Translate

Tuesday, May 14, 2013

யோகாசனம்




யோகாசனம்


பிராணாயாமம் : 

                    `பிராணா என்பதற்கு மூச்சு,சுவாசம், வாழ்க்கை, உயிர்சக்தி

                     காற்று, சக்தி அல்லது வலிமை என்று பொருள் உள்ளது

                    ஆயாமா என்றால் நீளம் , விரித்தல், நீட்டுதல் அல்லது

                    அடக்குதல் என்று பொருள்.

                   சுவாசித்தல்:

                  1. உள் சுவாசம். இது பூரகா (நிறைத்துக் கொள்ளுதல்) என 

                      அழைக்கப்படுகிறது.

                  2.. வெளி சுவாசம். இது ரேசகா ( காலி செய்தல் ) என 

                        அழைக்கப்படுகிறது.

                  3. கும்பகம் இது தக்க வைத்துக் கொள்ளுதல் மூச்சை பிடித்துவைத்துக் 

                     கொள்லுதலாகும்) . இது இரண்டுவகைப்படும்.

                     1) உட்சுவாசத்திற்குப் பின் மூச்சு நிறுத்தப்படுகிறது. [அந்தர கும்பகம்]

                     2) வெளிசுவாசத்திற்குப் பின் மூச்சு நிறுத்தப்படுகிறது. [ பாஹ்ய 

                           கும்பகம்]

பிரத்யாகாரம்:

                   ஒரு மனிதனின் பகுத்தறிவு அவனது புலன்கள் இழுத்த 

இழுப்புக்கெல்லாம் அடி பணிந்து கொண்டிருந்தால் அவன் தொலைந்து 

போகிறான். இதற்கு மாறாக, சுவாசத்தில் அளவான கட்டுப்பாடு இருந்தால், 

புலன்கள் ஆசைகளுக்குக் காரனமான வெளிப் பொருள்களை நாடி 

ஓடுவதற்குப் பதிலாக, உட்புறம் திரும்புகின்றன. அவற்றின் 

கொடுங்கோன்மையிலிருந்து அவன் விடுபடுகிறான். இதுவே யோகாவின் 

ஐந்தாவது கட்டம்.

               இந்து தத்துவத்தின்படி, உணர்வு நிலை மூன்று வெவ்வேறு 

தன்மைகளாக வெளிப்படுகிறது.

அவையாவன;

1. சாத்வம் ( ஒளிவிடும்,தூய்மையான அல்லது நல்ல தன்மை). இது தெளிவு 

மற்றும்  மன அமைதியைத் தரும்.

2. ராஜஸம் ( அசைவு மற்றும் செயல்பாட்டின் தன்மை). இது ஒரு மனிதரை 

சக்தி   மிக்கவராகவும், செயலூக்கமுள்ளவராகவும், இறுக்கமும் பிடிவாதமும் 

உள்ளவராகவும்  ஆக்கும்.

3. தாமஸம் என்பது மாயை, மறைபொருள், செயலற்ற தன்மை, அறியாமை 

ஆகியவற்றின்  தன்மையாகும். இத்தன்மை கொண்டவர் செயலற்ற மந்த 

நிலையில் இருப்பார்.

  சாத்வம் என்ற தன்மை தெய்வீகத்திற்கும், தாமஸம் அரக்கத்தனத்திற்கும் 

இட்டுச்  செல்கின்றன. இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட தன்மை ராஜஸம் 

ஆகும்.

ஒரு தனி மனிதனால் கடைபிடிக்கப்படும் நம்பிக்கை, உண்ணப்படும் உணவு,

செய்யப்படும் தியாகங்கள், கடைபிடிக்கப்படும் கடுமையான விரதங்கள்,

கொடுக்கப்படும் பரிசுகள் இவை எல்லாமே அவரிடம் மேலோங்கியுள்ள

குணத்தைப் பொறுத்து மாறுபடுகின்றன.


தாரணம் :

           உடல் ஆசனங்களால் பக்குவப்படுத்தப்பட்டு, 

           பிராணாயாமத்தால் சுத்தப்படுத்தப்பட்டு,

          மற்றும் புலன்கள் பிரத்தியாகாரத்தால் கட்டுக்குள்

          கொண்டுவரப்பட்ட பின்னர் தாரணம் என்ற ஆறாவது

          கட்டத்தை அடைகிறான் ஒரு பயிற்சியாளன்.

இக்கட்டத்தில்,அவன்தான் முழுமையாக ஆழ்ந்துள்ள ஒரு தனிப்புள்ளி

அல்லது பணியில் முற்றிலும் ஒருமுகப்படுத்தப்பட்டு இருக்கிறான்.இதை

அடைய மனம் அமைதிப்படுத்தப்படவேண்டும்.

மனம் என்பது வெளிஉலகிலிருந்து வருகின்ற கருத்துப்பதிவுகளையும்,

தனக்குள்ளே உள்ள கருத்துப்பதிவுகளையும் ஒழுங்குபடுத்தி, மதிப்பீடு

செய்து ஒருங்கமைக்கும் ஒருகருவியாகும்.

மனம் எண்ணங்களின் உருவாக்கம் ஆகும். எண்ணங்கள் நுண்மையாகவும்

மாறிக்கொண்டே இருப்பனவையாகவும் இருப்பதால்  இவற்றைக் 

கட்டுப்படுத்துவது கஷ்டம்.


தியானம்;


எண்ணெய் ஆனது ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரதிற்கு

ஊற்றப்படும் பொழுது அதன் தொடர்ந்த நிலையான வீழ்ச்சியைக்

காணலாம். 

