Children's Books
77 kids.com link
Primary
littlepim.com
My blogs:
http://saivasiddhantam.blogspot.in/
http://sansalternatetherapy.blogspot.in/
http://behaviourtherapy.blogspot.in/
Tuesday, October 30, 2012
அருட்பெருஞ்ஜோதியட்டகம்
திரு அருட்பா திரட்டு
அருட்பெருஞ்ஜோதியட்டகம்
கண்முதற் பொறியால் மனமுதற் கரணக்
கருவினாற் பகுதியின் கருவால்
எண்முதற் புருட தரத்தினாற் பரத்தால்
இசைக்குமோர் பரம்பர வுணர்வால்
விண்முதற் பரையால் பராபர வறிவால்
விளங்குவ தரிதென வுணர்ந்தோர்
அண்முதற் றடித்துப் படித்திட வோங்கும்
அருட்பெருஞ் ஜோதியென் னரசே 3
(தொடரும்)
Google affiliate Ads;
source book.com link:
Up to 60% off Parenting & Children's Books
77 kids.com link
Primary
My blogs:
http://saivasiddhantam.blogspot.in/
http://sansalternatetherapy.blogspot.in/
http://behaviourtherapy.blogspot.in/
Monday, October 29, 2012
அருட்பெருஞ்ஜோதியட்டகம்
திரு அருட்பா திரட்டு
அருட்பெருஞ்ஜோதியட்டகம்
குலவுபே ரண்டப் பகுதியோ ரனந்த
கோடிகோடி களுமாங் காங்கே
நிலவிய பிண்டப் பகுதிகள் முழுது
நிகழ்ந்தபற் பலபொருள் திரளும்
விலகுறா தகத்திமு புறத்துமே விடத்தும்
மெய்யறி வானந்தம் விளங்க
அலகுறா தொழியா ததுவதில் விளங்கும்
அருட்பெருஞ் ஜோதியென் னரசே 2.
Google affiliate Ads;
source book.com link:
Up to 60% off Parenting & Children's Books
77 kids.com link
Primary
My blogs:
http://saivasiddhantam.blogspot.in/
http://sansalternatetherapy.blogspot.in/
http://behaviourtherapy.blogspot.in/
Sunday, October 28, 2012
அருட்பெருஞ்ஜோதியட்டகம்
திரு அருட்பா திரட்டு
அருட்பெருஞ்ஜோதியட்டகம்
அருட்பெரு வெளியி லருட்பெரு வுலகத்
தருட்பெருந் தலத்துமே னிலையில்
அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்
அருட்பெருந் திருவிலே யமர்ந்த
அருட்பெரும் பதியே யருட்பெரு நிதியே
அருட்பெருஞ் சித்தியென் னமுதே
அருட்பெருங் களிப்பே யருட்பெருஞ் சுகமே
அருட்பெருஞ் ஜோதியென் னரசே 1
(தொடரும்)
Google affiliate Ads;
source book.com link:
Up to 60% off Parenting & Children's Books
77 kids.com link
Primary
My blogs:
http://saivasiddhantam.blogspot.in/
http://sansalternatetherapy.blogspot.in/
http://behaviourtherapy.blogspot.in/
Saturday, October 27, 2012
திருக்குறள்
திருக்குறள்
1.அறத்துப்பால்
2.வான் சிறப்பு
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணர் பாற்று. 11
மழை தவறாமல் பெய்ய உலகம் நிலை பெற்று வாழும்.
ஆதலால் மழை உலகத்து உயிர்களுக்கு அமிர்தம்
என்று கூறலாம்.
துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. 12
உண்பவர்களுக்கு பல்வேறு உணவுகளை உண்டாக்கி
தாகம் தணிக்கும் நீருமாகி இருப்பது மழையாகும்.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள் நின்று உடற்றும் பசி. 13
பருவமழை பெய்யாதிருந்தால் கடலால் சூழப்பட்ட உயிர்கள்
பசியால் வருந்தும். தாவரங்களும் அழிந்துவிடும்.
