Translate

Thursday, December 31, 2015


திருக்குறள்
2.பொருட்பால்
76. பொருள் செயல்வகை
WAYS OF AMASSING WEALTH

பொருளால் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.                751

ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும் மதிக்கப்படும்படி
செய்ய வைக்கும் பொருள். அதற்கு இணை எதுவும் இல்லை.

Nothing else is worthier than than the opulence
Which makes man wealthier though he is worthless.

Not any thing is worthier than wealth which is capable of making
a worthless man as a worthy one.

திருக்குறள்
2.பொருட்பால்
76. பொருள் செயல்வகை
WAYS OF AMASSING WEALTH

இல்லாரை எல்லோரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.                      752

பொருள் இல்லாதவரை எல்லோரும் இகழ்ச்சியாக நடத்துவர்.
பொருள் உள்ளவரை எல்லோரும் மதிப்பர்.

All men disregard the men of indigence;
All the men regard the men of affluence.

Though they are good in all respects, the poor men are
Disrespected by the people; though they are bad by all
means, the rich men are lauded by the people in the world.



திருக்குறள்
2.பொருட்பால்
76. பொருள் செயல்வகை
WAYS OF AMASSING WEALTH

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.                         753

செல்வம் என்ற அணையா விளக்கு தன்னைச் சேர்த்து
வைத்துள்ளவர் எண்ணும் இடத்திற்குச் சென்று அங்குள்ள
வறுமை என்னும் இருளைப்போக்கும்.

The wealth which is wantless light, dispels darkness;
Going to other countries wherever one likes.

The opulence which is considered as a true light will go to
other territories wherever one wishes to go and remove the
darkness of enmity.

திருக்குறள்
2.பொருட்பால்
76. பொருள் செயல்வகை
WAYS OF AMASSING WEALTH

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.                        754

நேர்மையான வழியில் திரட்டிய செல்வம்
தரும குணங்களையும், சந்தோஷத்தையும் தரும்.

Yields virtue and also pleasure;opulence
Faultlessly accumulated knowing its excellence.  

The wealth which is hoarded in good ways without any fault
with cognizance of dignity therein gives to man righteousness
in addition to joy.

திருக்குறள்
2.பொருட்பால்
76. பொருள் செயல்வகை
WAYS OF AMASSING WEALTH

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.                              755

கருணைக்கும், அன்புக்கும் எதிராகக் கிடைத்த செல்வத்தால்
வரும் முன்னேற்றம் நிலைக்காது. அதைக்கண்டு
இன்புறாமல் தீமை என்று தள்ளிவிட வேண்டும்.

Accumulation of riches devoid with love and grace
Should not be allowed but shunned as bad.

Making money without courtesy and love should be disallowed
but should be abandoned as it is a bad way.

திருக்குறள்
2.பொருட்பால்
76. பொருள் செயல்வகை
WAYS OF AMASSING WEALTH

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.                  756

இயற்கையில் கிடைக்கும் பொருளும், வரியாகக் கிடைக்கும்
பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக்
கொள்ளும் பொருளும் அரசாட்சி நடத்த அரசனை வந்து
சேரும்.

The esceats, the customs and the spoils from the foes
are king's opulence.

The unclaimed , the taxes levied and the treasures taken
by force from enemies are the king's treasure.


திருக்குறள்
2.பொருட்பால்
76. பொருள் செயல்வகை
WAYS OF AMASSING WEALTH

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.                     757

அன்பினால் உண்டாகும் குழந்தை அருள் என்று
சொல்லப்படும் கருணையாகும். அது திடகாத்ரமாக
வளரச் செல்வம் என்ற செவிலித்தாயின் உதவி வேண்டும்.

Grace, the child begot by love, is fostered by the wealth,
Abundant the nurse which is said.

The mercy which is produced out of affection, is cherished
by the nurse of wealth.

திருக்குறள்
2.பொருட்பால்
76. பொருள் செயல்வகை
WAYS OF AMASSING WEALTH


குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.                            758

தன் கையில் பொருளை வைத்துக்கொண்டு செயலைச்
செய்வது, மலை மேல் பாதுகாப்பாக ஏறி நின்று கொண்டு
யானைப் போரைப் பார்ப்பதற்கு ஒப்பானது.