ஒருமுகப்படுத்துதலின் வீழ்ச்சி குறுக்கீடு இன்றித் தொடர்ந்து செல்லும்போது

ஏற்படும் நிலைதான் தியானம்.

ஒழுங்கான இடைவெளியற்ற மின்சாரம் பாயும் பொழுது மின்விளக்கு 

சுடர்விட்டு ஒளிவிடுவதுபோல யோகியின் மனம் தியானத்தால் ஒளிவிடும்
.
அவனது உடல்,சுவாசம் ,புலன்கள், மனம்,பகுத்தறிவு மற்றும் அகங்காரம்

எல்லாமே பரமாத்மாவின் பால் ஒருங்கிணைந்து,அசைக்க முடியாத ஒரு

உணர்வு நிலையில் நிலைத்திருக்கிறான். ஒரு மின்னல் கீற்றைப் போல

பூமியையும், வானத்தையும் தாண்டி அப்பால் ஒளிவிடுகிற ஒரு வெளிச்சத்தை

யோகி காண்கிறான்.

யோகாவின் பாதையில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் ஆரோக்கியம்,

உடலில் ஒரு லேசான தன்மை, திடம், முகத்தில் தெளிவு, இனிய குரல்,

உடலில் நறுமணம் மற்றும் விழைவிலிருந்து விடுதலை ஆகியன ஆகும்.

அவன் தன் செயல்பாடுகள் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம்

செய்து அவனிடம் அடைக்கலம் புகுகின்றான்.


சமாதி:


  சமாதி என்பது பயிற்சியாளனின் தேடுதலின் முடிவு ஆகும். தனது

தியானத்தின் உச்சக்கட்டத்தில் அவன் சமாதி நிலைக்குள் புகுந்து

செல்லுகிறான். 

இதில்,அவன் உறக்கத்தில் இருப்பது போல,அவனது

உடலும்,புலன்களும் ஓய்வாக இருக்கின்றன.

அவன் விழித்திருப்பது போல அவனது மனமும் திறன்களும்

விழிப்புடன் இருக்கின்றன.

சமாதி நிலையில் உள்ள ஒரு நபர் முழுவதும் உணர்வு நிலையிலும்,

விழிப்புடனும் இருக்கிறார்.

                                                                                                (வளரும்)

சந்தானம்.

Sunday, May 12, 2013

திருக்குறள்



 திருக்குறள் 

 (see below in English)
 1.அறத்துப்பால்
17. அழுக்காறாமை


ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.                              161

உள்ளத்தில் பொறாமை இல்லாமல் வாழ்வது
ஒழுக்கத்தின் ஒரு பகுதியாகும்.

kural-161

As 'strict decorum's' laws, that all men bind,
Let each regard unenvying grace of mind.

Let a man esteem that disposition which is
free from envy in the same manner as propriety
of conduct.

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.                          162

எவரிடத்திலும் பொறாமை கொள்ளாதிருப்பது ஒருவர்
பெற்ற செல்வங்களிலெல்லாம் மேலான செல்வமாகும்.

kural-162

If man can learn to envy none on earth,
'Tis richest gift,beyond compare its worth.

Amongst all attainable excellences there is
None equal to that of being free from envy
towards others.


அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.                                163

மற்றவருடைய முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்படுகிறவன்
தனக்கு முன்னேற்றத்தை விரும்பாதவனாகிறான்.

kural-163

Nor wealth nor virtue does that man desire 'tis plain,
Whom others' wealth delights not,feeling envious pain.

Of him who instead of rejoicing in the wealth of others,
envies it, it will be said " he neither desires virtue not
wealth "

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழ்க்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.                              164

தவறான செய்கைகளால் குற்றம் ஏற்படும் என்பதை
உணர்ந்து சான்றோர் தருமமற்ற செயலைப் பொறாமை
கொண்டு செய்யமாட்டார்.

kural-164

The wise through envy break not virtu's laws,
Knowing ill-deeds of foul disgrace the cause.

(The wise) knowing the misery that comes from
transgression will not through envy commit
unrighteous deeds.


அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது.                         165

பொறமைக் குணம் உடையவர்க்கு அதுவே எதிரி.
பகைவர் தீங்கு செய்ய மறந்தாலும், பொறாமை
தவறாமல் கேடு விளைவிக்கும்.

kural-165

Envy they have within!  Enough to seat their fate!
Though foemen fail, envy can ruin consumte.

To those who cherish envy that is enough. Though
free from enemies that(envy) will bring destruction.


கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.                     166

மற்றவருக்குத் தானம் செய்யும்பொருளைக் கண்டு
பொறாமைப்படுகின்ற உறவினர், உணவுக்கும்,
உடைக்கும் கூட தரித்திரப்படுவர்.

kural-166

Who scans good gifts to others given with envious eye,
His kin, with none to clothe or feed them, surely die.

He who is envious at a gift ( made to another) will
with his relations utterly perish destitute of food and
rainment.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.                               167

பொறாமைக் குணமுடையவனைத் திருமகள்
ஆத்திரம் கொண்டு தன் தமக்கையான
மூதேவியிடம் ' இவனோடு போய்ச் சேர்ந்து கொள்'
எனச் சொல்லிவிடுவாள்.


kural-167

From envious man good fortune's goddess turnes away,
Grudging him good, and points him out misfortune's prey.

Lakshmi envying ( the prosperity) of the envious man will
depart and introduce him to her sister.


அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்துவிடும்.                            168

பொறாமை எனப்படும் பாவி ஒருவனுடைய
செல்வத்தை அழித்து அவனைத் தீயவழிகளில்
இறக்கிவிடும்.

kural-168
Envy,embodied ill, incomparable  bane,
Good fortune slays, and soul consignes to fiery pain.

Envy will destroy (a man's) wealth (in his world) and
drive him into the pit of fire ( in the world to come)

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமுஞ் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.                         169

பொறாமை கொண்டவர் முன்னேற முடியாது.
பொறாமை இல்லாதவர் தரித்திரப் படமாட்டார்.
அப்படி இருந்தால் அது ஆராய்ச்சிக்குட்பட்டது.


kural-169
To men of envious heat, when comes increase of joy,
or loss to blameless men , the 'why' will thoughtful hearts employ.

The wealth of a man of envious mind and the poverty
of the righteous will be pondered.

அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.                    170

பொறாமை கொண்டு பெருமை பெற்றவரும் இல்லை.
அது இல்லாதவர்கள் சிறுமை பெற்றதுமில்லை.

kural-170
No envious men to large and full felicity attain;
No  men from envy free have failed a sure increase to gain.

Never have the envious become great;
Never have those who are free from envy
been without greatness.

திருக்குறள்
 (see below in English)
 1.அறத்துப்பால்
18. வெஃகாமை


நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.                             171

மனசாட்சிக்கு விரோதமாக மற்றவரிடமுள்ள
நல்ல பொருளை விரும்பினால் அது அவன்
குடியைக் கெடுத்து பல துன்பங்களையும் தரும்.


kural-171
With soul unjust to covet othyers' well-earned store,
Brings ruin to the home, to evil opes the door.

If a man departing from equity covet the property
(of others), at that very time will his family  be destroyed
and  guilt be incurred.



படுபயன் வெஃகிப் பழிபடுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.                     172

நடுநிலைமை தவற அஞ்சுகின்றவர் தனக்குக்
கிடைக்கும் பலனுக்காக பழிவரும் செயல்களைச்
செய்யமாட்டார்.


kural-172
Though lust of gain, no deeds that retribution bring,
Do they, who shink  with shame from every unjust thing.

Those who  blush at the want of equity will not commit
disgraceful acts through desire of the  pofit that may be
gained.

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.                      173

தருமவழி நடந்து அதனால் கிடைக்கும் இன்பத்தை
விரும்புகின்றவர், நிலையில்லாத சிற்றின்பத்தை
விரும்பி அதருமச் செயல்களைஸ் செய்யமாட்டார்.

kural-173

No deeds of ill , misled by base desire,
Do they, whose souls to other joys  aspire.

Those who desire the higher pleasures(heaven)
will not act unjustly through desire of the
Trifling joy.(in this life)
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.                          174

ஐம்புலன்களையும் வென்ற குற்றமற்ற
அறிவுடையோர் தரித்திரப்பட்டாலும் பிறர்
பொருளுக்கு ஆசைப்படமாட்டார்கள்.

kural-174

Men who have conquered  sense, with sight from sordid vision freed,
Desire not other's goods,e'en in  the hour of  sorest need.

The wise who have conquered their senses are free from crime,
will not covet  (the things of others), with the thought
"we are destitute'.

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெரிய செயின்.                                   175

பொருளுக்காக அறிவில்லாத செயல்களைச் செய்தால்,
நுணுகி, ஆராய்ந்து பெற்ற விரிந்த அறிவுக்கு ஏது ம்திப்பு?

kural-175

What gain , though lore refined of amplest reach he learn,
His acts towards all mankind if covetous desire to folly turn?

What is the advantage of extensive and acurate knowledge
if a man through covetousness act senselessly towards all?
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக்கெடும்.                              176

இறைவன் அருளை விரும்பி தரும நெறியில்
வாழ்பவன் பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு பொல்லாத
குற்றங்களை எண்ணினால் கேடு வரும்.

kural-176

Though, grace desiring, he invirtue's way stand strong,
He's lost who wealth desires, and ponders deeds of wrong.

If he, who through desire ofthe virtue of kindness abides
in the domestic state i.e  , the path in which it may be obtained,
covet ( the property of others)  and think of evil methods
(to obtain it), he will perish.


வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.                             177

பிறர் பொருளை மோசம் செய்து உடைமையாக்கிக்
கொள்வதால் ஏற்படும் முன்னேற்றத்தின் பின் விளைவுகள்
பயங்கரமாயிருக்கும். அதனால் மற்றவர் பொருளுக்கு
ஆசைப்படக்கூடாது.

kural-177
Seek not increase by greed of gain acquired;
That fruit matured yields never good desired.

Desire not the gain of covetousness. In the
 Enjoyment of its fruits there is no glory.
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.                        178

செல்வம் சுருங்காமலிருக்க வேண்டுமானால்,
மற்றவர் விரும்பிப் போற்றுகின்ற அவரது பொருளை
தான் விரும்பக்கூடாது.
kural-178
What saves prosperity from swift decline?
Absence of lust to make another's cherished riches thine!

If it is weighed, " what is the indestructibility of wealth,"
it is freedom from covetousness.


அறனறிந்து வெஃகா அறியுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.                             179

தருமவழி நடந்து மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாத
அறிவுடையோரைத் திருமகள் தான் சென்று சேர வழி
அமைத்துக்கொண்டு தக்க காலத்தில் சேர்வாள்.

kural-179
Good fortune draws anigh in helpful time of need,
To him who, schooled in virtue, guards his soul from greed.