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால் 14
மழை வளம் குறைந்தால் உழவர் வயலை
உழ ஏர் கொண்டு செல்ல மாட்டார்.
கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றா\ங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. 15
பெய்யாமல் நின்று வாழ்வைக் கெடுப்பதும் மழை.
மழை இன்றி வளம் கெட்டு துன்புறுவோர்க்கு துணையாக
பெய்து காப்பதும் மழையாகும்.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. 16
வானிலிருந்து மழைத்துளி விழாவிட்டால் பசுமையான
புல்லின் தலையையும் காண்பது அரிது.
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். 17
மேகமானது கடலிலிருந்து நீரை கிரகித்து மறுபடியும்
அந்நீரையே மழையாகத் தருகிறது. அவ்வாறு இல்லாவிடின்
கடலும் வற்றிவிடும்.
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. 18.
மழை பொழியாவிடில், இப்பூமியில் வானவர்க்காண
பூஜைகள் நடைபெற இயலாது.
தானம் தவம் இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின். 19
மழை பொழியாவிடின் இந்தப் பரந்த உலகில்
தானம், தவம் என்ற இரண்டு அறங்களும் கிடையாது.
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. 20
அனைத்து உயிர்களும் தண்ணீர் இல்லாமல்
வாழமுடியாது. தொடர்ந்து மழை இல்லாவிடில்
ஒழுக்கமும் மறைந்து போகும்.
source book.com link:
Up to 60% off Parenting & Children's Books
77 kids.com link
Primary
My blogs:
http://saivasiddhantam.blogspot.in/
http://sansalternatetherapy.blogspot.in/
http://behaviourtherapy.blogspot.in/
Friday, October 26, 2012
திருக்குறள்
திருக்குறள்
1.அறத்துப்பால்
1. கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
எழுத்துகள் அனைத்தும் "அ" என்ற எழுத்தை முதலாவதாகக் கொண்டு
உள்ளதுபோல் உலகத்து உயிர்கள் எல்லாம் இறைவனை முதலாவதாகக்
கொண்டுள்ளன.
கற்றதனா லாய பயனெங்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். 2
தூய அறிவினன் ஆகிய இறைவனின் திருப்பாதங்களை
தொழாதவன் எத்தனை கற்றும் பயன் இல்லை.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார். 3
அடியவர்களின் மனமென்னும் மலரில் வீற்றிருக்கும் இறைவனின்
திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர்கள் இந்த உலகில் நீண்ட
ஆயுளுடன்வாழ்வார்கள்.
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. 4.
வேண்டியவர் வேண்டாதவர் என்பதே இல்லாத இறைவனின்
திருவடிகளை எப்போதும் நினைப்பவர்களுக்கு எக்காலத்திலும் துன்பங்கள்
அணுகாது.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5
இறைவனின் புகழை விரும்பி அன்பு செலுத்துபவர்களுக்கு,
இம்மையிலும் மறுமையிலும் துன்பங்கல் ஏற்படுவதில்லை.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். 6
மெய், வாய் , கண், காது, மூக்கு என்ற ஐம்பொறிகளின் வழியாக
உண்டாகும் பேராசைகளை நீக்கி இறைவனின் ஒழுக்க நெறிகளை
கடைபிடித்து நிற்பவர்கள் சிறந்த வாழ்க்கை வாழ்வார்.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. 7
கடவுளுக்கு ஈடு கடவுள்தான். அவரது திருவடிகளை பக்தியுடன்
வணங்குபவர்களைத் தவிர மற்றவர்களுக்கு மனக்கவலையை
மாற்றுவது கடினம்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீத்தல் அரிது. 8
தருமக் கடலாக விளங்கும் இறைவனின் திருவடிகளைப்
பற்றியவர்களைத் தவிர மற்றவர் பொருள், இன்பம் போன்ற
கடல்களை கடத்தல் இயலாது.
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. 9.
