Translate

Wednesday, August 29, 2012

திருத்தொண்டத்தொகை



திருத்தொண்டத்தொகை


பத்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்

பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்

திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கும் அடியேன்

முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்

அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்

ஆரூரான் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்

வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்

தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க்கு அடியேன்

திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன்

என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்

இசைஞானி காதலன் திருநாவலூர்க்கோன்

அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட்டு வப்பார்

ஆரூரான் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.



Tuesday, August 28, 2012

திருத்தொண்டத்தொகை



திருத்தொண்டத்தொகை

கரைக்கண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த

கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்

நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற

நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்

துறைக்கொண்ட செம்பவளம் இருலகற்றுஞ் சோதித்

தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்

அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க்கு அடியேன்

ஆரூரான் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்

காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்

மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை

மன்னவனாஞ் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்

புடைசூழ்ந்த புலியதன்மேல் அரவாட ஆடிப்

பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்

அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்

ஆரூரான் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

                         (தொடரும்)

Monday, August 27, 2012

திருத்தொண்டத்தொகை


திருத்தொண்டத்தொகை


வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே

மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்

சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்

செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க்கு  அடியேன்

கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும்  அடியேன்

ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன்  அடியேன்

ஆரூரான் ஆரூரில் அம்மானுக்கு ஆளே


பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்

பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க்கு அடியேன்

மெய்யடியான் நரசிங்க முனையரைக்கு அடியேன்

விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க்கு அடியேன்

கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்

கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்

ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்

ஆரூரான் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

                        (தொடரும்)

Saturday, August 25, 2012

திருத்தொண்டத்தொகை


திருத்தொண்டத்தொகை



திருநின்ற செம்மையே செம்மையாக்கொண்ட

திருநாவுக்கு அரையன்றன் அடியார்க்கும் அடியேன்

பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்

பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்

ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்

ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க்கு அடியேன்

அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்

ஆரூரான் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்

மதுமலர் நற் கொன்றையான் அடியலாற்பேணா

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்

ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்

நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்

நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்

அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்

ஆரூரான் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

                                                        (தொடரும்)

Friday, August 24, 2012

திருத்தொண்டத்தொகை


திருத்தொண்டத்தொகை


இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க்கு அடியேன்

ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்

கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்

கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்

மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்

எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்

அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க்கு அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.


மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்

முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்

செம்மையே திரு நாளைப் போவார்க்கும் அடியேன்

திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்

மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க

வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த

அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கு அடியேன்

ஆரூரான் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

                                                                                  (தொடரும்)

Thursday, August 23, 2012

திருத்தொண்டத்தொகை




திருத்தொண்டத்தொகை

(7ஆம் திருமுறை)   (பண்- கொல்லிக்கௌவாணம்)


தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்

இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

வெல்லுமா மிகவல்ல மெய்பொருளுக்கு அடியேன்

விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க்கடியேன்

அல்லிமென் முல்லையந்தார் அமர் நீதிக்கு அடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

                            (தொடரும்)









Wednesday, August 22, 2012

திருநீற்றுப்பதிகம்


திருநீற்றுப்பதிகம்


குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமும்கூடக்

கண்திகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு

எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு

அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே.


ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவாயாந்திரு நீற்றைப்

போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்

தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின தீரச்

சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

Tuesday, August 21, 2012

திருநீற்றுப்பதிகம்


திருநீற்றுப்பதிகம்


அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு

வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு

பொருத்தமதாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு

திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.


எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு

பயிலப்படுவது நீறு பாக்கியம் ஆவது நீறு

துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு

அயிலைப் பொலிதரு சூலத்து ஆல வாயான் திருநீறே.


இராவணண் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு

பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு

தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு

அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே.


மாலொடு அயனறி யாத வண்ணமும் உள்ளது நீறு

மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு

ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு

ஆலம துண்ட மிடற்றுஎம் ஆல வாயான் திருநீறே.

                                                                                                 (தொடரும்)

Monday, August 20, 2012

திருநீற்றுப்பதிகம்


திருநீற்றுப்பதிகம்




வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு

போதந்தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு

ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு

சீதப் புனல் வயல சூழ்ந்த திரு ஆல வாயான் திரு நீறே.


முக்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு

சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு

பக்தி தருவது நீறு பரவ இனியது நீறு

சித்தி தருவது நீறு திரு ஆல வாயான் திரு நீறே.


காண இனியது நீறு கவினைத் தருவது நீறு

மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு

சேணேந் தருவது நீறு திரு ஆல வாயான் திரு நீறே.


பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு

பேச இனியது நீறு பெரு ந்தவத்தோர்களுக் கெல்லாம்

ஆசை கெடுப்பது நீறு அ ந்தம தாவது நீறு

தேசம் புகழ்வது நீறு திரு ஆல வாயான் திரு நீறே.

                                (தொடரும்)

Sunday, August 19, 2012

திருநீற்றுப்பதிகம்




        இரண்டாம் திருமுறை

           திருநீற்றுப்பதிகம்

திருஆலவாய்            பண்- காந்தாரம்

              திருச்சிற்றம்பலம்


மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு

தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.
               


