Translate

Friday, July 11, 2014

பொன்மொழிகள்


பொன்மொழிகள்

501. ஒருவன் எதை உடையவன் என்பதன்று; எத்தகையவன்
     என்பதே வாழ்வின் முக்கியக் கேள்வி.

                                         --- ஸ்டீவன்ஸன்


502. பெருமையின் மூன்று அறிகுறிகள்:
     1. தோற்றத்தில் எளிமை.
     2. செயலில் மனித்தத் தன்மை.
     3. வெற்றியில் வெறியின்மை.

                                --- பிஸ்மார்க்


503. வாழ்க்கையின் சிறந்த பகுதி அவ்வப்போது அன்புடன்
    சிறு சிறு செயல்களைச் செய்வதுதான்.

                                      --- வோர்ட்ஸ்வொர்த்

504. அறியாமையே துர்பாக்கியத்தின் ஆணிவேர்.

                                      --- பிளேட்டோ


505. கொடுத்த வேலையைத் திறம்படச் செய்து முடிப்பதே
     நமது கடமை.

                                       --- எபிடெக்டஸ்


506. மனசாட்சி எதை நியாயமாக நினைக்கிறதோ, அதைத்
    தைரியமாகச் செய்.
                                   டாக்டர் ராமகிருஷ்ண பண்டார்கர்



507. வாழ்க்கையில் கடந்த காலம் ஒரு கனவு.
    வருங்காலம் ஒரு பெருமூச்சு.

                                --- அரேபியப் பழமொழி

                             
508. பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதைவிட,
    செய்யும் காரியத்தை நமக்குப் பிடித்ததாய் ஆக்கிக்கொள்ள
    வேண்டும்.

                                ---  கெமன்ஸ் வில்லியம்ஸ்



509. மகிழ்ச்சிகரமாகவும், வெற்றிகரமாகவும் வாழ
    விரும்பினால் எந்தச் சூழ்நிலையிலும் உங்கள்
    மன அமைதியைக் கலைக்கும் விதத்தில் எது
    நடந்தாலும் கவலைப்படாதீர்கள், கோபப்படாதீர்கள்,
    உங்கள் உயிர் வாழ்விற்கு இன்றியமையாதது
    கோபப்படாது அமைதியாக இருந்து பிரச்சினைகளைக்
    கையாளப் பழகிக் கொள்ளும் திறமைதான்.

                             --- என்.வி. பீல்

510.  நீங்கள் சாதிக்க வேண்டுமென்றால் 'முடியாது', 'நடக்காது'
     போன்ற வார்த்தைகளைச் சொல்லவே கூடாது.
     எதையும் நாளை என்று தள்ளிப் போடக்கூடாது.
                       
                            ---  கெமன்ஸ் வில்லியம்ஸ்



511. இரக்கம் உடைய இதயம், சிந்தனை, ஆற்றல் மிக்க மூளை,
     வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இம்மூன்றும்
     நமக்குத் தேவை.

                              --- சுவாமி விவேகானந்தர்

                           
                                 

512. தினமும் உங்களுக்கு எந்த வேலையைச் செய்யப் பிடிக்காதோ,
    அப்படிப்பட்ட வேலைகளில் ஒன்றிரண்டை செய்ய
    பழகிக்கொள்ளுங்கள். நாளடைவில் அப்படிப்பட்ட காரியங்கள்
    மீது உங்களுக்கு ஏற்பட்டுக்கொண்டிருந்த வெறுப்பு மறையும்,
    உங்கள் கடைமைகளை ஈடுபாட்டுடன் செய்வதற்கு இது
    மிகவும் உதவிகரமாக இருக்கும்.

                                    --- மார்க் ட்வைன்.                                                                            



513. அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில் எதனைப் பின்பற்றுவது
     என்ற போராட்டம் எழும்போது உள்ளம் கூறுவதையே
     பின்பற்றுங்கள்.

                                    --- சுவாமி விவேகானந்தர்


514. வாழ்க்கை என்பது திருப்பிப் படிக்க வேண்டிய கணக்குப் புத்தகம்.

                                    --- மண்பக்

515. செயலில் மட்டுமே நம்பிக்கை வையுங்கள். வாழ்க்கை
    செயல்மட்டத்தில்தான். பேச்சு மட்டத்தில் அல்ல.எனவே
    செயலில் நம்பிக்கை வையுங்கள்.

                                 --- ஆல்பிரட் இட்லர்


516. 'இலட்சியங்கள்' நட்சத்திரங்கள் போன்றவை. அவற்றை
    கைக்குள் அடக்கிவிட முயன்றால் தோல்வி நிச்சயம்.
    ஆனால் அவற்றை வழிகாட்டிகளாகக் கொண்டு
    பிந்தொடர்ந்து சென்றால் போக வேண்டிய இடத்தை
    அடைவது உறுதி.

                                   --- கார்ல் ரூஸ்

517. வாழ்வில் நாம் இரண்டு குறிக்கோள்களைக் கொள்ள
     வேண்டும். ஒன்று நாம் விரும்புவதை அடையவேண்டும்.
     அதற்குப்பின் அடைந்ததை அனுபவிக்க வேண்டும்.
     மனிதரில் விவேகம் மிக்கவராலேயே இரண்டாவதைச்
     சாதிக்க இயலும். அத்தகைய நபராக நீங்கள் இருங்கள்.

                                   --- சாமுவேல் ஸ்மித்

518. நம்பிக்கையும், உறுதியுமே வாழ்வின் அடிப்படை.
    இவை இரண்டும் இருந்தால் எல்லாம் இருந்தது
    மாதிரிதான்.

                                 --- சாரதா தேவியார்


519. ஓடுவதால் பயனில்லை. குறித்த நேரத்திற்கு முன்பே
     புறப்படுவதுதான் அவசியம்.


520. வாய்மூடாமல் பேசுபவன் அடுத்தவர் பேச்சைக்
     கேட்கவும் மாட்டான்; எதையும் கற்றுக்கொள்ளவும்
     மாட்டான்.


521. உலகில் சாகாவரம் பெற்றவை என்று ஒன்றைத்தான்
    சொல்லமுடியும். அவை புத்தகங்களே.

                                         --- கதே

522. கடுகளவு சிறந்த சிந்தனை பூசணியளவு நற்பயனைத் தரும்.

                                        --- வாரியார்


523. திட்டவட்டமான இலட்சியம் இல்லாதவர்கள்தான்
    இலக்குகள் உள்ளவர்களுக்காக என்றென்றும் வேலை
    செய்பவர்களாக வாழ்கின்றனர்.

                                    ---பிரையன் டிரேசி              


524. மனவலிமை இல்லாதவர்கள் சந்தர்ப்பங்களுக்காகக்
     காத்திருக்கிறார்கள்.

                                       --- வில்லியம்மார்டின்

525. ஆசைகள் குறைய குறைய அமைதி பெருகும்.


526. பொறுமை இல்லாதவர்கள் நீதிமான்களாக இருக்கமுடியாது.

                                            --- மார்க்கஸ்

527. இந்த உலகத்தை மாற்ற உங்களால் முடியாது. ஆனால்
     உங்களை மாற்றிக் கொள்ள முடியும். நீங்கள் சுதந்திரமாகவும்
     இன்பமாகவும் இருக்க வேண்டுமெனில் உலகக் கவலைகளையும்
     உங்கள் கவலைகளையும் மூட்டைக்கட்டுங்கள். இப்போது
     உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளத் திட்டமிட்டு
     முயற்சி செய்யுங்கள்; அது போதும்.

                                        டாக்டர் ராபர்ட் அந்தோணி


528. படித்து அறிபவனைவிட அனுபவித்து உணர்பவன் அறிஞன்.

                                        --- இங்கர்சால்
529. உங்கள் துணிவு, கடின உழைப்பு இந்த இரண்டையும்
    பொருத்துத்தான் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பிறக்கும்;
    நீடிக்கும்.

                                    --- பால்ஜாக்


530. வாழ்க்கை அனுபவம் இல்லாத எவரும் கல்வி
    கற்றவராக முடியாது.

                                --- பெர்னாட்ஷா

531. உலகத்தில் சோதனைக்கு உட்படாமலும் அதனிடம்
    படிக்காமலும் ஒருவன் நிறைவுற்ற மனிதனாக
    விளங்கமுடியாது! அனுபவம் ஊக்கமாக உழைப்பதிலிருந்து
    கிடைக்கிறது;காலத்தின் வேகம் அதைச் செம்மைப்படுத்துகிறது


532. நம்முடைய தனிப்பட்ட சிந்தனைகளும் அனுபவங்களே
    நமது நம்பிக்கைகளைத் தீர்மானிக்கின்றன.அவைதான்
    நம்மைப்பற்றிய சுயமான தன்மையையும் உயர்வான
    மதிப்பீட்டையும் தீர்மானிக்கின்றன.

                                    வால்டர் ஸ்டேபிலிஸ்

533. அதிகம் பேசுகிறவர்கள் செயலில் திறமையற்றவர்கள்.

                                       --- ஷேக்ஸ்பியர்


534. ஆசை புத்தியை மறைக்கும் போது அறிவு வேலை செய்யாமல்
     போகிறது.

535. நெற்றிவியர்வை நிலத்தில் விழப் பாடுபட்டு உழைப்பதானது
     ஒருவரின் சாபக்கேடோ முன்வினையின் பாவத்தாலோ
     அல்ல; அது கவலையைப் போக்கித் தேக ஆரோக்கியத்தை
     வளர்க்கும் டானிக்.
                                     ---டேவிட் லிவிங்ஸ்டன்


536. அரிய செயலைச் செய்து முடிப்பது வலிமையினால் அல்ல;
     விடாமுயற்சியினால்தான்.