The actions of opulent man resemples watching
From the hill, topmost, of elephants, contending.

The doings of a person who is abundantly rich, is as similar as
looking at the fight of elephants standing at the topmost place
on a hill.

திருக்குறள்
2.பொருட்பால்
76. பொருள் செயல்வகை
WAYS OF AMASSING WEALTH


செய்க பொருளைச் செறுநர் செறுக்கறுக்கும்
எஃகதனிற் கூரியது இல்.                      759

பகைவனின் கர்வத்தை அழிக்கப் பொருளைத்
தேடிச் சேர்க்க வேண்டும். அதைப்போன்ற கூர்மையான்
ஆயுதம் வேறு கிடையாது.

Accumulate the opulence; not a weapon else sharper than that,is
To quell enemies haughtiness.

If anybody wants to accomplish or gain a thing, they should
save wealth to subdue the insolence of one's enemies,
since, no other arm is found sharper than it.    

திருக்குறள்
2.பொருட்பால்
76. பொருள் செயல்வகை
WAYS OF AMASSING WEALTH

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.                          760

மிக உயர்ந்ததான பொருளை அதிகமாகச் சேர்த்தவருக்கு
மற்ற தருமமும், சுகங்களும் சுலபமாக வந்து சேரும்.

For those who accumulated abundant wealth in righteous way,
love and righteoussness are feasibly attained.

The principle objects of desire and virtue are once for all accessable
easily for such men who hoarded treasure in abundance free from any
bad way.  

Tuesday, December 15, 2015

திருக்குறள்
2.பொருட்பால்
74. நாடு
THE COUNTRY

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.                           732

மிகுந்த செல்வ வளம் மிகுந்ததாய், யாவரும் விரும்பத்தக்கதாய்,
கேடு இல்லாததாய் மிக்க விளைப் பொருளைத் தருவதே நாடாகும்.


                                                     
 Where found the plentiful wealth exciting to other
'Nd crop free from evil is the country, rare.

The place where found a good deal of riches and also found a good deal of crops
in all varieties with no destruction, is the country.


திருக்குறள்
2.பொருட்பால்
74. நாடு
THE COUNTRY

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு.                        733

பிற நாட்டு மக்கள் குடியேறுவதால் ஏற்படும் சுமையைத்
தன் நாட்டு மக்கள் மேல் விழாதவாறு தாங்கி, அரசனுக்கு
வரிப் பொருள் முழுவதையும் காலம் தாழ்த்தாமல் தருவது நாடு.

When immigrants go over sheltering them and render
Taxes to their master, is the country better.

While other people of foreign country go over, at that time sheltering them and
Create the taxes to their king is the better territory.

திருக்குறள்
2.பொருட்பால்
74. நாடு
THE COUNTRY

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.                              734

மிகுந்த வறுமையும், நீங்கா நோயும் வெளியில்
இருந்து வந்து தங்கும் பகையும் இல்லாமல்
இயங்குவதே நாடு.

Where there's no acute hunger, long diseases
And raid by oppenents is Country, with calmness.

Where there is no sharp appetite with people and predatory
Incursion by the foes is the country which exists quietly.

திருக்குறள்
2.பொருட்பால்
74. நாடு
THE COUNTRY

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.                          735

அரசருக்கெதிரான கூட்டங்களும், கூட இருந்தே கெடுக்கும்
எதிரிகளும், அரசன் வருந்தும்படியான கொலைத் தொழிலை
உடைய சிற்றரசர்களும் இல்லாதது நாடு.

It is the Country where there are no many groups
Nor found latent traitor' Nor harassing chieftains.

It is said to be a Country which has the following qualities where found not
many gatherings which gather by mere signals nor found such men who speak mildly in the
presence but plan latently to upset the king ; nor any mischievious chieftons who annoy the king
expecting for suitable time to subvert or exile or slay him.

திருக்குறள்
2.பொருட்பால்
74. நாடு
THE COUNTRY

கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.                       736

கேடுகளை அறியாததாகவும், கேடு அடைந்தபோது செல்வ நிலை
வற்றாததாகவும் உள்ள நாட்டை நாடுகளின் சிகரம் என்பார்கள்.

'Tis only the chief among all other lands
Which's free from grief 'nd fertiled even in ruin tides.