       

       

Saturday, August 18, 2012

சிவபுராணம்


சிவபுராணம்




அன்பருக்கன்பனே யாவையும்மாய் அல்லையுமாம்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே யந்தம் நடுவாகி யல்லானே

ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்த மெய்ஞ் ஞானத் தாற்

கொடுணர்வார் தம் கருத்தின்

நோக்கரிய நோக்கோ நுணுக்கரிய நுண்ணுணர்வே

போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே

காக்கும் மெங் காவலனே காண்பரிய பேரொளியே

ஆற்றின்ப வெள்ளமே யத்தாமிக்காய் நின்ற

தோற்றச் சுடரொளியாய் சொல்லாத நுண்ணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்

தேற்றனே தேற்றத் தெளிவே யென் சிந்தனையுள்

ஊற்றான வுண்ணா ரமுதே யுடையானே

வேற்று விகார விடக் குடம்பி னுட்கிடப்ப

ஆற்றேனெம்மையா அரனேயோ வென்றென்று

போற்றி புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்

மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே


கள்ளப் புலக் குரம்பைக் கட்டழிக்க வல்லானே

நள்ளிருளி னட்டம் பயின்றாடும் நாதனே

தில்லையுள் கூத்தனே தென் பாண்டி நாட்டானே

அல்லற் பிறவி யருப்பானே ஒ! என்று

சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக் கீழ்ப்

பல்லேரு மேத்தப் பணிந்து


         திருச்சிற்றம்பலம்

Friday, August 17, 2012

சிவபுராணம்


சிவபுராணம்


ஆக்கமள விறுதி யில்லா யனைத்துலகும்

ஆக்குவாய் காப்பா யழிப்பா அருள்தருவாய்

போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நிந்தொழும்பில்

நாற்றத்தினேரியாய் சேயாய் நணியானே

மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே

கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற் போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறினின்று

பிறந்த பிரப்பறுக்கு மெங்கள் பெருமாள்

நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்களேத்த

மறைந்திருந்தா யெம்பெருமான் வலவினை யென்றன்னை!

மறைந்திட மூடிய மாயவிருளை

அறம்பாவ மென்னு மருங்கயிற்றாற் கட்டிப்

புறத்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்கு மூடி

மலஞ்சோரு மொன்பது வாயிற்குடிலை

மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய

விலங்கு மனத்தால் விமலா வுனக்கு

கலந்த அன்பாகிக் கசிந்துள்ளுருகும்

நலந்தானிலாத சிறியேற்கு நல்கி

நிலந்தன்மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற்சிறந்த தயாவான தத்துவனே!

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேனா ரமுதே சிவபுரனே

பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே


நேச வருள் புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெட

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

ஆராவமுதே யளவிலாப் பெம்மானே

ஓராதா ருள்ளத்தொளிக்கு மொளியானே

நீராயுருக்கியென் னாருயிராய் நின்றானே

இன்பமும் துன்பமு மில்லானே யுள்ளானே!

                            (தொடரும்)-2
 

Thursday, August 16, 2012

சிவபுராணம்


சிவபுராணம்

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுது என் நென் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி யாண்ட குருமணிதன் தாள் வாழ்க!

ஆகம மாகி நின் றண்ணிப் பாண்றாள் வாழ்க!

ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க!

வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க!

பிறப்பறுக்கும் பிஞ்சகன் தன் பெய் கழல்கள் வெல்க!


புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க!

கரங்குவிவாருண்மகிழுங்கோன் கழல்கள் வெல்க!

சிரங்குவிவா ரோங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!


ஈசனடி போற்றி எந்தையடி போற்றி

தேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலனடி போற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்னடி போற்றி

சீரார் பெருந்துறை நம் தேவனடி போற்றி

ஆராத இன்ப மருளுமலை போற்றி


சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால்

அவனருளாலே யவன்தாள் வணங்கி

சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை

முந்தை வினை முழுவதும் ஓயவுரைப் பன்யான்!


கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி

எண்ணுதற் கெட்டா வெழிலார் கழலிறைஞ்சி

விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்

எண்ணிறந்து எல்லை யிலா தானே நின் பெருஞ்சீர்

பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்

புல்லாகிப் பூடாய் புழுவாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லா நின்ற இத்தாவரச் சங்கமத்துள்!

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான்

மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்



உய்யவென்னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயாவென வோங்கி யாழ்ந்தகன்ற நுண்ணியனே

வெய்யாய் தணியா யியமானனாம் விமலா

பொய்யாயின வெல்லாம் போயகல வந்தருளி

மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே

எஞ்ஞான மில்லாதனின்பப் பெருமானே!

அஞ்ஞானந் தன்னை யகல்விக்கும் நல்லறிவே!

                                       (தொடரும்)









Monday, August 13, 2012

சிவபுராணம்





திருவாசகம்
(மாணிக்கவாசகர் அருளியது)

தொல்லை இரும்பிறவி  சூழும்தளை நீக்கி
அல்லறுத் தானந்தம் ஆக்கியதே- எல்லை
மருவாநெறி அளிக்கும் வாதவூர் எங்கொன்
திருவா சகம் என்னும் தேன்.

Saturday, August 4, 2012

SIVAPURAANAM





                      விநாயகர் துதி


பாலும் தெளிதேனும் பாகும்

பருப்புமிவை நான்கும் கலந்துனக்கு

நான் தருவேன்- கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே

நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந் தா!




    திருமூலர் அருளிய திருமந்திரம்

சிவ சிவ என்கிலர் தீவினையாளர்

சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்

சிவ சிவ என்றிடத் தேவருமாவார்

சிவ சிவ என்னச் சிவகதி தானே!