                                      --- ஜேம்ஸ்ஆலன்

537. உலகத்தில் மிகவும் மலிவான பொருள் அன்புதான்.
    வாங்குகிறவனுக்கும் கொடுக்கிறவனுக்கும் அது
     பல மடங்கு மிகுதியான லாபத்தைத் தரும்.

                                           --- இங்கர்சால்

538. உதடுகளை மூடு; உன் இதயத்தைத் திற.

                                --- சுவாமி விவேகானந்தர்


539. உங்கள் எண்ணம் உங்கள் சுதந்திரத்தில் இருக்கிறது.
     இந்த உண்மையை அறிந்து உங்கள் உள்ளத்தைக்
    கட்டுப்படுத்தி அடக்கி ஆண்டு வாழ்வில் அமைதியையும்
     வெற்றியையும் அடையுங்கள்.

                                   --- மார்கஸ் அரேலியஸ்


540. நல்ல நூல்களைப் படிப்பது தலைசிறந்த மனிதருடன்
    உரையாடுவதைப் போன்றது.

                                      -- ரெனதெகார்த்


541. நேற்று என்பது கையை விட்டுப்போன பணம்.
     இன்று என்பது கையில் இருக்கும் பணம்.
     நாளை என்பது கைக்கு வரும் பணம்.

                                   --- சாண்டில்யன்


542. நீ சிறிய செயல்களுக்கு உண்மையுள்ளவனாக
    இருந்தால் பெரிய செயல்களுக்கு அதிகாரியாகலாம்.

                                    --- இயேசுபிரான்

543. இனாமாக ஒன்றைப் பெற்றுக் கொள்வதால் உங்களுடைய
     சுதந்திரம் குறைகிறது.
                                         --- போலந்து

544. எளிமையில்தான் பகவானின் அருளைப் பெற முடியும்.

                                 --- கிருபானந்தவாரியார்

545. சுறுசுறுப்பு, மனஉறுதி என்ற வெற்றிக்குதிரைகளில்
    பயணம் செய்வான் புத்திசாலி.

                                      --- சாணக்கியன்


546. ஆன்மாவைப் பிரதிபலிப்பதே உண்மையான பேச்சு.

                                         --- எமர்சன்


547. மனம் சுத்தமாக இருந்தால் செயல் நல்ல வழியில் செல்லும்.

                                          --- லெனின்


548. பண்பாடு இல்லாமலோ, தெரியாமலோ பேசக்கூடாது.

                                          --- வாரியார்


549. எவன் நம்முடன் போராடுகிறானோ அவன் நம்முடைய
     திறமையைக் கூர்மைப்படுத்துகிறான்.

                                       --- எட்வின்பர்க்



550. அதிருப்திக்கெல்லாம் வேர் சுயநலமே.

                               --- கிளார்க்

Tuesday, July 1, 2014

திருக்குறள்


திருக்குறள் 
 (see below in English)
 2. பொருட்பால்
55. செங்கோன்மை

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய்  வஃதே முறை.                        541

எவரிடத்தும் குற்றம் இன்னதென்று ஆராய்ந்து இவர் தனக்கு
என்ற கண்ணோட்டமின்றி நடுநிலை மாறாமல் ஆராய்ந்து
செல்வதே நீதிமுறை.

kural-541
Search out, to no  one favour show; with heart that justice loves
Consult, then act; this is the rule that right approves.

To  examine into ( the crimes which may be committed),
to show no favour(to any one) , to desire to act with
impartiality towards all, and to inflict (such punishments)
as may be wisely  resolved on, constitute rectitude.




வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.                              542

உலக உயிர்களெல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன.
அதுபோல, குடிமக்கள் வேந்தனது செங்கோலை
நம்பி வாழ்கின்றனர்.

Kural-542

All earth looks up to heav'n whence raindrops fall;
All subjects look to the king that ruleth all.

When there is rain, the living creation thrives; and so
When the king rules justly, his subjects thrive.



அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                       543

அந்தணர் போற்றும் மறை நூலுக்கும், தரும
நெறிகளுக்கும் அடிப்படையாக இருந்து
உலகத்தைக் காப்பது வேந்தனின் செங்கோல்.
kural- 543

Learning and virtue of the sages spring,
From all-controlling sceptre of the king.

The sceptre of the king is  the firm support of the
Vedas of the Brahmin, and of all virtues therein
described.



குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.                       544

குடிமக்களை அன்புடன் அரவணைத்துக் கொண்டு
அரசாட்சி செய்யும் மன்னரின் அடிகளைப்
பின்பற்றி உலகம் நிலைபெறும்.
kural- 544

Whose heart embraces subjects all, lord over mighty land
Who rules, the world his feet embracing stands.

The world will constantly embrace the feet of the great
King who rules over his subjects with love.


இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.               545                    

நீதி நெறி தவறாமல் அரசோச்சும் கொற்றவனின்
நாட்டில் பருவ மழையும், நிறைந்த விளைச்சலும்
ஒருசேர ஏற்படும்.

Kural-545

Where king, who righteous laws regards, the sceptre wields,
There fall the showers, there rich abundance crowns the fields.

Rain and plentiful crops will ever dwell togather
in the country of the king who says his sceptre
with justice.


வேலன்று வெற்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடா தெனின்.                           546

வேந்தனுக்கு வெற்றியைக் கொடுப்பதுவேலல்ல!
கோணாதிருக்கும் செங்கோலே ஜெயத்தைத் தரும்.

Kural-546

Not lance gives kings  the victory,
But septre swayed with equity.

It is not the javelin that gives victory,
but the king's sceptre, if it do no injustice.


இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.                547

உலகமெல்லாம் காப்பாற்றுவான் அரசன். நீதி நெறி
தவறாது அரசாண்டால் அந்த நீதியே அர்சனைக்
காப்பாற்றும்.

kural-547

The king all the whole realm of earth  protects;
And justice guards the king who right respects.

The  king defends the whole world; and justice,
When administered without defect, defends
the king.



எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.                            548

சாதாரண மக்கள் எளிதில் பார்த்துப் பேசக்கூடியவனாகி,
ஆராய்ந்து நீதி சொல்லாத அரசன் தாழ்ந்த நிலைக்குச்
சென்று கெடுவான்.

Kural-548

Hard of access , nought searching out, with partial hand
The king who rules, shall  sink and perish from the land.

The king who gives not facile audience ( to those who
approach him), and who does  not examine and pass
judgement ( on their complaints), will perish in disgrace.




குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.                   549

குடிகளைத் தானும் பிறரும் வருத்தாமல் காத்து,
குடிகளின் குற்றங்களை தண்டிப்பது மன்னரின்
கடமை. அது பழியாகாது.

Kural-549

Abroad to guard, at  home to punish,brings
No just reproach;'tis work assigned to kings.

In guarding  his subjects  (against injury from others),
and in preventing them himself; to punish crime is not
a fault in a king,  but a duty.



கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.                                    550

கொலைகாரர்களுக்கு மரணதண்டனை விதிப்பது,
பயிரைக் காக்க களையெடுப்பதற்கு ஒப்பானது.

Kural-550

By punishment of death the cruel to restrain,
Is as when farmer frees from weeds the tender grain.

For a king to punish criminals with death, is like
pulling up the weeds in the green corn.


திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
56. கொடுங்கோன்மை

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.                       551

குடிமக்களை வருத்தி முறையற்ற ஆட்சி செய்யும் அரசன்
கொலைகாரனை விடக் கொடியவன்.

Kural-551

Than  one who piles the murderer's trade, more cruel is the king
Who all  injustice works, his subjects harassing.

The king who gives himself up to oppression and acts
Unjustly ( towards his subjects) is more cruel  than the
man who leads the life of a murderer.


வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.                     552

செங்கோலைக் கொடுங்கோலாக்கிய அரசன்
குடிகளை வரி என்ற பெயரில் கசக்கிப்பிழிதல்
காட்டுவழியில் வேல்தாங்கி நிற்கும் கள்வன்
பணம் பறிப்பதை ஒத்தது.

Kural-552

As ' Give' the robber cries with lance uplift,
So  kings with sceptred hand implore a gift.

The request ( for money) of him who holds the
Sceptre is like the word of a highway robber who
stands with a weapon in hand and says " give up your wealth".



திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
56. கொடுங்கோன்மை


நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.                              553

தினந்தோறும் நாட்டில் நடக்கும் நன்மை தீமைகளை
ஆராய்ந்து நீதி வழங்காத அரசனின் நாடு நாளுக்கு
நாள் கெடும்.


Kural-553

Who makes no daily search for wrongs, nor justly rules, that king
Doth day by day his realm to ruin bring.

The country of the king who does not daily examine into the
Wrongs done and distribute  justice, will daily fall to ruin.


கூழும்  குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.                                 554

ஆட்சிமுறை தவறிக் கொடுங்கோலனாகி எதையும்
ஆராயாது செய்யும் மன்னன் தன் பொக்கிஷத்தையும்
குடிமக்களையும் ஒரே சமயத்தில் பறிகொடுப்பான்.

Kural-554

Whose rod from right deflects, who counsel doth refuse,
At  once his wealth and people utterly shall lose.

The king,who, without reflecting (on its  evil consequences),
perverts justice, will lose at once both his wealth and his
subjects.




அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.                         555

கொடுங்கோல் அரசனால் துன்பபப்பட்டுத் தாங்க
முடியாமல் அழும் குடிகளின் கண்ணீர் அந்த
அரசனின் செல்வத்தை அழிக்கும் படையாகும்.


Kural-555

His people's tears of sorrow past endurance, are not they
sharp instruments to wear the monarch's wealth away?

Will not the tears, shed by people who cannot endure
the oppression which they suffer (from their king),
become a saw to waste away his wealth?



மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.                          556

மன்னர்களுக்குப் புகழ் நிலைபெறக் காரணம்
செங்கோன்மை, செங்கோல் முறைதவறினால்
புகழ் அழியும்.

kural-556

To rulers' rule stability is sceptre right;
When  this is not, quenched is the rulers' light.