எட்டு குணன்களை உடைய இறைவனின் பாதங்களை
வணங்காதவரின் தலையானது, தங்களுக்குரிய செயல்களை ஆற்றாத
( கேட்காத செவி, பார்க்காத கண், சாத வாய், நுகராத மூக்கு, இயங்காத தேகம்)
ஐம்புலங்களைப் போலப் பயனற்றதாகும்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். 10
இறைவனின் திருவடிகளை அடைந்தவர்கள் பிறவி என்ற
பெருங்கடலை கடக்க இயலும். மற்றவர்களால் எளிதில் இயலாது.
source book.com link:
Up to 60% off Parenting & Children's Books
77 kids.com link
Primary
My blogs:
http://saivasiddhantam.blogspot.in/
http://sansalternatetherapy.blogspot.in/
http://behaviourtherapy.blogspot.in/
Wednesday, October 24, 2012
திருவருட்பிரகாச வள்ளலாரின் திருநெறிகள்
திருவருட்பிரகாச வள்ளலாரின் திருநெறிகள்
1. கடவுள் ஒருவரே : அவர் அருட்பெருஞ்ஜோதி
ஆண்டவர் என்க.
2. எல்லா உயிர்களும் நமக்குச் சகோதரர்களே
என்று உணர்க.
3. சாதி, சமய, மத, இன வேறுபாடுகளைக்
காணற்க.
4. சிறு தெய்வ வழிபாட்டினையும்,
பலியிடுவதையும் விலக்குக.
5. புலால் உண்னற்க; எவ்வுயிரையும் கொலை
செய்யற்க.
6. பசித்தாரது பசியைப் போக்குதலே உண்மை
வழிபாடாகக் கொள்க.
7. இறந்தவர்களைத் தகனம் செய்யாது புதைத்திடுக.
8. இந்திரிய, கரண, ஜீவ, ஆன்ம, நித்திய, ஜீவகாருண்ய
ஒழுக்கங்களைக் கடைபிடுத்திடுக.
9. உண்மை அன்பால் கடவுளை வழிபாடு செய்து
ஒளியை நமக்குள் காண்க.
10. உயிர்க்குலமே கடவுள் விளங்கும் ஆலயமாகக்
கருதி உயிர்கட்கு இரங்கி இதம்புரிக.
source book.com link:
Up to 60% off Parenting & Children's Books
77 kids.com link
Primary
My blogs:
http://saivasiddhantam.blogspot.in/
http://sansalternatetherapy.blogspot.in/
http://behaviourtherapy.blogspot.in/
Tuesday, October 23, 2012
நமச்சிவாய சங்கீர்த்தன லகரி
நமச்சிவாய சங்கீர்த்தன லகரி
(ராமலிங்கம் சுவாமிகள் அருளியது)
பெற்ற தாய்தனை மகமறந்தாலும்
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
கற்ற நெஞ்சம் கலைமறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சிவாயத்தை நான்மற வேனே.