A Country which is not afflicted by calamities caused by foes and
remain peacefully and capable of maintaining its wealth even when it is
ruined by enemies, is only stated to be an eminent country among all others.

திருக்குறள்
2.பொருட்பால்
74. நாடு
THE COUNTRY

இருபுனலும் வாய்ந்த மலையும், வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.                      737

ஊற்று நீரும், வற்றாத மழை நீரும் ஆகிய இருவகை
நீர் வளமும், அரணாக அமைந்த மலையும், அம் மலையிலிருந்து
வரும் அருவிகளும், நதியும், பலம் கொண்ட அரசனும் நாட்டின்
அங்கங்களாகும்.

The water of two sorts, Natural mounts and streams
Lively and the fortress, are the Countries members.


The two kinds of waters which are found in shallow and deep grounds;
The hills are mountains found naturally and the streams which flow for ever
frrom the said mountains and also the fort which will be useful in times
of war are the parts of a Country.


திருக்குறள்
2.பொருட்பால்
74. நாடு
THE COUNTRY

பிணியின்மை செல்வம் விளைவின்மை ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.                  738

ஆரோக்கியம், செல்வம், நல்ல விளைச்சல், மகிழ்ச்சி,
பாதுகாப்பு ஆகிய இவ்வைந்தும் நாட்டிற்கு அழகு என்று
சொல்லுவர்.

Where sicklessness, the opulence, gay of product,content life and
strong fortress are Country's five ornament.

Wherever free from diseases, the indeficit wealth, satisfied living and
Strengthy fort of defence are said to be the five jewels of a country.

திருக்குறள்
2.பொருட்பால்
74. நாடு
THE COUNTRY

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.                                 739

முயற்சி செய்து பாடுபட்டபின் பலன்தரும் நாடுகள்
சிறந்த நாடுகள் ஆகா, அதிகம் கஷ்டப்படாமல் வளம்
தரும் நாடுகளே சிறந்த நாடுகள் ஆகும்.

''Tis only the country where products are unsought,
It is not the Country where products are sought.

It is only the Country in which natural products are found sufficient
without going for another Country; The erudidite men say that the country
in which the people go to other land searching for the products of food
it is not at all a Country.

திருக்குறள்
2.பொருட்பால்
74. நாடு
THE COUNTRY

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயின்றே
வேந்தமை வில்லாத நாடு.                        740

நல்ல அரசனைப் பெறாத நாடு எல்லா வளங்களையும்
கொண்டிருப்பினும் எந்தப் பிரயோஜனமும் இல்லை.

It is said as vein though it fully contain.
Where, a suitable sovereign it does not contain.

The country in which the king does not suit it even if  it contains
all comforts, it is said as useless.

திருக்குறள்
2.பொருட்பால்
75. அரண்
THE FORTRESS


ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.                             741

மற்றவர் மேல் படையெடுத்துச் செல்பவர்க்கும் அரண்
சிறந்தது. பகைவருக்கு அஞ்சி கோட்டைக்குள் இருப்பவர்க்கும்
அரண் சிறந்தது.

For those who invade the fortress is important.
For those who afraid and fasten, it's important.

For the kings who invade on others with their three kinds of forces,
the fort is important to preserve food, artillery and also to camp
during the leisure; and for such who afraid of their foes, to take refuge,
it is more important and to prepare for the further procedure.


திருக்குறள்
2.பொருட்பால்
75. அரண்
THE FORTRESS

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்.                          742

ஸ்படிகமணி போல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான
நிலமும், மரங்கள் நிறைந்த காடும், மலையும்
உடையதே அரண்.

It is only the Fort where available in it
The clear water, plain ,Forest and the mountains.

Where the facilities like the spring which gives ever
its clear water, the plain with grove to rest, the
Forest with cool shadowed trees and also the mountains and
passes to hide, then only it is considered as a forest.

திருக்குறள்
2.பொருட்பால்
75. அரண்
THE FORTRESS

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரன் என்றுரைக்கும் நூல்.                743

உயரம், அகலம், உறுதி, கடந்து வருவதற்குக் கடினம்
ஆகிய இந் நான்கினையும் கொண்டது அரண் என்று
நூலோர் கூறுவர்.