Lakshmi, knowing the manner(in which she may approach)
will immediately come to those wise men who, knowing
that is virtue, covet  not the property of  others.

இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.                  180

பின்னல் நடப்பதை எண்ணாமல் மற்றவர்
பொருளை விரும்புவது அழிவைத்தரும்.
மற்றவர்பொருளை விரும்பாதிருந்தால்
அது வாழ்வில் வெற்றியைத் தரும்.

kural-180

From thoughtless lust of other's goods springs fatal ill,
Greatness of soul  that covets not shall triumph still.

To covet ( the wealth of another) regardless of consequences
will bring destruction. That greatness(of mind) which covets
not will give victory.

Tuesday, May 7, 2013

யோகாசனம்


யோகாசனம்




பி.கே.எஸ் ஐய்யங்கார் அவர்கள் அருளிய யோகாசனம்
(செய்முறை விளக்கம்) ஓர் உன்னத நூலாகும். அதிலிருந்து
திரட்டுக்கள் இங்கே அளிக்கப்படுகிறது.

யமம்: ( நடைமுறை ஒழுக்கங்கள்)

அவையாவன: அஹிம்சை,
               சத்தியம்,
               அஸ்தேயம் (திருடாமை)
               பிரம்மச்சரியம் ( தன்னடக்கம்)
                      மற்றும்
               அபரிக்ரஹம் ( விழையாமை)    

நியமம்: இவை தனிநபரின் ஒழுக்கத்திற்கு ஏற்ற விதிமுறைகளாகும்.

பதஞ்சலியால் வரிசைப்படுத்தப்பட்ட ஐந்து நியமங்கள்:

                  ஸௌச்சம் (தூய்மை)
                சந்தோஷம் (திருப்தி)
                தபஸ் ( கண்டிப்பான எளிமை)
                ஸ்வாத்யாயம் (தன்னைப் பற்றிய ஆய்வு)
                ஈஸ்வரப்ரணிதானம் ( இறைவனிடம் பக்தி)
                                       
                                        (வளரும்)

ஆசனம் :

            யோகாவின் மூன்றாவது கட்டம் ஆசனம் அல்லது தோற்றம் ஆகும்.
            ஆசனங்கள் ஆரோக்கியம் மற்றும் கை, கால்களுக்கு லகுவான
            அசைவுகளைத் தருகிறது. மனதில் சமநிலையை உருவாக்கி
            மனச் சலனங்களைத் தவிர்க்கிறது.

                                                   ( வளரும்)

சந்தானம்.

யோகாசனம்


யோகாசனம்


யோகா என்பது செயல்முறையுடன் கூடிய அறிவியலாகும் .
மனிதனின் மனம்,ஆன்மா மற்றும் ஒழுக்கம் இவற்றுடன்
தொடர்புகொண்டதாகும்.

யுஜ் என்ற வடமொழி சொல்லிலிருந்து தொன்றியதே "யோகா"
என்ற சொல்லாகும். யோகாவானது அறிவு,மனம்,உணர்ச்சிகள்,
சித்தம் இவற்றை ஒழுங்குபடுத்தும்.

பதஞ்சலி முனிவர் எழுதிய யோக சூத்திரம், 185 சூத்திரங்களின்
வாயிலாக இதை விளக்குகிறது. பதஞ்சலி முனிவர் இதை எட்டு(8)
கட்டங்களாக எடுத்துரைக்கிறார்.

யோகாவின் எட்டு கட்டங்கள்:

1. யமம் (பிரபஞ்ச ஒழுக்கக் கட்டங்கள்)
2. நியமம் ( ஒழுக்கத்தின் வாயிலாக தூய்மைஅடைதல்)
3. ஆசனம் ( உடல் தோற்றம்)
4. பிராணாயாமம் (சுவாசித்தலை கட்டுப்படுத்துதல்)
5. பிரத்யாகாரம்  (புலன்கள் மற்றும் வெளிப் பொருள்களால்
   மனம் ஆதிக்கப்படுவதிலிருந்து விடுதலை பெறுதல்)
6. தாரணம் ( ஒருமுகப்படுத்துதல்)
7. தியானம்
8. சமாதி ( தூய்மையான தியானத்தினால் உருவாகும்
   உயர்ந்த உணர்வு நிலை)

                                   (வளரும்)

Friday, April 12, 2013

பொன்மொழிகள்



பொன்மொழிகள்

101. தகுதிக்கு மேல் செலவு செய்வது உன் உயிரை
    முடித்துக் கொள்ள நீயே கயிறு திரிப்பது போன்றது.

                                               --- பரோஸ்

102. பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும்
    ஆபரணம் போன்றது.

                                              --- அரிஸ்டாட்டில்

103. உன் நல்ல செயல்களின் மூலம் பிறருக்கு
    வழி காட்டியாக இரு.

                                        --- இங்கர்சால்

104. மகிழ்ச்சியும் உழைப்பும் வாழ்நாளை வளர்ப்பவை.
                                         
                                                --- பிராங்க்ளின்

105. பணிவு என்பது தோரணங்களில் அல்ல.
    செயல்களில்தான் இருக்க வேண்டும்.

                                         --- ஆண்ட்ரூமேசன்

106. உற்சாகமும் முயற்சியும் உள்ளவனுக்கு எங்கும்
    வேலை கிடைக்கும்.
 
                                       --- இங்கர்சால்

107. கோபத்துடன் செயல்படுபவனும், புயலில் கப்பல் விடுபவனும்
    சரிசமமானவர்கள்.

                                       --- பீச்சர்

108. "எனது" என்ற எண்ணம் நீங்கினால் ஆசையே தோன்றாது.

