Translate

Sunday, August 9, 2009

சிவஞான போதம்


சிவஞான போதம்
கடவுள் வாழ்த்து
சிவஞான போதம் என்னும் இந்த நூலை அருளியவர் ஆசிரியர் மெய்கண்ட தேவர். இவர் தாம் செய்வனவற்றை செயலாகக் கொண்டு செய்யாமல் இறைவன் திருவருட் செயலாகவே செய்தார்.
கடவுள் வாழ்த்து செய்யுளில் இரு கடவுளர்களை குறிப்பிட்டார். முதலில் குறிக்கப்பட்டவர் கல்லால்
நிழற் கடவுள். இக் கடவுள் முகம் தெற்ககு நோக்கியவாறு இருத்தலால் த்மிழில் தென்முகக் கடவுள் என்றும்
வடமொழியில் தச்சிணா மூர்த்தி எனவும் சொல்லப்படுகிறார்.
தென்முகக் கடவுளின் சிறப்பு :
சிவபெருமானின் பல வடிவங்களில் இது ஒன்றாகும். ஞானத்தை வேண்டுவோர்க்கு சிவபெருமான்
குருவடிவாய் இருந்து அதனை அருளும் வடிவம். இம்மூறர்த்தியினிடம் முனிவர் நால்வர்
( சனகர்,சனத்கனர்,சனாதனர், சனர்குமாரர்) ஞானம் பெற்றனர் என்பது வரலாறு. அதற்கேற்ப
இம்மூர்த்தியின் முன் முனிவர் நால்வர் இருத்தலைக் காணலாம். இப் பெருமானே ஒரு காலத்தில்
நந்தி தேவருக்குச் சைவாகமங்கள் பலவற்றயும் சொல்லி, அவை பற்றி அவருக்கு உண்டாகிய
ஐயங்களையும் நீக்கி தெரிவித்.தார்.
கல்லால் நிழற் கடவுள் என்றால் கல் ஆல் என்ற மரம் கீழ் வீற்றிக்கும் கடவுள் என்பது
பொருளாகும்.
ஞானம் - "குருவின் உபதேசம் இல்லாமல் ஞானம் வராது" என்பது கொள்கை.
ஒருவர் குருவின் உபதேசத்தால் ஞானம் பெற்றார் என்றால் அந்த குரு யாரிடம் உபதேசம் பெற்றார் என்ற
வினா எழுகின்றது. அவருக்கு உபதேசம் செய்தவராக ஒருவரைக் குறிப்பிட்டால் அ வருக்கு யார் உபதேசம்
செய்தது " என்று இவ்வாறு முடிவின்றிச் செல்லும்.
அதற்கு முடிவு யாதெனில், தனக்கு யாரும் குரு இல்லாமல் தானே எல்லாவற்றயும் அறிகின்ற
இறைவன் தான் முதற் குரு. இறைவனது ஞான சக்தி ,கிரியா சக்திகளே (அருவாற்றல்,
செயலாரற்றல்) என்னும் இரு சக்திகளே அவனது இரண்டு திருவடிகளாக சொல்லப்படுகின்றன.
அதனால் அத்திருவடிகளை நல்லார் புனைவர்.