source book.com link:
Up to 60% off Parenting & Children's Books
77 kids.com link
Primary
Monday, October 22, 2012
திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்
திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்
உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி
ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி
இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி
பண்ணார் இசையின்சொற் கேட்டாய் போற்றி
பண்டேஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
( முற்றும்)
source book.com link:
Up to 60% off Parenting & Children's Books
Sunday, October 21, 2012
திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்
திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்
நெடிய விசும்பொடு கண்ணே போற்றி
நீள அகலம் உடையாய் போற்றி
அடியும் முடியும் இகலிப் போற்றி
அங்கொன்று அறியாமை நின்றாய் போற்றி
கொடிய வன்கூற்றம் உதைத்தாய் போற்றி
கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
(தொடரும்)
Saturday, October 20, 2012
திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்
திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்
மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி
சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக்கு எல்லாம் போற்றி
அல்லல் நலிய அலைந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
(தொடரும்)
Friday, October 19, 2012
திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்
திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்
இமையாது உயிராது இருந்தாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி
ஊழி யேழான ஒருவா போற்றி
அமையா வரு நஞ்சம் ஆர்த்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
சுமையாகி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
(தொடரும்)
Thursday, October 18, 2012
திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்
திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்
பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் ஆனாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
(தொடரும்)
Wednesday, October 17, 2012
திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்
திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்
சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி
தேவர் அறியாத தேவே போற்றி
புல்லுயிற்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
போகாதுஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
பற்றி யுலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
(தொடரும்)
Tuesday, October 16, 2012
திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்
திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்
ஊராகி நின்ற உலகே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி எங்கும் பரந்தாய் போற்றி
பெராதுஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவியான நிழலே போற்றி
நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
(தொடரும்)
Monday, October 15, 2012
திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்
திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்குத் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாடல் உகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
(தொடரும்)
Sunday, October 14, 2012
திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்
திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி யோடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
(தொடரும்)
Saturday, October 13, 2012
திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்
திருநாவுக்கரசர் அருளிய போற்றித்தாண்டகம்
பிச்சாடல் பேயோடு உகந்தாய் போற்றி
பிறவி அறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாகம் அசைத்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
(தொடரும்)
Friday, October 12, 2012
திருநாவுக்கரசர் அருளிய " போற்றித் தாண்டகம்"
திருநாவுக்கரசர் அருளிய " போற்றித் தாண்டகம்"
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
(தொடரும்)
Thursday, October 11, 2012
திருநாவுக்கரசர் அருளிய " போற்றித் தாண்டகம்"
திருநாவுக்கரசர் அருளிய " போற்றித் தாண்டகம்"
பிரமன்தன் சிரம் அரிந்த பெரியோய் பொற்றி
பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி
கரம் நான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
காதலிப்பார்க்காற்ற எளியாய் போற்றி
அருமந்த தேவர்க்கரசே போற்றி
அன்றரக்கண் ஐந்நான்கு தோளுந்தாளும்
சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி
(தொடரும்)
Wednesday, October 10, 2012
திருநாவுக்கரசர் அருளிய " போற்றித் தாண்டகம்
திருநாவுக்கரசர் அருளிய " போற்றித் தாண்டகம்"
பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி
திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை ஆண்டாய் போற்றி
சங்கொத்த நீற்றம் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி
(தொடரும்)
Tuesday, October 9, 2012
திருநாவுக்கரசர் அருளிய " போற்றித் தாண்டகம்"
திருநாவுக்கரசர் அருளிய " போற்றித் தாண்டகம்"
உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
வள்ளளே போற்றி மணாளா போற்றி
வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி
வெள்ளை யேறேறும் விகிர்தா போற்றி
மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி
தெள்ளு நீர்க் கங்கைச் சடையாய் போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி
(தொடரும்)
Monday, October 8, 2012
திருநாவுக்கரசர் அருளிய " போற்றித் தாண்டகம்"
திருநாவுக்கரசர் அருளிய " போற்றித் தாண்டகம்"
வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
வான் பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
குரை கழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி
நம்புமவர்க்கு அருள்பொருளே போற்றி போற்றி
நால் வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றி
செம்பொன்னே மரகதமே மணியே போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி
(தொடரும்)
Sunday, October 7, 2012