                                        --- வாரியார்

108. ஒழுக்கமும், தன்னம்பிக்கையுடன் கூடிய ஆற்றலும்
    மதிப்புள்ள முதலீடுகள்.

                                        --- லிட்டீன்

109. எவன் ஒருவன் விடாமுயற்சி செய்கிறானோ அவனே
    வெற்றி என்ற புகழை அடைகிறான்.

110. வாழ்வது முக்கியமன்று; சிறப்பாக வாழ வேண்டும்
    என்பதே முக்கியம்.

                                         --- சாக்ரடீஸ்

111. நம்பிகையுடன் இருக்கும்போது எந்தக் காரியமும்
    கடினமாகத் தெரிவதில்லை.

                                          --- ஜோன்ரேட்


112. அடக்கமுள்ளவன் மகிழ்ச்சி அடைகிறான்.
   அடக்கம் இல்லாதவன் துன்பத்தை அடைகிறான்.


113. பொறுமையாக இருப்பது கடினம்தான்.
    அதன் முடிவோ சமாதானம்.

                                    --- புல்லர்

114. நீங்களும் நன்றாக வாழுங்கள். மற்றவர்களையும்
    நன்கு வாழவிடுங்கள்.

                                  --- ஸ்சில்லர்

115. நம்பிக்கை என்பது புயல் காற்றில் துவண்டு விழும்
    மெல்லிய மலரல்ல; அது அடிபெயரா இமயம் போன்றது.
                                         
                                        --- காந்திஜி
                                       
116. அமைதியான மனம் மனிதன் அடையும் பெரும் பாக்கியம்.

                                         --- அகஸ்டின்
         
117. கோபம் அன்பை அழிக்கிறது.
    செருக்கு அடக்கத்தை அழிக்கிறது.
                     
                                    --- சாணக்கியர்
118. ஒருபோதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டு;
    அது நாம் செய்யும் நற்செயலே.

                                         --- மேட்டர்லிங்க்



119. நாம் பிறரால் ஏமாற்றப்படுவதில்லை. நம்மை நாமே
    ஏமாற்றிக் கொள்கிறோம்.

                                       --- ப்யூலர்
120. உள்ளத்தில் உண்மையுடையவர்கள் ஒரு போதும்
    தோல்வி அடையமாட்டார்கள்.

                                      --- ஷிண்டே


121. பிறர் செய்த உபகாரம் உன் கையில் அதிகமாக
    தங்கிவிடாமல் பார்த்துக்கொள்.

                                   --- எமர்சன்


122. பிறரிடம் உள்ள நூறு குறைகளைச்
    சுட்டிக்காட்டுவதைவிட நம்மிடம் இருக்கும்
    ஒரு குறையையாவது போக்க வேண்டும்.

                                  --- புத்தர்

123. அதிருப்திக்கெல்லாம் வேர் சுயநலமே.

                                  --- கிளார்க்


124. முன்னேறும் சந்தர்ப்பங்கள் தாமாக வருவதில்லை;
    அவை உருவாக்கப்படுகின்றன.

                                          --- ஆரிஸன் ஸ்வெட்மார்டன்



125. நம் ஒவ்வொருவரிடமும் எல்லையற்ற சக்தியும்
    தூய்மையும் ஆற்றலும் உள்ளன.

                               --- விவேகானந்தர்


126. நீ புறக்கணிக்கும் ஒவ்வொரு கடமையும்
    நீ தெரிந்துகொள்ளத் தவறிய ஓர் உண்மையைப்
    புலப்படுத்தும்.

                                        --- வாஷிங்டன்


127. பிறரை அறிந்தவன் கெட்டிக்காரன்;
    தன்னை அறிந்தவன் ஞானி.

                               ---லோட்ஸே


128. தேவைக்கு அதிகமான செல்வம் சுமையாகும்.

                                       --- மார்ஸோ


129. பேராசை உள்ளவரை பேரலைச்சலும் உண்டு.

                                         --- பீட்டர்பெரோ


130. நாணயமாக நடப்பவர்கள் ஒளிக்கும் இருளுக்கும்
    அஞ்சுவதில்லை.

                                        --- கதே

131. வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது;
     பாசத்தால்தான் வெல்ல முடியும்.

132. மனோதைரியம் இல்லையேல் வாய்மை இல்லை.
               
                                             --- மில்டன்


133. செல்வத்தை மட்டுமே நாடுபவன் வீழ்ச்சி அடைவான்.
    நற்பண்பு உடையவன் கிளைபோல் செழித்து இருப்பான்.

                                            --- மவுண்டர்


134. அதிர்ஷ்டத்தின் வலக்கை தொழில். இடக்கை சிக்கனம்.

                                         --- காண்டேகர்


135. எவன் பூரணமாக அகத்தூய்மை உள்ளவனோ அவனே
    உண்மையான பக்திமானாகிறான். மனத்தைப் பெருமளவுக்குத்
    தூய்மைப் படுத்துவதுதான் பக்தி ஏற்பட சிறந்த குணம்.

                                          --- சுவாமி விவேகானந்தர்

136. நட்பு நம் இன்பத்தைப் பெருக்கித் துன்பத்தைக் குறைக்கிறது.

                                         --- எடிசன்


137. நாளைய தினத்தைக் குறித்துக் கவலைப்படாதே;
    இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள உழை.

                                             --- மூர்


138. கோபம் முட்டாள்தனத்தில் துவங்கி வருத்தத்தில் முடிகிறது.

