Translate

Saturday, July 23, 2016




                                           

                         யோக தரிசனம்

மனிதன் அவனுடைய மிதமிஞ்சிய ஆசைகளாலும்,

பந்தபாசங்களாலும் அலைக்கழிக்கப்படுகிறான். அவனால் தன் 

மனதைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. மனதைக் கட்டுப்படுத்தினால்

மட்டுமே அவன் முக்தி அடையமுடியும். இதற்கு தத்துவம் 

வழிகாட்டுகிறது.

தத்துவத்தின் ஆறு தரிசனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 

ஒன்றான  யோக தரிசனத்தை இங்கு காண்போம்.

யோக தரிசனத்தை முதன்முதலில் உபதேசித்தவர் பிரம்மா என்று 

யாக்ஞவல்கிய முனிவர் கூறியுள்ளார்..இந்த யோக தரிசனத்தை 

சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பதஞ்சலி 

முனிவர் சூத்திரமாக தொகுத்து வழங்கியுள்ளார். 

யோகம் என்பதற்கு இணைத்தல் ,ஐக்கியமாதல் என்று பொருள். மனித 

ஆன்மாவும் இறைவனும் இணைதலே யோகம் ஆகும்.

பதஞ்சலி முனிவர் தன்னுடைய யோக சாஸ்திரத்தில் யோக 

நிலையை அடைவதற்கானவழியை 195 சூத்ரங்களாக 

விளக்கியுள்ளார்,

பதஞ்சலி முனிவர் விளக்கும் யோக நிலயை அடைய எட்டு 

நிலைகளை பயிற்சி செய்தாக வேண்டும். அந்த எட்டு நிலைகள்: 

இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்,

பிரத்தியாஹாரம், தாரணம், தியானம், சமாதி. இது அஷ்டாங்க 

யோகம் என கூறப்படுகிறது.

யோக நிலையை அடைய கீழ் கண்ட உண்மைகளை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

1. இன்பமும், துன்பமும் இரண்டரக் கலந்ததுதான் வாழ்க்கை.

2. ஒவ்வொரு துன்பத்திற்கும் காரணம் உள்ளது.

3. துன்பம் போக்கமுடியாதது அல்ல, துன்பத்தை போக்க முடியும்.

4. துன்பத்தை போக்கும் வழியே யோக தரிசனமாகும்.

விருத்திகளை முழுவதுமாக ஒடுக்கி ஐந்தாவது மன நிலையான 

நிருத்ததைஅடைவதற்குள் பல அற்புத ஆற்றல்கள் கிட்டும். ஆனால் 

அவற்றை புறக்கணித்து விட்டுபேரமைதியைப் பெற முயற்சிக்க 

வேண்டும்.


த. சந்தானம்.
திருக்குறள்
2.பொருட்பால்
79. நட்பு
FRIENDSHIP

செயற்கரிய யாவுள நட்பின் அது போல்
வினைக்கரிய யாவுள காப்பு.                      781

உயர்ந்த நட்பை அடைவதைப் போன்ற அரிய செயலும்
உலகில் இல்லை. அதுபோல பகைவர் செயலைத் தடுப்பதும்
காத்துக்கொள்வதும் மிகக் கடினம். அத் தொழிலுக்குக்
காவலாக இருப்பதும் எதுவும் இல்லை!.

What is rare else
Than making friends;
What's else, likewise
protection for the deeds.

What is the rare thing other than making friendship; after made friends, 
what is there a saviour to obstruct the misdeeds done by the enemies.

திருக்குறள்
2.பொருட்பால்
79. நட்பு
FRIENDSHIP

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு.                       782

அறிவுடையோர் நட்பு மூன்றாம் பிறை வளர்வதைப்
போல் நாளும் வளரும். கீழ் மக்களின் நட்பு
பௌர்ணமி போல் தொடங்கி நாளுக்கு நாள் தேயும்.


Good amity increases
Like the Waxing moon;
Fools' friendship decreases
like the vaning moon.

The fiendship with gentlemen of good characters increases
Day by day, whereas the amity of foolish and mean men 
decreases like the waning moon day by day.


திருக்குறள்
2.பொருட்பால்
79. நட்பு
FRIENDSHIP

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.                        783

நல்ல புத்தகங்களின் பொருள், படிக்கும் போதெல்லாம்
மகிழ்ச்சியைத் தரும். அதுபோல நற்குணங்களுடையவர்களின்
நட்பு பழகப் பழக இன்பம் தரும்.

Like fineness in books
Vivid as go on reading
The more the good friendship's
The more the increasing.

The friendship with good men as acquainted, increases in course of time,
Resembles to the knowledge which becomes lucid as one goes
through a treatise for several times.


திருக்குறள்
2.பொருட்பால்
79. நட்பு
FRIENDSHIP

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.                 784

நட்புக் கொள்வது சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல.
நண்பர் நெறிதவறி நடக்கும்போது முன் சென்று
இடித்துரைக்க வேண்டும்.