Righteous government gives permanence to (the fame of)
Kings; without  that their fame will have no endurance.



துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.                    557

மழைத்துளி பூமியில் விழவில்லையானால் உலகம்
எப்படி இருக்குமோ அப்படிப்பட்டது குடிமக்களுக்குக்
கருணையற்ற அரசனின் கொடுங் கோலாட்சி.

Kural-557

As lack of rain to thirsty lands beneath,
Is lack of grace in kings to all that  breath.

As is the world without rain, so live a people
whose king is without kindness.



இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.                           558

பாதுகாப்புத் தராத அரசனின் கொடுங்கோல்ஆட்சியில் இருக்க
நேர்ந்தால் வறுமையைவிடசெல்வநிலை துன்பத்தைத் தரும்.

Kural-558

To poverty it adds a  sharper sting,
To live beneath the sway of unjust king.

Property gives  more sorrow than poverty,
to those who live under the sceptre of a king
without justice.


முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.                       559

வேந்தன் நீதி நெறி தவறி ஆட்சிசெய்தால் அவனது
நாட்டில் பருவமழை தவறி விடும்.

Kural-559

Where king from right deflecting,makes unrighteous gain,
The seasons change, the clouds pour down no rain.

If the king acts contrary to justice, rain will become
unseasonable, and the heavens will withhold showers.



ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.                             560

அரசன் முறைப்படி நாட்டை ஆளாவிட்டால்
அந்த நாட்டில் பசுக்கள் பால் குறைத்தே கொடுக்கும்.
அந்தணர்கள் வேதம் ஓதுவதை மறப்பர்

Kural-560

Where guardian guardeth not, udder of kine grows dry,
And Brahmans' sacred lore  will all forgotten lie.

If the guardian ( of the country) neglects to guard it,
The produce of the cows will fail, and the men of
Six duties viz. Bramins will forget vedas.


திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
57. வெருவந்த செய்யாமை

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.                     561

ஒருவன் செய்த குற்றத்தை நன்கு ஆராய்ந்து மீண்டும்
அக்குற்றத்தை அவன் செய்யாதபடி குற்றத்துக்கேற்றபடி
தண்டிப்பவனே அரசன்.
Kural-561

Who punishes, investigation made in due degree,
So as to stay advance of crime, a king is he.

He is a king who having equitabily examined
(any in justice which has been brought to his notice),
suitably punishes it, so that it may not be again committed.

திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
57. வெருவந்த செய்யாமை

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.                       562

தனது புகழ் நெடுங்காலம் நீடிக்க விரும்புபவன்
தண்டிக்கத் தொடங்கும் போது பெரிதாகச் சொல்லி
அளவோடு தண்டிக்க வேண்டும்.

Kural-562

For length of days with still increasing joys on Heav'n who call
Should raise the rod with brow severe, but let it gently fall.

Let the king, who desires that his prosperity may long remain,
Commence his peliminary enquires with strictness, and then
punish with mildness.




வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லக் கெடும்.                            563

குடிமக்கள் அஞ்சி நடுங்கும் கொடுங்கோல் அரசனாக
இருந்தால் அவன் நிச்சயமாக விரைவில் அழிவான்.

Kural-563

Where subjects dread of cruel wrongs endure,
Ruin to unjust king is swift and sure.

The cruel-sceptred king, who acts so as to put
his subjects in fear, will certainly and quickly
come to ruin.
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லக் கெடும்.                           564

நம் அரசன் கொடியவன் என்று குடிகள் உரைக்கும்
கொடுஞ்சொல் உடைய அரசன் தன் ஆயுள் தேய
விரைவில் கெடுவான்.

Kural-564

'Ah! cruel is our king' , where  subjects sadly say,
His age shall dwindle, swift his joy of life decay.

The king  who is spoken of as cruel will quickly
perish; his life becoming shortened.



அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
போய்கண் டன்னது உடைத்து.                      565

எளிதில் பார்க்க முடியாதபடிக் கட்டுக் காவலுடனும்
கடுகடுப்பான முகத்துடனும் உள்ளவனின் பெருஞ்
செல்வம் பூதம் காக்கும் புதையல் போன்றது.

Kural-565

Whom subjects scarce may see, of harsh forbidding countenance;
His ample wealth shall waste, blasted by demon's glance.

The great wealth of him who is difficult of access and possesses
a sternness of  countenance, is like that which has  been obtained
by a devil.


கடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.                                    566

கடும் சொல் உடையவனாகவும் கண் பார்வையால்
நல்லது கெட்டதைத் தீர்மானிக்க முடியாதவனாயும்
உள்ளவனின் பெருஞ்செல்வம் நீண்டகாலம் பயன்படாது
அழியும்.

kural-566

The tyrant, harsh  in speach and hard of eye,
His ample joy , swift fading , soon shall die.

The abundant wealth of the king whose words
are harsh and whose looks are void of kindness,
will instantly perish instead of abiding long,
with him.


கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.                         567

கடும் சொல்லும், சிறுகுற்றத்துக்கு வரம்பு மீறிய
தண்டனையும் அரசனுடைய வெற்றிக்குக் காரணமான
வல்லமையைத் தேய்க்கும் அரமாகும்.

Kural-567

Harsh words and punishments severe beyond the right,
Are file that wears away the monarch's conquering might.

Severe words and excessive punishments will be a file to
waste away a king's power for destroying (his enemies).





இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறின் சிறுகும் திரு.                                  568

அமைச்சர் முதலான குழுவினருடன் கலந்து
ஆலோசிக்காத அரசன், சினத்தையும் கட்டுப்படுத்தாமல்
சீறி விழுந்தால் அவனது செல்வம் சுருங்கும்.

Kurl-568

Who leaves the work to those around, and thinks of it no more;
If he in wrathful mood reprove, his prosperous days are o'er!

The prosperity of that king will waste away, who without
reflecting (on his affairs himself), commits them to his ministers,
and (when a failure occurs) gives away to anger,and rages
against them.


செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.                         569

முன்பே தனக்கு அரண் செய்து கொள்ளாத அரசன்
யுத்தம் வந்த போது அஞ்சி விரைவில் கெடுவான்.

Kural-569

Who builds no fort whence he may foe defy,
In time of war shall fear  and swiftly die.

The king who has not provided himself with a
place of defence, will in times of war be  seized
with fear and quickly perish.

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலைக்குப் பொறை.                          570

கொடுங்கோலரசன் படிக்காதவரைத் தனக்குப்
பாதுகாவலனாக வைத்துக் கொள்வான். அது
பூமிக்கு பெரும் சுமையாகும்.


Kural-570

Tyrants with fools their counsels share:
Earth can no heavier burthen bear!

The earth  bears up no greater burden than
ignorant men  whom a cruel  sceptre attaches
to itself ( as the ministers of its evil deeds).


Friday, June 6, 2014

திருக்குறள்


திருக்குறள் 
 (see below in English)
 2. பொருட்பால்
51. தெரிந்து தெளிதல்

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப்படும்.                       501

தரும்குணம், செல்வநிலை, மகிழ்ச்சி, உயிருக்காக
அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வழிகளிலும் ஆராய்ந்த
பிறகே ஒருவனைப் பற்றித் தீர்மானிக்க வேண்டும்.

kural-501

How treats he virtue,wealth and pleasure? How, when life's at stake,
Comports himself? This four-fold test of man will full assurance make.

Let ( a minister) be chosen, after he has been tried by  means of
these four things, viz,-his virtue, (love of) money,(love of)
sexual pleasure, and tear of (losing)life.


குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு.                502

நல்ல குடும்பத்தில் பிறந்து இதுவரை குற்றங்களெதுவும்
செய்ய அஞ்சும் நாணம் உடையவரையே நம்பி
எச்செயலையும் ஒப்படைக்க வேண்டும்.


kural-502

Of noble race, of faultless worth, of generous pride
That shrinks from  shame or stain; in him may king confide.

(The king's)  chioce should (fall) on him, who is of good family,
Who is free from faults, and who has the modesty which fears
the wounds (of sin).


அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.                            503

அரிய நூல்களைக் கற்று, குற்றமே செய்யாத
நல்லவர்களிடமும், ஆராய்ந்து பார்த்தால்
அறியாமை இல்லாமலிருப்பது அரிது.


kural-503

Though deeply learned, unflecked by fault, 'tis rare to see,
when closely scanned, a man from all unwisdom free.

When evenmen, who have studied the most difficult works,
and who are free from faults, are (carefully) examined,
it is a rare thing to find them without ignorance.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.                        504

ஒருவரது குணங்களை ஆராய்ந்து, குற்றங்களையும்
ஆராய்ந்து, மிகுந்திருப்பதிலிருந்து ஒருவனைத்
தெளிய வேண்டும்.

kural-504

weigh well the good of each, his  failings closely scan,
As these or those prevail, so estimate the man.

Let ( a king ) consider ( a man's) good qualities, as well
as  his faults, and then judge ( of his character) by that
which prevails.


பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.                      505

குணங்களாகின்ற பெருமைக்கும், குற்றங்களாகின்ற
சிறுமைக்கும் தெளிந்தறியும் உரைகல்லாக உள்ளவை
அவரவருடைய செயல்களே.

kural-505

Of greatness and meaness too,
The deeds of each are touchstone  true.

A man's deeds are the touchstone of his greatness and littleness.


அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.                          506

முன்பின் தெரியாதவரைச் சட்டென்று நல்லவரென்று
நம்பி பொறுப்புக்களை ஒப்படைக்கக்கூடாது.
எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள் பழிக்கு அஞ்சமாட்டார்கள்.

kural-506

Beware of trusting men who have  no kith of kin;
No bonds restrain such men,  no shame deters from sin.

Let ( a king) avoid choosing men who have no relations;
Such men have no attachment,and therefore have no
fear of crime.


காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதமை யெல்லாம் தரும்.                     507

அறிய வேண்டியதை அறியாதிருப்பவரை
அன்பு காரணமாக நம்பி அவரிடம் பொறுப்புக்களைக்
கொடுத்தால், நம்பியவர்களுக்கு எல்லா அறியாமைகளையும்
கொடுக்கும்.


kural-507

By fond affection led who trusts in men of unwise soul,
Yields all his being up to folly's blind control.

To choose  ignorant men, through partiality, is height of folly.



தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.                                    508

ஒருவரைப் பற்றி ஆராயாமல் நம்பினால் அது
அவருக்கு மட்டுமின்றி அவர் சந்ததியினருக்கும்
தீராத துன்பத்தைத் தரும்.

kural-508

Who trusts an untried stranger, brings disgrace,
Remediless, on all his race.

Sorrow that will not leave even his posterity will
come upon him chooses a stranger  whose character
he has not known.



தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.                                509

எவரையும் நன்கு ஆராயாது நம்பக்கூடாது.
ஆராய்ந்தபின் அவரிடம் தெளிவாக கொள்ளத்
தக்க பொருளைத் தெளிந்து ஏற்கவேண்டும்.

kural-509

Trust no man whom you have not fully tried,
when tested, in his prudence proved confied.

Let ( a king) choose no one without previous
consideration; after he has made his choice,
let him unhesitatingly select for each such duties
as are appropriate.



தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.                                    510

ஆராயாமல் ஒருவரை நம்புவதும் ஆராய்ந்து நட்புக்
கொண்ட ஒருவரிடம் சந்தேகப்படுவதும் தீராத
துன்பத்தைத் தரும்.


kural-510

Trust where you  have not tried, doubt of a friend to feel,
Once trusted, wounds inflict that nought can heal.

To make choice of one who has not been examined,
and to entertain doubts respecting one who has been
chosen, will produce irremediable sorrow.


திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
52. தெரிந்து வினையாடல்

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப்படும்.                511

நன்மை தீமைகளை ஆராய்ந்து நன்மையையே
விரும்பும் தன்மை உடையவரையே செயலுக்கு
உரியவராக நிச்சயிக்க வேண்டும்.

kural-511

Who good and evil scanning, ever makes  the good his joy;
Such man of virtouous mood should king employ.

He should be employed ( by a king), whose nature leads him
to choose the  good,  after having weighed both the evil and
the good in any undertaking.


வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.                    512

பொருள்வரும் வழிகளைப் பெருகச் செய்து,
அவற்றால் வளத்தை ஏற்படுத்தி, வரும்
இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவரே
செயல்புரிய ஏற்றவராவார்.

kural-512

Who swells the revenues, spreads plenty o'er the land,
Seeks out what hinders progress, his workman's hand.

Let him do (the  king's) work who can enlarge the
sources (of revenue), increase wealth and considerably
prevent the accidents(which would destroy it)

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.                        513

அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தீர்மானிக்கும் திறமை,
பேராசை இன்மை, ஆகிய இந்நான்கும் உறுதியாக
உள்ளவரிடத்தில் நம்பிக்கை வைக்கலாம்.

kural-513

A loyal love with wisdom, clearness, mind  from avaice free;
Who  hath these four good gifts should ever trusted be.

Let the choice (of a king) fall upon him who largly possesses
these four things, love ,knowledge, a clear mind and freedom
from covetousness.


எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.                             514

எல்லா வகையாலும் ஆராய்ந்து தெளிந்த பின்பும்
செயலின் தன்மையால் வேறுபடும் மக்கள் உலகில்
பலருண்டு.

kural-514

Even when tests of every kind are multiplied,
Full many a man proves otherwise, by action tried!

Even when (a king ) has tried them in every possible  way,
there are many men who change, from the nature of the
works (in which they may be employed).


அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.                       515

செய்யும் வகையறிந்து துன்பங்களை சகித்துக்கொண்டு
செயலை செய்துமுடிக்க வல்லவனைத் தவிர மற்றவரைச்
சிறந்தவன் எனக் கருதிச் செயலை ஒப்படைக்கக் கூடாது.

kural-515

No specious fav'rite should the king's commission bear,
But he that knows, and work performs with patient care.

(A king's) work can only be accomplished by a man of
Wisdom and patient endurance; it is not of a nature
to be given to one from mere personal attachment.


செய்வானை நாடி வினை நாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.                            516

செய்பவரின் தன்மைகளை ஆராய்ந்து, செயலின்
இயல்பை நிர்ணயித்து,காலத்துக்குத் தக்கவாறு
அறிந்து செய்வது நல்லது.
,
kural-516

Let king first ask, 'who shall the deed perform ? and 'what the deed ?'
Of hour  befitting both assured ,let every work proceed.

Let ( a king) act , after having considered the agent (whom
he is to employ ), the deed (he desires to do), and the time
which is suitable to it.



இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.                            517

இச்செயலை இக்கருவியால் இவன் முடிக்க
வல்லவன் என்று தெளிந்த பிறகே அவனிடம்
அப்பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.


kural-517

'This man, this work shall thus work out,'let thoughtful king command;
Then leave the matter wholly in his servant's hand.

After having considered," this man can accomplish this,
by these means", let (the king)  leave with him the discharge
of that duty.


வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.                   518

ஒருவன் ஒரு செயலைச் செய்ய தகுதி
உடையவன்தானா என்று ஆராய்ந்த பிறகே
அவனிடம் அச்செயலை விடவேண்டும்.

kural-518
As each man's special aptitude is known,
Bid each man make that special work his own.

Having considered what work a man is fit for,
Let (the king) employ him in that work.




வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.                      519

மேற்கொண்ட செயலைப் பொறுப்பாகச் செய்பவனைத்
தவறாக நினைத்தால் திருமகள் அவனிடமிருந்து
நீங்கி விடுவாள்.

kural-519

Fortune deserts the king who ill can bear,
Informal friendly ways of men his tolls who share.

Prosperity  will leave (the king) who doubts friendship
of the man who steadily labours in the discharge of
His  duties.



நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.                           520

தொழிலைச் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரை
உலக வாழ்க்கை கோணாதிருக்கும். அதனால் அரசன்
தினமும் தொழிலை நிர்வகிப்பவர்களைக் கண் காணிக்கவேண்டும்.

kural-520

Let king search out his servants'  deeds each day;
When these do right , the world goes rightly on its way.

Let a king daily examine the  conduct of his servants;
If they do not act crookedly, the world will not act
crookedly.

திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
53. சுற்றந் தழால்

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள.                             521

ஒருவனுக்கு ஏழமை வந்த காலத்தும் பழைய
உறவைப் பாராட்டிப் பேசும் பண்பு உறவினரிடம்
உண்டு.

Kural-521
When wealth is fled, old kindness still to show,
Is kindly grace that only kinsmen know.

Even when ( a man's) propertity is all gone,
Relatives will act towards him with their
accustomed (kindness).

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்.                           522

அன்பு அகலாத உறவுகள் ஒருவனுக்கு அமைந்திருந்தால்
அது அவனுக்கு மேன்மேலும் பல முன்னேற்றங்களைக்
கொடுக்கும்.


kural-522

The  gift of kin's unfailing love bestows
Much gain of good, like flower that fadeless blows.

If ( aman's) relatives remain attached  to him with
Unchanging love, it will be a source  of ever-increasing
wealth.


அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.                             513

சுற்றத்தாருடன் மனம் கலந்து பழகாதவனுடைய
வாழ்க்கை கரையில்லாத குளத்தில் நீர்
நிறைந்தாற் போன்றது.

Kural-523

His joy of life who  mingles  not with kinsmen gathered round,
Is lake where streams pour in, with no encircling bound.

The wealth of one who does not mingle freely with his
relatives,will be like  the filling of water in a spacious
tank that has no banks.



சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.                      524

பணக்கார உறவினன் தன் சுற்றத்தினருக்கு
வேண்டிய உதவி செய்து அன்போடு பழகுவதே
செல்வம் பெற்றதன் பயனாகும்.
kural-524
The profit gained by wealth's increase,
Is living  compassed round by relatives in peace.

To live surrounded by relatives, is the advantage
to be derived from the acquisition of wealth.


கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.                       525

பொருளால் உதவி செய்வதும், இனிய சொல்
சொல்வதும் செய்பவர் தொடர்ந்து சுற்றத்தினரால்
சூழப்படுவார்.


kural-525

Who knows the use of pleasant words, and liberal gifts can give,
Connections, heaps of them, surrounding him shall live.

He will be surrounded by numerous relatives
Who manifests generosity and affability.



பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.                          526

ஒருவர் தருமவானாகவும் கோபம் அற்றவராகவும்
இருந்தால் அவரைப் போன்ற உறவினரை உடையவர்
உலகிலேயே இல்லை.

kural-526

Than one who gifts bestows and wrath restrains,
Through the wide world none larger following gains.

No one , in the world, will have so many relatives(about him),
as  he who makes large gift,and does not give way to anger.




காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.                                   527

காகம் தனக்குக் கிடைத்த உணவை ஒளித்து
வைக்க நினைக்காமல் இனத்தை கூவி அழைத்து
உண்ணும். அத்தகைய குணம் உடையவரிடம்
செல்வம் சேரும்.
kural-527
The crows conceal not,  call their friends to come, then eat;
increase of good such worthy ones shall meet.

The crows do not conceal ( their prey), but will call out
for others (to share with them) while they eat;
Wealth will be with those who show a similar disposition
(towards their relatives).



பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.                            528

அரசன் எல்லோ\ரையும் ஒரே தன்மையாகக் கருதாமல்
அவரவர் தகுதிக்கேற்ப கௌரவித்தால் அதை விரும்பி
வாழும்  சுற்றத்தார் பலராக இருப்பர்.

kural-528

Where  the king regards not  all alike,but each in his degree,
'Neath such discerning rule many dwell happily.