திருநாவுக்கரசர் அருளிய " போற்றித் தாண்டகம்"
திருநாவுக்கரசர் அருளிய " போற்றித் தாண்டகம்"
சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத் தயனோடு மாலுங் காணா
அனல் உருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி
(தொடரும்)
Saturday, October 6, 2012
திருநாவுக்கரசர் அருளிய "போற்றித் தாண்டகம்"
திருநாவுக்கரசர் அருளிய "போற்றித் தாண்டகம்"
நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
வெஞ்சுடரோன் பல்லிருத்த வேந்தே போற்றி
வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சிருளிள் ஆடல் உகந்தாய் போற்றி
துநீறு மெய்க்கணிந்த சோதி போற்றி
செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி
(தொடரும்)
Thursday, October 4, 2012
திருநாவுக்கரசர் அருளிய "போற்றித் தாண்டகம்"
திருநாவுக்கரசர் அருளிய "போற்றித் தாண்டகம்"
பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
பூதப்படையுடையாய் போற்றி போற்றி
மன்னியசீர் மறை நான்கும் ஆனாய் போற்றி
மறியேந்து கையானே போற்றி போற்றி
உன்னுமவர்க்கு உண்மையனே போற்றி போற்றி
உலகுக்கு ஒருவனே போற்றி போற்றி
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி
(தொடரும்)
Tuesday, October 2, 2012
திருநாவுக்கரசர் அருளிய "போற்றித் தாண்டகம்"
திருநாவுக்கரசர் அருளிய "போற்றித் தாண்டகம்"
மலையான் மடந்தை மணாளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என் நெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றிமேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி
இலையார்ந்த மூவிலைவேல் ஏந்தீ போற்றி
ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி
சிலையாலன்றே யிலெரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி
(தொடரும்)
Monday, October 1, 2012
திருநாவுக்கரசர் அருளிய "போற்றித் தாண்டகம்"
திருநாவுக்கரசர் அருளிய "போற்றித் தாண்டகம்"
கற்றவர்கள் உன்ணுங் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
அற்றவர்கட் காரமுதம் ஆனாய் போற்றி
அல்லல் அறுத் அடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவர் ஒப்பில்லா மனியே போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி
வங்கமலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி
மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி
கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
கொல்புலித்தோல் ஆடைக் குழகா போற்றி
அங்கணனே அமரர்கள் தம் இறைவா போற்றி
ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி
(தொடரும்)
Saturday, September 29, 2012
சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி
சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே! உன் தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே!
வண்திருப் பெருந்துறையாய்! வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே!
கடலமு தே! கரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்! உல குக்குயிரானாய்!
எம்பெரு மான்பள்ளி எழுந்தருளாயே!
புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும் நின்னலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்!
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே!
(முற்றும்)
Friday, September 28, 2012
சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி
சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்?
பந்தணை விரலியும் நீயும்நின் னடியார்
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி,
அந்தண னாவதும் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தே! பள்ளி எழுந்தருளாயே.
(தொடரும்)
Thursday, September 27, 2012
சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி
சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி
அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு: இவன் அவன்: எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்சூழ் திரு உத்தர கோச
மங்கையுள்ளாய்! திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளும் ஆறது கேட்போம்:
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!
(தொடரும்)
Wednesday, September 26, 2012
சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி
சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி
பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர்: மானுடத் தியல்பின்
வணங்குகின் றார் அணங் கின்மண வாளா!
செப்புறு கமலங்கள் மலருந்தன் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!
(தொடரும்)
Tuesday, September 25, 2012
சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி
சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி
பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல்திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக் கும்அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!
(தொடரும்)
Monday, September 24, 2012
சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி
சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி
இன்னிசை வீணையர், யாழினர், ஒருபால்;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர்க் கையினர், ஒருபால்;
தொழுகையர், அழுகையர், துவள்கையர் ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒருபால்;
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!
(தொடரும்)
Sunday, September 23, 2012
சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி
சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி
கூவின பூங்குயில்; கூவின கோழி
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை யொளி ஒளி உதயத்து
ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவ! நற் செறிகழல் தாளிணை காட்டாய்!
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரி யாயெமக் கெளியாய்!
எம்பெரு மான்! பள்ளி எழு ந்தருளாயே!
(தொடரும்)
Saturday, September 22, 2012
சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி
சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது உதயம் நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ, நயனக்
கடிமலர் மலரமற் றண்ணலங் கண்ணாம்
திரள் நிறை அறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெரு ந்துறையுறை சிவபெருமானே!