Making friendship is
Not only to amuse
To surpass and admonish
When deviates virtues.

Friendship with others is not intended only to make them merry or
laugh; but it is to excel the friend while he goes beyond morality
and admonish him.

திருக்குறள்
2.பொருட்பால்
79. நட்பு
FRIENDSHIP


புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.                         785

நட்புக் கொள்வதற்குத் தொடர்பும், பழக்கமும் வேண்டியதில்லை.
உணர்ச்சியால் ஒன்றுபடுதலே நட்பை ஏற்படுத்தும்.

There is no need for
Acquaintance or union together,
Feeling between each other
Makes friendship closer.

To make friends with each other, there is no necessity for familiarity
Often or meeting then and there. Congenial feeling between each other
makes them close friends.

திருக்குறள்
2.பொருட்பால்
79. நட்பு
FRIENDSHIP

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.                            786

முகம் மலரும்படிப் பேசுவது மட்டும் நட்பாகாது.
மனத்தால் மகிழும்படி நட்புக் கொள்வதே உயர்ந்த நட்பு.

It is not the friendship
To smile only on face;
But 'tis the friendship
To smile from the heart cause.

It is not at all a friendship to smile outward only without inner feeling
while seeing a friend; but it is the attitude of smile caused from the
Heart.

திருக்குறள்
2.பொருட்பால்
79. நட்பு
FRIENDSHIP

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.                     787

அழிவுதரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில்
நடக்கச் செய்து அழிவு வந்த காலத்தில் கூட இருந்து
துன்பப்படுவதே நட்பு.

To deprive of the ruin
To guide to good way an'
To suffer burden of mishap
Is the good friendship.

While the friend goes on ruinous ways, he should be bereaved of such
bad ways to bring him to good ways and also to suffer jointly the
load of ill-luck caused miraculously is said to be the real friendship.

திருக்குறள்
2.பொருட்பால்
79. நட்பு
FRIENDSHIP

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.               788

ஆடை நெகிழும் போது கை விரைந்து சென்று
அதைச் சரி செய்யும். அதுபோல நண்பனுக்குத்
துன்பம் வரும்போது உடனே அதைப் போக்க
முயற்சிப்பதே உயர்ந்த நட்பு.

Just like hands help
While one's dress slip
Whenever happens mishap
R'dressing it, is friendship.

As same as the hands of a person go forthwith to tie up
again his dress while it slips to save him from disgrsce,
When a friend is entangled in a mishap, assuage it
immediately by rendering suitable help,it is said to be
Real friendship.

திருக்குறள்
2.பொருட்பால்
79. நட்பு
FRIENDSHIP

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.                     789

நட்புக்கு உயர்ந்த நிலை என்னவென்றால் அது
எப்போதும் வித்தியாசமின்றி இயன்றபோதெல்லாம்
உதவி செய்து தாங்குவதே. 

If questioned what
Is throne for amity
Support for stable state
Ever, there is possibility.

IIf raises question about what is meant by throne for the 
Friendship to support to get good from instable state
to keep righteousness, economy and joy, whenever it is possible.

திருக்குறள்
2.பொருட்பால்
79. நட்பு
FRIENDSHIP

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.                 790

இவர் எனக்கு இந்த அளவு பிரியமானவர், நான் இவருக்கு
இந்த அளவு நெருக்கமானவன் என்று பெருமையாகச்
சொன்னாலும் நட்பின் மதிப்பு குறைந்துவிடும்.

Praise, we are such
To them and they 're
Such to us, mach
Greatness of friendship.mar'.

praise to each other like ; we are such for them and they are such for us ,
injures much to good friendship and makes it base.





Wednesday, January 6, 2016

திருக்குறள்
2.பொருட்பால்
77. படைமாட்சி

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையு ளெல்லாம் தலை.                  761

யானை, குதிரை, தேர், அஞ்சாத வல்லுனர்கள் போன்ற
அநேக உறுப்புக்களைக் கொண்டதாய், துன்பங்களுக்கு
அஞ்சாததாய், உள்ள வெற்றி தரும் படை, அரசனது
செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.

The best one among all wealth of king is:
Troops, fearless and vanquish.

The military forces of various parts like chariots, Elephants,
Cavalry and infantry who are undaunted to foes but overcome them;
is the chief of all the possessions possessed by monrchs.

திருக்குறள்
2.பொருட்பால்
77. படைமாட்சி
EXCELLENCE OF ARMY

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.                         762

போரில் இழப்பு வந்தபோதும், பலம் குறைந்த சமயத்திலும்
இடையூறுகளுக்கு அஞ்சாத உறுதி பரம்பரைப் பெருமை கொண்ட
படைக்கு மட்டுமே உண்டு.

Bravery, during defeat or even in ruin is rarely found
Except the old army men.