Many relatives will live near a king, when they observe
that he does not look on all alike, but that he looks on
each man according to his merit.



தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.                         529

முன்பு உறவாக இருந்து பின்னர் மனஸ்தாபம்
கொண்டு பிரிந்தவரின் சொந்தம் சண்டைக்கான
காரணம் மறைந்தபின் மீண்டும் ஒன்றுகூடும்.

kural-529

Who once were his, and then forsook him, as  before
will come around, when cause of disagreement is no more.

Those who have been friends and have afterwards forsaken him,
Will return and join themselves (to him),when the cause of
disagreement is not  to be found in him.

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக்கொளல்.                  530

தன்னிடமிருந்து பிரிந்து சென்று ஓர் ஆதாயம்
வேண்டித் திரும்பி வந்தவனை, அரசன் அவன்
விரும்பிய உதவியைச் செய்து, ஆராய்ந்த பிறகே
உறவு கொள்ளலாம்.


kural-530

Who causeless went away, then to return, for any cause, ask leave;
The king should sift their motives well , consider, and receive!

When one may have left him, and some cause has returned to him,
let the king fulfill the object (for which he has come back) and
thoughtfully receive him again.



திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
54. பொச்சாவாமை

இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.                531

அளவு கடந்த கோபத்தைவிட, மகிழ்ந்திருக்கும்
போது ஏற்படும் சோர்வு கொடியது.

kural-531

'Tis greater ill, it rapture of o'er weening gladness to the soul
Bring self-forgetfulness than if transcendent wrath control.

More evil than excessive anger, is forgetfulness which springs
from  the intoxication  of great joy.




பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.                     532

தினந்தோறும் தொடரும் தரித்திரம் அறிவைக்
கெடுக்கும். அதுபோல மறதி புகழைக் கெடுக்கும்.


Kural-532

Perpetual, poverty  is death to wisdom of the wise;
When man forgets himself his glory dies!

Forgetfulness will destroy fame, even as constant
poverty destroys knowledge.



பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுவுலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.                     533

மறதியால் சோர்வு கொண்டவர்க்குப் புகழில்லை.
இது உலகிலுள்ள எல்லா நூல்களும் சொல்லும் முடிவு.

kural-533

'To  self-oblivious men no praise', this rule
Decisive wisdom sums of every school.

Thoughtlessness will never acquire fame;
And this tenet is upheld by all treatises in the
 world.



அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.                          534

பயப்படுபவர்களுக்கு  வெளியில் காவல் இருந்து
பயனில்லை. அது போல மறதி உள்ளவர்களுக்கு
நல்ல நிலை வாய்த்துப் பயன் இல்லை.

kural-534

'To cowards is no fort's defence'; e'en so
The self - oblivious men no blessing know.

Just as the coward has no defence( by whatever
fortifications he may be  surrounded). so the
thoughtless has no good ( whatever advantages
he may possess).


முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.                       535

துன்பங்கள் வருமுன் எச்சரிக்கை செய்து
கொள்ளாமல் மறந்திருப்பவன் பின்னர் துன்புறும்
போது தன் மறதியை எண்ணி நொந்து கொள்வான்.


kural-  535

To him who nought foresees, recks not of anything,
The after woe shall sure repentance bring.

The thoughtless man, who provides not against the
calamities that may happen, will afterwards repent
for his fault.




இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.                              536

மறதியின்மை எவரிடத்திலும் எக்காலத்தும்
இருக்குமானால் அதற்கு ஒப்பான தன்மை வேறு
கிடையாது.

Kural-536

Towards all  unswerving ever watchfulness of soul retain,
Where this is found there is no greater gain.

There is nothing comparable  with the possession of
unfalling thoughtfulness at all times, and towards
all persons.


அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.                 537

மறவாமை என்ற ஆயுதம் கொண்டு செயல்களை
அக்கறையோடு செய்தால் செய்வதற்கரியவை
என்று சொல்லக்கூடிய காரியங்களே இல்லை.

kural-537

Though things are  arduous deemed, there's  nought may not be won,
When work with mind's unslumbering energy and thought is  done.

There is nothing too difficult to be accomplished, if a man set about
it carefully, with unflinching endeavour.


புகழ்ந்தவை போற்றிச்  செயல்வேண்டும். செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.                          538

சான்றோர் புகழ்ந்த செயல்களைப் போற்றிச் செய்ய
வேண்டும். அப்படிச் செய்ய மறந்தவருக்கு ஏழுபிறவி
எடுத்தாலும் நன்மை இல்லை.

kural-538

Let things that merit praise thy watchful soul employ;
Who these despise attain through sevenfold births  no joy.

Let ( a man) observe and do these things which have
been praised ( by the wise); if he neglects and fails to
perform them, for him there will be no (happiness)
throughout the seven births.

 திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
54. பொச்சாவாமை

இகழ்ச்சியின்  கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.               539

தன் மகிழ்ச்சியில் பெருமை கொண்டு கடமையை
மறந்திருக்கும் பொழுது அவ்வாறு சோர்ந்திருந்த
காரணத்தால் அழிந்தவர்களை ஞாபகப்படுத்திக்
கொள்ளவேண்டும்.

Kural-539

Think on the men whom scornful mind hath brought to nought,
When exultation overwhelms thy wildered thought.

Let ( a king) think of those who have been ruined by neglect,
When his mind is elated with joy.


உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.                                 540

ஒருவன் தன் லட்சியங்களை மறவாது தினமும்
நினைத்துக் கொண்டால் அவனது எண்ணம்
விரைவில் நிறைவேறும்.


kural-540

'Tis easy what though hast in mind to gain,
If what thou hast in mind thy mind retain.

It  is easy for (one) to obtain  whatever he may
think of ,if he can again think of it.

Sunday, May 11, 2014

பொன்மொழிகள்

401. பிறருடைய பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால்
    மகத்தான காரியம் எதையும் செய்யமுடியாது.  


402. வலக்கை ஊக்கமாக உழைக்க வேண்டும்; இடக்கை
    சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும். இதுவே
    ஒருவனின் உண்மையான அதிர்ஷ்டம்.

                                   --- இங்கிலாந்து


403. உயர்நீதி மன்றங்களைவிட உயர்வான மன்றம் ஒன்று
    உண்டு. அதுதான் மனச்சாட்சி மன்றம்.

                                   --- மகாத்மா காந்தி

404. காலத்தை வீணாக்குவதே செலவுகள் அனைத்திலும்
    அதிகச் செலவும் ஊதாரித்தனமுமாகும்.

                                       --- பிரேஸ்டஸ்

405. வெற்றிக்குப் பத்துப் படிகள்:

     1. திட்டமிட்டுச் செயல்படு.
     2. அதிகமாகக் கவனி.
     3. குறைவாகப் பேசு.
     4. நேர்மையாக நட.
     5. விமர்சனம் வேண்டாம்.
     6. எளிமையைப் பின்பற்று.
     7. தர்மம் செய்.
     8. கடனைத் தவிர்.
     9. கோபம் கொள்ளாதே.
     10. தியானம் மேற்கொள்.  


406. கவலையுடன் தூங்கச் செல்வது முதுகில்  சுமைகளைக்
    கட்டிக் கொள்வதற்குச் சமம்.

                                   --- கூப்பர்
     

407. முன்னும் பின்னும் யோசிக்காமல் வார்த்தைகளை
     விடுகிறோம். ஆனால் அதற்குரிய பலனை வட்டியும்
    முதலுமாக அனுபவிக்கிறோம். இதுதான் வாழ்க்கை.


408. தூசிகளைக் கண்டதும் இமைகள் மூடிக்கொள்வதைப்
    போல் தீமையைக் கண்டதும் விலகுகின்ற மனச்சான்றே
     இணையற்றதாகும்.

                                     --- ஆதம்ஸ்



409. உலகில் வெற்றிகரமாக வாழ, நான்கு குணங்கள் மட்டுமே
    தேவை. நிறைய பொறுமை, வாய்ப்புக்களை சரியாகப்
    பயன்படுத்தும் திறமை, தவறைக் கண்டிக்கும் அச்சமின்மை,
    தவறு செய்பவர்களையும் அணைத்துச் செல்லும் கனிவுடைமை.

                                     --- மாத்யூ ஆர்னால்ட்

410. கடவுள் நமக்கு நாக்கைக் கொடுத்திருப்பது இனிமையான
    சொற்களைக்கூறுவதற்கே.

                                            ---ஹீன்


411. அன்பினால் ஊக்கப்பட்டு அறிவினால் நடத்தப்படுவது வாழ்க்கை.

                                              --- ரஸ்ஸல்

412. நான் விழுந்தால் விழுகிற ஒவ்வொருமுறையும் எழுவேன்
    என்கிற மன உறுதி படைத்தவர்கள் சாதிக்கிறார்கள்.
    அவர்கள் தோற்கத் தயங்குவதில்லை.

                                         --- ஷேக்ஸ்பியர்


413. ஒருவர் கையை எதிர்பார்த்திராதே; உன் கொள்கைகளை
     நீயே சாதித்துக் கொள்ள முயற்சி செய்.

                                       --- மில்டன்  


414. செயல்படாத மனிதனுக்கு யாரும் ஒருபோதும்
     உதவி செய்வதில்லை.

                             --- ஸோஃபாக்ஸில்


415. இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொண்டால் இந்தப்
    பிரபஞ்சமே இறைவனின் குரலைக் கேட்கச் சொல்லும்.
    பிரபஞ்சமே இறைவனின் சிந்தனைகள் என்ற ஞானமும்
    பிறக்கும்.

                                     --- வால்டேர்


416. எந்தத் தொழிலும் இழிவில்லை. தொழில் எதுவும்
    செய்யாமல் இருப்பதுதான் இழிவு.