The science mentions about Four principles to fortress
Whyich are : breadth, height, strength and rare to access.

The savents gone through seversl sciences of politics say
about the essentials of fortress are broad by area, very higher ,strong
walls and rarity to be seen by foes to access.


திருக்குறள்
2.பொருட்பால்
75. அரண்
THE FORTRESS

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்.                     744

காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம்
பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்க்கும் பகைவரின்
ஊக்கத்தை அழிப்பதாய் உள்ளது அரண்.

Narrow to protect but remain spacious
And destroys interest of foes, it is fortress.

The gateways being narrow so that it may not be able to
Foes to enter in at a time innumerable in number and
that it should be easy to protect; but being spacious inside
to take rest, get the army trained and store foodstuffs &
 things and capable of spoiling the interest of the enemies
then only it is said to be a fort.

திருக்குறள்
2.பொருட்பால்
75. அரண்
THE FORTRESS

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.                    745

பகைவரால் கைப்பற்ற முடியாததாக,வும் தன்னிடம்
தேவையான உணவுப்பொருள் கொண்டதாகவும்,
உள்ளே இருப்பவர்கள் உறுதியோடு இருப்பதற்கு
ஏற்றதாக உள்ளதே அரண்.

Rare to access contain foodstuffs,
safe to dwellers, it is the fortress.

It should be scarce to be foiled by the enemies and capture;
Amply consisted of various foodstuffs; a comfortable one to
reside for the inhabitants is stated as the real fortress.

திருக்குறள்
2.பொருட்பால்
75. அரண்
THE FORTRESS

எல்லாப் பொருளும் உடைத்ததாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.                       746

தன்னுள் இருப்பவர்க்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும்
உடையதாய், பகைவர் தாக்கும்போது உதவுவதாய் அஞ்சாது
எதிர்க்கவல்ல சிறந்த வீரர்களை உடையது அரண்.

Having all stuff and good armed staff
To meet the fright is only the fort.

Cosisting of every food stuff and well trained armed forces
inside to meet the alarm caused by enemies at any time
is said to be a real fortress.

திருக்குறள்
2.பொருட்பால்
75. அரண்
THE FORTRESS

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.                             747

முற்றுகை இட்டாலும், முற்றுகை இடாமல் போர் செய்தாலும்,
எப்படியும் எதிரிகளால் கைப்பற்ற முடியாத அருமை உடையது
அரண்.

To capture by invasion or without a battle
And by any other design 'tis the fort impregnable.

To seize by invading or even without a war and by means of any other
device which takes possession of enemies' army , it is only
the unconquerable fortress.
திருக்குறள்
2.பொருட்பால்
75. அரண்
THE FORTRESS

முற்றாற்றி முற்றி யவரயும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.                        748

முற்றுகையிட்டுப் பணியவைப்பதில் வல்லவராயிருந்து
முற்றுகையிடுபவரையும், உள்ளே இருப்பவர்
வெளிவராமலிருந்து வெற்றி காணச் செய்வது அரண்.

Strong enough to besiege|Resist the foes defide
Perseveringly meet challenge the fortress, it is said.

It is said to be a fort where ,the army is strong enough to invade
on other country very strong to attack the enemies who sought for war
to oppose persistently the foes to invade.



திருக்குறள்
2.பொருட்பால்
75. அரண்
THE FORTRESS

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்டது அரண்.                          749

பகைவர் நாசமடையும்படி உள்ளிருந்தே போர் செய்யும்
வசதி பெற்ற அரணும் பெருமையுடன் போற்றத் தக்கதே.

To be valourous and fell the foes in the battle field
Is the fort fortified.

To remain prowess regarding vanquishing of the foes in the warfare
by as many means as possible is the strengthened fortress.

திருக்குறள்
2.பொருட்பால்
75. அரண்
THE FORTRESS

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.                        750

அரண் எத்தகைய சிறப்புடையாதாக இருந்த போதிலும்
செயல் புரிவதில் சிறப்பில்லாதவரிடத்தில் அந்த அரண்
இருப்பதால் ஒரு பயனும் இல்லை.

 Whatever be the greatness of the fort, by all means,
It is void, unless there are eminent force.

However be grand the fortress in all respects ; except there are fit
persons who are bold enough and well trained, work inside the fort.