But for the traditional military people; capacity of resisting boldly
the enemies is seen searcely during defeat while they are about to be
defeated as they are a few in number or while they are about to perish
in the war.
                                                                                                                     
திருக்குறள்
2.பொருட்பால்
77. படைமாட்சி
EXCELLENCE OF ARMY

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.                          763

எலிகள் கடல் போல் திரண்டு கத்தினாலும் பாம்பு
அதற்கு அஞ்சுவதில்லை. ஆனால் நாகம் பெருமூச்சு
விட்டால் அதன் விஷக்காற்றால் எலிகள் மயங்கிச்
சாகும்.

The enemity of mice what if, by roar like sea;
if cobra hisses every thing is no more.

What will be the benefit of hostility of mice by roaring like sea;
if the cobra hisses, they will disappear.
                                     

திருக்குறள்
2.பொருட்பால்
77. படைமாட்சி
EXCELLENCE OF ARMY

அழிவின்றி அறைபோகா தாகி வ்ழிவந்த
வன்க ணதுவே  படை.                      764

போர்க்களத்தில் அழியாமல், பகைவரின்
வஞ்சனைகளுக்கு இரையாகாமல் தப்பி, தொன்று
தொட்டுவரும் அஞ்சாமையைக் காப்பாற்றுவதே
சிறந்தபடை.

It's only the force free from destruction,
Unsubdued for illusion and with wonted force.

It is only said to be the troop which is impossible
for the foes to destroy ; not subdued for them even for their
fraudulent and cunning ways and also having their inheritant
strength and experience in military force.

திருக்குறள்
2.பொருட்பால்
77. படைமாட்சி
EXCELLENCE OF ARMY

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.                            765

எமனே சீற்றம் கொண்டு தங்கள் மேல் எதிர்த்து
வந்தாலும் ஒன்றுகூடி எதிர்த்து நிற்கும் ஆற்றல்
கொண்டதே சிறந்தபடை.

It is only the force which resist God of death
Even if he comes and falls out which wrath.

It is only the troop which is cappable of opposing
the Yama who is said as the God of death;
Even if he comes and falls foul of the force as he
became enraged.

திருக்குறள்
2.பொருட்பால்
77. படைமாட்சி
EXCELLENCE OF ARMY

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
என நான்கே ஏமம் படைக்கு.                   766

வீரம், மானம், சிறந்த வழியில் நடத்தல்,படைத்தலைவரால்
ஆராயப்பட்டு நம்பிக்கைக்குரியதாக இருத்தல்
ஆகிய நான்கு பண்புகளும் படையின் இலக்கணங்களாகும்.

Valour, honour, excellent manner and clarity by their captain
Are the only four safety of battalion.

Bravery, dignity, good discipline and taking instructions
from their chief are only four safety ways for the troops.

திருக்குறள்
2.பொருட்பால்
77. படைமாட்சி
EXCELLENCE OF ARMY

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை யறிந்து.                  767

தன்னை எதிர்த்து வரும் பகைவரின் போரைச்
சமாளித்து, அதை வெல்லும் வகையைக் கணக்கிட்டு
அவர் படையத் தூசியாக நினைத்து பிளந்து செல்ல
வல்லதே சிறந்த படை.

knowing mode of battalia of the foes battalia'
And oppose them away is the troops way.

Discerning how to to keep the array of self battalion
and also knowing the manners of array of the enemies
troops as they stand and ready for battle and resist them
from distance even without fall of their dust on, is the manner of real force.

திருக்குறள்
2.பொருட்பால்
77. படைமாட்சி
EXCELLENCE OF ARMY

அடற்றகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.                      768

அஞ்சாமல் போர் புரியும் வீரமும், எதிர்ப்பைத் தாங்கும்
ஆற்றலும் இல்லாவிட்டாலும் கம்பீரமான அணிவகுப்பால்
படைக்குப் பெருமை கிடைக்கும்.

Even though not competent to oppose or withstand
The troop will be degnified if they 're grand to note.

Neverthless, they are not capable of resisting the enemies or
incapable of enduring them while they attack t;he battalion
will be respected if they are large in number.

திருக்குறள்
2.பொருட்பால்
77. படைமாட்சி
EXCELLENCE OF ARMY

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.                      769

சிறிய படையானாலும் தலைவனிடம் வெறுப்பும்,
வறுமையும் இல்லாதிருந்தால் அப்படை வெல்லும்.

If there is no decrement nor prolong disgust against
The captain and no want, the army will surmount.

if there is no decrease nor long hatred towards the chief of army
And also no want in any respect, the troops will have victory
over the enemies.


திருக்குறள்
2.பொருட்பால்
77. படைமாட்சி
EXCELLENCE OF ARMY

நிலைமக்கள் சாலை உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.                       770

பின் வாங்காமல்  போர் செய்யும் வீரர்களை
ஏராளமாகக் கொண்டிருந்தாலும் தலைவனை
இழந்த படை நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காது.

Even then armies contain many a soldier, prolong
unless there are captain they are considered nothing.

Even though the troop consist of many bold and experienced
soldiers in it; otherwise they have competent commanders to guide
them, they are considered to be nothing though they are in existence.