                                   --- டால்ஸ்டாய்


417. இனிமைக்கு இலக்கணம்
    இரண்டொரு சொற்கள்
    காலம் கருதுக
    அளவோடு பேசுக.

                             --- ரகு நாதன்

418. நன்மைகள் விளைய,
    நன்மைகள் செய்வோம்.
    நமக்கென உள்ளதைப்
    பிறர்க்கும் கொடுப்போம்.

                        --- நல்வாக்கு


419. எந்தப் பொருளின் மீது ஆசை இல்லையோ
    அதனால் துன்பம் இல்லை.

                                  --- மில்டன்
 
420. 'இல்லை' என்று ஒருபோதும் சொல்லாதே.'என்னால்
     இயலாது' என்று ஒருநாளும் சொல்லாதே. ஏனெனில்
     நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய
     உண்மை இயல்போடு ஒப்பிடும்போது காலமும்
    இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும்
    எல்லாவற்றையும் சாதிக்கக் கூடியவன்; சர்வ வல்லமை
    படைத்தவன் நீ.

                                   --- விவேகானந்தர்


421. செயலில் கவனக்குறைவுதான் தோல்விகளைச் சந்திக்க
    காரணமாக இருக்கிறது.

                               --- பெஞ்சமின் பிராங்க்ளின்


422. வறுமை உன்னை வாட்டும்போது பொறுப்புக்கள்
    உன்னைத் துரத்தும்.
    பொறுப்புக்கள் உன்னைத் துரத்தும் போது போராடி
    வெற்றிகொள்.

                           ---- வாஜ்பாய்
423. நான்கு விஷயங்களைத் திரும்பப் பெற முடியாது.
    சொல்லிய வார்த்தை, விட்ட அம்பு, கடந்தகால
    வாழ்க்கை, நழுவவிட்ட வாய்ப்பு.

                             --- அரபுப் பழமொழி



424. கடுமையான உழைப்பைத் தவிர வெற்றிக்கு
   வேறுவழி இல்லை.
   வெற்றி என்பது பெற்றுக் கொள்வது.
   தோல்வி என்பது கற்றுக் கொள்வது.


425. தோல்வி பற்றிய பயம்தான் மகிழ்ச்சி, செல்வம்,
     செல்வாக்கு, புகழ் என அனைத்தையும் நம்மிடமிருந்து
     பிடுங்கிக் கொண்டுவிடுகிறது.

                                  --- பிராங்க்ளின்  


426. உங்களுடைய இலக்கு எப்போதும் உயர்வானதாக
    இருக்க வேண்டும்.

                                 --- சாக்ரடீஸ்




427. குழந்தையிடமிருந்து வளர்ந்த மனிதர்கள் கற்றுக்கொள்ள
    வேண்டியவை நிறைய. அவற்றில் சில.
   
    1. கள்ளமில்லாச் சிரிப்பு.
    2. உண்மையான பேச்சு
    3. எல்லோரிடமும் காட்டும் ஒரேவித மரியாதை.
    4. பிறர் நகைக்கும்படி பேசும் பேச்சுக்கள்
    5. முகத்தில் சாந்தம்.

                         --- டாக்டர் பாரீசன்


428. ஆடை ஆபரணம் அணிந்து கொண்டாலும் ஆணவம்
     இருந்தால் பார்க்க அழகாக இருக்காது.




429. அதிகப் பேச்சு,பொய் இவை இரண்டும் நெருங்கிய நண்பர்கள்.

                                          --- கதே

430. தன் கால்களால் பறவைகள் சிக்கிக்கொள்ளும்.
    தன் நாவினால் மனிதன்  சிக்கிக்கொள்வான்.

                                 --- தாமஸ்புல்லர்

431. வாழ்க்கை முறையை சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து
    அமைத்துக் கொள்வதுதான் ஒருவனின் வெற்றிகரமான
    வாழ்க்கைக்கான அரிய ரகசியமாகும்.

                                 --- விவேகானந்தர்


432. குறைவான நம்பிக்கையும் மிதமிஞ்சிய நம்பிக்கையும்
     பலன் அளிக்கா.

                                   --- நேருஜி


433. துக்கத்தை தூர எறிவதைத் தவிர அதற்கு வேறுமருந்து
    இல்லை என்பதை அறிந்தவன் புத்திசாலி.

                                     ---- சாணக்கியன்


434. நல்ல செயல்களை நாமாகத் தேடிச்செல்லவேண்டும்.
    அவை நம்மை நாடிவாரா.

                                  --- விவேகானந்தர்
     

435. தெளிவான குறிக்கோளே வெற்றியின் முதல் ஆரம்பம்.

                                   --- வீபர்



436. தவறுசெய்துவிட்டோம் என்று தெரிந்ததும் அதை
     ஒப்புக்கொள்ள வெட்கப்படாதே.

                                   --- ஆவ்பரி



437. எவன் தவிர்க்க முடியாததைத் துணிச்சலுடன் ஏற்றுக்
     கொள்வதோடு அதை விருப்பத்துடன் பொறுத்துக்
     கொள்கிறானோ அவன்தான் மாமனிதன்.

                                       --- நீட்ஸே
   438. ஆணவமும் அழிவும் இரட்டைக் குழந்தைகள்.
     இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும்.
     அவ்வளவுதான்.



439. நல்லோரிடம் கூடி இருப்பது சொர்க்கத்தில் இருப்பதற்குச் சமம்.

                                      --- சாணக்கியன்



440. மகிழ்ச்சியுடையவன் எந்தப் பணியையும் தன்னுடைய
     சுவைக்கேற்ப மாற்றிக்கொள்பவனே.

                                       --- விவேகானந்தர்



441. உங்களை நீங்களே மதித்துக்கொள்வது ஆணவம்;
    பிறர் உங்களை மதிப்பது பெருமை.

                                      --- ஸ்டீவன்சன்


442. உள்ளொளி காட்டும் வெளிச்சத்தில் நடப்பவனே
     இலக்கை அடைய முடியும்.



443. உயர்ந்த உள்ளங்களுக்கிடையில்தான் தூய்மையான
     தோழமை மலரமுடியும்.

                              --- சார்லஸ் இஸ்தலீஷ்

444. தீயவர் தங்கள் தவறுகளுக்குச் சமாதானம் தேடுவர்;
    நல்லவர்கள் தங்கள் தவறுகளைத் தவிர்ப்பது எப்படி
    என்று சிந்திப்பார்கள்.

                                    --- பென்ஜான்சன்


445. நேர்மையான மனம் படைத்தவருக்குச் சட்டம்தான் கடவுள்;
      முட்டாளுக்குக் கோரிக்கைதான் கடவுள்.

                                       --- மில்டன்

446. சில நூல்களை ருசி பார்க்க வேண்டும்.
    சில நூல்களை மென்று தின்னாமல் விழுங்கிவிட வேண்டும்.
    சில நூல்களை நன்கு சுவைத்து மென்று விழுங்கி
    செரிக்கச் செய்ய வேண்டும்.

                                       --- லெனின்

447. மௌனம் அறிவுக்கு அழகு; பொறுமை திறமைக்கு ஏற்றது.

                                      --- காளிதாசர்


448. மனிதன் தனது அகத்தின் அரசன்; மனத்தின் காவலன்;
    வாழ்க்கையாகிய கோட்டையின் தனிக்காப்பாளன்.

                                      --- ஜேம்ஸ்ஆலன்


449. உன் கொடிய பகைவன் உன்னிடம் இருக்கும் அறியாமைதான்.

                                               --- பர்க்

450. அன்பான இதயத்தோடு அணுகி இதமாகப் பேசினால்
     யாரையும் உன்னால் திருத்தமுடியும். மனிதர்களில்
     யாரும் பிறக்கும் போதே கெட்டவனாகப் பிறப்பதில்லை.

                                   --- அறிஞர் அண்ணா

451. எதையும் செய்யாதிருப்பதைவிட ஏதாவது ஒன்றை
     நாள்தோறும் செய்துகொண்டிருப்பது மேல்.

                                   --- வில்லியம் ஜேம்ஸ்


452. கண்களை இழந்தவன் குருடனல்லன்;
    எவன் தன்னிடமுள்ள குறைகளை மறைக்கிறானோ
     அவனே குருடன்.

                             --- குருநானக்


453. பருத்தியைப் போல் அன்பைச் செலுத்தினால் அது
     ஆடையாக நம்மைக் காப்பாற்றும்.

                                       --- சீனம்


454. தன்னைத் தானே மேதாவியாக நினத்துக் கொண்டு
    இருக்கும் இளைஞர்கள் இருந்த இடம் தெரியாமல்
    போய் விடுகின்றனர்.

                               --- மகாவீர்



455. சண்டைக்கு இருவர் தேவை. நீங்கள் அவ்விருவரில்
    ஒருவராயிருக்காதீர்கள்.

                                   --- ஆவ்பரி


456. அதிகமான எதிர்பார்ப்பு நிச்சயம் கைகூடப்போவதில்லை.

                                 --- ஷேக்ஸ்பியர்

457. அறிவுள்ள மனிதனிடம் உரையாடு.
    அறிவில்லாத மனிதர்களோடு உறவாடு.
    ஆனால் பண்பிலாதவனைக் கண்டால் ஒதுங்கிவிடு.


458. வீண்பேச்சு பேசுபவர்களின் பேச்சை நீங்கள் ஆமோதித்தால்
     அடுத்த அவதூறு உங்கள் மேல்தான்.

                                 ---ஜார்ஜ்சன்ட்டயானா


459. சுறுசுறுப்பாய் உள்ள மனிதன் எப்போதும் மகிழ்ச்சியோடு
    இருப்பான்.

                                ---ஹென்றி ஃபோர்டு




460. பிறர் நலத்தின் பொருட்டு உழைப்பது மனத்தின்
     கோணல்களைத் திருத்துகிறது.