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லே! பள்ளி எழு ந்தருளாயே!
(தொடரும்)
Wednesday, September 19, 2012
சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி
சிவபெருமான் திருப்பள்ளியெழுச்சி
போற்றியென் வாழ்முத லாகிய பொருளே!
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில் நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!
Wednesday, August 29, 2012
திருத்தொண்டத்தொகை
திருத்தொண்டத்தொகை
பத்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கும் அடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
ஆரூரான் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.
மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க்கு அடியேன்
திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவலூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட்டு வப்பார்
ஆரூரான் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.
Tuesday, August 28, 2012
திருத்தொண்டத்தொகை
திருத்தொண்டத்தொகை
கரைக்கண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த
கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருலகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க்கு அடியேன்
ஆரூரான் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.
கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை
மன்னவனாஞ் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதன்மேல் அரவாட ஆடிப்
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
ஆரூரான் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.
(தொடரும்)
Monday, August 27, 2012
திருத்தொண்டத்தொகை
திருத்தொண்டத்தொகை
வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க்கு அடியேன்
கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரான் ஆரூரில் அம்மானுக்கு ஆளே
பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க்கு அடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரைக்கு அடியேன்
விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க்கு அடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரான் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.
(தொடரும்)
Saturday, August 25, 2012
திருத்தொண்டத்தொகை
திருத்தொண்டத்தொகை
திருநின்ற செம்மையே செம்மையாக்கொண்ட
திருநாவுக்கு அரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க்கு அடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
ஆரூரான் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.
வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர் நற் கொன்றையான் அடியலாற்பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரான் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.
(தொடரும்)
Friday, August 24, 2012
திருத்தொண்டத்தொகை
திருத்தொண்டத்தொகை
இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க்கு அடியேன்
ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்
கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க்கு அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திரு நாளைப் போவார்க்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கு அடியேன்
ஆரூரான் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.
(தொடரும்)
Thursday, August 23, 2012
திருத்தொண்டத்தொகை
திருத்தொண்டத்தொகை
(7ஆம் திருமுறை) (பண்- கொல்லிக்கௌவாணம்)
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்பொருளுக்கு அடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க்கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர் நீதிக்கு அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.
(தொடரும்)
Wednesday, August 22, 2012
திருநீற்றுப்பதிகம்
திருநீற்றுப்பதிகம்
குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமும்கூடக்
கண்திகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே.
ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவாயாந்திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
Tuesday, August 21, 2012
திருநீற்றுப்பதிகம்
திருநீற்றுப்பதிகம்
அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தமதாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.
எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப்படுவது நீறு பாக்கியம் ஆவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆல வாயான் திருநீறே.
இராவணண் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே.
மாலொடு அயனறி யாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றுஎம் ஆல வாயான் திருநீறே.
(தொடரும்)
Monday, August 20, 2012
திருநீற்றுப்பதிகம்
திருநீற்றுப்பதிகம்
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந்தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல் வயல சூழ்ந்த திரு ஆல வாயான் திரு நீறே.
முக்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பக்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திரு ஆல வாயான் திரு நீறே.
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணேந் தருவது நீறு திரு ஆல வாயான் திரு நீறே.
பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு
பேச இனியது நீறு பெரு ந்தவத்தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அ ந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திரு ஆல வாயான் திரு நீறே.
(தொடரும்)
Sunday, August 19, 2012
திருநீற்றுப்பதிகம்
இரண்டாம் திருமுறை
திருநீற்றுப்பதிகம்
திருஆலவாய் பண்- காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.
