Translate

Saturday, July 23, 2016




                                           

                         யோக தரிசனம்

மனிதன் அவனுடைய மிதமிஞ்சிய ஆசைகளாலும்,

பந்தபாசங்களாலும் அலைக்கழிக்கப்படுகிறான். அவனால் தன் 

மனதைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. மனதைக் கட்டுப்படுத்தினால்

மட்டுமே அவன் முக்தி அடையமுடியும். இதற்கு தத்துவம் 

வழிகாட்டுகிறது.

தத்துவத்தின் ஆறு தரிசனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 

ஒன்றான  யோக தரிசனத்தை இங்கு காண்போம்.

யோக தரிசனத்தை முதன்முதலில் உபதேசித்தவர் பிரம்மா என்று 

யாக்ஞவல்கிய முனிவர் கூறியுள்ளார்..இந்த யோக தரிசனத்தை 

சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பதஞ்சலி 

முனிவர் சூத்திரமாக தொகுத்து வழங்கியுள்ளார். 

யோகம் என்பதற்கு இணைத்தல் ,ஐக்கியமாதல் என்று பொருள். மனித 

ஆன்மாவும் இறைவனும் இணைதலே யோகம் ஆகும்.

பதஞ்சலி முனிவர் தன்னுடைய யோக சாஸ்திரத்தில் யோக 

நிலையை அடைவதற்கானவழியை 195 சூத்ரங்களாக 

விளக்கியுள்ளார்,

பதஞ்சலி முனிவர் விளக்கும் யோக நிலயை அடைய எட்டு 

நிலைகளை பயிற்சி செய்தாக வேண்டும். அந்த எட்டு நிலைகள்: 

இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்,

பிரத்தியாஹாரம், தாரணம், தியானம், சமாதி. இது அஷ்டாங்க 

யோகம் என கூறப்படுகிறது.

யோக நிலையை அடைய கீழ் கண்ட உண்மைகளை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

1. இன்பமும், துன்பமும் இரண்டரக் கலந்ததுதான் வாழ்க்கை.

2. ஒவ்வொரு துன்பத்திற்கும் காரணம் உள்ளது.

3. துன்பம் போக்கமுடியாதது அல்ல, துன்பத்தை போக்க முடியும்.

4. துன்பத்தை போக்கும் வழியே யோக தரிசனமாகும்.

விருத்திகளை முழுவதுமாக ஒடுக்கி ஐந்தாவது மன நிலையான 

நிருத்ததைஅடைவதற்குள் பல அற்புத ஆற்றல்கள் கிட்டும். ஆனால் 

அவற்றை புறக்கணித்து விட்டுபேரமைதியைப் பெற முயற்சிக்க 

வேண்டும்.


த. சந்தானம்.

No comments:

Post a Comment