                                              ---பிதாகரஸ்

139. அழகற்ற மனதைவிட அழகற்ற முகம் மேலானது.

                                                --- எல்லீஸ்



140. மனிதகுல முன்னேற்றத்திற்காக மனிதன் உழைக்கிற
    இடமே உயர்ந்த கோயில்.

பொன்மொழிகள்

141. தனது குற்றங்களை மறந்து பிறரின் குற்றத்தைக்
    கண்டுபிடிப்பது தவறு.

                                          --- ரூஸோ


142. விலை கொடுக்காமல் பெற இயலாத பொருள் அனுபவம்.

                                         --- பியேர்

143. சோகம் என்பது பறவையாகும். உங்கள் தலைக்குமேல்
     அதைத் தடுக்க இயலாது. ஆனால் அது உங்கள் தலையில்
     கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்.

                                           --- ஸ்டிலி

144. உண்மையாக நடந்துவரும் மனிதனுக்கு எந்த உபதேசமும்
    தேவையில்லை.

                                            --- வாரியார்


145. முன்னேற்றம் என்பது நம் கைகளில்தான் இருக்கிறது.

                                           --- உட்வெல்


146. ஆசைகளைத் திருப்திசெய்வதில் அமைதி இல்லை;
     மட்டுப்படுத்துவதில்தான் அமைதி உள்ளது.

                                             --- ஹிபர்


147. அதர்மம் ஆதிக்கம் செய்வதைப்போல் தோன்றினாலும்
     தர்மமே வெல்லும்.

                                            --- ஜோசப்ரூக்ஸ்


148. எஜமானனாக இருந்தால் சில சமயம் குருடனாக இருங்கள்.
    வேலையாளனாக இருந்தால் சில சமயம் செவிடனாக
    இருங்கள்.

                                            --- புல்லர்


149. பேச்சு பெரியதே. ஆனால் மௌனம் அதனினும் பெரியதாகும்.

                                           --- வாரியார்


150. நேரம் என்பது செலுத்தப்பட்ட அம்பைப் போன்றது;
     அது திரும்பி வராது.

                                       --- ஜேஷி

Wednesday, April 10, 2013

திருக்குறள்


திருக்குறள் 
 (see below in English)
 1.அறத்துப்பால்
16.பொறையுடைமை

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல்தலை.                   151

தன்னைத் தோண்டுவோரையும் தாங்கிக் கொண்டிருக்கும்
நிலத்தைப் போல் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல்
தலையாய பண்பாகும்.

kural-151

As earth bears up the men who delve into her breast,
To bear with scornful men of virtues is the best.

To bear with those who revile us, just as the earth bears
those who dig it, is the first of virtues.



பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.                           152

வரம்பு மீறி பிறர் தீங்கு செய்தாலும் அதைப்
பொறுப்பது உயர் பண்பாகும். உடனே அதை
மறந்து விடுவது அதனினும் உயர்ந்தது.

kural-152

Forgiving trespasses is good always;
Forgetting them hath even higher praise.

Bear with reproach even when you can retaliate;
But to forget it will be still better than that.



இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.                                153

வறுமைகளுள் வறுமை விருந்தினரை உபசரிக்காமல்
பாராமுகமாயிருப்பதாகும். பலங்களிலெல்லாம் பெரிய
பலம் அறியாதவர் செய்த பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்.


Kural-153
The sorest poverty is bidding guest unfed depart;
The mightiest might to bear with men of foolish heart.

To neglect hospitality is poverty.To bear with the ignorant
is might of might.
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.                                         154

குணக்குன்று என்று மற்றவர்கள் போற்ற வேண்டுமானால்
பொறுமையை எந்த சந்தர்ப்பத்திலும் கைவிடக் கூடாது.

kural-154

Seek'st thou honour never tarnished to retain;
So must thou patience, guarding ever more, maintain.

If you desire that greatness should never leave, you preserve
in your conduct the exercise of patience.

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.             155

தீங்கு செய்தவரைத் தண்டித்தவரை உலகம் ஒரு
பொருட்டாக மதிப்பதில்லை. ஆனால் மன்னித்தவரை
மனத்தினுள் பொன் போல் வைத்துப் போற்றும்.

kural-155
Who wreak their wrath as worthless are despised;
Who patiently forbear as gold are prized.

(The wise) will not at all esteem the resentful.
They will  esteem the patient just as the gold which
they lay up with care.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.                            156

தீமை செய்தவரைத் தண்டித்தவர்களுக்கு ஒருநாள்
மட்டுமே திருப்தி கிடைக்கும். மன்னித்தவர்களுக்கு
உலகம் உள்ளளவும் புகழ் கிடைக்கும்.

kural-156

Who wreak their wrath have pleasure for a day;
Who  bear have praise till  earth shall pass away.

The pleasure of the resentful continues for a day.
The praise of the patient will continue until ( the
final destruction of) the world.

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.                          157

தகுதியில்லாதவற்றைத் தனக்கு பிறர் செய்தாலும்
அதனால் ஏற்படும் துன்பத்துக்கு வருந்தி, பதிலுக்கு
அவருக்குத் துன்பம் செய்யாமலிருப்பது நல்லது.

kural-157

Though others work thee ill,thus shalt thou blessing  reap;
Grieve for their sin, thyself from vicious action keep!

Though others inflict injuries on you, yet compassionating
the evil ( that will come upon them) it will be well not to do
them anything contrary to virtue.


மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.                           158

செருக்கினால் தீங்கு  செய்தாரையும் பொறுமையால்
வென்று விட வேண்டும்.
kural-158

With overweening pride when men with injuries assail,
By thine own righteous shalt thou mightily prevail.