Saturday, August 18, 2012
சிவபுராணம்
சிவபுராணம்
அன்பருக்கன்பனே யாவையும்மாய் அல்லையுமாம்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே யந்தம் நடுவாகி யல்லானே
ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞ் ஞானத் தாற்
கொடுணர்வார் தம் கருத்தின்
நோக்கரிய நோக்கோ நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்கும் மெங் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே யத்தாமிக்காய் நின்ற
தோற்றச் சுடரொளியாய் சொல்லாத நுண்ணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே யென் சிந்தனையுள்
ஊற்றான வுண்ணா ரமுதே யுடையானே
வேற்று விகார விடக் குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேனெம்மையா அரனேயோ வென்றென்று
போற்றி புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக் குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள்ளிருளி னட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென் பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி யருப்பானே ஒ! என்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக் கீழ்ப்
பல்லேரு மேத்தப் பணிந்து
திருச்சிற்றம்பலம்
Friday, August 17, 2012
சிவபுராணம்
சிவபுராணம்
ஆக்கமள விறுதி யில்லா யனைத்துலகும்
ஆக்குவாய் காப்பா யழிப்பா அருள்தருவாய்
போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நிந்தொழும்பில்
நாற்றத்தினேரியாய் சேயாய் நணியானே
மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே
கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறினின்று
பிறந்த பிரப்பறுக்கு மெங்கள் பெருமாள்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்களேத்த
மறைந்திருந்தா யெம்பெருமான் வலவினை யென்றன்னை!
மறைந்திட மூடிய மாயவிருளை
அறம்பாவ மென்னு மருங்கயிற்றாற் கட்டிப்
புறத்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரு மொன்பது வாயிற்குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா வுனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்துள்ளுருகும்
நலந்தானிலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற்சிறந்த தயாவான தத்துவனே!
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச வருள் புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெட
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆராவமுதே யளவிலாப் பெம்மானே
ஓராதா ருள்ளத்தொளிக்கு மொளியானே
நீராயுருக்கியென் னாருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமு மில்லானே யுள்ளானே!
(தொடரும்)-2
Thursday, August 16, 2012
சிவபுராணம்
சிவபுராணம்
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுது என் நென் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி யாண்ட குருமணிதன் தாள் வாழ்க!
ஆகம மாகி நின் றண்ணிப் பாண்றாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க!
வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க!
பிறப்பறுக்கும் பிஞ்சகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க!
கரங்குவிவாருண்மகிழுங்கோன் கழல்கள் வெல்க!
சிரங்குவிவா ரோங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!
ஈசனடி போற்றி எந்தையடி போற்றி
தேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்ப மருளுமலை போற்றி
சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால்
அவனருளாலே யவன்தாள் வணங்கி
சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை
முந்தை வினை முழுவதும் ஓயவுரைப் பன்யான்!
கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா வெழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந்து எல்லை யிலா தானே நின் பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
புல்லாகிப் பூடாய் புழுவாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத்தாவரச் சங்கமத்துள்!
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யவென்னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயாவென வோங்கி யாழ்ந்தகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியா யியமானனாம் விமலா
பொய்யாயின வெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞான மில்லாதனின்பப் பெருமானே!
அஞ்ஞானந் தன்னை யகல்விக்கும் நல்லறிவே!
(தொடரும்)
Monday, August 13, 2012
சிவபுராணம்
திருவாசகம்
(மாணிக்கவாசகர் அருளியது)
தொல்லை இரும்பிறவி சூழும்தளை நீக்கி
அல்லறுத் தானந்தம் ஆக்கியதே- எல்லை
மருவாநெறி அளிக்கும் வாதவூர் எங்கொன்
திருவா சகம் என்னும் தேன்.
Saturday, August 4, 2012
SIVAPURAANAM
விநாயகர் துதி
பாலும் தெளிதேனும் பாகும்
பருப்புமிவை நான்கும் கலந்துனக்கு
நான் தருவேன்- கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே
நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந் தா!
திருமூலர் அருளிய திருமந்திரம்
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவருமாவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே!
Subscribe to:
Posts (Atom)