  461. பணக்காரனுடன் பழகினால் பணக்காரன் ஆகமாட்டாய்;
    அறிவாளியுடன் பழகினால் நீயும் அறிவாளியாவாய்.




462. ஏழை உறவினரையும்,சிறிய காயத்தையும் அலட்சியப்படுத்தாதே.

                                        --- வாரியார்


463. இவ்வுலக வாழ்வு பற்றிய அச்சம் எனும் இருள்
     ஞான ஒளியால் விரட்டப்படுகிறது.

                                      --- சாணக்கியர்

464. உலகின் தேவை உபதேசம் அன்று; உதவிதான்.

                                       --- செனீகா





465.வேண்டுதல், வேண்டாதது இரண்டையும் சகித்துக் கொள்ளவேண்டும்.

                                        --- மகாவீர்




466. ஆயுளின் பெருமை ஆண்டுகளில் இல்லை; அவன்
     வாழும் முறையில் உள்ளது.

                                   --- வாரியார்

467. வாய்ப்புக்காகக் காத்திருப்பவன் கோழை.
    அதை உருவாக்கிக் கொள்பவனே புத்திசாலி.


468. நான் தோற்றதே இல்லை என்று ஒருவர் சொன்னால்
    வெற்றியை மட்டுமே பெற்றுக் கொண்டிருக்கிறார் என்று
    அர்த்தம் இல்லை. அவர் போட்டியில் கலந்துகொள்ளவே
    இல்லை என்றுதான் பொருள்.



469. பொறுமையிழந்தவர் வறுமையில் வாடுவார்;
     ஒற்றுமை இழந்தவர் சிறுமையில் வாடுவார்.



470. பிறர் மனம் வருந்த செயல் புரியாதீர்கள்.
    உங்கள் உரிமையை விட்டுவிடாதீர்கள்.
    பிறர் உரிமையில் தலையிடாதீர்கள்.



471. வாழ்க்கை முறையை சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து
     அமைத்துக் கொள்வதுதான் ஒருவனின் வெற்றிகரமான
    வாழ்க்கைக்கான அரிய ரகசியமாகும்.

                                     --- சுவாமி விவேகானந்தர்



472. மனிதன் பாவம் பண்ணும்போது புரியாது;
    பாவத்தை அனுபவிக்கும்போதுதான் புரியும்.


473. மனம் தளர்வதனால் எதையும் சாதிக்க முடியாது.


474. பொய் பேசுவோரிடமும் சுற்றித் திரிவோரிடமும்
    தொடர்பு கொள்ளாதே.

                                      --- ராமானுஜர்

475. முள்ளிலே பிறந்து முள்ளிலே மலர்ந்த தாழம்பூவுக்கு
     மனம் உண்டு. பிறந்த இடம் எத்தகையதாக இருப்பினும்
    குணம் உடையவராய் இருத்தல் வேண்டும்.

                                     --- சாணக்கியன்  



476. நம்பிக்கை என்பது விழித்திருக்கும் நிலையில்
    கனவு காண்பதைப் போன்றது.

                                      --- சிங்சௌ

 
477. எவர்க்கும் எவராலும் எந்த இன்னலும் ஏற்படக்கூடாது.

                                    --- நபிகள் நாயகம்

478. தீமைகளை விலக்குவது என்பதைக் கடமையாகக்
    கொள்ளுதல் நன்மைகளைச் செய்வதற்குச் சமமாகும்.


   
479. கோபம் என்பது நமது உயிரின் சக்தியையும்,புத்தியையும்
     சிதைத்துவிடும். அதனால் மனிதன் கோப உணர்ச்சியை
     வென்றே தீர வேண்டும்.


480. பொன்னான நேரத்தைப் பொறுமையுடன் சாதித்தால்
     பொன்னுக்கும் மேலானது கிடைக்கும்.

                                        --- சாணக்கியன்



481. உண்மையே நம் பெருமைக்கு ஆதாரம்.

                                            --- மகாவீர்

482. யாருடைய நம்பிக்கையையும் குலைக்காதீர்கள்.
    ஏதேனும் ஒன்றில் ஆழ்ந்த நம்பிக்கை அறிவுப் பூர்வமானதாக
    இருக்கட்டும்.

                                --- ராமகிருஷ்ணர்

483. நீங்கள் சிந்திக்கும் ஒவ்வொரு நற்சிந்தனையும்
    நீங்களே எதிர்பாராத அளவிற்கு அற்புதமான
    முடிவுகளை ஒவ்வொரு முறையும் தரும்.

                                      --- ஜான்ரோஜர்



484. அறிவுத் தெளிவு இருந்தால்தான் கலக்கமின்றி
     நிதானமாகச் செயல்படமுடியும்.

                                      --- ஆவ்பரி




485. புதிய சவால்கள்தான் நமது பலவீனங்களை அறிந்து
     நாம் நம்மைப் பலப்படுத்திக் கொள்ள உதவுகின்றன.


486. பகட்டுக்காகச் செலவுசெய்வது பெருந்தன்மை அன்று
     என்பதை அறியாதவன் முட்டாள்.



487. அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும் வரை உங்களுக்கு
     என்றைக்கும் விடிவுகாலம்தான்.

                                    --- பிளாட்டோ


488. மனோசக்தியுள்ள மனிதனுக்கு நன்மையான இடம்
     கிடைத்தே தீரும்.

                                    --- எமர்சன்



489. வறுமை உன்னை வாட்டும்போது பொறுப்புக்கள்
    உன்னைத் துரத்தும். பொறுப்புக்கள் உன்னைத்
    துரத்தும் போது போராடி வெற்றிகொள்.

                                     --- வாஜ்பாய்



490. எல்லோருக்கும் தங்களைப் பற்றிய ஒரு சுயமதிப்பு
    இருக்கவேண்டும். அந்த சுயமதிப்பைக் குறையவிடாமல்
    பார்த்துக் கொள்கிற தன்னம்பிக்கை வேண்டும்.
    அதுதான் எதையும் சாதிக்கும்.

                                 --- நவீன் செய்


491. உன் நண்பனை ரகசியமாகத் திருத்து; வெளிப்படையாகப் புகழ்.

                                  ---மில்டன்
     

பொன்மொழிகள்

492. பிறர் தவறுகளைக் கொண்டு தன் தவறுகளைத்
    திருத்திக் கொள்பவனே அறிவாளி.

                                   --- ஹெர்பர்ட்  




493. நல்ல யோசனை தோன்றும் போது அதை உடனே
     செய்து முடியுங்கள்; வெற்றி உங்கள் பக்கம்.

                                         --- ஸ்டோன்


494. நம்மால் நிச்சயமாக ஜெயிக்கமுடியும் " என்னும்
    மன உறுதியும், நம்பிக்கையும் எப்போதும் நம்மைக்
    கைவிடுவதில்லை.

                                  --- ராபர்ட் ஹெச். ஷூல்லர்
     


பொன்மொழிகள்

495. ஒவ்வொரு நாள் காலையிலும் அந்தந்த நாள் செய்யவேண்டிய
     காரியங்களை திட்டமிட்டு 'நேர ஒழுங்கு' செய்யாதவன்
     எதையும் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாத
     குழப்பவாதியாகிவிடுகிறான்.

                               --- பிரெஞ்சு சிந்தனையாளர் ஹியூகோ                                  


496. நீங்கள் அதிக பரபரப்பாக விரையும் போது,உங்களுக்குக்
    கிடைக்கும் பொருளைவிட அதிகவிலையைத்
    தரவேண்டியவர்களாக இருக்கிறீர்கள். பின் ஏன் பரபரப்பு?
    பொறுமையுடன் கூடிய அமைதியே என்றும் வெற்றி தரும்.

                                      --- பெர்ரி ஃபார்பர்



497. உங்களுடைய லட்சியம் டாக்டராகவோ, வக்கீலாகவோ,
    எஞ்ஜினியராகவோ,பெரிய வியாபாரியாகவோ ஆவதாக
    இருக்கலாம்.ஆனால் நீங்கள் ஒரு மனிதர் என்பதை முதலில்
    தெரிந்து கொள்ளவேண்டும். உங்களுக்கு வீட்டில் மனைவி,
    மக்கள்,நண்பர்கள் என்று பலபேருடன் தொடர்பு இருக்கும்.
    இவர்களுடன் உள்ள தொடர்புக்கான நேரத்தை அவர்களுக்காக
    நீங்கள் நிச்சயம் செலவழித்துத்தான் ஆகவேண்டும்.!
    'இலட்சியம், இலட்சியம்' என்று இவர்களை கவனிக்காமல்
    விட்டால் நீங்கள் வாழ்வில் தோற்றவர் ஆகிவிடுவீர்கள்
    ஜாக்கிரதை!

                                         --- பார்பாரா புஷ்


498. மற்றவர்கள் செய்வதைப் பற்றியோ, செய்யாததைப்
    பற்றியோ ஆராய்ந்துகொண்டிருக்காமல், உங்களது
    கடமையில் கண்ணும் கருத்துமாய் இருங்கள்.

                                     --- சுவாமி தேஜோமயானந்தா



499. இரவு தூங்குவதற்கு முன்பு, ஐந்து நிமிடம் மறுநாள்
    சாதிக்கக்கூடிய காரியங்கள் என்னென்ன இருக்கின்றன
    என்பதைப் பற்றிக் கற்பனை செய்யுங்கள். கவலைகளையும்
    அச்சங்களையும் ஒதுக்கிவிட்டு சாதனைகளைப் பற்றி
    மட்டுமே நினைப்பது பலன் கொடுக்கத் தொடங்கும்.

                                     --- பிரடெரிக் பீடர்ஸ்  



500. வெற்றிக்கான ரகசியம் மிகவும் எளிமையானவை.

    1. தினமும் புது விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள்.
   
    2. உங்களுடைய முடிவுகளைச் சீக்கிரமாக உருவாக்கிக்
       கொள்ளுங்கள்.