Let a man by patience overcome those who through pride
commit excesses.


துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.                     159

தீயவர் வாயிலிருந்து பிறக்கும் கொடுஞ்சொற்களைப்
பொறுத்துக் கொள்பவர் துறவிகளை விடத் தூய்மையானவர்.

kural-159

They who transgressors' evil words endure
with patience, are as stern ascetics pure.

Those who bear with uncourteous speech of the
insolent are as pure as the ascetics.

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.                  160

பட்டினியால் தவம் செய்பவர் உயர்ந்தவர். மற்றவரின்
கடும் சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் அவரினும்
உயர்ந்தவர்.

kural-160

Though 'great, we deem the men that fast and suffer pain,
Who others' bitter words endure, the foremost place obtain.

Those who endure abstinence from food are great, next to
those who endure the uncourteous speech of others.

source book.com link:


Up to 60% off Parenting & Children's Books



77 kids.com link


Primary





My blogs:

http://saivasiddhantam.blogspot.in/

http://sansalternatetherapy.blogspot.in/

http://behaviourtherapy.blogspot.in/





Tuesday, April 2, 2013

திருக்குறள்



திருக்குறள் 
 (see below in English)
 1.அறத்துப்பால்
14. ஒழுக்கமுடைமை

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.                        131

ஒழுக்கம் எல்லோருக்கும் புகழைத் தருமாதலால்
அந்த ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாக நினைக்க
வேண்டும்.

kural-131

'Decorum' gives especial excellence; with greater care
'Decorum' should men guard than life, which all men share.

propriety of  conduct leads to eminence, it should therefore
be preserved more carefully than life.


பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.                              132

ஒழுக்கத்தை கஷ்டப்பட்டாவது போற்றிக் காக்க
வேண்டும். பலவற்றையும் ஆராய்ந்து அலசிய போதும்
ஒழுக்கமே வாழ்க்கைக்குச் சிறந்த துணையாகும்.


kural-132

Searching, duly watching,learning.'decorum' still we find;
Man's only aid; toiling,guard though this Watchful mind.

Let propriety of conduct be laboriously preserved and guarded;
Though one know and practise and excel in many virtues, that
will be an eminent aid.


ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.                        133.

ஒழுக்கத்தோடு வாழ்பவர் உயர்ந்த குடிப்பிறப்பாராகி
விடுவர். ஒழுக்கமின்றி வாழ்தல் இழிந்த குடியினராக்கிவிடும்.


kural-133

'Decorum's', true nobility on earth;
'Indecorum's' issue is ignoble birth.

Propriety of conduct is true greatness of birth,
And impropriety will sink into a mean birth.



மறப்பினும்  ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.                     134

படித்தவை மறந்து போனால் மீண்டும் படித்துக்
கொள்ளலாம். ஆனால், ஒழுக்கம் தவறினால்
அது அவன் குலப் பெருமையையே அழித்துவிடும்.


kural-134

Though he forget, the Brahman may regain his Vedic lore;
Failing in 'decorum due,' birthright's gone for evermore.

A Brahman though he should forget the Vedas may recover
it by reading; but, if he fail in propriety of conduct even his
high  birth will be destroyed.
அழுக்காறு றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலாங்கண் உயர்வு.                         135

பொறாமை உள்ளவனுக்கு முன்னேற்றம் கிடையாது. அதுபோல்,
ஒழுக்கமில்லாதவனுக்குப் பெருமையும் கிடையாது.

kural-135

The envious soul in life no rich increase of blessing  gains,
So man of 'due decorum' void no dignity obtains.

Just as the envious man will be without wealth,
So will the man of destitute of propriety of conduct be
without greatness.


ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம்படுபாக் கறிந்து.                                     136

மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கம் தவறுதலால்
குற்றம் உண்டாவதை உணர்ந்து ஒழுக்கத்தைத் தவறாது
காத்துக் கொள்வர்.

kural-136

The strong of soul no jot abate of 'strictdecorum's' laws,
Knowing that 'due decorum's' breach foulst  disgtrace will cause.

Those firm in mind will not slacken in their observance of the
properties of life, knowing, as they do , the misery that flows
from the transgression from them.


ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.                            137

ஒழுக்கத்தினால் எல்லோரும் மேன்மை அடைவர்.
ஒழுக்கம் தவறினால் அடையத்தகாத பெரும்பழியை
அடைவர்.

kural-137

'Tis source of dignity when ' true decorum' is preserved;
Who break 'decorum's' rules endure e'en censures undeserved.

From propriety of conduct men obtain  greatness; from
impropriety comes insufferable disgrace.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.                               138

நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக்
காரணாமாயிருக்கும். தீயொழுக்கம் எப்போதும்
துன்பத்தையே தரும்.

kural-138

'Decorum true' observed a seed of good will be ;
'Decorum's breach' will sorrow yield eternally.

Propriety of conduct is the seed of virtue; impropriety
will ever cause sorrow.

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.                    139

தவறியும் தீய சொற்களைத் தன் வாயால்
சொல்லுவது நல்லொழுக்கமுடையவர்க்குப்
பொருந்தாது.

kural-139

It cannot be that they who 'strict decorum's' law fulfil,
E'en in forgetful mood, should utter words of ill.

Those who study propriety of conduct will not speak
evil, even forgetfully.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.                     140

உலகத்தாரோடு இணைந்து நடக்கும் முறையைக்
கற்காதவர் பல நூல்களைப் படித்தவராயிருந்தாலும்
அறிவில்லாதவரேயாவார்.

kural-140
Who know not with the world in hormony to dwell,
May many things have learned, but nothing well.

Those who know not how to act agreeably to the world,
though they have learnt many things, are still ignorant.

தன்னைத் தோண்டுவோரையும் தாங்கிக் கொண்டிருக்கும்
நிலத்தைப் போல் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல்
தலையாய பண்பாகும்.


திருக்குறள்
 (see below in English)
 1.அறத்துப்பால்
15. பிறனில் விழையாமை


பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.                      141

மற்றவர் மனவியை  விரும்பும் அறியாமை. உலகில்
தர்மத்தின் பொருளை ஆராய்ந்து அறிந்தவரிடத்தில் இல்லை.

kural-141

Who laws of virtue and possession's rights have known,
Indulge no foolish love of her right another's own.

The folly of deserting her  who is the property of another
 will not be found in those who know (the attributes of)
Virtue and ( the rights of) property.

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.                    142

தருமம் தவறி நின்றவர் எல்லோரிலும், பிறர்
மனைவியை விரும்பி அவர் வீட்டு வாசலில்
நின்றவரைப் போன்ற அறிவிலி வேறில்லை.

kural-142

No fools, of all that stand from virtue's pale shut out,
Like  those who longing lurk their neighbour's gate without.

Among all those who stand on the outside of virtue,
there are no greater fools than those who stand outside
their neighbour's door.

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துஒழுகு வார்.                        143

நம்பி ஒப்படைத்தவரின் மனைவியிடம் ஆசை
வைத்துத் தீமையைச் செய்தவர் செத்தவருக்கு
சமமாவர்.
kural- 143

They're numbered with the dead,e'en while they live,-how otherwise?
With wife of sure confiding friend who evil things devise.

Certainly they are no better than dead men who desire evil  towards
the wifeof those who undoubtingly confide in them.


எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.                                   144

தினையளவும் தான் செய்யப்போகிற தவறை உணராமல்
மாற்றான் மனைவியை விரும்பி அவன் வீட்டில் நுழைவது,
எத்தனை பெருமை பெற்றவரானாலும் அத்தனை பெருமைகளையும்
அழித்ததற்கொப்பாகும்.

kural-144

How great soe'er they be, what gain they  have of  life,
Who, not a wit reflecting, seek a neighbour's wife.

However great one may be, what does it avail if, without
at all considering his guilt, he goes unto the wife of another?


எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.                        145

இவளை அடைவது சுலபம் என எண்ணிப் பிறர்
இல்லத்தில் புகுகின்றவன் எப்பொழுதும் நீங்காத
பழியைக் குலத்துக்குச் சேர்க்கிறான்.

kural-145
'Mere triflel' saying thus, invades the home, so  he ensures.
A gain of guilt that deathless aye endures.

He who thinks lightly of going into the wife of another
acquires guilt that will abide with him imperishably and
for ever.

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.             146

மாற்றான் மனைவியை விரும்பி அவன்
வீட்டினுள் செல்பவனிடத்தில் பகைமை,
பாவம், பயம், நிந்தை ஆகிய நான்கும்
நிரந்தரமாய் குடி புகுந்து விடும்.

kural-146

Who home invades, from him pass nevermore,
Hatred,sin,fear, disgrace; these four.

Hatred,sin,fear, disgrace; these four will never
leave him who goes into his neighbour's wife.


அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.                           147

தரும நெறி தவறாது இல்லறம் நடத்துபவன் மாற்றான்
மனைவியை கண்ணெடுத்தும் பார்க்க மாட்டான்.

kural-147

Who sees the wife, another's  own, with no desiring eye
In sure domestic bliss he dwelleth ever virtually.

He who desires not the womenhood of her who should
walk according to the will of another will be praised
as a virtuous house-holder.
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்றஒழுக்கு.                        148

மாற்றான் மனைவியை விரும்பிப் பார்க்காத
பேராண்மை சான்றோர்க்கு அறம் மட்டுமல்ல;
நிறைந்தஒழுக்கமுமாகும்.

kural-148

Manly excellence, that looks not on another's wife,
Is not virtue merely,'tis full' 'propriety' of life.

That noble manliness which looks not at the wife of
another is the virtue and dignity of the great.

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்குரியாள் தோள்தோயா தார்.            149

கடல் சூழ் உலகத்தில் நன்மை பெறத்தக்கவர்
யாரென்றால் மாற்றான் மனைவியின் தோளைச்
சேராதவரேயாகும்.
   
kural-149

Who 're good indeed, on earth begirt by ocean's gruesome tide?
The men who touch not her that is another's bride.

Is it asked , " Who are those who shall obtain good in this world
surrounded  by the terror-producing  sea? Those who touch not
the shoulder of her who belongs to another.

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.                             150

ஒருவர் செய்ய வேண்டிய தருமங்களைச் செய்யாமல்,
அதர்மங்களைச் செய்தாலும் மாற்றான் மனவியை
விரும்பாமல் வாழ்வது நல்லது.
kural-150

Though Virtue's bounds he pass , and evil deeds hath wrought;
At least, 'tis good if neighbour's wife he covet not.

Though a man perform no virtuous deeds and commit(every)
Vice,it will be well if he desire not the womenhood of her
Who is within the limit( of the house) of another.

source book.com link:


Up to 60% off Parenting & Children's Books



77 kids.com link


Primary





My blogs:

http://saivasiddhantam.blogspot.in/

http://sansalternatetherapy.blogspot.in/

http://behaviourtherapy.blogspot.in/