    3. அனுசரித்துப் போவதையும், விசுவாசமாக இருப்பதையும்
       கொள்கைகளாக்கிக் கொள்ளுங்கள்.

    4. சின்ன விஷயங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

     5. எல்லாவற்றிற்கும் மேலாக ஒழுக்கம்தான் சிறந்தது என்று
         தெளிவாக இருங்கள்.

      எந்த மனிதனிடத்தில் தெய்வ நம்பிக்கையும் ஒப்பற்ற தூய்மையும்
      இருக்கின்றனவோ அவனிடத்தில் ஆரோக்கியம் இருக்கிறது.
      வெற்றி இருக்கிறது. வலிமை இருக்கிறது.

                                                  --- ஜேம்ஸ் ஆலன்  


திருக்குறள்





திருக்குறள் 
 (see below in English)
 2. பொருட்பால்
49. காலம் அறிதல்

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.                       481

கோட்டானைப் பகலில் அதைவிடப் பலம் குறைந்த
காகம் வென்றுவிடும். அது போல எதிரியை ஜெயிக்கக்
கருதும் அரசனுக்கும் ஏற்ற காலம் வேண்டும்.

kural-481

A crow will conquer owl in broad daylight;
The king that foes would crush, needs fitting time to fight.

A crow will overcome an owl in the day time; So the king
would conquer his enemy must have (a suitable) time.


பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.                               482

காலத்துக்குத் தக்கபடி நடந்தால் அது செல்வத்தை
நீங்காமல் தங்கி இருக்கும்படிக் கட்டும் கயிறாயிருக்கும்.

kural-482

The bond binds fortune fast is ordered effort made,
Strictly observant still of favouring season's aid.

Acting at the right season, is a cord that will immovably
bind success (to a king).


அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.                        483

செயல் செய்யும் விதத்தையும் தகுந்த காலத்தையும்
அறிந்து செய்வதால் அவனால் முடிக்கமுடியாத
செயலும் உண்டோ?

kural- 483

Can any work be hard in very fact,
If men use fitting means in timely act?

Is there anything difficult for him to do,
who acts, with (the right) instruments
at the right time?

ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.                      484

தகுந்த காலத்தையும் இடத்தையும் அறிந்து
பொருந்தும்படிக் காரியங்களைச் செய்பவர்
உலகத்தையே ஆள நினைத்தாலும் முடியும்.


kural-484

The pendant world's dominion may be won,
In fitting time and place by action done.

Though (a man) should meditate (the conquest)
the world, he may accomplish it if he acts in the
right time, and at the right place.
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருதுபவர்.                            485

உலகப் புகழ் பெற நினைப்பவர் அதற்காக
மலைக்காமல் அதற்கான காலம் கருதிக்
காத்திருப்பர்.
 
kural-485

Who think the pendant world itself to subjugate,
with mind unruffled for the fitting time must wait.

They who thoughtfully consider and wait for the
(right) time for action, may successfully meditate
(the conquest of ) the world.

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.                          486

ஊக்கமுள்ளவர் தகுந்த காலத்தைக் கருதி
அடங்கி இருப்பர். அது சண்டை செய்யும்
ஆட்டுக்கடா பாய்ச்சலுக்காகப் பின்னே போவதை
ஒத்தது.

kural-486

The men of mighty power their hidden energies repress,
As fighting ram recoils to rush on foe with heavier stress.

The self-restraint of the energetic  (while waiting for a
 Suitable opportunity), is like the drawing back of a
fighting-ram in order to butt.



பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.                                487

அறிவுடையோர் பகைவர் தீங்கு செய்ததுமே
கோபிக்க மாட்டார். அவரை ஜெயிப்பதற்கான
காலத்தை எண்ணி மனத்துள் கோபம் கொண்டிருப்பர் .

kural-487

The glorious  once of wrath enkindled make no outward show,
At once;  they bide their time, while hidden fires within them glow.

The wise will not immediately and hastily shew out
their anger; they will watch their time, and restrain
it within.

செறு நரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.                        488

பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்ல
வேண்டும். அப்பகைவருக்கு முடிவுகாலம்
வரும் போது அவர் தலை மண்ணில் சாயும்.

kural-488

If foes' detested form they see , with patience let them bear;
when fateful hour  at last they spy, the head lies there.

If one meets his enemy, let him show him all his respect,
until the time for his destruction is  come; when that  is
come, his head will be easily brought low.





எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.                          489

சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதைப் பயன்படுத்திச்
செய்வதற்கரிய சாதனைகளைச் செய்ய வேண்டும்.

kural-489

When hardest gain of opportunity at last is won,
With promptitude let hardest deed be done.

If a rare opportunity occurs, while it lasts, let a man
do that which is  rarely to be  accomplished (but for
such an opportunity).



கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.                   490

ஒற்றைக் காலால் கொக்கு தவம் செய்வது
போல் காலம் அநுகூலமாயில்லாதபோது
காத்திருக்க வேண்டும். காலம் வந்தபோது
கொக்கு மீனைக் குத்தி எடுப்பது போல்
தப்பாமல் செய்து முடிக்கவேண்டும்.

kural-490

As heron stands with folded wing, so wait in  waiting hour;
As  heron snaps its  prey, when fortune smiles,put forth your power.

At the time when one should use self-control,let him restrain
himself like a heron; and let him like it,  strike,when there is a
Favourable opportunity.
திருக்குறள்
 (see below in English)
 2. பொருட்பால்
50. இடன் அறிதல்

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.                            491

பகைவரை முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடம்
காணாமல் இகழவோ, எச்செயலையும் செய்ய
முற்படவோ கூடாது.

kural-491

Begin no work of war, despise no foe,
Till place where you can wholly circumvent you know.

Let not (a king) despise (an enemy), nor undertake anything
(against him), until he has obtained (a suitable) place for
besieging him.


முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.                                      492

வேற்றுமை கொண்ட வலிமை உடையவருக்கும்
பாதுகாப்போடு சேர்ந்து வருகின்ற வெற்றி பல
நன்மைகளைத் தரும்.

kural-492

Though skill in war combine with courage tried on battle-field,
The  added gain of fort doth great advantage yield.

Even to those who are men og power and expedients,
an attack in connection with a fortification will yield
many advantages.


ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.                  493

வெல்வதற்கேற்ற இடத்தை அறிந்து தன்னைப்
பாதுகாத்துக் கொண்டு, பகைவரோடு போர்
செய்வதால் வலிமையற்றவரும் வலியராய்
வெல்வர்.

kural-493

E'en weak ones mightily prevail, if place of strong defence,
They find,protect themselves, and  work their foes offence.

Even the powerless will become powerful and conquer,
if they select a proper field ( of action), and guard themseves,
while they make war on their enemies.




எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.                     494

தகுந்த இடத்தை அறிந்து அதனோடு பொருந்தி
நினைத்த காரியத்தைத் தாமதிக்காமல் செய்வோருக்கு
அவரை வெல்ல எண்ணிய பகைவர் தன் எண்னத்தைக்
கைவிட வேண்டும்.

kural-494

The foes who thought to  triumph, find their thoughts were vain,
If hosts advance, seize vantage ground, and thence the fight maintain.

If they who draw near (to fight) choose a suitable place to
approach (their enemy), the latter, will have to relinquish
the thought which they once entertained,of conquering
them.



நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.                                   495

ஆழமான நீரில் முதலை பிற உயிர்களை வெல்லும்.
அந்நீரிலிருந்து அது வெளிப்பட்டால் மற்ற உயிர்கள்
அதை வெல்லும்.


kural-495

The crocodile prevails in its own flow  of water wide,
If this it leaves,'tis slain  by anything beside.

In deep water, a crocodile will conquer( all other animals);
but if it leave the water, other animals will conquer it.


கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.                               496

வலிய உருளைகளை உடைய தேர் கடலில் ஓடாது,
கடலில் ஓடும் கப்பல் நிலத்தில் ஓடாது.


kural-496

The lofty car, with mighty wheel, sails not  o'er watery  main,
The boat that  skims the sea,runs  not on earth's hard plain.

Wide chariots, with mighty wheels, will not run on the ocean;
neither will ships  that the traverse ocean, move on the earth.

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தாற் செயின்.                               497

செய்யும் வழிவகைகளைக் குறையில்லாமல்
திட்டமிட்டுத் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால்
அஞ்சாமையைத் தவிர வேறு துணைவேண்டாம்.


kural-497

save their own fearless might they need no other aid,
If in right place they fight, all due provision made.

You will need no other aid than fearlessness, if you
thoroughly reflect ( on what you are to do), and select
(a suitable) place  for your operations.




சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.                                      498

பெரும் படை கொண்ட அரசன் சிறுபடை செல்வதற்குரிய
இடத்தில் சென்றால் அவனுடைய ஊக்கம் அழிந்துவிடும்.

kural-498

If lord of army vast the safe retreat assail
Of him whose host is small, his mightiest efforts fail.

The power of one who has a large army will perish,
if he goes into ground where only a small army can act.

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.                499

அரணாகின்ற காவலும் பிற சிறப்பும் இல்லாதவனானாலும்
பகைவர் வாழ்கின்ற இடத்தில் சென்று தாக்குதல் கடினம்.

kural-499

though fort be none, and store of wealth they lack,
'Tis hard a people's homesteads to attack!

It is  a hazardous thing to attack men in their own country,
although they may neither have power nor a good fortress.




காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.                        500

வேலேந்திய வீரரைக் கோத்தெடுத்த கொம்புடைய
அஞ்சாத யானை கால்புதையும் சேற்றில் அகப்பட்டால்
அதை நரிகளும் கொன்றுவிடும்.

kural-500

The  jackal slays, in miry  paths of foot-betraying fen,
The Elephant of fearless eye and tusks  transfixing armed men.

A fox can kill a fearless, warrior-faced elephant,
If it go into mud in which its legs sink down.